Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 12 2

பெரியசாமியை ஆண்டவர் கனி   ஹாஸ்பெட்டலில் நன்றாக பார்த்துக்கொண்டான்.

 முருகேசனும், ராமசுப்புவும் “நாங்க பாத்துக்குறோம் நீ ஷோ ரூம் போ” என்று சொல்ல..



Advertisement

பெரியசாமிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு இருக்க.. “உங்களால் அவனை தூங்க முடியாது, உங்கார வைக்கனும்,  ஓய்வு அறை அழைத்து சென்று வரணும், உங்களால் முடியாது,  நான் பாத்துக்கிறேன், நீங்க ஷோ ரூம்பை  பாத்துக்கோங்க”  என்றிருந்தான்..

பெரியசாமிக்கு கைகால்களை கூட அசைக்க முடியவில்லை, அவனுக்கு  அத்திய வாசி வேலையை கூட அவன்னால் செய்ய முடியவில்லை, அனைத்திற்கும்  இன்னொரு துணையில்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை.. ஆண்டவர் கனி முகம் சுலிக்காமல்  பெரியசாமிக்கு அனைத்தையும் செய்ய..

Advertisement

Advertisement

பெரியசாமிக்கு ஆண்டவர்கனியின் மேல் தனி மரியாதை, பாசம் வந்திருந்தது..

பெரியசாமி  ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்திருந்தான்.. யோகாவுக்கு முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை..

Advertisement

திவ்யா அரிய நாச்சிதான்  எல்லாரையும்  பார்த்துக்கொண்டாள்.. சமையல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும், மேல் வேலை இவள் செய்து கொண்டு. யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, அனைவரையும் நன்றாக பார்த்துகொண்டாள்..

ஆண்டவர்கனிக்கு  ஹாஸ்பெட்டலில் சரியான தூங்கம் இல்லாமல் இருந்ததால். மதியம் வீட்டிற்கு வந்து  நன்றாக  தூங்கிக்கொண்டு இருந்தான்..

திவ்யா மதியம் உணவு  ரெடியானவுடன்  கணவனை எழுப்ப  மாடி அறைக்கு வர. ஆண்டவர் கனி நன்றாக தூங்கிக்கொண்டு  இருந்தான்.திவ்யா கணவனை எழுப்பினாள் உண்டு விட்டு தூங்குமாறு..

அவனால்  எழுந்து கொள்ள முடியவில்லை, அடித்து போட்டார் போல் அப்படி  ஒரு தூங்கம்  ஆண்டவர்கனிக்கு. சரி தூங்கட்டும், தூங்கி எழுந்து சாப்பிடட்டும் என்று  அவளுடைய போனை சார்ஜில் போட்டு விட்டு.

கீழே சென்று  அனைவருக்கும் மதிய  உணவு  கொடுத்து விட்டு, சிறிது நேரம் கழித்து மேலே  உள்ள அவள் அறைக்கு  வந்தாள்  ஆண்டவர் கனியை எழுப்ப.

ஆண்டவர் கனி எழுந்து கண்ணாடியை பார்த்தவாரு நின்றிருக்க..

“எழுந்துட்டீங்களா, அப்போ கீழே வர  வேண்டியது  தானே” என்று ஆண்டவர் கனியை பின்னிருந்து அணைக்க நிற்க..

“தொடாதே”  என்றிருந்தான் ஆண்டவர்கனி..

என்ன என்பது போல்  திவ்யா ஆண்டவர் கனியை பார்க்க..

திவ்யாவின்  போனை வைத்திருந்தான் கனி..

 “யாரு போன் போட்டா” என்றாள்..

“உன் அன்பு மச்சான் தான், என்னை தூங்க விடமா போன் பண்ணிட்டே இருக்கான்”.

“ஆமா   அவன்  எதுக்கு உனக்கு போன் போடுறான்”.

