Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 24 3

மஞ்சுவை பார்த்து “இனி உன் கணவர், உன் மகனோடு  சந்தோஷமாக வாழவேண்டும்  மஞ்சு” என்று   ஆசி வழங்கினார்..

இருவரும் அவரிடம் நன்றி சொல்லி விட்டு.  காரில் வீடு  நோக்கி வந்து  கொண்டிருக்கும்  போது..



Advertisement

“நாமா இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா பாப்பூ”..என்றார் ஸ்ரீஜெயம்..

Advertisement

அவரின் முகத்தை பார்த்த  மஞ்சு. “நமக்கு தான் 25  வருஷம் முன்னாடியே  கல்யாணம் ஆகிருச்சே ஸ்ரீப்பா”.. என்றவளை

Advertisement

ஸ்ரீஜெயம்  புரியாமல்  முளிக்க, “கழுத்துல  தாலி கட்டுனாதான்  கல்யாணமா? ஸ்ரீப்பா, என் மனசால  நீங்க என்னைக்கோ  என் புருஷனாகிட்டீங்க, தாலி வெளியில  பார்க்குறவங்களுக்காக  தான், என் மனசுல  எப்போ நீங்க  வந்தீங்களோ  அப்போவே நீங்க  தான்  எனக்கு எல்லாமுன்னு  முடிவு பண்ணிட்டேன்”.. என்றவளை தோளோடு அணைத்தவர்..

Advertisement

அவள்  எப்படி எனக்காக இவ்வளவு  நாள் தனியாக வாழ்ந்திருக்கிறாள்  என்று நினைத்தவர், இருவரியில்  பதில் சொல்லி விட்டிருந்தாள்  மஞ்சு,..

இருவரும் வீடு வந்து சேர,   மொத்த விருதுநகரும் அங்கே இருந்தது.. நளினி அவரின் கணவர்.. யோகா, முருகேஷன், ராமசுப்பு, திவ்யா என அனைவரும் வந்திருக்க..

 திவ்யா வந்த களைப்பில்  ரூம்பில் படுத்திறக்க..

மஞ்சுவுக்கு யாரை பார்ப்பது, யாரிடம் பேசுவது என்று தன் சொந்தத்தை பார்த்து கண்கலங்கி நிற்க..

“ஏய் சில்வண்டு” என்று யோகா வந்து மஞ்சுவை அணைத்துக்கொள்ள..

அண்ணன் மார்கள் இருவரும் தங்கையை பார்த்து கண்கலங்கி நின்றனர்.

நளினி வந்து ஸ்ரீஜெயத்தை அணைத்து கொண்டவர்.. பின்பு  கன்னத்தில் அரைந்திருந்தார். “ஏன்டா என் கிட்ட சொல்லல்ல” என்று அழுதிருந்தார்..

ஸ்ரீஜெயம்  அரைந்த அக்காவை பாவமாக பார்க்க. “போடா” என்றவர், மஞ்சுவின் அருகில் வந்து அவளின்  கைபிடித்துக்கொண்டவர், “என்  தங்கம்” என்றவர் அவள் தோள் அணைத்து அழுதவர்..

“உன்ன மாதிரி  யாரும் இருக்கமாட்டாங்கடா,,   “ஊருல இருக்கும் போதே என்கிட்ட சொல்லி இருக்கலாமே  மஞ்சு”  என்று கையை பிடித்து வைத்துக்கொண்டு அழுதிருந்தார்..

இரு அண்ணன் மார்கள் தங்கையை பார்த்து நிற்க.. அவர்களை பார்த்த  நளினி தான்.  “உங்க அண்ணா  உன்னை பாக்குறாங்க பாரு டா, போயி பேசு”  என்க..

தயங்கிய வாறே  அண்ணன்கள் அருகில் வர.. இருவரும் “பாப்பா” என்று அழைக்க..

 “அண்ணே”  என்று அழுதிருந்தவள்.. அவர்களின் காலில் விழ..

“அடே பாப்பா எழுந்திரு”  என்று அவளை  எழுப்பி விட்டவர்கள்..”எங்க கிட்ட  சொல்லி இருக்கலாமே  பாப்பா”,..

என்று இருவரும் கண்கலங்க..

“அண்ணே  என்னை  மன்னிச்சுருங்க” என்று  மன்னிப்பு  கேட்க,

அண்ணன் மார்கள் இருவரும்  தங்கையை  தோள் அணைத்துக்கொண்டனர்..

ஸ்ரீ ஜெயம் அமைதியாக சோபாவில் அமர்ந்திருக்க”..

“எங்ககிட்டசொல்லி இருக்கலாமுல்ல” என்றனர் ஸ்ரீஜெயத்தை பார்த்துக்கொண்டே..

ஸ்ரீஜெயம்  அமைதியாகவே இருக்க..

“ஆமா தாலி கட்டினாரா இல்லையா” என்றனர் அவரை பார்த்துக்கொண்டே..

