Skip to content
Post Views: 2,164
“ஸ்ரீ” என்றவள் “ரொம்ப நேரம் தூங்கிட்டேனா” என்று பேசிக்கொண்டே அவனின் மடியில் படுத்துக்கொள்ள..
“என்னாச்சு டா” என்ற கணவனிடம்..
Advertisement
அவனின் கைபிடித்து தலையை அழுத்திவிட சொல்லியவள்.
Advertisement
“முடியல ஸ்ரீப்பா, தலைவலிக்குது. தூக்கம் வருது, கோபமாக வருது, சாப்பிட பிடிகல, ஆனா பசிக்கது,” என்றவளை.. சிறிது நேரம் பார்த்திருந்த ஸ்ரீஜெயம்..
Advertisement
“உனக்கு இந்த மந்து பீரியட் வந்துச்சா பாப்பூ”..
Advertisement
“இல்லை” என்றவள்..
எழுந்து அமர்ந்து கணவனின் முகம் பார்க்க.. “கண்டிப்பா அதுவாக தான் இருக்கும் வா” என்று மருத்துவமனை அழைத்து சென்று செக் பண்ணி பார்க்க.. மஞ்சு கர்பமாக இருப்பது தெரிந்தது, அது மட்டும் இல்லை இரட்டை துடிப்பு போல தெரியுது என்று மருத்துவர் சொல்ல.. இரட்டிப்பு சந்தோஷம் இருவருக்கும்..
இனிப்பு வாங்கி கொண்டு வீடு வர.. ஹரியிடம் தாய்க்கு உடம்பு முடியாமல் ஹாஸ்பெட்டல் சென்று இருப்பதை பார்கவி சொல்லி இருக்க, என்னாச்சு மஞ்சு பேபிக்கு என்று புலம்பிய படியே வாசலில் நின்று இருந்தவனை பார்த்த மஞ்சு ” என்னாடா வெளியில் நிக்குற”..
“என்னாச்சு மஞ்சு பேபி உங்களுக்கு” என்று மகன் பதற..
மஞ்சு சொல்ல தயங்கியவள், ஸ்ரீஜெயத்தை பார்த்து சொல்ல, சொல்ல..
மகனை பார்த்த ஸ்ரீஜெயம் “உன் மஞ்சு பேபிக்கு, குட்டியா ரெண்டு பேபி பிறக்க போகுது” என்று கூற..
என்ன என்பது போல் தாய்யை பார்த்தவன் அவர் சொல்ல தயங்குவதை பார்த்து.”அப்பா” என்று ஸ்ரீஜெயத்தை அணைத்து கொண்டு “சந்தோசம் பா” என்றவன்..
“மஞ்சு பேபி ஐயம் ஹாப்பி” என்று அவளை தூக்கி சுத்தி இருந்தான்.. “ஹரி கண்ணா விடுடா, அம்மாவுக்கு தலைசுத்துது” என்றவுடன் தாயை இறக்கி விட்டவன்.. தாயை இருக்கமாக அணைத்துக்கொண்டான்..
“மஞ்சு பேபி” என்றவன் மருத்துவராக அன்னைக்கு நிறைய அறிவுரை சொல்ல.. மகன் சொல்வதை தலையாட்டி கேட்டு கொண்டார்..
மஞ்சு உண்டாகி இருப்பதை அனைவரிடம் சொல்ல.. அனைவரும் சந்தோசம்.. மகன் திருமணத்தை பற்றி மஞ்சுவிடம் சொல்ல..
தனக்கு இந்த நேரத்தில் குழந்தை என்று வருத்தபடுவதை பார்த்து உறவினர்கள், உனக்கு என்ன வயசாச்சு, இப்பதான் என் தம்பி கூட வாழ ஆரம்பிச்சு இருக்க, வருத்தபட கூடாது என்று அனைவரும் கூற..