“அது பார்கவி டெரஸ்  நம்ம வீட்டுல இருந்துச்சு நான் தான்  கொண்டு போய் அத  குடுத்துட்டு வந்தேன்.அவ பொருள் நிறைய நம்ம வீட்டுல இருக்கு, என்னால எல்லாத்தையும்  தூக்கிட்டு போக முடியாது, அதான்  கொஞ்ச, கொஞ்சமா முக்கியமான  பொருளை மட்டும் எடுத்துட்டு போய் குடுத்துட்டு வர்ரேன்,  அவளுக்கு இங்க வர கஷ்டமா இருக்காம், அதான் என்னை எடுத்துட்டு வந்து கொடுக்க சொன்னா,, நான் லட்சுமி  அத்தை கிட்ட கேட்டேன், அவங்களும் கொண்டு  போய் குடுன்னு சொன்னாங்க”  என்று நீண்ட விளக்கம் போல் சொல்ல..

“நான்  அத கேட்கல. இது என்ன”.?? என்று கால் இஸ்ட்றியை  பார்த்து கேட்க..

திவ்யா என்ன என்பது  போல் யோசித்து விட்டு  போனை பார்த்தவள்.  “ஆமாம் அன்பு  மச்சான் கல்யாணம் எங்க நடக்குதுன்னு  கேட்டாங்க சொன்னேன்”.. என்றவளின்

கன்னத்தில்  ஓங்கி  அறைந்திருந்தான் கனி..

எதற்கு அடித்தார் என்று  திவ்யா  ஆண்டவர்கனியை பார்க்க.

“துரோகி”  என்றான் கனி..

“நான் என்ன பண்ணேன்  என்னை ஏன் அடிச்சீங்க, துரோகின்னு  சொல்லுறீங்க”  என்று கேட்டாள் அழுகையோடு..

“நீ  தான்  அன்புவை பார்கவி கழுத்தில்  தாலி கட்ட சொன்னீயா”..

“நான்  ஏன்  சொல்ல  போறேன்”..

“அப்போ  என்ன இது”  என்று திவ்யாவின்  போனில்  உள்ள மெஜேஜ்சை  காண்பிக்க..

“ஏன் என் போனை  எடுத்து பாத்தீங்க”..

“நானா  உன்  போனை  எடுக்கல, அது  விடாம  சத்தம்  போட்டு  என்னை எழுப்பி  விட்டுச்சு,  என்ன இது”  என்றான். திவ்யா அன்புவுக்கு  சேட் பண்ணியதை..

“சொல்லுடி  என்ன சொன்ன  அன்பு கிட்ட”.

“நான்  அன்பு மச்சான் கிட்ட ஒன்னும் சொல்லல்ல,  திடிர்ன்னு  போன்  போட்டு  கல்யாணம்  எங்க நடக்குதுன்னு  அன்பு மச்சான் கேட்டாங்க, நான் கோவிலுல நடக்குதுன்னு   சொன்னேன்..

ஆனா அவங்க பார்கவி கழுத்துல  தாலி கட்டுற பத்தி எனக்கு தெரியாது”… என்றாள் திவ்யா..

“அப்போ இது என்ன?  என் தம்பியை பத்தி  தப்பு, தப்பா  மெஜேஸ் பண்ணியிருக்க”  என்று  போனை காட்ட.. “உங்க தம்பி ஒன்னும் நல்லவர்  இல்ல, உங்களுக்கு  பார்த்த  பொண்ண  கல்யாணம் பண்ண நெனச்ச, அசிங்கம்  புடிச்சவன்..

யாராவது  அண்ணணுக்கு பார்த்த பொண்ணை,   தனக்கு  கல்யாணம்   பண்ண நினைப்பாங்களா. அவன் பார்கவியை  பார்க்கும் போதே ஆண்டவர் கனியை  கட்டிக்க போற பொண்ணு, என்  அண்ணியின்னு  நெனச்சு   அவன் பார்த்திருக்கனும்..

அத  விட்டுட்டு  உங்களுக்கு  பார்த்த பொண்ணா , அவன்  கல்யாணம் பண்ண  கேட்டு இருக்கான்.

 இதுல்லயே  அவனை பத்தி  நீங்க தெரிஞ்சுங்க  வேணாம், அவன் எப்படி பட்ட  குணம்  உள்ளவன்னு”..

