Skip to content
Post Views: 2,688
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் – 8
Advertisement
கௌசி கண் விழிக்கும் போது இரவு 6 . மெதுவாக கண் விழித்தவள். அவளின் ரூம்பில் இருப்பது போல இல்லாமல் இருக்க.
Advertisement
உடனே மனதில் கோடியை பார்க்க வந்தது நினைவு வர. அட லூசே இப்படியா தூங்குவ, தூங்கு மூஞ்சி என்று தன்னை தானே திட்டியவள்.கோடியை தேட.
Advertisement
அவனின் குரல் கேட்பது போல் இருக்க. அவனை தேடி பார்த்தவள் பால்கனியில் இருந்து சத்தம் வர. மெல்ல எழுந்து கோடியின் அருகில் சென்றாள்.
Advertisement
கோடி கௌசியை பார்த்தவன். அப்பறம் பேசுறேன் என்று பேச்சை நிறுத்திவன். நல்ல தூக்கமா கௌசி என்று கேட்க.
சாரி சார் ரொம்ப நாளா சரியா தூங்கலயே அதுதான் . நான் அழுதாலே தூங்கிறுவேன்.
நல்ல பழக்கம் தான்.
சரி எதாவது சாப்பிடுறியா?
இல்ல சார் டைம் ஆச்சு.
இனிமேலும் என்னை நீ சார்ருன்னு தான் கூப்பிட போறியா.
இல்ல சார்.
அதுவும் சார்ரா.
நான் கல்யாணத்துக்கு அப்பறம். கோடி மாமான்னு கூப்பிடுறேன்.இப்போ வரல.
சரி வா என்று அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.
கௌசி வேண்டாம் சார் .அம்மா திட்டு வாங்க.
நான் சொல்லிக்கிறேன் நீவாம்மா என்று கௌசிக்கு சாப்பிட வாங்கி கொடுத்து வீட்டில் விட்டான்.
கௌசி அவனை பார்த்து பாய் சொல்லி சிரிக்க .
என்ன. என்னை பார்த்து சிரிப்பு என்றான் கோடி.
அவளோ நீங்க நான் நெனச்சத விட ரொம்ப நல்ல வங்களா இருக்கீங்க.
அதுக்கு என்ன என்றான் கோடி.
அதுக்கு ஒன்னும் இல்ல கோடி மாமா சார் என்றாள் சிரித்து கொண்டே.
அது என்ன கோடி மாமா சார். ஒன்னு சார்ன்னு கூப்பிட, இல்ல மாமான்னு கூப்பிடு . அது என்ன கோடி , மாமா, சார்ருன்னு சொல்லுற.
அது என்று சொன்னவள் .அது பாசமா கோடி மாமா சார் , பாய் என்று ஓடிவிட்டாள்.
கோடியும் சிரித்து கொண்டே கோடி , மாமா சார் நல்ல தானே இருக்கு.
மறுநாள் கோடி தனது அம்மாவிடம் சென்று கல்யாண பத்திரிக்கை கொடுத்தவன். டைம் இல்லம்மா இப்போ இருந்தே கொடுக்க ஆரம்பிச்சுருங்க என்றவன் . கௌசியின் வீட்டல 50 பத்திரிக்கை கேட்டாங்க. அவங்க பத்திரிக்கை அடிக்கலையாம். ஏன் கோடி என்றார் குருவம்மாள். அது இப்பதான் கௌசி அக்காவுக்கு கல்யாணம் ஆச்சு. கௌசியை அவங்க சொந்தத்துல கல்யாணம் பண்ண பொண்ணு கேட்டாங்கலாம். இவங்க படிக்குறன்னு சொல்லிட்டாங்கலாம் அதான் யாருக்கும் சொல்லலியாம். என் கிட்ட 50 பத்திரிக்கை கேட்டாங்க.
கோடி குருவம்மாளிடம் நீங்க. நாளைக்கு சிவன் கோவிலுக்கு போய் முதல் பத்திரிக்கை வச்சுட்டு. கமலம் அக்கா கிட்ட பத்திரிக்கை கொடுத்துடுங்க.