தன் ஸ்ரீயின் முகத்தை பார்த்தே அனைத்தையும் மறந்தவள் குழந்தையை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று எண்ணி. தன் யோசனையை அனைத்தையும் பின் தள்ளியவள்.. மகனுக்கு, காயத்ரிக்கு பிரமாண்டமாய் திருமணம் முடித்துவைத்தார்..
மருமகளை வெளிநாடு அனுப்பி வைத்தனர்..
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு..
“ஏங்க உங்க சின்ன பொண்ணா என்னென்னு கேளுக்க சாப்பிட மாட்டேங்குறா” என்று தனது மகளை திட்டிக்கொண்டே ஸ்ரீஜெயம் கையில் அவர் சின்ன மகளை ஒப்படைத்தவர்.. “ஊட்டுங்க” என்று உணவு பாத்திரத்தை குடுத்து விட்டு இடுப்பில் இருந்த இரட்டை பிள்ளைகளின் ஒருத்தியை அமர வைத்து விட்டு, சொல்ல.. “மஞ்சு ஸ்ரீகா சாப்பிட்டாளா”..
“அவ சாப்பிட்ட உங்க சின்ன பொண்ணு ஸ்ரீஜாதான் சாப்பிடல ஊட்டுங்க” என்று கிச்சனின் இருந்து பதில் சொல்ல.
தனக்கு பிறந்த இரட்டை பெண் பிள்ளைகளுக்கு”ஸ்ரீகா, ஸ்ரீஜா” என்று பெயர் வைத்திருந்தார் ஸ்ரீஜெயம்..
மஞ்சு கிச்சனில் இருந்து ஏதோ பேசிக்கொண்டு இருக்க..
“காது கேட்கல பாப்பூ வெளியில் வந்து சொல்லு” என்க..
ஸ்ரீகாவும், ஸ்ரீஜாவும் தந்தை சொன்னது போல், மஞ்சுவை “பாப்பூ, மம்மா பாப்பூ” என்று அழைத்து சிரிக்க..
“ஸ்ரீ… இவளுக முன்னாடி என்னை பாப்பூன்னு கூப்பிடதீங்க, என்னை பாப்பூ, பாப்பூ கூப்பிட்டு கேலி பண்ணுறாளுங்க” என்ற மஞ்சுவை பார்த்து சிரித்தவர்..
“சரி ஏன் இவ்வளவு டென்சனா இருக்க”..
“நாளைக்கு பங்குனி பொங்கல். பிள்ளைகள் எல்லாம் வர்றாங்க, அண்ணிங்க, சொந்தகாரங்க கூட வர்றாங்க,, அதுக்கு நான் ஏற்பாடு பண்ண வேண்டுமா,, ஹரி நைட்டே காயத்ரியை கூட்டிட்டு வர்ரான்.. அன்பு மாப்பிள்ளை எப்போ வர்ராங்கன்னு தெரியல, வேலை தலைக்கு மேல இருக்கு மாவு அறைக்கனும்,, பூ கட்டனும், நைட்டு சமைக்கனும், கோவிலுக்கு வேற போகனும்.. இதுல இந்த குட்டி பிள்ளைகளை பார்க்கனும், நீங்க பாட்டுக்கு கடைக்கு போயிடுறீங்க , நான் தானே எல்லாம் பாக்கணும்”.
“பேசி முடிச்சிட்டீயா,, உன்ன யாருடி இவ்வளவு வேலை பாக்க சொன்ன,, முடிஞ்சா சமையல் பண்ணு , இல்ல ஹோட்டல வாங்கிக்கலாம், பிள்ளையை மட்டும் பாரு”..
“நீங்க நான் சொன்னத கேளுங்க அன்பு மாப்பிள்ளை எப்போ வர்ராங்கன்னு கேளுங்க”..
உள்ளறையில் இருந்து பார்கவி தன் மேடிட்ட வயிறை பிடித்துக்கொண்டே அன்புவிடம் போனில் பேசிக்கொண்டே வந்தவள்..