அப்புறம் தண்ணீ அடிச்சுட்டு  ஸ்ரீஜெயம்   சித்தாப்பை  பத்தி, எப்படி  பேசியிருக்கான். அவன்  நல்ல    குணம்  கிடையாது. உங்க  தம்பி  என்றதால  அவன்  ஒன்னும் நல்லவன்  கிடையாது. சரியான  சுயநலம்  பிடிச்சவன், தன் சந்தோஷம் தான்  முக்கியமுன்னு வாழுறவன்”..

“ஏய்  நான்  கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு நீ. பெரியசாமியை குணத்தை பத்தி  உன்கிட்ட  நான்  கேட்கல. இது  என்ன   போனுல அன்புக்கு மெஜேஸ் போட்டு இருக்க. ‘நீங்க பண்ணுனது  சரி தான்  பார்கவி  தப்பிச்சிட்டா, அப்படியின்னு  டைப்பண்ணி இருக்க”. என்று  அவளின் மொபைலை திவ்யாவிடம்  காட்டி ஆண்டவர் கனி கேட்க..

“ஆமாம் நான் தான் சொன்னேன் அன்பு  மச்சான்  கிட்ட பார்கவி நல்ல பொண்ணு, உங்கள கல்யாணம் பண்ணி  அவ நல்ல குடுபத்துல  நல்லா  இருக்கட்டுமுன்னு  என்று சொல்ல”..

“அப்போ நாங்க  நல்ல குடும்பம் கிடையாதா”  என்றான்..

“நான்  அப்படி  சொல்லல்ல”..

“வேற எப்படி சொன்னா”..

“அது  அன்பு மச்சான் நல்லவரு, உங்க தம்பியை விட”..

“இன்னும் சொல்லு என்னை விட, உனக்கு அவன் தானே  பெருசு”  என்றான் கனி..

“நீங்க  ரொம்ப  பேசுறீங்க” என்றாள்..

“நீதாண்டி  என்னை பேச வைக்கிற, நீ மட்டும் அன்பு கிட்ட போனுல  கல்யாணத்தை  பத்தி  சொல்லாமா இருந்த. இன்னைக்கு என் குடும்பம் எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும்  தெரியுமா, கல்யாணம் நின்னு, எவ்வளவு பிரச்சனை”  என்று  திவ்யாவை  முறைத்து பார்த்து பேச..

“நானா  காரணம், எல்லாம் உங்க தம்பி  அந்த பொறுக்கி பய, தண்ணீ அடிச்சுட்டு குடிகார பய”  என்று பெரியசாமி திட்ட.

“ஏய் என்  தம்பியை  பத்தி பேசுன. சங்க  புடிச்சிடுவேன்,”.. என்றவனை..

“வாங்க  வந்து  கொல்லுங்க”  என்று திவ்யா கத்த, .

இவர்கள் இருவரும்  சத்தம் கேட்டு அனைவரும் மேலே வந்திருந்தனர்..

யோகா  திவ்யாவிடம்  “என் பையனை   என்ன  சொன்ன”.. என்றார்.

ஆண்டவர் கனி “சித்தி”  என்றான்..

“சொல்லுடி  என்  பையனை  என்ன  சொன்ன, பொறுக்கியா,  என்ன பொறுக்கித்தனம் பண்ணான் என் பையன் சொல்லு” என்றார்.

“இல்ல  யோகாம்மா  அப்படி  இல்ல” என்று திவ்யா யோகாவிடம் பேச.

“நீ  பேசாத  உன்னை  என்  பொண்ணு  மாதிரி தானே பார்த்தேன், ஆனா  நீ  என்  பையனை இப்படி பேசுற”  என்றவர்..

“கனி  நீயும்  இவ  பேசுறத  கேட்டுட்டு  இருக்குற”..

“சித்தி  உங்களுக்கு  உடம்பு  வேற சரியில்ல  கீழ வாங்க” என்று  அழைத்து  சென்றான்..

அனைவரையும்  பார்த்து அவர், அவர் அறைக்கு  போங்க  என்றான்.

