Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 7.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அந்த அமைதியான நேரத்தில் அவன் சிரிப்பு அந்தப் பெரிய வீட்டில் எதிரொலிக்க

கார்த்திக் “என்ன ஆச்சு? என்ன ஆச்சுடா?” என்று  ஆச்சரியத்துடன் கேட்டபடி அங்கு வந்தான்.

 



Advertisement

“டேய் கார்த்திக்! சாதனா தாண்டா! உனக்கு அந்த மெசேஜை அனுப்பியிருக்கிறா.”

 

“அப்படியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

Advertisement

 

Advertisement

அவன் “ஆமாண்டா. அவளோட தங்கை பேரு தான் சஞ்சனா. இருந்தாலும் எனக்கு ஒரு டவுட் இருந்தது. அந்த வாட்ஸ்அப் டிபியில் இந்த செம்பருத்தி செடி ஜாடியோட இருக்கு.” என்று அந்த ஜன்னல் வழியாக தெரிந்த  செடியை காண்பித்தான்.

 

“சூப்பர்டா. அவளே மெசேஜ் அனுப்பி கூப்பிட்டு இருக்கா.”

Advertisement

 

“அச்சச்சோ மணி வேற அஞ்சு 40 ஆயிடுச்சே கார்த்திக்.”

 

“பரவாயில்லை நீ அவளுக்கு ரிப்ளை பண்ணு. நாம இருக்கிற இடம் ப்ளேனோ. இங்கே இருந்து அஞ்சப்பர் ரெஸ்டாரன்ட் அஞ்சு1500

 

நிமிஷம் தான் ஆகும். அதனாலே வரேன்னு ரிப்ளை பண்ணு. நீ போய்ட்டு வா.” என்று யோசனை கூறினான் கார்த்திக்.

 

“சரிடா கார்த்தி”  என்று சுகந்தன்

 

அவளுக்கு “( ஆம் போகலாம்) yeah, lets go.” என்று குறுஞ்செய்தி  அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான்.

 

ஐந்து நிமிடம்  5 யுகம் போல கடந்தது.

 

“என்னடா இன்னும் ரிப்ளை வரல? இப்ப என்னடா பண்றது?” என்று பரபரத்தான்  சுகந்தன்.

 

“.பேசாம கால் பண்ணு.” என்று கார்த்திக் சொல்ல

அவன் “பேசினா அவள் என் குரலை கண்டுபிடித்து விடுவா. அப்புறம் வரமாட்டாள்” என்று சுகந்தன் தயங்கினான்.

 

கார்த்திக் யோசித்துவிட்டு “பேசாமல் மிஸ்டுகால் கொடு.” என்றதும் சுகந்தன் அதை செய்தான்.

 

அடுத்த நிமிடம் அவளிடமிருந்து.

“ok. I will be there in 10 minutes.  (சரி. இன்னும் பத்து நிமிடத்தில் நான் அங்கு இருப்பேன்.) என்று பதில் வர சுகந்தன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டான்.

 

“சரி போலாமா?” என்று கார்த்திக்கை பார்த்து கேட்டான்.

 

“என்னை எதுக்கு கூப்பிடுற? நீ மட்டும் போயிட்டு வா. தனியா போய் பேசு.” என்றான் கார்த்திக்.

 

“சரிடா கொடுக்கிற திட்டை தனியா வாங்கிட்டு வரேன்.” என்றுவிட்டு வேகவேகமாக படியிறங்கினான்.

 

“டேய் சுகந்தா.

இந்தியன் டிரைவிங் லைசன்ஸ்  கையில வச்சுக்கோ. போலீஸ் கேட்டா அந்த லைசன்ஸ் எடுத்துக்கொடு.  மூணு மாசத்துக்குள்ள இங்க லைசன்ஸ் வாங்கிடு.  மூணு மாசத்துக்கு அப்புறம் இந்தியன் லைசன்ஸ் இங்கே செல்லாது.” என்று கார்த்திக் சொன்னது சுகந்தன் காதில் விழுந்தது.

 

சுகந்தன் அவனுடைய ஐபோனில் கூகுள் மேப்  ஆப் மூலம் வழி அறிந்து  அங்கு சென்றான் .