“உன் மாப்பிள்ளை நாளைக்கு காலையில வந்திருவாருமா” என்ற மகளை பார்த்த மஞ்சு,
“சாப்பாடு எடுத்துட்டு வரவா பார்கவி”..
“உம்..” என்ற மகளுக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுத்துவிட்டு மஞ்சு கிச்சன் உள்ளே சொல்ல..
ஸ்ரீஜெயம் குட்டி பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி முடித்து, வாயை துடைத்து விட்டு.. பார்கவிடம் பார்த்துக்கோ பிள்ளைகளை என்று சொல்லிவிட்டு.. கிச்சன் சென்றவர்.
மஞ்சுவை பின்னிருந்து தூக்கி, அணைத்துக்கொள்ள..
“ஸ்ரீப்பா இது என்ன விளையாட்டு”,, என்று கோபப்பட்டவளை,முகம் முலுவதும் முத்தமிட.”அடி வாங்க போறீங்க, பிள்ளைகள் வெளியே இருக்காங்க, உங்களுக்கு முத்தம் கொடுக்குற நேரத்தை பாரு” என்றவளை பேசவிடாமல் அவள் இதழோடு இதழை ஒற்றி எடுத்தவர்,, “ரொம்ப பேசுனா இன்னும் குடுப்பேன் என்றவரை.. போங்க என்று தள்ளிவிட்டவள்..
“சாரி ஸ்ரீப்பா, உங்களுக்கு சாப்பாடு குடுக்களை என்றவள் உணவை தட்டில் பரிமாறி கொடுக்க..
உணவை கையில் எடுத்தவர் மஞ்சுவுக்கு ஊட்ட.. கணவர் கொடுத்ததை வாங்கி உண்டவள்..”நான் சாப்பிடலன்னு உங்களுக்கு எப்படி தெரியும்”. “உன் முகத்தை பார்த்தாளே தெரியுதே, சாப்பிடு என்று ஊட்டி விட்டார்..
இருவரின் வாழ்வு, என்றும் நிம்மதி சந்தோஷமாக இருக்க வாழ்த்தி, “ஹலோ, ஹலோ இந்த கதையில் நாங்களும் இருக்கோம்” என்ற அன்பு “அடிடா மேளத்த” என்று மேள காரனை மேளம் அடிக்க சொன்னான்..
இன்று பங்குனி பொங்கல் அன்பு ஊர் மகமை என்பதால் அம்மனுக்கு பால் குடத்தோடு சீர் எடுத்து சொல்கிறார்கள்.
மேளம், சீர்,பால் குடம் எல்லாம் ஊர்சுத்தி வர ஆண்டவர் கனி கடை முன் வரம் போது மேளத்தை வேகமாக அடிக்க சொன்ன அன்பு “சரவெடி” என்று சத்தம் கொடுக்க “மச்சான்” உள்ளே இருந்து வந்தாள் திவ்யா அரிய நாச்சி..
“வா ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடலாம்” என்று அன்பு அழைக்க..
அவள் ஆண்டவர் கனியை பார்க்க.. அவன் வேண்டாம் என்பது போல் தலை ஆட்ட.. “மம்மி நோ” என்று அவள் பெத்த இரு பிள்ளைகள் முறைத்து நிற்க..
அவளோ கொஞ்சுவது போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க..
“போய் தொல” என்றவுடன்..
வேகமாக வந்தவளை.. “சரவெடி ரெடியா” என்று அன்பு கேட்க..
“ரெடி மச்சான்” என்றவள் அன்போடு சேர்ந்து நடனம் ஆட.. மொத்தம் குடும்பம் இவர்களை பார்த்து சிரித்து சந்தோசபட… “பாட்டை மாத்துடா” என்று அன்பு குத்து பாட்டை மேளகாரனை அடிக்க சொல்ல,, அவரும் இவன் சொல்வதை போல் குத்து பாட்டு வாசிக்க. இவர்களை பார்த்த பெரியசாமி மகன் கமலி இடுப்பில் இருந்து சத்தம் கேட்டு குதிக்க.. “வாடா ராசா” என்று அன்பு பெரியசாமி மகனை தோளில் தூக்கி படியே ஆடியவன்.. பெரியசாமி பார்த்து “எப்படி எங்க ஆட்டம்” என்று கேட்க..
