Skip to content
Post Views: 1,424
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -22
Advertisement
Advertisement
Advertisement
ஸ்ரீஜெயத்தில் ஞாபகம் 25 வருடம் பின் நோக்கி சென்றன. அன்று காலேஜில் மஞ்சுவிடம், “நான் நாளை துபாய் கிளம்ப போறேன். முதலில் சென்னை சென்று அங்கிருந்து துபாய்க்கு விமானத்தில் போக போறேன்.
நீ என்ன பாக்க நாளைக்கு எங்க அரிசி மில்லுக்கு காலையில் வருவீயா”?..
Advertisement
“கண்டிப்பா வர்ரேன் ஸ்ரீ” என்று சொல்லிவிட்டு சென்றாள்..
மறுநாள் ஸ்ரீஜெயம் வேகமாக கண்முழித்தவன்.. ஊருக்கு போக அனைத்தைதும் எடுத்து வைத்துவிட்டு மில்லுக்கு கிளம்பினான்.
அன்று மாத கார்த்திகை,, அவ்வூரில் மாத கார்த்திகை என்றால் தறி புடவை நெய்ய மாட்டார்கள், மில்லில் கூட வேலை செய்ய மாட்டார்கள், அன்று முழுநேரமும் கரெண்ட் இருக்காது..
ஸ்ரீஜெயம் காலையிலே மில்லுக்கு வந்து அமர்ந்து கொண்டு, மஞ்சு வருவதை எதிர் பார்த்து காத்திருந்தவன். மில்லில் உள்ள காவலாளிக்கு கூட விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்..
மஞ்சு வருவது யாருக்கும் தெரிய கூடாது என்று. காலையில் இருந்தே ஸ்ரீஜெயம் காத்து இருக்க மதியம் ஆகியும் மஞ்சுவை காணவில்லை, மதியம் 4 மணிக்கு மேல் இடி, மழை கொட்ட ஆரம்பிக்க, இனி அவள் வரப்போவது இல்லை என்றவன்.
மில்லின் உள்ள ஆபிஸ் அறைக்கு சென்று அமர்ந்து விட..
6 மணி மேல் ஆபிஸ் அறையின் கதவு தட்டும் ஓசை கேட்க நிமிர்ந்து பார்த்தான். ஸ்ரீஜெயம் மஞ்சு தான் மழையில் நனைந்து அவனை பார்க்க வந்திருந்தாள்..
கையில் அவனுக்கு பிடித்த பால்கோவாவை ஒரு பாக்சில் எடுத்துக்கொண்டு மழையில் மொத்தமாக நனைந்து வந்திருந்தாள்..
அவளை பார்த்தவனுக்கு சந்தோஷத்தில் கண்ணீல் நீர் கோர்த்து விட்டது “வந்துட்டீயா
பாப்பூ” என்றவன்.. அவளை வேகமாக சென்று அணைத்திருந்தான்..
“ஸ்ரீ” என்றவளுக்கு அழுவதை தவிற ஒன்றும் பேச முடியவில்லை. அவள் “ஸ்ரீ, ஸ்ரீ” என்று அவனை அணைத்து அழ..
இவன் “பாப்பூ, பாப்பூ” என்ற கண்கலங்கினான் “நீ வரமாட்டேன்னு நெனச்சேன் பாப்பு” என்றான்.
“அதெப்படி உங்களை பார்க்க வராமல் போவேன் ஸ்ரீ, எப்போ கிளம்பனும் நீங்க”..
“நைட்டு கடைசி ட்ரெயின் தான் பாப்பூ”..
“இந்தாங்க” என்று அவனுக்கு பிடித்த பால் கோவாவை அவளே செய்து எடுத்து வந்திருந்தாள்…
“பாப்பூ”என்றான்.
“நீங்க கண்டிப்பா தூபாய் போகனுமா, இங்கே ஏதாவது வேலை இல்ல, வெளியூருக்கு போகி கூட வேலை செய்யலாமே” என்று கேட்டவளின் குரல் உடைய..
“பாப்பூ அழதடா , ஒரு இரண்டு வருசம் தான் நான் வந்துருவேன், நீயும் படிச்சு முடி, சரியா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”…
“சீக்கிரம் வந்துருவீங்க தானே”..
