Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 24 2

அவளின்  கழைந்த  முடியை  காதின் ஓரம் ஒதுக்கி விட்டவர்.. “சின்ன பொண்ணு மாதிரி   அழகா இருக்க நீ, நான் தான் வயசானவன் மாதிரி இருக்கேன்”..

“அப்படி எல்லாம் இல்ல ஸ்ரீப்பா,, நீங்க  காலேஜ் படிக்குறப்போ விட, இப்போ தான் அழகா இருக்கீங்க.. கொஞ்சம் வயசாகி, கொஞ்சம் வெள்ள முடி வந்து, ஒரு பெரிய ஆள் தோரனை, எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு”  என்று அவன் மடிமீது அமர்ந்து கொண்டு , அவளின் காலை ஆட்டிக்கொண்டே அவனிடம் கதை பேசிக்கொண்டு இருந்தவள்,  ,



Advertisement

“இந்த வசீகர சிரிப்பு ஒன்னு போதுமே நான் மயங்க,,”  என்று  சிரித்தவளை  ஆசையாக பார்த்துக்கொண்டு இருந்தார் ஸ்ரீஜெயம்…

Advertisement

வெளியே ஹரியின் கார் சத்தம் கேட்டு மஞ்சு ஸ்ரீஜெயம் மடிமீது  இருந்து எழ.. “என்னாச்சு பாப்பூ”?.

Advertisement

“பிள்ளை வந்துட்டாங்க ஸ்ரீப்பா” என்றவள்.. கிச்சன் உள்ளே செல்ல..

Advertisement

ஸ்ரீ ஜெயம் போனை பார்த்துக்கொண்டு இருக்க.. உள்ளே வந்த பிள்ளைகள்  சற்று நேரம் ஓய்வு  எடுத்துவிட்டு. அவர் ஊரில் பக்கத்தில் ஒரு பெரிய மால் இருக்க.. சாயங்காலம்  போகலாம்  என்று ஹரி சொல்ல.. அனைவரும் சரி என்று  சாயங்காலம் கிளம்பினார்..

பச்சை வண்ண சில்க் புடவையில் ரெடியாகி நின்ற மஞ்சுவை பார்த்தபடியே நின்ற ஸ்ரீஜெயத்திடம்  நல்லா இருக்கா என்று புடவை காட்டி  கண்களால்  மஞ்சு கேட்க.

 நல்லா  இருப்பதாக  தலையாட்டி இருந்தார் ஸ்ரீஜெயம்..

பிள்ளைகள் இவர்கள்  இருவரும் கண்களால் பேசிக்கொண்டதை பார்த்தும், பார்க்காதது  போல் ,, வெளியே வந்து கார் எடுக்க.. ஹரி கார் ஓட்ட அன்பு முன் சீட்டில் அமர்ந்து கொண்டான்,, மஞ்சு நடுவில் அமர.. இந்த பக்கம் பார்கவி, அடுத்த பக்கம் ஸ்ரீஜெயம்.. என்று அமர்ந்து  காரில் மாலுக்கு சென்று கொண்டிருந்தனர்..

அனைவரும் மாலுக்கு வந்து சுத்தி பார்த்துக்கொண்டு இருக்க..

மஞ்சு மகளுக்கு புடவை, சுடி என்று நிறைய வாங்கிதர.. போதும், போதும் என்று சொல்லியே வாய் வலித்தது பார்கவிக்கு அவ்வளவு வாங்கி தந்திருந்தார் மகளுக்கு..

ஸ்ரீஜெயம் அனைவருக்கு உடை, மற்றும் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி தர.. அனைவரும் டின்னர் சாப்பிட்டு விட்டு படம் பார்க்க  போலாம் என்க..

அனைவரும் சரி என்க,, ஸ்ரீஜெயத்துக்கு  படம் போக விருப்பம் இல்லை..  அனைவரும் செல்வதால் அவரும் படத்துக்கு சென்றார். படம் தொடங்கியவுடன் தூங்கி விட்டார் ஸ்ரீஜெயம்..