கோடி இரண்டாயிரம் பத்திரிக்கை அடித்து இருந்தான். கோடிக்கு சொந்தம் அதிகம் . அதைவிட , அந்த ஊரில் இவனை தெரியாதவர்கள் யாரும் இல்லை .
குருவம்மாள் பக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் கல்யாண பத்திரிக்கையை சாமிக்கு வைத்தவர். கமலம் வீடு நோக்கி செல்ல.
கமலத்தின் பக்கத்து வீட்டில் உள்ள சங்கரி குருவம்மாளை பார்த்து என்னக்கா காலையிலே இந்த பக்கம் பையன் வீட்டுக்க.
இல்ல சங்கரி நம்ம கோடிக்கு 10 நாள்ல கல்யாணம் பத்திரிக்கை வைக்க சம்பந்தி வீட்டுக்கு போறேன்.
யாருக்கா உங்க சம்பந்தி .
உன் பக்கத்து வீடு தான். கௌசல்யா காலேஜ் படிக்குதாம். கோடி பிடிச்சுருக்குன்னு சொன்னான் பேசி முடிச்சுட்டோம்.
சங்கரி குருவம்மாளிடம் அவங்க நம்ம ஆலுங்க இல்லலக்கா.
ஆமாம் என்ன பண்ணுறது கோடிக்கு புடிச்சுருக்கே. இவன் வேற எந்த பொண்ண பாத்தாலும் புடிக்கலன்னு சொல்லுறான். இந்த பிள்ளை பிடிச்சுருக்குன்னு சொல்லுறான்.
குருவம்மாளும் , சங்கரியும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள்.கொஞ்சம் தூரத்து சொந்தமும் கூட.
கோடிஸ்வரன் சங்கரியின் வீட்டு பக்கத்தில் வீடு கட்டி இருக்க. சங்கரிக்கு தன் மகளை எப்படியாவது கோடிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு ஆசை. சங்கரி நான்கு நாட்கள் ஊரில் இல்லை. அதனால் கோடிக்கும், கௌசிக்கும் கல்யாணம் முடிவு பண்ணியது தெரியாது.
குருவம்மாள் கோடிக்கும் , கௌசிக்கும் கல்யாணம் என்ற சொன்னவுடன் சங்கரிக்கு மனதில் தீ வைத்தது போல இருந்தது.
சங்கரி குருவம்மாளிடம் உங்க நல்ல மனசு யாருக்கு வரும்.
இப்படி ஒரு மாமியார் கிடைக்க . கௌசல்யாஸ்ரீ குடுத்து வச்சு இருக்கனும் என்றாள். சும்மா சொல்ல கூடாது கோடி ,கோடியா காசு குடுத்துருக்கே கோடி தம்பி என்று சொல்ல.
என்ன. என்ன சொன்ன சங்கரி.
ஆமாம் அக்கா உங்களுக்கு தெரியாதா.
என்ன காசு எனக்கு தெரியாதே.
சங்கரி அப்போ இவங்களுக்கு விசயம் தெரியாது போல என்று மனதில் நினைத்தவள். அவளின் வேலையை காட்ட ஆரம்பித்தாள். சரிக்கா ஒன்னும் இல்லை நான் வரேன் என்று கிளம்ப.
ஏய் நில்லுடி சொன்னதை சரியா சொல்லு என்ற கேட்க. கமலம் தன்னிடம் எதற்தமாக புலம்பியதை அனைத்தையும் சொல்லிய சங்கரி. கடைசியாக வர போற மருமகளுக்கு நீங்க கோடி , கோடியா பணம் குடுத்து கல்யாணம் பண்ணுறீங்க. பெரிய மனசுக்கா உங்களுக்கு என்று சொல்லி சென்றாள்.
வாங்கடி வெளியே. என்று சத்தம் கேட்க யாரு கௌசி வெளியே சத்தம் கேட்குது பாரு என்று சொல்ல.