யோகா மஞ்சுவின் கழுத்தை  பார்க்க, ஒரு மெல்லிய  ஜெயின் மட்டுமே அணிந்திருக்க.. கணவரிடம் “மஞ்சு கழுத்துல தாலி இல்லை”  என்றிருந்தார்..

பார்கவியை பார்த்த முருகேஷன் “உங்கப்பா  என்ன செய்ய போறருன்னு கேளு பார்கவி,  இப்படி என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டாம குடும்பம் நடத்த போறாற” என்றனர்..

அவளோ தந்தையை  பார்க்க, ஸ்ரீஜெயம் மஞ்சுவை பார்த்தார்..

“அண்ணா  அவர் வந்தவுடனே என்கிட்ட கல்யாணம் பண்ண  கேட்டார், நான் தான் வேணாமுன்னு சொன்னேன்”..

“பாப்பா  உன் கழுத்துல  தாலி  இல்லண்ணா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க”..

“அடுத்தவங்கல  பத்தி எனக்கு கவலை இல்ல, எனக்கு  தாலி மேல  நம்பிக்கை இல்லண்ணா,, அவர்  எனக்கு மட்டுமே சொந்தமாக, இருந்தா  போதும்”..

“பாப்பா இது  ‘நடைமுறைக்கு ஒத்து  வராது, முதலில்  அவரை உன் கழுத்தில் தாலி கட்டசொல்லு”..

“இல்லை எனக்கு பிடிக்கலை  அது மேல எல்லாம்,  நம்பிக்கை இல்லை”..

யோகா தான் “நீ நம்ம ஊருக்கு வந்தா, எல்லாரும் கேட்க மாட்டாங்களா மஞ்சு, தாலி கட்டிக்காமயா  ஊருக்கு வருவா”

‘நான் தான் எங்கையும்   வர போகுறது   இல்லையே”..

என்ன?

என்பது  போல்  அனைவரும் பார்க்க..

ஸ்ரீஜெயத்துக்கு  அவள் எண்ணம் புரிந்தது.

“என்ன  சொல்லுற மஞ்சு அப்போ  விருதுநகர்  வர மாட்டீயா?.. என்று யோகாவும், நளினியும்  கேட்க..

“இல்லை” என்று தலையாட்டியவள்.

“செத்து போனவ, செத்து போனவளாகவே  இருக்கேன், நான் வந்து ஏன் என் அப்பா சொன்னதை பொய் ஆக்கனும்  நீங்க வந்து என்னை பாத்துட்டு போங்க, அது போதும். நான் இலங்கையை விட்டு வரமாட்டேன்” என்றவளை,

ஏக்கமாக பார்த்தார் ஸ்ரீஜெயம்…

அனைவரும்  மாறி, மாறி மஞ்சுவிடம் பேச.. அவள்  தெளிவாக சொல்லி விட்டாள்.. “கல்யாணம்  பண்ணி  தாலி  கட்டிக்க மாட்டேன், எனக்கு அதில் நம்பிக்கையில்லை, இலங்கையை விட்டு வரவும் மாட்டேன்,, உங்களுக்கு என்னை பார்க்க  வேண்டுமா, நீங்க எப்பவேணுமுன்னாலும்   வாங்க,, வந்து பார்த்துட்டு இருந்துட்டு போங்க, இது எல்லாருக்கும் தான்”.. என்றிருந்தார்..

ஸ்ரீஜெயம் அனைத்தையும்   கேட்டு கல் போல அமர்ந்திருக்க..

 தாயிடம் மாறி, மாறி  பேசும் தன் சொந்தத்தை பார்த்த ஹரி..”எல்லாரும் கொஞ்சம் நேரம்  அமைதியாக இருக்கீங்களா” என்றவன்..

“அம்மா  நீ உள்ள வா” என்று அழைத்து சென்றவன், ரூம் கதவை சாத்திவிட்டு..

“நீ என்ன முடிவு பண்ணி இருக்க,  என்கிட்ட சொல்லு”..

“நான்  இப்படியே, இங்கேயே  இருந்துக்கிறேன் ஹரி,, விருதுநகர்  போயி அங்க உள்ள வங்க கிட்ட என்னை பத்தி விளக்கம் சொல்ல முடியாது.. என் அப்பா எனக்கு கல்யாணமாகி ஒரு  குழந்தை பிறந்து இருக்குன்னு  சொல்லி வச்சு இருக்காரு,, நான்  உயிரோடு போன,, ஏன் எப்படியின்னு ஆயிரம் கேள்வி வரும்,, ஒரு ஒருதர்  கிட்டையும்   போயி என்னால விளக்கம் சொல்ல முடியாது,, இலங்கை மாதிரி இல்ல விருதுநகர் என் மேல ஆயிரம் கேள்வி வரும், என்னால முடியாது, அதுக்கு நான் இங்கேயா நிம்மதியா இருந்துக்கிறேன்.. எனக்கு அங்க போகவே அசிங்கமா இருக்கு” என்று கதறி அழுத அன்னையை அணைத்துக்கொண்டவன்..