அனைவருக்கும்  தூங்கும்  அவரை பார்க்க பாவம் இருந்தது.. இடைவேளையில் கண்முளித்தவரை வீட்டுக்கு   போக  சொல்ல.. நான்!  தனியா எப்படி போவேன் .

“அம்மா வருவாங்க,, பா நீங்க  அம்மா கூட  போங்க என்று சொல்ல.. கார் புக்  பண்ணி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..

கதவை திறந்து கொண்டே”ஏங்க  உங்களுக்கு படம் பார்க்க புடிக்காத? பிடிக்குமோ”..  என்று மஞ்சு கேட்க.

“பிடிக்கும்  பாப்பூ, ஆனா இப்போ எது மேலயும்  ரொம்ப  இன்டெரெஸ்ட் இல்ல, பிள்ளைகளுக்காக வந்தேன்” எற்றவர் “தூங்கலாமா மஞ்சு “…  என்று கேட்க.

” உம்” என்றவர் ‘பால் தரவா ஸ்ரீப்பா, இல்ல வேற ஏதாவது வேணுமா”..

“எனக்கு ஒன்னும் வேணாம், காலையில இருந்து நீ வேலை பாத்துட்டே இருக்க, தூங்கி ரெஸ்ட் எடு வா”.. என்று அழைக்க.

“இருக்க ஸ்ரீப்பா, பிள்ளைகளுக்கு பால் காய்ச்சி வச்சுட்டு வர்ரேன். ஹரி நைட் பால் குடிப்பான்” என்று பால் காய்ச்சி விட்டு இருவரும் அறைக்கு வந்தனர்..

மஞ்சுவுக்கு  ஸ்ரீஜெயம் கூட இருப்பது ஏதோ கூச்சமாக இருந்தது.. அறைக்கு வந்தவர் ஸ்ரீஜெயத்திற்கு படுக்க வசதி பண்ணி கொடுத்தவர், ஏசியை ஆன் பண்ணி விட்டு..  பீரோவில் இரவு உடை எடுத்து கொண்டு இருந்தரை..

“என்ன பண்ண  போற பாப்பூ?”..

“வேற நைட்டெரெஸ்  மாத்திட்டு  வர்றேன்   பா”.. என்றவளை..

“இதுவே நல்லா தான்  இருக்கு இங்கே  வா”..

 என்று அவர் பக்கத்தில்  அழைக்க.. எடுத்த டெரெஸ்சை பீரோவில் வைத்து பூட்டியவர். ஸ்ரீஜெயத்தின்  முகத்தை பார்க்காமல் அவர் அருகில் செல்ல..

மஞ்சுவின்  முகத்தையே  பார்த்திருந்தவருக்கு, சிரிப்பு  வந்தது, சிரிப்பு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த மஞ்சுவை கைபிடித்து  தன் பக்கத்தில் அமர வைத்தவர்..

“ஏன்  என்  முகத்தையே  பார்க்க மாட்டேங்குற  பாப்பூ, இந்த புடவையில நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா, இன்னைக்கு  நைட்டு புல்லா உன்னை பார்த்துட்டே இருக்கலாம் போல.. அவ்வளவு அழகா இருக்க”.. என்றவர்  அவளின் கையை எடுத்து அவரின் கன்னத்தில் வைத்து கொண்டு சிறு, சிறு முத்தம் வைத்தவர்..

“தூக்கம் வந்த  தூங்கு மஞ்சு, காலையிருந்து  நீ ஒரு நிமிசம் கூட  உட்காரல டா, ஒரே வேலை  உனக்கு தூங்கு”  என்று சொல்ல..

“சரி என”  தலையாட்டியவர்  லைட் ஆப்பண்ணி விட்டு வந்து படுக்க..

ஸ்ரீஜெயம்   தலைமேல் கை வைத்து கண்களை மறைப்பது  போல்  படுத்து இருக்க.. மஞ்சு ஸ்ரீஜெயத்துக்கு முதுகு காட்டி படுத்திருப்பது போல் படுத்து இருந்தார்..

