Skip to content
Post Views: 1,696
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -12
Advertisement
ஆண்டவர் கனியின் இல்லம் அமைதியாக இருந்தது.
Advertisement
Advertisement
பெரியவர்கள் அவர், அவர் அறைக்கு சென்று அமைதியாகி இருக்க. திவ்யா தான் அனைவருக்கும் தேநீர் போட்டு கொண்டு வந்து கொடுக்க.
அனைவருக்கும் அது தேவை படவே எடுத்துக்கொண்டனர்..
Advertisement
பெரியசாமியின் அறையின் பெரியசாமி நடந்து கொண்டே இருந்தான், அவனால் அன்பு பார்கவியின் கழுத்தில் தாலி கட்டியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவன் அறையில் நடந்து கொண்டே புலம்பியபடி இருந்தான். அவனை பார்த்துக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்தான் ஆண்டவர் கனி.
“டேய் கொஞ்சம் நேரம் சேருல உட்காருடா பேசலாம், சும்மா புலம்பாத, உன்ன யாரு அன்புவ பத்தி தண்ணீ அடிச்சுட்டு பேச சொன்ன”..
“அவன் மேல உள்ள கோபத்துல பேசிட்டேன், அதுக்காக அவன் என் கல்யாணத்த நிறுத்தி, பார்கவி கழுத்துல தாலி கட்டுவானா”?.
“நல்லா யோசி, அவன் அவனா பேசுனதுக்கு கோபப்படல, அவன் மாமனை பத்தி பேசுனதுக்கு தான் கோபப்பட்டான்”..
“ஆமா பொல்லாத மாமன்”, என்று அவன் செய்த தப்பை உணராமல் அன்புவை திட்டிக்கொண்டே இருந்தான்.
பெரியசாமி பார்கவி தனக்கு இல்லை என்று புலம்பிக்கொண்டே, தன் கை கொண்டு சுவற்றில் அடித்துக்கொண்டான்..”இனி நான் எப்படி வெளியில் போவேன் , என்னை எல்லோரும் கேலி, கிண்டல் பண்ணுவாங்கலே ஐயோ என்று கத்த”..
“ஏய் சும்மா இருடா, இல்லா மறுபடியும் தண்ணீ அடிச்சுட்டு பேசாம படு, புலம்பாத” என்று ஆண்டவர்கனி சொல்லிக்கொண்டு இருக்க..
“என்னால முடியல, முடியல என் பார்கவி எனக்கு இல்லையா, ஐயோ!” என்று புலம்பியவன்..
ஆண்டவர்கனியை பார்த்துக்கொண்டே பால்கனியில் இருந்து குதித்து இருந்தான்..
“டேய்” என்று ஆண்டவர்கனி அவனை பிடிக்கும் முன் கீழே விழுந்து விட்டான் பெரியசாமி…
ஆண்டவர் கனி கீழே பதரி, அடித்து, பிடித்து ஓடியவன், “அம்மா, சித்தி, அப்பா வெளியில் வாங்க” என்று சத்தம் போட்டுக்கொண்டே ஓடினான்…
அனைவரும் ஆண்டவர்கனி என்னவோ, ஏதோ சத்தம் போடுறான், என்று வெளியில் வர..
பெரியசாமி இரத்த வெல்லத்தில் கீழே கிடக்க, ஆண்டவர் கனி தம்பியை தூக்கி மடியில் வைத்திருந்தான்..
அனைவரும் பெரியசாமியை பார்த்து அருகில் வந்து தூக்க.
யோகா மகன் இருக்கும் நிலமையை பார்த்து நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்திருந்தார்..
ஆண்டவர் கனி பெரியசாமியை தூக்கிய கொண்டே யோகாவை பார்க்க.
யோகா பெரியசாமியை பார்த்து நெஞ்சை பிடித்து சரிவதை பார்த்தவன். “சித்தி” என்று கத்த.
அனைவரும் யோகாவை பிடித்து தூக்கி இரண்டு பேரையும் ஹாஸ்பெட்டலில் சேர்த்தனர்..
பெரியசாமியை ஆப்ரேஜன் செய்யும் இடத்துக்கு கொண்டு செல்ல..
யோகாவை ஐ, சி, யூ வில் வைத்து இருந்தனர்.. “யோகாவுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்” என்று மருத்துவர் கூறிவிட்டு அவருக்கு தேவையன வைத்தியத்தை பார்க்க..
பெரியசாமி தலையில் அடி பலமாக பட்டு இருக்க.. கை, கால்கள் முறிவு என அனைத்துக்கும் வைத்தியம் பார்த்து அவனும் ஐ, சி, யூவில் இருந்தான்..
ஆண்டவர்கனியின் குடும்பம் மிக மோசமான மன நிலைக்கு வந்திருந்தது. கல்யாணம் நின்று.. பெரியாசாமிக்கு அடிப்பட்டு, யோகாவும் ஹாஸ்பெட்டலில் இருக்க..
யோகாவுக்கு எதுவும் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல, ஆனாலும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொல்லி இருந்தார். இரண்டு நாள் கழிச்சு வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று டாக்டர் சொல்லி இருந்தார்.
இரவானதும் ஆண்டவர்கனி அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்…
பெரியசாமியை ஆண்டவர் கனி பார்த்து கொள்ள. முருகேசன்
மனைவியோகாவுடன் இருந்தார்.
‘திவ்யா அரிய நாச்சி இரவு உணவை எடுத்துக் கொண்டு வர.
“ஏன் திவ்யா நாங்க வெளியில் வாங்கி சாப்பிட மாட்டோமா, நீ ஏன் அழையுற” என்று மனைவியை கோபமாக பார்க்க.
அவனின் அருகில் வந்தவள் “நீங்க இருக்கற டென்சனுக்கு இன்னும் இரண்டு நாள் புல்லா டீ யா குடிப்பீங்கன்னு எனக்கு தெரியும், வாங்க சாப்பிடலாம்”..
“சாப்பிட பிடிக்கல டி நீ போ நான் அப்பறம் சாப்பிடுறேன்” என்றான்.
திவ்யா ஆண்டவர் கனியின் கைபிடித்து அவர்கள் தங்கவென ஒரு அறை பிடித்திருந்தனர். அங்கு அழைத்து வந்தவள். “”உட்காருங்க” என்றவள், அவன் “வேண்டாம், வேண்டாம்” என்று சொல்லை காதில் வாங்கதவள் கணவனுக்கு வயிறு நிறைய சாப்பிட வைத்து விட்டே அவனை எழ விட்டாள்.
“ஏன்டி இப்படி” என்று ஆண்டவர் கனி திவ்யாவை திட்ட..
“நீங்க தெம்பா இருந்ததான் எல்லாரையும் பாத்துக்க முடியும், சாப்பிட்டு தெம்பா எல்லா வேலையும் செய்ங்க” .. என்றாள்..
தன் உடல் நலத்தை பற்றி அக்கரை படும் மனைவியை ஆசையாக பார்க்க..
“ஹலோ இது ஹாஸ்பெட்டல் மதுரை பஸ், நம்ம ரூம்பு இல்ல, பார்வை எல்லாம் வேற மாதிரி இருக்கு”..
“போடி எல்லாம் வீனா போச்சு “..
“என்ன வீனா போச்சு” என்றாள் திவ்யா.
“இங்கே வா” என்றவன்..
பொனில் அவன் புக் பண்ணி வைத்திருந்த குலுமணாலி விமான டிக்கெட், மற்றும் ரூம்பை காட்ட..
திவ்யா “போச்சா” என்று விழுந்து, விழுந்து சிரிக்க.
“ஏன்டி சிரிக்குற, வாய்யை மூடு, நானே கடுப்புல இருக்கேன்”..
“என்ன கடுப்பு”?..
“எல்லாம் சரியா நடந்து இருந்தா நம்ம நாளைக்கு கிளம்பி இருக்கலாம் இப்பா பாரு, எல்லாரும் ஹாஸ்பெட்டல இருக்கோம்”..
“ஹலோ மதுரை பஸ், தினமும் நம்ம ரூம்பு நம்ம குலுமணாலி கொண்டாடிட்டு தானே இருக்கோம், இன்னும் என்ன குலுமணாலி” என்று அவனின் இடுப்பை பிடித்து கிள்ள..
“ஏய் நான் கோவிலுல பண்ணத, நீ இப்போ பண்ணுறீயா”.. என்றான்.
“ஆமா நீங்க மட்டும் தான் பொண்டாட்டி இடுப்பை பிடித்து கிள்ளு வீங்களா, நாங்களும் கிள்ளுவோம்” என்றும் மறுபடியும் கிள்ள..
“அடியே உன் இடுப்பும், என் இடுப்பும் ஒன்னா”, என்றவன் “இன்னைக்கு ரொம்பா அழகா இருந்தடி, அப்படியே உன்னை தூக்கிட்டு போயி, கடிச்சு சாப்பிடலாம் போல இருந்துச்சு பொண்டாட்டி”… என்றான்..
“ஹலோ மதுரை பஸ் நம்ம இப்போ எங்க இருக்கோம் தெரியுமுல”,..
“தெரியும் போடி”.. என்றவன்.. அமைதியாக இருக்க..
“எல்லாம் சரியாகிடும்” என்று ஆண்டவர்கனி அணைத்த திவ்யா “உங்க யோகாம்மாவுக்கும், உங்க தம்பிக்கும் ஒன்னும் ஆகாது போதுமா, மனச தைரியமா வச்சுக்கோங்க, உங்க முகமே சரியில்ல” என்று ஆண்டவர் கனியை அணைத்து கொண்டே பேசியவள்..
அவள் பேசியது, அணைத்தது எல்லாம் ஆண்டவர் கனிக்கு தேவையாக இருந்தது.. காலையில் இருந்து நடந்தது எல்லாவற்றையும் நினைத்து மிகவும் சோர்ந்து போயிருந்தான். திவ்யாவின் அணைப்பும், அக்கரையான பேச்சும், அவனுக்கு புத்துணர்வை தர..
“இப்போ மனசு ரொம்ப தெம்பா இருக்குடி, உன்கிட்ட பேசியது, தாங்யூ நாச்சியா, நீ இப்படி பக்கம் வந்து ஆறுதல் சொன்னா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நான் சமாளிப்பேன்” என்றான்..
அவனிடம் இருந்து விலகியவள் “யோகாம்மாவுக்கு கச்சி கொண்டு வந்தேன், கொடுத்துட்டு வர்ரேன்” என்றவள். யோகா அறைக்கு வந்து யோகாவிடம் நன்றாக பேசிவிட்டு, கச்சியை ஊட்டி முடித்து விட்டு, மாத்திரையை சாப்பிட வைத்தவள். முருகேசனையும் சாப்பிட வைத்து விட்டே. ஆண்டவர்கனியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்..
“நீ சாப்டீயா தீவி”.?.
“எனக்கு பசிக்கல வீட்டுல போயி சாப்பிடுறேன்” என்றவள் வெகுநேரம் கனியுடன் அமர்ந்திருக்க..
“நீ விட்டுக்கு போமா” என்றான்..
“ம்ம்ம்.. போறேன் ” என்றவள்..
தயங்கி நிற்க..
“என்னடா”..
“நீங்க இல்லாமல் அங்கே வீட்டுல எனக்கு தூங்கம் வராதே”…
அவளை பார்த்து சிரித்தவன்,”வந்துருவேண்டி இன்னும் ஒருவாரமோ, இல்ல பத்து நாளோ, பெரியசாமிக்கு சரியாகட்டும், நீ வீட்டுக்கு போயி நிம்மதியா தூங்கு, அப்பறம் நான் அங்க வந்த உன்னை தூங்க விட மாட்டேன் போ” என்று மனைவியை சீண்டி விட்டு, அவளுக்கு பிடித்த எண்ணை போராட்டா வாங்கி உண்ண வைத்து, வீட்டிற்க்கு சென்று விட்டு வந்தான்…
இரண்டு நாள் கழித்து யோகாவை டிஸ்சார்ஜ் செய்தனர்..
error: Content is protected !!