Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 21

அத்தியாயம்   21   ( 4 )

 

அன்று இரவு நித்யா கட்டிலில் உட்கார்ந்தவாறு மகனை தட்டிக்கொடுத்து தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

“நீ சாப்பிட்டியா ம்மா…”



Advertisement

“ம்ம் நான் சாப்பிட்டேன் ப்பா.  நித்யாவுக்கு பிளாஸ்க்ல பால் வச்சிருக்கேன்.  நீ சாப்டுட்டு போகும்போது எடுத்துட்டு போய் அவள்கிட்ட கொடு”.

“சரி ம்மா… நான் சாபிட்டு எடுத்துட்டு போறேன்.  நீ போய் படு”

சரி என தலையசைத்த சரசு அவரது அறைக்கு சென்றுவிட்டார்.  பேரன் பிறந்ததற்கு பிறகு மாமியார் மருமகளுக்குள் இருந்த பிணக்கெல்லாம் மறைந்திருந்தது.

Advertisement

முகிலன் மீது மிகுந்த அன்பு சரசுக்கு.   தனது பிள்ளையின் மறு உருவமாக உரித்து கொண்டு வந்திருப்பவனைப் பார்த்து சொல்ல முடியாத ஆனந்தம்.

Advertisement

சாப்பிட்டு முடித்தவன், அங்கிருந்த பால் பிளாஸ்கை எடுத்து வந்து அறையினுள் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, மனைவியின் மடியில்  தலை வைத்து படுத்துவிட்டான்.

அவனின் செயலில் நித்யாவுக்கு முறுவல்தான்.  மகன் முகிலன் முழித்திருந்தாள் இந்நேரம் வசீகரனிடம் சண்டைக்கு நின்றிருப்பான்.  அவன்தான் மடியில் படுக்க வேண்டும் என.  தந்தைக்கும் மகனுக்கும் நித்யாவை வைத்து அடிக்கடி போட்டி எழும்.

நித்யா சிரிப்பதை பார்த்தவன் “என்னடி..?” என முகிலனை ஒரு பார்வை பார்த்தவன், அவளது கன்னத்தை பிடித்து கிள்ளினான் கொஞ்சலாக.  “உன் பையன் தூங்கிட்டுதான இருக்கான்” என்றான் கிண்டலாக.

Advertisement

ஹா… ஹா… என சிரிப்புதான் நித்யாவுக்கு.

“ஏய் சத்தம் போட்டு அவனை எழுப்பி விட்டுடாத.  அப்புறம் இதுக்கும் போட்டிக்கு வந்துடப் போறான்”.

“பெத்த பிள்ளைகிட்டயே சண்டைக்கு நிப்பீங்களா… நீங்க?” என்றாள் விரிந்த புன்னகையுடன்.

“நானாடி அவன்கிட்ட சண்டைக்கு நிக்கறேன்.  உன்னை என்கிட்டவே நெருங்க விடமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றது யாராம்..?  மொளச்சு மூனு எல விடல.  அதுக்குள்ளே என்கிட்ட போட்டிக்கு நிக்கறான்.  என் பொண்டாட்டிய தானடா நான் கொஞ்சறேன்னாலும், என் அம்மான்னு உன்னை இறுக்கிக்கறான்…”

“இந்த தடவ பாரு.  பொம்பளை பிள்ளைதான் பொறக்கும்.  அதுக்குதான் அப்பா பாசம்னா என்னன்னு தெரியும்…” என்றான் அவளது வயிற்றில் கையை பதித்து ஆசையாக.

வசீகரனின் தலைமுடியில் விரல்களை விட்டு கோத ஆரம்பித்தவள், “இன்னைக்கு கோவில்ல அந்த குட்டி பாப்பாவ பார்த்தோமில்ல அதுமாதிரியா…?” என்றாள் நித்யா கண்களில் ஆசையுடன்.

மனைவியை நிமிர்ந்து பார்த்தான் வசீகரன்.

“அந்த பாப்பா ரொம்ப அழகுல்ல.  அவங்க அம்மாவ மாதிரியே செம க்யூட்” என்றாள் நித்யா.