கௌசி வந்து வெளியே பார்க்க .
குருவம்மாள் சேலையை இடுப்பில் சொருகி கொண்டு. முடியை விரித்து கொண்டை போட்டவர் சண்டைக்கு வந்தது போல் நிற்க.
கௌசி கமலத்தை அம்மா வாம்மா ,அத்தை வந்து இருக்காங்க என்று அழைக்க.
யாரு அத்தை .அத்தையின்னு சொன்ன. சொன்ன வாயை கிழிச்சுருவேன். யார்யாருக்கு அத்தை. எங்கடி உன் அம்மா.
கமலம் வீட்டில் இருந்து வெளியில் வர.
கமலத்தை பார்த்த குருவம்மாள் எவ்வளவு காசு வாங்குனீங்க என் பையன் கிட்ட.
கமலம் உள்ள வாங்க அண்ணி என்று அழைக்க. நான் எதுக்கு உள்ள வரனும். கேட்டதக்கு பதில் சொல்லு எவ்வளவு காசு வாங்குன.
அது என்றவர்.
சொல்லுங்கடி என்றார் குருவம்மாள்.
கமலம் 1 1/4 கால் கோடி என்று சொல்ல.
அய்யோ,அய்யோ என்ற குருவம்மாள் ஏன்டி அவ்வளவு பணமா வாங்குனீங்க.அய்யோ எங்க பணம் போச்சே என்று கத்த.
கமலம் நாங்க பணத்தை திருப்பி குடுத்துடுவோம் சம்பந்தி என்று சொல்ல.
என்னை சம்பந்தி சொல்ல உனக்கு அருகதை கிடையாது.இந்த கல்யாணம் நடக்காது . பணத்தை சீக்கிரம் குடுங்க பாரு இல்ல இன்னும் வேற குருவம்மாளை பாப்பீங்க.
அண்ணி அப்படி சொல்லாதீங்க என்று கமலம் சொல்ல.
குருவம்மாள் கமலத்திடம் என்ன உன் மகள காட்டி என் மகன் கிட்ட காசு வாங்கினியா.
கமலம் வேண்டாம் அண்ணி என் பொண்ண எதுவும் சொல்லாதீங்க.
என்ன சொல்லக்கூடாது .உன் வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்தோமுல்ல அப்போ என்கிட்ட நீ பணத்த பத்தி சொல்லி இருக்கனுமுல்ல .அத விட்டுட்டு இப்போ எனக்கு தெரிஞ்சதும். நாடகம் நடத்துறீயா. யாரு வீட்டு காசு எங்க குடும்பமே கஷ்ட பட்டு சேர்த்த காசு. நீ உன் பொண்ண காட்டி என் பையன மயக்கிட்டே என்று வாய்க்கு வந்ததை பேச.
கமலமும் ,கௌசியும் மட்டும் வீட்டில் இருந்தனர். கமலம் நாங்க பணத்த திருப்பி குடுத்துடுவோம்.
குருவம்மாள் எப்படி குடுப்ப. உன் பொண்ணு வராமலே கோடிஸ்வரன் உங்களுக்கு இவ்வளவு காசு கொடுத்து இருக்கான். உன் மக எங்க வீட்டுக்கு வந்த அவ்வளவு தான் . மொத்த சொத்தையும் உன் மக பேர்லேயே எழுதிருவான்.நீங்க நல்லவே இருக்க மாட்டீங்க. நா அப்பவே நினைச்சேன் , இந்த பொண்ணு இவ்வளவு அழகா இருக்கு. நம்ம பையன எப்படி பிடிச்சதுன்னு, இப்பதான தெரியுது எல்லாம் பணத்துக்காகன்னு என்றவர்.குருவம்மாள் கௌசியிடம் உன் வெள்ள தோலை காட்டி .என் பயன் மயக்கிட்டியா. கமலம் கௌசியை ஒன்னும் சொல்லாதிங்க அவளுக்கு ஒன்னும் தெரியாது என்று கமலம் அழ.
