Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 5 1

நீங்காத  நினைவு நீ

  அத்தியாயம் – 5



Advertisement

      நளினியும் , திவ்யா அரிய நாச்சியும்  விளக்கு  பூஜைக்காக  கோவில்  வந்தனர். பூஜை  தொடங்கி  இருந்தது.

Advertisement

Advertisement

விளக்கு பூஜைக்காக  பெண்கள் வரிசையாக  கோவில்  மண்டபத்தில்  அமர்ந்து இருந்தனர்.

Advertisement

நளினிக்கு  அவரின்  பக்கத்து  வீட்டு  பெண் ஒருவர். நளினி அமர்வதற்காக  ஒரு இடம்  பிடித்து  வைத்து இருந்தாள்.

ஒரு இடம் மட்டும் இருக்க. திவ்யா ஊட்கார ஒரு இடம் தேவையாக  இருக்கா ