Skip to content
Post Views: 1,763
பார்கவி செடிகளுக்கு தண்ணி ஊற்றியவள். அந்த கல் பெஞ்சில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள், மனது நீண்ட நாளுக்கு பிறகு கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பூசெடிகளின் வாசம், பூக்களின் அழகை ரசித்தவள். ஸ்ம்மிங் பூலில் காலைவிட்டு ஆட்டிக்கொண்டு இருந்தவள் ஸ்ம்மிங் பூல்லில் குளிக்க தோன்ற. நளினியும், ஸ்ரீஜெயமும் வந்து விடுவார்கள் என்று கீழே வர பார்த்தவள். மாடி அறையை சுற்றி பார்க்க. நிறைய கப்போர்ட் இருந்தது, அதை என்னவென்று திறந்த பார்க்க அதில் ஆண்களின் உடைகள் இருக்க அது அன்புவின் அறை என்று தெரிந்து கொண்டவள், கீழே வந்தாள்.
ஸ்ரீஜெயமும், நளினியும் பெரிய பைகளை தூக்கி கொண்டு வர. அவர்களிடம் இருந்து அந்த பைகளை வாங்கி பூஜை அறையில் வைத்தவள்.
Advertisement
நளினி சோர்வாக தெரிய “காபி போடவா அத்தை” என்றாள்.
Advertisement
“போடுடா” என்றவர் “கால் வலிக்குது” என்று கால்களை நீண்டி பிடித்து விட.
Advertisement
“ஏன்கா நீ என்ன வேணுமுன்னு சொன்னா, நானே வாங்கிட்டு வந்து இருப்பேன், இப்படி நடந்து கால் வலி வந்துருச்சு” என்றவர். கால் அருகே வந்து காலை பிடித்து விட வர.
Advertisement
“வேண்டாம் டா தம்பி கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்” என்று சொல்லிக்கொண்டு இருக்க.
பார்கவி இதை கேட்டுக்கொண்டு வந்தவள். அவர்களிடம் காபியை கொடுத்தவள் “அத்தை என்கிட்ட ஒரு தைலம் இருக்கு அதை தேய்ச்சா சரியா போகும்” என்றவள் அதை எடுத்து வந்து தேய்த்து விட.
“நான் தேய்ச்சுக்கிறேன்டா” என்றார் நளினி.
“பரவாயில்லத்தை நான் தேய்ச்சு விடுறேன்” என்று காலில் நன்றாக எண்ணை வைத்து பிடித்துவிட்டவள். சுடு தண்ணீர் கொண்டு வந்து அதில் காலை சிறிது நேரம் வைக்க சொல்ல. மருமகள் சொல்லியது போல் செய்ய.
காலிற்க்கு மிகவும் இதமாக இருந்தது. “நல்லா இருக்குடா வலி பாதி போயிருச்சு” என்றவர் “அத்தை ஊருக்கு போறப்போ இந்த எண்ணையை குடு” என்றார்..
“சரி அத்தை தர்ரேன்” என்றாள்.
ஸ்ரீஜெயம் பார்கவியிடம் “நீ என்ன பண்ண போற டா இங்க மும்பையில்” என்றார்..
” நானா”, என்றவள். “எப்பையும் போல தான் பா, ஆன்லைன்ல பேசன்ட் பார்க்க போறேன்”.
“இல்லடா நீயேன் ஒரு ஹாஸ்பெட்டல் போல வைக்க கூடாது”
என்றார்.
” இல்லப்பா நான் தனியா எப்படி எல்லாத்தையும் பார்க்க முடியும்” என்றாள்..
“நான் உன் கூட இருக்கேன்டா”. என்று சொல்ல..
“சரிப்பா” என்றாள் பார்கவி.
அடுத்த நாளே ஸ்ரீஜெயம் அன்பு வீட்டிற்கு பக்கத்திலே ஒரு கிலோ மிட்டர் தூரத்திலே ஒரு பழய சிறிய மருத்துவமனை விலைக்கு வர. அதை வாங்கி, புதுபிக்கும் வேலைகள் நடக்க.
பார்கவிக்கு, அந்த இடத்தை ஸ்ரீஜெயம் வாங்கியது தெரியாது. பத்து நாள் கழித்து ரிஜிஸ்ட்ரெஜன் பண்ணும் போது தான் அவளுக்கே தெரியும்.
“என்னப்பா இது?”. என்பது போல் பார்கவி ஸ்ரீஜெயத்தை பார்க்க.
“நீ என் பொண்ணுடா, வாய் வார்த்தையா சொல்லுறேன்னு பார்த்தீயா. என்னைக்கு உங்க அப்பா என் கையில் உன் கை பிடிச்சு உங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கோங்கன்னு சொன்னாரோ. அப்பவே நீ என் பொண்ணாகிட்ட. அப்புறம் என் அன்புக்கு மனைவி நீ. அன்புவும், நீயும் என் இரண்டு கண் மாதிரிடா. அன்புக்கு என்கிட்ட என்ன உரிமை இருக்கோ, அதே அளவு உனக்கு இருக்கு” என்று பார்கவியை அணைத்துக்கொண்டார்..
பார்கவிக்கு ஒன்றும் தெரிய வில்லை 4.5 நாட்களில் , புது சித்தா கிளினிக் ரெடியாகி இருந்தது. பார்கவின் பெயரில் இரண்டு மாடி கொண்ட அந்த இடம், பத்து அறைகள் இருந்தன. பார்கவி முதலில் இலங்கையில் இருந்து மருந்துகளை கொண்டு வர வைத்திருந்தாள்.
வேலைக்கு 5 பேரை சேர்த்திருந்தாள். அவர்களுக்கு அனைத்தையும் சொல்லி குடுத்து கிளினிக் ரெடியாகும் வேலை நடந்துக்கொண்டு இருந்தது. நல்ல நாள் பார்த்து திறக்க நினைத்தனர்.
பார்கவியும், ஸ்ரீஜெயமும் கிளினிக்கில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வீட்டுக்கு வர.
அன்பு அன்று வீட்டிற்கு வந்திருந்தான்.
பார்கவி அவனை மறந்தே போனாள் இருக்கும் வேலையில்.
அன்பு நளினியின் மடியில் தலை வைத்து படுத்து இருந்தான்.
ஸ்ரீஜெயம் மருமகனை பார்த்து விட்டு.
“டேய் அன்பு எப்போ வந்த”.
“இப்போ தான் மாம்ஸ் இரண்டு மணி நேரம் முன்னாடி” என்றவன். பார்கவியை பார்க்க.
அவளும் அன்புவை தான் பார்த்தாள். தாயின் மடியில் தலைவைத்து பேசிக்கொண்டு இருந்தவனை ஒரு நிமிடம் பார்த்தவள் திரும்பிக் கொள்ள.
பார்கவி காபி சாப்பிடுறீயா டா என்றார் நளினி. “இல்லத்தை வேண்டாம் நான் வந்து போடுறேன்” என்றவள் அவள் அறைக்கு சென்று குளித்து விட்டு இரவு உடை பேன்ட் சர்ட்டில் வெளியில் வந்தவள்.
அன்புவை பார்க்காது கிச்சன் செல்ல.
அன்புவின் பார்வை முழுவதும் பார்கவியின் மேல் தான்..
பார்கவி அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தாள். அன்புவுக்கு கொடுக்க “தாங்யூ” என்று சொல்லி எடுத்துக்கொண்டான்.
பார்கவி அவளின் காபி கப்பை எடுத்துக் கொண்டு நளினியின் அருகில் அமர்ந்தாள்.
ஸ்ரீஜெயமும் அன்புவும் நண்பர்கள் போல் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தவள். குடித்த காபி கப்பை எடுத்து சென்று கிச்சனில் வைத்தவள்.
“அத்தை நான் மாடிதோட்டத்துக்கு மேல போறேன்” என்க..
“சரிடா, போ நைட்டு சாப்பாடு ரெடியானவுடன் கூப்பிடுறேன்”.. என்றார்..
“உம்” என்று தலையாட்டி சென்றுவிட்டாள்..பார்கவிக்கு அன்பு வந்ததில் இருந்தே மனம் பட, படவென அடித்துக்கொள்ள. தோட்டத்திற்கு வந்தவள், அந்த பூச்செடிகளை சிறிது நேரம் பார்த்து விட்டு. அந்த பூக்களின் வாசத்தை உள்ளிழுத்தாள். செடிகளுக்கு தண்ணீர் விட்டு, அந்த செடிகளிடம் பேசிக்கொண்டு இருக்க.
நேரம் போனாதே தெரியவில்லை பார்கவிக்கு. ஒரு பூசெடி மட்டும் பூக்காமல் இருக்க. அந்த செடியின் அருகில் வந்தவள் “நீங்க எப்போ பூக்க போறீங்க. பூக்க வேண்டாமா” என்று பேச..
பார்கவியில் அருகில் வந்த அன்பு “உன்னை அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க” என்று சொல்ல..
அவன் பேசியதை கேட்டவள், கைகளை கழுவிக்கொண்டு. அவனை திரும்பி பார்க்காமல் செல்ல.. “மனுஷனை விட செடிக்கிட்ட பேசுறது தான், பிடிக்கும் போல” என்று சொல்ல.
அவன் பேசியது கேட்டாலும் பதில் சொல்லாமல் கீழே சென்றுவிட்டாள்.
“போடி பேசாத” என்றவன். அவள் சென்றவுடன் மெல்ல தோட்டத்திற்கு வந்தான். முதலில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தான்.
“அன்புவுக்கும் செடிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் வைத்திருந்தது எல்லாம் வாசனை மிகுந்த பூச்செடிகளே, சில நிமிடம் பூ வின் வாசத்தை உணந்தவன். புதிதாக ஒரு வாசம் அவனின் தோட்டத்தில் வீச, அது பார்கவியின் சோப்பு வாசனை என்று அறிந்து கொண்டான்.
அன்புவின் போன் ஒலித்தது. எடுத்து பார்த்தான். ஸ்ரீஜெயம் தான் அழைத்துக்
கொண்டிருக்கிறார்.
போனை எடுத்தவன் “வர்ரேன் மாம்ஸ் ” என்று கீழே செல்ல. அனைவரும் இவனுக்காக காத்திருந்தனர்.
அனைவரும் சேர்ந்து உணவு உண்டு கொண்டுக் இருந்தனர்..
பார்கவி வேகமாக இரண்டு சப்பாத்தியை உண்டு விட்டு எழுந்து கொள்ள பார்க்க.
“என்னாட இரண்டு போதுமா, இன்னும் ஒன்னு சாப்பிடு”
என்று நளினியை எடுத்து வைக்க சொன்னார் ஸ்ரீஜெயம்.
“அத்தை போதும்” என்றவளை.
“சாப்பிடுமா, வேற எதுவும் வேணுமாடா, பால் சாதம் சாப்பிடுறீயா” என்க.
“உம்” என்று பார்கவி தலையாட்ட,
பால் சாதம் மகளுக்கு எடுத்து வைத்தார் ஸ்ரீஜெயம்.
பார்கவி பால் சாதத்தை வேகமாக உண்டு விட்டு அவளின் அறைக்கு செல்லும் முன்.
“பாரு” என்று அழைத்த நளினி “நாளைக்கு நம்ம வீட்டுல கணபதி ஹோமம் பண்ணலாமுன்னு இருக்கோம். காலை சீக்கிரம் எழுந்து வாடாம்மா” என்றார்..
“சரி அத்தை எத்தனை மணிக்கு வரனும்”.. “6 மணிக்கு டா, புடவை கட்டிக்கோ” என்று சொல்ல.
“சரி அத்தை” என்றவள். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு ரூம்பை விட்டு வெளியே வர.
நளினி குளித்து முடித்து பூஜை அறையை அலங்காரம் பண்ணிக்கொண்டு இருந்தார்.
பார்கவி நளினியிடம் “என்ன செய்ய வேண்டும் என்று கேட்க”.
நளினி ஒரு சில வேலைகளை மருமகளிடம் சொல்ல.”சரி அத்தை” என்றவள். அவர் சொல்லிய வேலைகளை முடித்து விட்டு வந்தவள். வேற என்ன அத்தை பண்ணனும் என்று கேட்க.
“எல்லாருக்கும் காபி போடுடா ஐயர் வந்திருவார். என்று சொல்ல.. பார்கவி கிச்சன் சென்றாள்.
நளினி பூஜை வேலைகளை முடித்தவர். அன்பு வரவும். “அன்பு கிச்சனுல மஞ்சள் தூள் மட்டும் எடுத்து வா” என்க.
“சரிமா” என்றவன். வேஷ்டியை பிடித்துக்கொண்டு ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்து கொண்டு கிச்சன் உள்ளே வர.
பார்கவி டம்புளர் எடுக்க திரும்ப அன்புவும், பார்கவியும் முட்டிக்கொண்டனர். “ஆவென்றாள்” பார்கவி வலியில் கத்த.
“சாரிடா, சாரிடா பாரு நான் உன்னை பார்க்கலை” என்று சொல்ல, . தலையை தேய்த்து கொண்டே அவனை முறைத்தவள். அவன் வேண்டும் என்றே இடித்தாக நினைத்து பேசாமல் முகத்தை திருப்ப.
“அன்பு மஞ்சள் பொடி எடுத்தீயா” என்று நளினி வெளியில் இருந்து சத்தம் போட.
“அம்மா வர்ரேன்”, என்றவன். பார்கவின் பின்னாடி நின்று “உன்னை இடிக்க நான் வல்ல, மஞ்சள் பொடி எடுக்க வந்தேன்” என்று மஞ்சள் பொடி டப்பாவை அவளிடம் காட்டிவிட்டு வெளியே வந்தான்.
தப்பா நெனச்சிட்டோமோ என்று மனதில் நினைத்தவள், இரும்பு மாதிரி இருக்கான் தலை வலிக்குது என்று புலம்பியவள்.
அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வர.
அன்புவின் தந்தை வந்திருந்தார். அவரை பார்த்த பார்கவி “மாமா எப்போ வந்தீங்க”.
“இப்பதான்டா காலையில் வந்தேன், நீ நல்ல இருக்கீயா டா ” என்றார் தமிழ் அரசு..
“உம், நல்லா இருக்கேன் மாமா’ என்றவள், “இந்தாங்க காபி” என்று அவரிடம் ஒன்றை குடுத்து விட்டு அனைவருக்கும் கொடுக்க. பார்கவி நான்கு காபி மட்டும் போட்டு இருந்தாள். அனைவருக்கும் கொடுத்து விட்டு கடைசியில் டம்புலரை அன்புவிடம் நீண்ட, “நீ குடி பாரு, நான் கீரின் டீ போட்டு குடிக்கிறேன்” என்றவன் கிச்சன் நோக்கி செல்ல.
பார்கவி மனதில் அனைத்தையும் கவனிக்குறானே. நல்லவன் தான் போல.. என்று மனதில் நினைத்துக்கொண்டாள்…
******
இங்கே விருதுநகரில் ஆண்டவர்கனி பெரியசாமிக்கு கை வலிக்குது என்று ஹாஸ்பெட்டல் அழைத்து வந்திருந்தான்.
பெரியசாமியின் கைகட்டை பிரித்த டாக்டர் அவன் கையில் ஆப்ரேஜன் பண்ணிய இடத்தில் கீழ் ஒரு சிறிய புண் சலம் வைத்து வீங்கி இருக்க.
“கொஞ்சம் வலி இருக்கும் போதே வந்து இருக்க கூடாதா” என்றவர்.
கட்டை நன்றாக பிரித்து காயத்தை சுத்தப்படுத்த, பெரியசாமி வலியில் கத்தியிருந்தான். அவன் கையில் எழும்பு முறிவின் பக்கத்தில் உள்ள சதை அழுகி இருக்க. அதை சுத்தம் பண்ணிய டாக்டர்.
“நாங்க சின்ன புண்ணுன்னு நெனச்சோம் இது பெரிய புண்ணா இருக்கு என்றவர். அட்மீட் பண்ணியிருக்க. புண்ண சுத்தம் பண்ணி , இரண்டு ஆப்ரேஜன் பண்ணனும் என்றார்.
ஆண்டவர்கனிக்கு கோபம் வந்தது “என்ன டாக்டர், எத்தனை ஆப்ரேஜன் அவனுக்கு பண்ணி இப்போ சரியாச்சுன்னு பாத்த இப்படி சொல்லுறீங்க” என்றான்.
“சாரி ஆண்டவர் கனி சில டைம் இந்த மாதிரி நடந்துரும், பெரியசாமிக்கு இன்னும் இரண்டு சின்ன ஆப்ரேஜன் பண்ணனும்”.
“என்னாச்சு எதனால இப்படி ஆச்சு” என்றான் கனி.
“உங்க தம்பி கையில புண்ணு வந்து சலம் வச்சு இருக்கு அத நல்ல கிளின் பண்ணி, அவர் தொடையில் உள்ள ஸ்கின்னை எடுத்து கையில் வச்சு ஆப்ரேஜன் பண்ணனும். அது எப்படி அவருக்கு புண்ணு ஆருதுன்னு பார்த்துட்டு, அப்பறம் இன்னும் ஒரு ஆப்ரேசன் பண்ணனும், ஒரு வாட்டி ஆப்ரேசன் பண்ண முடியாது இரண்டு தடவை கண்டிப்பா பண்ணனும்” என்றார்.
ஆண்டவர் கனி “இந்த தடவை பண்ணுற ஆப்ரேசன சரியா பண்ணுங்க டாக்டர்” என்றவன்.
இன்னும் எந்தனை பிரச்சனை வரபோகுதோ, என்றவன் பெரியசாமியை ஹாஸ்பெட்டலில் அட்மிட் பண்ணி விட்டான்..
திவ்யா அரியா நாச்சியை டெல்லிக்கு சென்று அழைத்து வரலாம் என்றிருந்தவனுக்கு அடுத்து, அடுத்து அவனுக்கு டெல்லி செல்ல முடியாமல் நாட்கள் ஹாஸ்பெட்டல், ஷோரும் வீடு என்று செல்ல..
ஆண்டவர்கனி திவ்யா அரிய நாச்சியை நினைக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தான்.
இங்கே டெல்லியில் திவ்யா ஆண்டவர் கனி தன்னை அழைத்து செல்ல வருவான் என்று எதிர் பார்த்து காத்திருந்தாள், அவனின் சிசுவை வயிற்றில் சுமந்து கொண்டு.
அவனுக்கோ அவளை நினைக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தான்……
error: Content is protected !!