அதை பார்த்த கௌசி தன் தாய் உடம்புக்கு ஏதாவது ஆகிவிட கூடாது என்று நினைத்து. அம்மா நீ உள்ள போ நான் இவங்க கிட்ட பேசிக்கிறேன் என்க.
குருவம்மாள் என்னடி பேசுவ. காலேஜ் தான படிக்குற அதுக்குள்ள என்ன உனக்கு அவசரம் ,என்று வாய்க்கு வந்ததை பேச.
கௌசி கூனி குறுகிபோனாள்.கௌசி இது வரைக்கும் .இந்த மாதிரியான பேச்சை கேட்டது கூட இல்லை. இப்போ தன்னையே இப்படி பேசுவதை அவளால் தாங்க முடியவில்லை. தனக்கே இப்படி என்றாள் கமலத்தை நினைத்த தைரியத்தை வர வைத்து கொண்டு. நீங்க எங்களுக்கு பணம் கொடுக்கல . உங்க பையன் தானே பணம் குடுத்தார். அவர் வந்து கேட்கட்டும் அப்போ நாங்க பணம் தர்றோம் .இப்போ நீங்க போங்க என்றவள் கேட்டீனை காட்ட.
என்னடி பணத்தையும் வாங்கி கிட்டு என்னை வெளியில் போக சொல்லுறிய. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கனும். இந்த கல்யாணம் நடக்காது ,நடக்க நான் விடமாட்டேன் என்று கமலத்திடம் சொன்னவர். நீங்க நல்லா இருக்க மாட்டிங்க என்று சாபம் போல கூறி விட்டு சென்று விட்டார்.
கமலம் அவர்கள் வாசல் படியிலே உங்கார்ந்து அழ.
கௌசி அவர்கள் வீட்டின் வெளியில் பார்க்க .அந்த ரோட்டில் உள்ளவர் இவர்களை பார்தது ஏதோ பேசி செல்வதை பார்த்தவள்.அம்மா உள்ளே வா என்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றவள். கமலத்துக்கு. தண்ணீர் குடுத்து பீ , பி மாத்திரியை கொடுத்தவள். கொஞ்சம் நேரம் தூங்குமா.
கமலம் மனசே ஆரல டி .இப்படி பேசிட்டாங்க.
அம்மா நம்ம சிவா யாருக்காவது இவ்வளவு பணம் கொடுத்தால்.நாம சும்மா இருப்போமா. நாமும் இப்படி தான் பேசுவோம். ஆன அத்தைக்கு பேச தெரியல. தெரிஞ்சதை பேசிட்டு போறாங்க.
அந்த பொம்பலைய அத்தையின்னு சொல்லாத.
ம்மா. அவங்க கோடி சார்ரோடு அம்மா அந்த மரியாதை நாம அவங்களுக்கு தரனும்.
உனக்கு கஷ்டமா இல்லையா கௌசி .
கௌசி ஒரு நிமிசம் கமலத்தை பார்த்தவள். நெஞ்சுசெல்லாம் வலிக்குது அம்மா என்ன பண்ண சொல்லுற என்று அழ.
அழாதடா என்ற கமலம் நான் அவங்க பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே எல்லாத்தை சொல்லி இருக்கனும். சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது. நல்ல வேல அப்பாவும் , சிவாவும் இல்ல. இருந்த ரொம்ப வருத்தபட்டு இருப்பாங்க.
கௌசி கமலத்தின் மடியில் தலை வைத்து கண்மூட.
கௌசி நீ வருத்தப்படாத நம்ம சீக்கிரம் பணத்த குடுத்துறலாம்.கல்யாணம் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் . என்ன பேச்சு பேசுது அந்த அம்மா. நீ படி கௌசி. கல்யாணத்தை நிப்பாட்டியிரலாம்.