ஸ்ரீஜெயம் தூக்கத்திற்கு செல்ல..

மஞ்சுவுக்கு  ஸ்ரீஜெயம் அருகில் இருப்பதால் தூக்கம் வரவில்லை, தூக்கம் வராமல்  புரண்டு, புரண்டு  படுத்த மஞ்சுவின் அசைவை உணர்ந்தவர்..

 அவரின் கைகளை விலக்கி கொண்டு, “என்னாச்சு மஞ்சு   தூக்கலையா  நீ”..

“தூக்கம் வருது  ஆனா தூங்க முடியல”. என்றவளை..

தன்னை  நோக்கி அவளை இலுத்தவர்..

தன் மார்பின் மீது அவளின் தலையை வைத்து  அணைத்து தட்டி கொடுக்க..

அவரை இருக அணைத்து பிடித்துக்கொண்டவள்.  அவரின் வாசத்தை உணர்ந்து.. சுகமாக அவரின் மார்பின் மீது தலைவைத்து  தூங்கி விட..

ஸ்ரீஜெயத்தின்  தூக்கம் பரிபோயின.. தன்னை அணைத்து பிடித்து தூக்கி கொண்டு இருக்கு மஞ்சு பார்த்தே இருந்தவரின் சிந்தனை  காலையில் இருவரும் சேர்ந்து  மார்கேட் போனது ஞாபகம் வர..

ஸ்ரீஜெயம் “இந்த கடையில கறி இருக்கு பாரு வாங்கு மஞ்சு” என்று கூற..

“இந்த கடை வேணாம் ஸ்ரீப்பா, அந்த கடைக்கு போகலாம்” என்று சொல்ல..

“ஏன்டா  பக்கத்திலே  இருக்கு ஏன் தூரமா  இருக்குற கடையில வாங்க  போற” என்று கேட்க..

“அந்த கடை வேணாம் ஸ்ரீ ப்பா” வேற கறி கடைக்கு செல்ல..

மஞ்சுவின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று நினைத்தவர்.. “அவளின் கைபிடித்து சொல்லு ஏன் அந்த கடைக்கு  போக மாட்டேங்குற”..

“அது என் பிரண்டோட  ஹஸ்பண்ட் கறி கடை தான், முன்னாடி  அங்க தான் கறி வாங்குவேன்..  நல்லா பேசுவார்”  என்று  பேச்சை..இலுத்தவளை..

“சொல்லு மஞ்சு”.. என்றவரை பார்த்தவள்..

“இந்த  உலகத்துல  ஒரு பொண்ணு புருஷன்  கூட இல்லண்ணா தெரிஞ்சா  கண்டவனும் அவளுக்கு ஒரு நாள் நைட்டு  புருஷன மாற பாக்குறானுங்க, ஸ்ரீப்பா,  நான் முதலில் அவரை தப்பா நினைக்கல, நல்ல மாதிரி தான் பேசுனேன், என் பிரண்ட் புருஷன். எனக்கு பிரண்ட் மாதிரின்னு நெனச்சு பழகினேன்.. கடைசியில அவன் புத்தி தெரிஞ்சு போச்சு, அதனால  அந்த கடைக்கு போகுறது இல்ல”.. என்று சாதாரணமா சொல்லியவளை கோபமாக பார்த்தவர்..”வா அவனை” என்று கோபத்தோடு அவன் கடைக்கு சென்ற ஸ்ரீஜெயத்தை  தடுத்த மஞ்சு..