“அஞ்சப்பர் செட்டிநாடு இந்தியன் ரெஸ்டாரன்ட்” என்ற பெயர் பலகையை பார்த்துவிட்டு காரை பார்க் செய்து விட்டு இறங்கி உள்ளே சென்றான்.

 

பார்வையை அந்த பெரிய ஹாலில் சுழற்றி அவளை தேடினான். ஒரு மேஜையில் மெனு கார்டை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாதனா .

 

‘என்னை இந்த இடத்தில பார்த்தா கோபப்படுவாள். பப்ளிக் பிளேஸ். அதனால திட்டி வெளியே துரத்த முடியாது. ஆனா இவள் என்கிட்ட பேசாம எழுந்து போயிட்டா என்ன பண்றது?’ என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக அவன் முன்பு சென்றான்.

 

மெனு கார்டில் ஏதோ தீவிரமாக முகத்தை மறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் சாதனா.

 

“ஹாய் ஐ அம் கார்த்திக் பிரண்டை.”  என்றபடி  கையை குலுக்குவதற்காக நீட்டுவது போல நீட்டினான்.

 

அந்த குரலை கேட்டதும்

‘அவன் குரல் மாதிரி இருக்கு.’ என்று சட்டென்று மெனு கார்டை மேஜை மீது வைத்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

‘இவன் இங்க எங்க வந்தான்?’ என்று புரியாமல் அவனை பார்த்து விழித்துக் கொண்டிருந்தாள்.

 

அதிர்ச்சியில்  “நீ …… என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவன் இடைமறித்து

 

“நீ எங்க இங்க? தீபாவளி பார்ட்டிக்காக யாரோ டேஸ்ட் பாக்கணும்னு கூப்பிட்டாங்க. அதனால வந்தேன்.

 

நீ எப்படி இங்க வந்த?” என்று அவன் அவளை எதேச்சையாக அங்கு பார்த்ததைப் போல நடித்தான்.

 

அவள் அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘எப்பா உலக நடிப்புடா சாமி!’ என்று அவனது மனசாட்சி அவனையே  கேலி செய்தது. அதனை அலட்சியப்படுத்தி அவளை கவனித்தான்.

அவள் அவன் கண்களை ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“நான் கார்த்திகாவுக்கு தானே மெசேஜ் அனுப்பினேன்.”

 

“கார்த்திகா இல்ல, கார்த்திக். என்னோட பிரண்டு பேரு கார்த்திக். அவனுக்கு தான்  இங்க வர சொல்லி மெசேஜ் வந்திருந்தது. அவனுக்கு திடீர்னு வேலை வந்துட்டதால என்னை இங்கே அனுப்பினா.”

‘சஞ்சனா தெரியாம பேரை மாத்தி சொல்லிட்டா போல.’ என்று நினைத்தாள்

“உண்மையாவே நான் இங்க வருவேன்னு தெரியாம தான் வந்தியா?”  என்று கண்களை பார்த்து கேட்டாள்.

 

“பின்ன தெரிஞ்சுகிட்டே,  இங்க  வந்துட்டு உன்கிட்ட பொய்யா சொல்லிட்டு இருக்கேன்?

மெசேஜ் அனுப்பினது நீதானே?

இல்லைன்னு சொல்லுவியா? அந்த வாட்ஸ் அப் டிபி ல கூட உன் போட்டோ இல்லை.

அப்புறம் எப்படி  நீ தாnu தெரியும்?

உன்னோட பேரையும் சொல்லல.” என்று அவனுக்கு சாதகமாக இருந்த விவரங்களை அவளிடம் சொல்லி வாதிட்டான்.

 

அவள் ஓரளவு சமாதானம் ஆனாள். எனினும் அவனை முழுமையாக நம்பவில்லை.

 

‘இவனோட பிரிண்ட் நம்ம கம்யூனிட்டியில் இருக்கிறானா? அப்போ இவனும் இந்த கம்யூனிட்டியில் அவன்கூட இருக்கானா?’ என்று அவனைப் பற்றி ஒரு கணம் யோசித்தாள். அடுத்த கணமே

‘இவன் எங்க இருந்தால் நமக்கு என்ன?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அந்த எண்ணத்தை கை விட்டாள்.