“நேத்து எங்க ஆட்டத்தை நீ பாக்கல” என்றான் பெரியசாமி.
“டேய், டேய் வீடியோவுல பார்த்தேன் டா” என்றவன்.. “போலாம்மா டா பெரியசாமி மகனே” என்று கேட்க..
தலையை வேகமாக ஆட்டியது குழந்தை..
பெரியசாமி மகனை தோளில் வைத்து ஆடிக்கொண்டே கோவில் வந்து சேர்ந்தான் அன்பு..
நளினி பார்கவியிடம்”நீ எதும் அவனை கேட்க மாட்டீயா” என்று கேட்க..”அத்தை அவங்க முறை பொண்ணு கூட ஆடுறாங்க நான் என்ன சொல்ல.. ஆண்டவர் கனி மச்சானே, இவங்க ரெண்டு பேரும் ஆடுறத பார்த்து சிரிச்சார், விடுங்க அத்தை” என்ற மருமகளை..
“அது சரி தான் இன்னும் ஏன் பெரியசாமியை வம்புக்கு இழுக்குறான்”..
“இது வம்பு இல்லத்தை அது ஒரு மாதிரியான, பாசம், நட்பு கூட சொல்லலாம்”.. என்று சிரித்த மருமகளை..
“அவன்ன மாதிரியே நீயும் வந்து இருக்க வா” என்று மருமகளை பத்திரமாக அழைத்து சென்றார்..
கோவிலில் கூட்டமாக இருக்க, கோவில் மண்டபத்தில் மருமகளோடு நளினி அமர்ந்திருக்க, அன்பு இரண்டு டம்ளரில் மோர் எடுத்து வந்தவன். பார்கவியின் கையில் ஒன்றையும் நளினிடமும் ஒன்றையும் தர..
“ஆட்டம் சூப்பருங்க” என்ற சொல்லிய மனைவியின் அருகில் அமர்ந்தவன்.. “நல்லா இருந்ததா” என்று கேட்டுக்கொண்டே..
“அம்மா மாமா எங்கே” என்று கேட்க..
“தலைகட்டு முறை பொங்கல் வாங்க போயிருக்கான்” என்று கூற..
ஸ்ரீஜெயம் தன் மனைவி பிள்ளைகளோடு தலைகட்டு முறை, வாங்கி கொண்டு கழுத்தில் மாலையோடு குடும்பமாக வருவதை பார்த்தவருக்கு சந்தோஷத்தில் கண்கலங்கியது. எத்தனை வருடம் எண்ணம் இது, தன் தம்பி குடும்பமா இருக்க வேண்டும் என்று அந்த எண்ணம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது..
ஸ்ரீஜெயம் அவர் குடும்பத்தோடு நளினியின் அருகில் வந்து அமர.. தன் அக்காவிடம் “இப்போ சந்தோசமா” என்றார்.. “ஊம்” என்ற தலையாட்டி அக்காவை தோளோடு அணைத்துக்கொண்டார்…
அவரும் எத்தனை வருடம் தனியே சென்று மகமை மரியாதை வாங்கி இருக்கிறார்.. நமக்கும் ஒரு குடும்பம் வரதா, நாமலும் குடும்பமா சென்று தலைகாட்டு முறை வாங்க மாட்டோமா?.. என்ற எண்ணம் அவருக்கு வரும்..
அந்த எண்ணம் இப்போது நடந்துக்கொண்டிருக்கிறது..
நாமலும் நல்ல எண்ணத்தை நினைப்போம் , எல்லா நல்ல எண்ணமும் கண்டிப்பாக நிறைவேற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்….
error: Content is protected !!