அம்மா கோடி சார் பாவம் அப்படி சொல்லாத.நமக்கு உதவி பண்ண வர நம்ம வேண்டாமுன்னு சொல்ல கூடாது.உதவி பண்ண அந்த நல்ல மனச பாரு. நம்ம நந்தினிக்கு கல்யாணத்துல எவ்வளவு செலவு பண்ணோம். இப்போவும் அவளுக்கு காசு கணக்கு பாக்காம செலவு பண்ணுறோம். ஆன கோடி சார் கல்யாணத்துக்கு முன்னே எனக்காக பண்ணுறாரு . அவங்க அம்மா பேசுனா பேசட்டும்.
வேண்டாம் கௌசி அந்த தம்பி நல்ல மாதிரி தான். அவங்க அம்மா சரியில்லையே.
நீ ரெஸ்ட் எடு மா. அப்பறம் பேசலாம். நான் என் ரூம் போறேன் என்றாள்.
கோடிஸ்வரன் ஒரு சிலருக்கு கல்யாண பத்திரிக்கை கொடுத்து விட்டு கடைக்கு வர. குருவம்மாள் கோடியின் கடைக்கு கோபமாக வர. கோடி என்னம்மா உன் முகமே சரியில்ல வா என்று அவனின் ரூம்பிற்கு அழைத்து சென்றான்.
கோடி குருவம்மாளுக்கு தண்ணீர் கொடுக்க.
அதை வாங்கி குடித்தவர். ஏன் கோடி உன் புத்தி இப்படி போகுது.
என்னம்மா ஆச்சு.
அவளுங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்த என்றார்.
யாருக்கு?
அதான் அந்த கௌசி அண்ணனுக்கு.
உனக்கு எப்படி தெரியும்.
அதானே நீ வந்து சொல்லுவ பாரு. ரோடுல போறவா ஒருத்தி வந்து சொல்லுறா. உன் பையன் கோடி, கோடியா பணம் தந்து கல்யாணம் பண்ணுறான்னு.
அம்மா என்ன பேசுர. சிவாவுக்காக பேங்குல பணம் கட்டுனேன். அவங்க எடத்த வித்து பணம் தர்றதா சொன்னாங்க. இது குடுக்கல் , வாங்கல் பிரச்சனை. இன்னைக்கு நான் குடுத்தேன். சிவா நாளைக்கு பணம் கொடுத்த வாங்கிப்பேன். நீ என்ன பண்ணி வச்சுருக்க.
ஐயோ நான் உன்கிட்ட கௌசியும், கமலமும் பேசி ஏமாத்தி பணம் வாங்கிட்டாங்கன்னு. அவங்க வீட்டுக்கு போய் திட்டிட்டு வந்தேன்.
ஏன்மா இப்படி பண்ணா. அவங்க இருக்குற வீடே கோடி கணக்குல போகும் .அவங்க ஏன்மா என்ன ஏமாத்த போறாங்க.
குருவம்மாள் கௌசி வீட்டிற்க்கு சென்றதையும், சங்கரி சொல்லியதை வைத்து. கோபம் வந்து கௌசியின் வீட்டின் வாசலில் நின்று திட்டியதை சுருக்கமாக சொல்ல.
கோடி நான் பாத்துக்கிறேன்.
குருவம்மாள் கோடி நான் இந்த கல்யாணம் நடக்காதுன்னு திட்டிட்டு வந்தேன்.
நீ வீட்டுக்கு போ கல்யாண வேலயா பாரு .எனக்கு கல்யாணமுன்னு நடந்தா அது கௌசி கூடத்தான்.நீ போம்மா என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
கோடீஸ்வரன் கமலத்தின் வீடு செல்ல. கமலம் ஹாலில் அமர்ந்து இருந்தார்.
கோடியை பார்த்து வாங்க தம்பி என்றார்.
கமலத்தின் பக்கத்தில் அமர்ந்தவன் அவரின் கையை பிடித்து சாரி அக்கா என்றான்.