“உனக்கு இப்போ என்ன பிரச்சனை,  மா ஊருக்காரங்க, ஏதாவது சொல்லுவாங்க, நீ அத பத்தி நினைக்காத”..

“இல்ல ஹரி என்னை இப்படியே  விட்டுட்டு, நான் இப்படியே இங்கேயே  இருந்துக்குறேன்”….

“சோ உனக்கு பயம், ஊரு என்ன  பேசும், உன்  சொந்தகாரன் என்ன பேசுவான்  அப்படியின்னு தானே”….

“ஆமாம்” என்று  தலையாட்ட..

“நீ  ஸ்ரீப்பாவை  நெனச்சு பாத்தீயா மா” என்று கேட்க.

கதறி அழுதது பெண்..

“உன்ன நெனச்சுகிட்டே  இவ்வளவு நாளா வாழ்ந்த  என் அப்பாவுக்கு  என்ன பதில்  சொல்ல போற.. அப்பா பாவம், அவர் முகத்தை பாத்தீயா, ஒரு சந்தோஷம் இருக்க அவர் முகத்துல வாழ்க்கையை  தொழச்சுட்டோமே  என்ற ஏக்கம் தான்  அவர் முகத்துல தெரியுது,, நீ கவனிச்சீயா அவர் சிரிப்புக்கூட  அளவா யோசிச்சு  சிரிக்குறாரு, அவ்வளவு மன வலியில  இருக்குற மனஷனுக்கு மேலும் மனவலிய தர போறியா,, உனக்கு நான் இருந்தேன், வாழ்க்கை ரன் பண்ண.. அப்பாவுக்கு யார் இருந்த, தனியா இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா, அத என் அப்பாவுக்கு திரும்ப தர போறியா?”…

“டேய் ஏன்டா இப்படி பேசுறா, அவர் தான்டா எனக்கு எல்லாம்” என்ற தாயை பார்த்தவன்..

“இல்லம்மா, நீ அப்பாவை பத்தியே  நினைக்கல .. நான்  ஒன்னு சொல்லுறேன்  கேட்டுக்கோ, இந்த ஊரு என்ன சொல்லும், அவன் என்ன சொல்வான், இவன்  என்ன பேசுவான்னு நெனச்சா நாம வாழவே முடியாது மா..ஊருக்காக  நெனச்சு  ஸ்ரீப்பாவை  தண்டிக்க போறீயா, எனக்கு தெரியும், உனக்கு அப்பா கூட வாழ ஆசை உன்னை எது தடுக்குது தெரியுமா.. நானும், பார்கவியும் தானே”.. என்ற மகனை “இல்லடா”  என்றார் மஞ்சு.

“நான் இன்னும் ஒரு வருஷமோ, இல்ல இரண்டு வருஷமோ  கழிச்சு கல்யாணம் பண்ணி போயிருவேன்,, பார்கவிக்கு அன்பு இருக்கார்,, உனக்கு?..  யார் இருக்க?..  சொன்னா கேளு, அப்பா கூட இரு, முறைப்படி அப்பாவை கல்யாணம் பண்ணிங்கோ, அவர் கூட விருதுநகர் போ.. உன் வாழ்க்கையை  நீ தான் பேபி வாழனும், நீ எனக்காக வாழ்ந்தது போதும்,  இனி ஸ்ரீப்பாவும், நீயும் உங்க வாழ்க்கையை  வாழ பாருங்க, அடுத்தவங்கள பத்தி நினைக்காத, அப்பாவை நென, என்றவன்,, நான் சொன்னத செய்வீயா மஞ்சு பேபி”  என்று தாயை பார்த்து கெஞ்ச, கண்ணீல் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டவர்,  மகன் பேசியதும்  ஒரு தெளிவு கிடைத்தது போல் உணர்ந்தவர் , மகன் சொன்னதுக்கு தலையாட்ட..

“அப்பாவை அனுப்பி வைக்கிறேன் அவர்கிட்ட மனம் விட்டு பேசு, இனி அவர் கண்ணீல் வாழ்க்கை போச்சேன்னு பார்வையை நான் பாக்க கூடாது.. இனி சந்தோஷமா வாழ்வேன் என்ற  சந்தோஷ பார்வை தான் நான் பார்க்கனும் சரியா”  என்றவன்  தாயை அணைத்து  விட்டு சென்றான்..

வெளியில்  சென்று ஸ்ரீஜெயத்தின்  அருகில் அமர, தன் மகனை பார்த்தவரின் கண்ணீல் ஏக்கத்தை பார்த்தவன், “அப்பா”  என்று அழைத்து அணைத்துக்கொண்டான்..

மகனை அணைத்து  கண்கலங்கினார் ஸ்ரீஜெயம்..

“உங்க  மஞ்சு, சாரி பாப்பூ”  என்று சிரித்தவன்..

“இனி  நீங்க சொன்னதை  அம்மா கேட்பாங்க  பா,, போயி பேசுங்க”  என்று கூறி.

மஞ்சு இருக்கும் அறை நோக்கி அனுப்பி வைத்தான் தந்தையை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!