 யோகாவை  அவர்  ரூம்பில் விட்டவன். “அவளுக்கு  நம்மல பத்தி, நம்ம குடும்பத்தை  பத்தி தெரியல சித்தி, அவ பெரியசாமியை  பேசுனதுக்கு  நான்  மன்னிப்பு கேட்கிறேன்”  என்றவன்.. “அமைதியா இருக்கும்    மாறு”  சொல்லிவிட்டு ரூம்பிற்கு வர..

திவ்யா  போன் பேசிக்கொண்டு இருந்தாள்..”அது பார்கவி  ரூம்புல   எங்க இருக்குன்னு தெரியல  மச்சான்”  என்று அன்புடன்  பேசிக்கொண்டு இருக்க..

ஆண்டவர்  கனி வந்த வேகத்தில் இவள் பேசியதை கேட்டவன், திவ்யாவின்  போனை பிடுக்கி கீழே  போட்டு  உடைத்து இருந்தான்..

திவ்யா  ஆண்டவர் கனி  இப்படி செய்வான்  என்று எதிர் பார்க்காதவள்.

“ஏன் இப்படி காட்டுமிரண்டி  மாதிரி நடந்துக்கிறீங்க” என்று கனியை திட்ட..

“ஆமாம்  நான்  தான்  காட்டுமிராண்டி  தான், உன்  அன்பு மச்சான்  குடும்பம்  ரொம்ப  நல்ல குடும்பம்”, என்று  இருவரும் ஒருவரை, ஒருவர்  பேசி சண்டை போட. இறுதியில்  ஆண்டவர் கனி  திவ்யாவை  அடித்து  அவன்  அறையில்  இருந்து அவளை வெளியே  தள்ளி கதவை மூட..

திவ்யா நான் என்ன செய்தேன், ஒன்னுமே செய்யவில்லையே  அப்போ ஏன் எனக்கு இப்படி என்று   நீண்ட நேரம்  கதவின்  அருகில்  அமர்ந்து கொண்டு அழ. யாரும்  அவளை சமாதானம் பண்ண வராமல்  இருக்க, திவ்யாவுக்கு  அங்கே  இருக்க பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே  நடக்க தொடங்கினாள்.. சாயங்காலம்  4   மணி என்பதால்  கோவில் திறக்காமல் இருக்க. திவ்யா அம்மன் கோவில் வாசலில் அமர்ந்து விட்டாள்..

ஸ்ரீஜெயம்  மதியம்  வீட்டில் உண்டு விட்டு  சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு கடையை  திறக்க, கோவில் வழி வர. திவ்யா கோவில் வாசலில்  கண்கலங்கி அமர்ந்திருப்பதை  பார்த்தவர்.

“அம்மாடி  நாச்சியா என்னடா  இங்கே  உட்கார்ந்து  இருக்க.”.

“ஒன்னும் இல்லை சித்தப்பா கடைக்கு வந்தேன், தலை  சுத்துச்சு  அதான்  உட்கார்ந்துட்டேன்”.. என்றாள்.

நம்ம முடியாத பார்வை பார்த்தவர். “சரி வாடா  நம்ம  கடைக்கு  போகலாம், வாம்மா”  என்று அவரது கடைக்கு அழைத்து  சென்றார்..

“இந்தாடா  தண்ணி  குடி”  என்றவர் தண்ணீர்  கொடுக்க..

திவ்யா தண்ணீரை  குடித்த வேகத்தை பார்த்தவர்.

“மதியம் சாப்டீயா டா பாப்பா” என்றார்..

“இல்லை”  என்று திவ்யா தலையாட்ட..

 உடனே கடைக்கு  சென்று திவ்யாவுக்கு பிடித்த எண்ணை  பொரட்டா வாங்கி வந்து சாப்பிட சொல்ல..

“சரி சித்தப்பா”  என்று  சாப்பிட உட்கார்ந்து  பொரட்டாவை  ஒரு வாய் வாயில் வைக்கும் நேரம், “திவ்யா”  என்று  ஆண்டவர்கனி அழைத்திருந்தான்.