வேணாம் தம்பி. அவங்க என்ன,என் பையன பத்தி பேசுன கூட பராயில்லை. கௌசியை பத்தி தப்பு தப்பா பேசியிட்டாங்க.அதான் கஷ்டமா இருக்கு. உங்க அம்மா வீட்டுக்குள்ள வந்து சத்தம் போட்டு இருந்தாலும் பரவாயில்லை வெளியில் இருந்து சத்தம் போட்டு ரொம்ப அசிங்கமா போச்சு தம்பி. வேண்டாம் தம்பி இந்த கல்யாணம் வேண்டாம். உங்க பணத்தை நாங்க திருப்பி குடுத்துடுறோம்.
அக்கா என்ன பேசுறீங்க.அவங்க பேசுன என்ன. கௌசியை பத்தி நமக்கு தெரியாத.நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்.
ஐயோ தம்பி வேணாம்.என்க்கிட்ட நீங்க ஏன் மன்னிப்பு கேட்கனும்.
எங்கம்மா பண்ண வேலைக்கு நான் தான் மன்னிப்பு கேட்கனும்.
கமலம் வேண்டாம் தம்பி. நீங்க உதவி பண்ணவங்க . உங்கம்மா கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க பணம் வாங்குனத பத்தி. எங்களுக்கு நேரம் சரியில்லை. யார் , யார் கிட்ட இருந்து பேச்சு வாங்கனுமுன்னு இருக்கு என்ன பண்ண.
கௌசி எங்கே என்றான் கோடி. உள்ளே இருக்கா தம்பி .சிவாவும், மாமா வீட்டுல இல்ல , நல்லதா போச்சு.
கோடீஸ்வரன் அவன் கையில் இருந்த கல்யாண பத்திரிக்கை கமலத்தின் கையில் கொடுத்தவன்.இந்த கல்யாணம் நடக்கும். கௌசியை பாத்துக்கோ என்றவன் கிளம்பிவிட்டான்.
இராஜாசெல்வமும், சிவாவும் நந்தின் ஸ்ரீ வீட்டிற்க்கு சென்று கௌசியின் திருமணத்தை பத்தி நந்தினி வீட்டில் சொல்லி விட்டு வீடு வர.
கமலம் தன் கணவர் இடமும், சிவா கிட்டையும் நடத்ததை சொல்ல. இரண்டு பேருக்கு கோபம் கௌசியை எப்படி இவர்கள் பேசலாம்.
சிவாவுக்கு தன்னால் என்று அவன் புலம்ப. கௌசி எங்கே மா.
உள்ள ரூம்ல தான் தூங்குற மதியானம் கூட சாப்பிடல.அவளை போய் கூட்டிட்டு வா சாப்பிடலாம் என்றார் கமலம்.
சிவா கௌசியின் அறைக்கு சென்று கௌசி சாப்பிடலாம் வா என்று கதவை தட்ட. கதவு திறக்க பட வில்லை .நல்ல தூங்குற போல என்று கதவை இன்னும் வேகமாக தட்டினான் சிவா.
இராஜாசெல்வம் என்னாட கௌசி கதவை திறக்கலையா.
ஆமாம்ப்பா ,எனக்கு என்னம்மோ பயம் இருக்குப்பா. என்ற சிவா கௌசி, கௌசி கதவை திற என்று கதவை தட்ட . ஒரு பதிலும் இல்லை கௌசியிடம் இருந்து. இராஜாசெல்வம் சேர்ந்து கதவை தட்ட. கமலம் வந்து விட்டார் . என்னாச்சு என்று.
சிவாவும் ,இராஜாசெல்வமும் கதவை வேகமாக தட்ட பழய காலத்து கதவு என்பதால் திறந்து விட்டது. கௌசி கட்டிலில் படுத்து இருக்க. இருவருக்கும் அப்பாட என்று மூச்சை விட்டனர்.
சிவா கௌசி அருகில் செல்ல.கௌசியின் கையில் இருந்து இரத்தம் வந்த கொண்டு இருந்தது. அப்பா இரத்தம் என்றவன். கௌசி , கௌசி என்று தங்கையை எழுப்ப.
அவளோ மயக்கத்து சென்று இருந்தாள்…..
error: Content is protected !!