“இங்கே  பாதி பேர் இப்படி தான் இருக்காங்க ஸ்ரீப்பா, அடிக்கனுமுன்னு நெனச்சா  இந்த உலகத்துல பாதி பேர் இருக்க மாட்டாங்க.. அதுக்காக எல்லாரையும் தப்பு சொல்ல முடியாது, ரொம்ப நல்லவங்களும் இந்த உலகத்துல  இருக்காங்க.. அவங்களை நம்ம கூட வச்சுக்குவோம், ஒருதர் கெட்ட எண்ணத்தோடு பழகுறது தெரிஞ்ச தள்ளி  வச்சுருனும் ஸ்ரீப்பா,  நாமா எப்பையும்   நமக்கு நல்லதே  நடக்கனுமுன்னு நெனைக்க கூடாது,, இந்த உலகத்து நிறைய நல்ல உள்ளம் கொண்ட மனிதர் இருக்காங்க, அவங்களை தேடி நண்பர்கள வச்சுக்கனும் சிம்பல்” என்றவள்.. “வாங்க” என்று   அடுத்த கடைக்கு சென்று கறி வாங்க..

“யோகா டீச்சர் வாங்க, வாங்க  இது யார் உங்க சாரா”  என்று பாசத்தோடு பேசிய மனிதரை காண்பித்தவள்.. இவ்வளவு தான்.. என்றவளை..

 ஆச்சரியமாக பார்த்திருந்தார்.. பெண்கள் ஆண் துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம், என்று நினைத்தவர்.. என் மஞ்சுவுக்கு இந்த கஷ்டத்தை நான்  கொடுத்து விட்டேனே, என்றவர் அவள் தலைகோதி நெத்தில் முத்தமிட்டவர், இனி ஒரு நிமிசம் கூட உன்னை தனியே விட மாட்டேன் பாப்பூ ,என்றிருந்தவர் வெகுநேரம் கழித்தே  தூங்கி இருக்க..

மஞ்சு  விடியற்காலை 4.30 மணிக்கு  எழுந்தவர் ஸ்ரீ ஜெயத்தை பார்க்க..  அவர் நன்றாக   தூங்கி

கொண்டிருந்தார். சத்தம் வராமல்  எழுந்தவள்,  பாத்ரூம் சென்று குழித்து வர..

அவள் நடமாடுவதை உணர்ந்த ஸ்ரீஜெயம் எழுந்து அமர..

“நீங்க  தூங்குங்க  நான்  யோகா கிளாஸ்  போயிட்டு 1 ஹவர்ல  வர்றேன்”.. என்றாள்..

“நானும் வர்றேன்” என்று அவர் கிளம்ப..

“ஸ்ரீப்பா  ரெஸ்ட் எடுங்க, நான் போயிட்டு ஒன் ஹவர்ல  வந்துருவேன்” என்று அவள் சொல்லிய  சொல்லை காதில் வாங்காமல் கிளம்ப..

“வாங்க” என்று காரில் அழைத்து சென்றாள்..

யோகா கிளாஸ்சில் உள்ளவர்களிடம்  ஸ்ரீஜெயத்தை என் ஹஸ்பண்ட் என்று அறிமுகம் படுத்தி வைக்க..

அனைவரும் ஸ்ரீஜெயத்திடம் பாசமாக பேசினார்கள்.. “மேம் இன்னைக்கு நீங்க கிளாஸ் எடுக்க வேண்டாம்  சார் கூட இருங்க, நாங்க பாத்துக்குறோம்”  என்று கூற..

“ஓகே டா” என்றவள்..

மஞ்சுவுக்கு   உதவி செய்த புத்தர் சன்யாசியை பார்க்க ஸ்ரீஜெயத்தை அழைத்து சென்றாள்..

அவர்  தியானத்தில் இருக்க.. இருவரும் கொஞ்ச நேரம்  காத்திருந்து  அவரை பார்க்க… அந்த புத்த சன்யாசி ஸ்ரீஜெயத்தை பார்த்து  மிகவும்  சந்தோஷபட்டவர்…  இருவருக்கு “வாழ்க வளமுடன்”  என்று வாழ்த்து சொல்லியவர்.. ஸ்ரீஜெயத்தின் கையை பிடித்து, மஞ்சுவின் கைமீது  வைத்து, “இனி  இந்த கையை எப்போதும் விட கூடாது இரண்டு பேரும்”. என்று கூற..

இருவரும் தலையாட்டி இருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!