“அப்படியே அவள் கன்னத்தை பார்த்தீங்களா புசு புசுன்னு வெல்லக்கட்டி மாதிரி.  பிடிச்சு கடிச்சு தின்னலாம் போல இருந்தது எனக்கு.  என்னவோ அவளை பார்த்ததுல இருந்து, எனக்கும் அத மாதிரியே, ஒரு குட்டி பாப்பா வேணும்னு ஆசையா இருக்கு மாமா…”

“எழுந்து உட்கார்ந்து மனைவியை தோளோடு சாய்த்து கொண்டவன்.  கண்டிப்பாடா.  நமக்கும் பிறக்கும்” என்றான் ஆதூரமாக.

“ஒருவேளை பையன் பொறந்துட்டா…? என்றாள் சந்தேகமாக வசீகரனை நிமிர்ந்து பார்த்து.

“அதுக்கென்ன விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.  அடுத்து ட்ரை பண்ணுவோம்…” என்றான் அவளைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்துகொண்டே.

“அய்ய ஆசைதான்.  எல்லாம் இரண்டே போதும்”.

“ஏன்டி நானா கேட்டேன்.  குட்டி பாப்பா வேணும்.  அழகா வேணும்னு”.

“ஹ்ம்ம்… என்னவோ அந்த பாப்பாவ பார்த்ததும் ஆசையா இருந்துச்சு.  கேட்டேன்”.

“ஹ்ம்ம்… இந்த தடவை, என் நித்திக்குட்டிக்கு பொம்பளை பிள்ளைதான்.  அம்மா கூட சொன்னாங்களே, உன்னைப் பார்த்துட்டு.  எனக்கென்னவோ… நித்யா நடக்கறது, அவள் வயிறு எல்லாத்தையும் பார்த்தா இந்த தடவை பேத்திதான் பொறப்பான்னு தோணுதுன்னு சொன்னாங்களா, இல்லையா…?”

“ஹ்ம்ம்…  ஆமாம்.  அத்தை அப்படிதான் சொன்னாங்க”.

“அதான் சொல்றேன்.  இந்த தடவை நமக்கு பொம்பளை பிள்ளைதான்.  பொறக்கட்டும்டி.  அப்புறம் வைச்சுக்கறேன் உங்க இரண்டு பேரையும்.  அம்மாவும் மவனும், என்னை கிட்ட வுடுவேனான்னு ஆட்டமா காட்டறீங்க…” என மீசையை முறுக்கினான்.

நித்யா புன்னகையுடன் அவனது மீசையை ஆசையாக பார்த்தாள்.

“என்னடி மாமன மயக்கற மாதிரி பார்க்கற…” என அவனும் அவளை கொஞ்ச ஆரம்பித்தான்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@

 

இரண்டு நாள் விடுமுறை என வந்தவர்கள் ராஜேந்திரனின் வற்புறுத்தலில் கூடுதலாக இரண்டு நாள் இருந்துவிட்டு இதோ ராஜேந்திரனின் காரை எடுத்துகொண்டு சென்னைக்கு புறப்பட்டிருந்தனர்.

இரவு டின்னரை முடித்துக்கொண்டு கிளம்பியிருந்தனர்.  ராஜேந்திரன் கூட டிரைவர் போட்டுக்கலாம் மாப்பிள்ளை.  நீங்க ஏன் கஷ்டப்படனும் என கூறிப் பார்த்தார்.  அஸ்வத் ஒத்துக்கொள்ளவில்லை.

அவர்களுக்கான இந்த பயணத்தில் யாரையும் சேர்த்துக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை.  மனைவி மகளுடன் தனியாகவே காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.

கவிதாயினி அருந்ததியின் மேல் படுத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

“கவிய பின்னாடி சீட்ல படுக்க வைடா…”

“இருக்கட்டும் ங்க…”

“கழுத்து வலிக்கும்டா.  எவ்வளவு நேரம் இப்படியே வச்சிட்டு உட்கார்ந்திருப்ப.  இரு, காரை நிறுத்தறேன் என ஓரமாக விளக்கு இருக்கும் பகுதியாக பார்த்து காரை ஓரங்கட்டி நிப்பாட்டினான்.

காரின் பின் கதவை திறந்து, கொண்டு வந்திருந்த போர்வையை விரித்து, காருக்கு பின்னாடி இருந்த குஷன் பில்லோவை தலைக்கும் இரு பக்கமும் அணைவாக வைத்துவிட்டு கவிதாயினியை அருந்ததியிடம் இருந்து வாங்கி வாகாக படுக்க வைத்தான் பின்சீட்டில்.