“கண்டிப்பா பாப்பூ அழதா.. ஒர் ரெண்டு வருஷம் வந்துருவேன்”.
“சரி நான் வரேன் என்று மஞ்சு , கிளம்ப தயாராகியவள், தயங்கி, தயங்கியே, நிற்க “என்னடா”?
என்றான்..
அவன் முகத்தை பார்த்துக்கொண்டே வாசல் வரை வந்தவள். மீண்டும் அவன் முகத்தையே பார்க்க..
“உன் மனசுல என்ன இருக்கு சொல்லு மஞ்சு, ஏன் என் மூஞ்சியே பார்க்குற”?..
“திரும்ப உங்களை எப்போ பார்ப்பேன்னு தெரியல, ஒரு அஞ்சு நிமிசம் உங்க முகத்தை பார்த்திக்கிறேன்”.. என்றவளின் கவலையான முகத்தை பார்த்தவன்..
“ஏய் என்னடா பாப்பூ இப்படி பேசற. நீ இப்படி பேசுன நான் எப்படி ஊருக்கு போறது”.. என்றவனுக்கு அவள் சொல்லிய சொல்லை தாங்க முடியவில்லை..
அவளிள் தலைமீது கைவைத்தவன்.. தலையை வருடிவிட்டு தோள் அணைந்தவன்.. அவள் நெத்தியில் முத்தமிட..
“ஸ்ரீ என்னை மறக்க மாட்டீங்களே” என்றாள்..
“என் பாப்பூவை நான் மறப்பேனா?. என் உயிர்டா நீ, இந்த ஜனுமத்துல நீ தான் என் பொண்டாட்டி போதுமா” என்றான்..
“நானும் உங்களுக்காக எத்தனை வருஷமுன்னாலும் காத்திருப்பேன் ஸ்ரீ, நீங்க சீக்கிரம் வாங்க, என்னை ரொம்ப காத்திருக்க வச்சுறாதீங்க, என்னால உங்கள பாக்காம இருக்க முடியாது ஸ்ரீ”.. என்றவள் தேம்பி அழ..
“அடே பாப்பூ 2 வருஷத்துல நான் வந்துருவேன்,, நான் வந்தவுடனே நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம், நீ அழாத” என்று சமாதானம் பண்ணியவன்…
“நீ சீக்கிரம் போடா, மழை பெருசா வர்ர மாதிரி இருக்க.. கிளம்பு” என்றான்..
“உம்” என்றவள்..
அவனை திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே சைக்கிளை எடுத்து கொண்டு அவனை பார்த்த படியே ஓட்ட.. மழை பெய்திருந்ததால் சைக்கிள் ஓட்டும் போது சறுக்கி கீழே விழந்தாள் மஞ்சு, “அம்மா” என்று கத்தியபடியே கீழே வில..
“பாப்பூ” என்ற ஸ்ரீஜெயம் ஓடி வந்து அவளை தூக்கி விட, மழை வேகம் எடுத்தது.. இருவரும் முழுவதும் நனைத்திருந்தனர்.. அவளை நடத்தி கூட்டி வர முயற்சி பண்ண, அவளால் நடக்க முடியவில்லை,, “என்ன பாப்பூ இப்படி அடிபட்டு இருக்க பாத்து ஓட்ட மாட்டீயா” என்றவன். அவளை ஆபிஸ் ரூம் தூக்கி வந்தான்.
அவளுக்கு முட்டிலில் நல்ல அடி.. “வலிக்கு ஸ்ரீ”.. “இரு பாப்பூ” என்றவன், முதல் உதவி பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தவன்..
“காலை நீட்டு பாப்பூ எங்கே அடிப்பட்டு இருக்கு காட்டு’ என்றான்..
“வேண்டாம் ஸ்ரீ, நானே போட்டுக்குறேன்” என்றவளை..
“காலை காட்டு பாப்பூ” என்றான். கோபமாக..