 

‘இப்போ இவன் கூட சேர்ந்து இங்க உட்கார்ந்து சாப்பிடனுமா? பேசாம எழுந்து போயிடலாமா?’ என்று நினைத்தாள்.

 

அவள் முக மாற்றத்தை பார்த்து அவள் மனதை படித்த சுகந்தன்

 

“என்ன எழுந்து போய் விடலாமாnu  யோசிச்சிட்டு இருக்கியா?” என்று கேட்கவும் அவள் அவனை திகைத்து  நோக்கினாள்.

 

“கரெக்ட்  என்கூட நீ உட்கார்ந்து சாப்பிட்டா, உன் மனசு டிஸ்டப் ஆகலாம். அதனால யோசிக்கிறது சரிதான் போயிடு. ஆனால் என்னைப் பாரு எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண முடியாது. உன் கூட உட்கார்ந்து சாப்பிட்டாலும் நான் டிஸ்டர்ப் ஆக மாட்டேன். ஆனால் உன்னை பார்த்தா அப்படி தெரியல.” என்று வேண்டுமென்றே அப்படி பேசினான்.

 

இதைக்கேட்ட சாதனா

“நான் அப்படி யோசிக்கவே இல்லை. என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண முடியாது. நான்  வந்த வேலையை முடிக்காம போகமாட்டேன்.” என்று உறுதியாக கூறினாள்.

 

உள்ளுக்குள் தான் நினைத்ததை நிறைவேற்றிய ஆனந்தம்  சுகந்தனுக்கு. எனினும்  அவளிடம் காட்டிக் கொள்ளாமல்

 

“சரி ஃபுட் ஆர்டர் பண்ணலாமா?” என்று கேட்டான்.

 

வேண்டிய உணவை ஆர்டர் செய்தாள் .அதனை இருவரும் அமைதியாகவே சாப்பிட்டனர்.

 

பிறகு, இருவரும் மேலாளரிடம் சென்றனர்.

 

சாதனா “we…..” என்று ஆங்கிலத்தில் ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும் மேலாளர்

“உங்களை பார்த்தா தமிழ் மாதிரி தெரியுது. தமிழிலேயே பேசலாம்.” என்று சொல்லவும்

சாதனா “எங்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் லாலிபாப், வஞ்சிரம்,  ப்ரான் ஃப்ரை, அப்புறம் சிக்கன் குருமா, சப்பாத்தி வேண்டும்.” என்றாள்.

 

“சரி எண்ணிக்கை எவ்வளவு வேணும்னு சொல்லுங்க. செஞ்சி கொடுத்துடுவோம்.” என்றாள் மேலாளர்.

 

“ஹெட் கவுண்ட் ரெண்டு நாளில் கன்ஃபார்ம் பண்ணி   சொல்லிடறேன். பார்ட்டி நவம்பர் லாஸ்ட் வீக் சண்டை.” என்றாள்.

 

“சரிமா  நாங்க ரெடி பண்ணி  கொடுத்து விடுகிறோம்.” என்றார் மேலாளர்.

 

அவரிடம் பேசிவிட்டு இருவரும் திரும்பினர்.

 

“ஒரே ஒரு ரெஸ்டாரன்ட் மட்டும்தான் பார்த்தோம். அதுக்குள்ள ஆர்டர் கொடுத்துட்ட?” என்று அவன் கேட்டான்.

 

“இங்க ஃபுட் நல்லா தானே இருக்கு. அதனாலதான்.” என்றாள் அவள்.

 

“நல்லாதான் இருக்கு. இருந்தாலும் இன்னொரு இடத்துல ட்ரை பண்ணி பார்த்து இருக்கலாம்.” என்றான் அவன் அவனுக்கு சாதகமாக.

 

‘ஏன் இவன் கூட தினமும் வெளியில சுத்தணும் போல இருக்கு.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

 

அதை வெளியில் சொல்லாமல்

“மத்தவங்களை போல நான் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன். எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்றுவிட்டு அவளது காரை நோக்கி நடந்தாள்.

 

“சரி பார்க்கலாம்.” என்று அவன் அவளுடன் நடக்க

 

“அவள்  பார்க்கலாமா? எதுக்கு பார்க்கணும்? பார்க்கவே வேண்டாம். குட் பாய்.”

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!