அருந்ததி உட்கார்ந்த சீட்டில் இருந்தே பின் பக்கம் திரும்பி பார்த்து “விழுந்துடப் போறாங்க” என்றாள்.

“விழ மாட்டா.  அதுக்குதான் சேப்டிக்கு பில்லோ வச்சிருக்கேன்” என கதவை சாற்றிவிட்டு வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

அருந்ததி தனது மொபைலை ப்ளூடூத் மூலமாக காரில் இருந்த பிளேயருடன் கனெக்ட் செய்தவள், இருவருக்கும் பிடித்த ராஜா சாங்க் கலெக்‌ஷனை போட்டு விட்டாள் மைல்டாக.

“கவி முழிச்சிக்க போறாடா…”

“முழிக்க மாட்டா.  சவுண்ட் கம்மியாதான் வச்சிருக்கேன்…” என அஸ்வத்தின் தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள்.

“நீங்களும் தூங்கறது தானேம்மா.  நாளைக்கு ஸ்கூல் போகனுமில்ல”.

“ஹ்ம்ம்.  தூக்கம் வரல.  உங்களுக்கு தூக்கம் வருதா…?”

“இல்லடா…?  வந்தா சொல்றேன்”.

“ஹ்ம்ம்.  அம்மா உங்களுக்குன்னு ஸ்ட்ராங்கா காபி குடுத்துருங்காங்க.  வேணும்னா கேளுங்க…” என அவன் கைக்குள் தனது கையை விட்டு இறுக்கிக் கொண்டாள்.

“மண்ணில் இந்த காதலன்றியாரும் வாழ்தல் கூடுமோஎண்ணம் கன்னிப் பாவையின்றிஏழு ஸ்வரம் தான் பாடுமோபெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடாகண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா”  என எஸ்பிபி பாடிக்கொண்டிருந்தார்.

மனைவியை திரும்பி பார்த்தவன், “உண்மைதான் இல்ல.  காதல் இல்லனா எதுவுமேயில்ல.  நம்மளை படைச்ச சாமியிலிருந்து, சாதாரண ஜீவ ராசி வரைக்கும், ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருத்தர்குள்ளயும் காதல் இருக்குல்ல”.

“ஹம்ம்….”

“ஆனால் எத்தனை பேருக்கு தனக்குள்ள இருக்கற காதல வெளிப்படுத்தறதுக்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையுது”.

“காதலிக்கும் போது இருக்க இன்ட்ரஸ்ட்கூட கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய பேருக்கு குறைஞ்சிடுதுன்றது, என்னோட அபிப்பிராயம்.  சரியா ஹனி…?”.

“ஹ்ம்ம்…”

“அந்த விஷயத்துல நாம லக்கிதான்.  இல்லையாடா…?  என்னை புரிஞ்சுகிட்ட மனைவி, பேரன்ட்ஸ், சிஸ்டர்னு எல்லாருமே நல்லவங்களா கிடைச்சதுக்கு, நான்தான் அந்த கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லனும்”.

மனைவியின் உச்சந்தலையில் இதழ் பதித்தவன், “லவ் யூ டி”. என அவள் தோளை ஒரு கையால் வளைத்துக் கொண்டான்.

அருந்ததியும் அவனது பேச்சில் உணர்ச்சி பொங்கதான் உட்கார்ந்திருந்தாள்.   காதலாக நிமிர்ந்து கணவனை பார்த்தவள் “ஐ லவ் யூ” என அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.  இருவருக்கும் உல்லாசமான மனநிலைதான்.  அது அவர்களின் முகத்திலும் தெரிந்தது.

மனைவியின் முகத்தைப் பிடித்து நெற்றியில் முத்தம் வைத்தவன் தனது தோளில் அவளை சாய்த்துகொண்டான் காதலாக.

இவர்களது இந்த பயணம் போல வாழ்க்கை பயணமும் சுகமாக அமையட்டும்.

“போகும் பாதை தூரமேவாழும் காலம் கொஞ்சமேஜீவ சுகம் பெறராக நதியினில் நீ நீந்த வா…”

 

சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!