அவள் பாவாடையை முட்டி வரை தூக்க, அவளுக்கு நன்றாக அடி பட்டு இரத்தம் வந்து கொண்டு இருக்க.. முதலில் பஞ்சை வைத்து இரத்ததை நிறுத்துவோம் என்று. ஸ்ரீஜெயம் அடிபட்ட இடத்தை நிறைய பஞ்சை எடுத்த அலுத்தி பிடிக்க.
வலியில் “ஸ்ரீ, ஸ்ரீ” என்று அவன் சட்டையை இலுத்து பிடித்திருந்தாள் மஞ்சு..
“ஒன்னும் இல்லடா கொஞ்சம் நேரம் இரத்தம் நின்னுரும், மருந்து போடலாம்”.. என்றான்..
சிறிது வலி குறைந்தது போல தெரிய..
ஸ்ரீஜெயத்தை இடப்போடு கட்டி கொண்டது பெண்..
கொஞ்சம் நேரத்தில் இரத்தம் நின்று இருக்க, அவள் காலை சுத்தம் பண்ணியவன் காலில் மருந்திட்டான்..
“வலிகுறைந்தத பாப்பூ” என்றான்..
“உம்” என்றவள்.. அவன் முகத்தையே ஏக்கமாக பார்த்திருக்க, “என்ன” என்றவனை , அவனின் சட்டையை பிடித்து இலுத்து அவனின் கன்னத்தில் முத்தமிட..
மறுபடியும் “என்னடா” என்று அவளின் தலைகோதியவன், அவள் நெத்தியில் முத்தமிட்டவன்..
“என்னாச்சு பாப்பூ”.. என்றான்..
அவளின் முத்தங்கள் முடிவு இல்லாமல் ஸ்ரீஜெயத்தின் முகத்தை தாண்டி சென்று கொண்டிருக்க.. இதற்கு தன்னால் முடியாது என்றவன்..
அவள் செய்ததை இவன் செய்ய தொடங்க.. அவர்களின் வாழ்வின் தொடக்கம் தொடங்கியது..
இருவரில் யார் முதலில் தொடங்கியது, யார் அதை முடிப்பது என்று முடிவு இல்லாமல் நேரம் நீண்டு கொண்டே போக.. இருவரின் உடல் ஒருவரை ஒருவர் விட மாட்டேன், என்பது போல் பேசிக்கொண்டு இருக்க..
இருவரின் உள்ளம், அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் பேச, அவர்களிள் தேடல் முடியாமல் சென்றுக்கொண்டு இருக்க.. அன்று மழையில் இவர்களும் உதவி செய்து இருக்க.. விதியின் விளையாட்டை யார்றறிவார்.
இருவருக்கும் பிரிவின் துயரத்தில் இது நடந்தது என்று தெரியாமல்.. என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருவரும் ஒருவராக மாறி போக.. அங்கே அழகான கூடல் நடந்தது.. திடிர் என்று ஒரு மின்னல் வெட்ட..
ஸ்ரீஜெயம் சுயநினைவுக்கு வந்திருந்தவன்.. அவளிடம் இருந்து பிரிந்தான்.. அவளின் கோலம் பார்த்து ஆடையை அவள் மேல் போட்டு தலையில் அடித்துக்கொண்டான்.. என்ன பாவம் செய்தேன் நான். என் பாப்பூவை, சிறு பிள்ளையை என்று தலைமேல் கைவைத்திருந்தவன் கண்கலங்கி இருக்க..
தன் ஆடையை சரி பண்ணி கொண்டு எழுத்து அமர்ந்தவள்.. “ஸ்ரீ” என்று அழைக்க..
“அப்படி என்னை கூப்பிட பாப்பூ’ எவ்வளவு பெரிய தவறு, பாவம் என்று அவனை, அவனே அரைந்து கொள்ள..
“ஸ்ரீ நீங்க எதுவும் பண்ணல. நான் தானே கீழே விழுந்தேன். இங்கே நடத்ததுக்கு நான் தானே காரணம்”.
” நீ சின்ன பொண்ணுடா உனக்கு 19 வயசு இருக்குமா, நான்” என்றவன்.. மீண்டும் அவனே அவனை கன்னத்தில் அரைந்து கொள்ள..
“ஸ்ரீ” என்றவள் அவனின் கையை பிடித்துக்கொள்ள..