திவ்யா நிமிர்ந்து பார்க்க ஆண்டவர் கனி கோபமாக ஸ்ரீஜெயம்  கடை வாசலில் நின்று இருந்தான்..

பயந்து போனாள் திவ்யா  அவன் பார்த்த  பார்வையில்,. “வா”  என்றவன் முன் செல்ல..

ஸ்ரீ ஜெயத்தை  பார்த்த திவ்யா கண்ணீரோடு  தலையாட்டி விட்டு ஆண்டவர் கனி பின் சென்றாள்..

ஆண்டவர் கனி  போகும் வழியில் அவளுக்கு உணவை வாங்கியவன். வீட்டிற்கு  சென்று அவர்கள் அறைக்கு வந்தவன். அவளுக்கு வாங்கி வந்த உணவை தூக்கி  எறிந்தவன். “சாப்பிடு, நல்லா சாப்பிடு  என்னை  அவமான  படுத்த தானே  அங்கே போய் சாப்பிட  உட்கார்ந்த, உன் சித்தப்பா என்னை  என்ன  நெனைப்பார், ஒரு வேள பொண்டாட்டி சோறு  போட வக்கு  இல்லன்னு  சொல்லவா. எனக்குன்னு   இந்த ஊருல மரியாதை இருக்கு  அதை  கொடுத்துறாத” என்றவன். “சாப்பிடு”   என்று சொல்லி விட்டு கடைக்கு சென்று விட்டான்..

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள். பசி மயக்கமாக  இருக்க, ஆண்டவர்கனி வாங்கி வந்ததை  சாப்பிட்டு  தூங்கிவிட்டாள்.

இரவு  ஆண்டவர் கனி வந்து. அவள் சாப்பிட்ட  உணவு பார்சலை பார்த்து விட்டு  பரவாயில்ல சாப்பிட்டா போல. என்று  அவளின் அருகில் வந்து படுத்து தூங்கி விட. காலையில் அவள் எழும்முன், சீக்கிரம் எழுந்து கடைக்கு  சென்றிருந்தான்..

 அவள் அருகில் இருந்தாள் ஏதாவது கேட்டு  சண்டை வரும் என்று சென்றுவிட.

 திவ்யா காலையில் எழுந்து  கணவனை பார்க்க. தன் பக்கத்தில்  இடம் காலியாக இருந்தது. கடைக்கு  சென்று  விட்டான் போல  என்று குளித்து விட்டு கீழே வர.

அனைவரும்  அவர், அவர்வேலையை பார்த்துக்கு  கொண்டு இருத்தனர்.

திவ்யாவிடம்  யாரும்  பேசவில்லை..

திவ்யா கிச்சன்னுக்கு சென்று  காபி போட போக.

வேலைகார பெண் வந்து “திவ்யாம்மா  உங்களுக்கு என்ன வேணுமோ  என்கிட்ட கேளுங்க நான்  செஞ்சு தாரேன், உங்கள  சமைக்க  கூடாதுன்னு  சொல்லி இருக்காங்க”  என்று கூற..

“யாரு  சொன்னா” என்று கேட்டாள்..

 அப்பெண்  அமைதியாகி விட.

5 நிமிடம்  அங்கே  நின்றாள். அவளிடம் யாரும் பேசாமல் இருக்க..

அனிக்கா  பந்தை வைத்துக்கொண்டு  ஓடி  ஆடி விளையாடி கொண்டு இருந்தாள்.

“அனி குட்டி  இங்கே வா”. என்று திவ்யா அழைக்க..

“நான்  வரமாட்டேன் அத்தை”. என்றாள் குழந்தை..

“ஏன்டா  குட்டி”  என்று திவ்யா கேட்க..

“நீங்க  தான் போன் போட்டு  யாருகிட்டையோ  சொல்லி, பெரியசாமி  மாமா கல்யாணத்த  நிறுத்திட்டீங்களாமே, அதான்  அம்மா  சொன்னாங்க, உன் திவி அத்தை கூட  பேச கூடாதுன்னு”  என்று  சொல்ல..

அதிர்ந்து போனாள் திவ்யா  நானா!..

“நானா… சொன்னேன்”..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!