“சாரிடா நான் பண்ணது தப்புதான்”.
“நீங்க எதுவது தப்பு பண்ணல, என் ஸ்ரீயை பத்தி எனக்கு தெரியாதா, இப்போ நடந்தது நம்ம ரெண்டு பேரும் நம்மலால இனி பாத்துக்க முடியாது, அந்த ஏக்கத்தில் வெளிபாடு தான் இது நடந்தது, நீங்க வருத்தப்பட இதுல ஒன்னும் இல்ல.. இனி நான் கவலை பட மாட்டேன், நீங்க எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் உங்களுக்காக நான் காத்திருப்பேன்ஸ்ரீ”.. என்றவளை
இருக்கமாக அணைத்திருந்தான் ஸ்ரீ.. சட்டை அணியாத அவனின் மார்ப்பில் முத்தமிட்டவள், “இந்த இடம் எனக்கு மட்டும் தான் ஸ்ரீ” என்று அவனை அணைத்துக்கொள்ள.
இந்த கை இனி வேறோரு பெண்ணை அணைக்காது என்று சபதம் எடுத்தான் ஸ்ரீஜெயம்..
அவளின் தலையில் முத்தமிட்டவன், “வா பாப்பூ” என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டின் அருகில் விட..
தன்னை பார்த்து “உடம்பை பார்த்துக்கோங்க ஸ்ரீ ப்பா” என்று சொல்லிவிட்டு நடக்க முடியாமல் நடந்த போன, பெண்ணின் முகம் இன்றும் அவன் மனதில் நீங்காத நினைவாக இருக்க,, என் பாப்பூ என்னவெல்லாம் துன்பம் அனுபவிச்சாளோ, தெரியவில்லையே என்று நினைத்தவன்..
ஆதிநாரயணனை பார்த்து “என் மஞ்சுவுக்கு என்னாச்சு அவ எப்படி இலங்கை வந்தா”?.
“எல்லாம் சொல்லுறேன் ஸ்ரீஜெயம்” என்று மஞ்சுவுக்கு நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்..
‘நீங்க துபாய் போயி இரண்டு மாதம் கழிச்சு தான், மஞ்சுவுக்கு வயித்துல குழந்தை உருவாகி இருந்தது தெரிஞ்சது..
வெளியில அவளுக்கு சொல்ல முடியல, உங்க பிரெண்டு இரண்டு, மூனு பேருகிட்ட உங்களை பத்தி விசாரிச்சு இருக்க.. அப்போ போன் வசதி ஒன்னும் பெருசா இல்ல,, லட்டர் தான், உங்கிட்ட அவ உண்டானதை சொல்ல, துபாய் அட்ரஸ் கேட்டு அடிகடி உங்க பிரெண்ட்ஸ் பார்க்க வருவா போல..
உங்க பிரெண்ட்ஸ் தெரியாதுமா லட்டர் போட்டா அட்ரஸ் தர்றோம் என்று சொல்ல..
இவ உங்க பிரெண்டு கூட பேசுறத பார்த்து ஊருகாரங்க, மஞ்சு யாரையோ லவ் பண்ணுறான்னு மஞ்சு அப்பாகிட்ட சொல்லிட்டாங்க..
உடனே மஞ்சு அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு, மஞ்சு வர்ர மாப்பிள்ளைகளை எல்லாம் எனக்கு பிடிக்கல கல்யாணம் வேண்டாம், பிடிக்கலன்னு சொல்ல…
அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க, அவளுக்கு இரண்டு நாளா சாப்பாடு, போடாமா ஒரு ரூம்புல அடச்சு வச்சுட்டாரு, அவ அப்பா..
மஞ்சு கதவை திறக்க, பசிக்குதுன்னு சொல்லியும் அவங்க கதவை திறக்கல.. கல்யாணம் பண்ணிக்கோ அப்போ தான் கதவை திறப்போம்முன்னு மிரட்ட..
இவளோ செத்தாலும் சாவேன். கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம் பண்ணி இரண்டு நாளா சாப்பிடாம அந்த ரூம்புல மயங்கிட்டா..
error: Content is protected !!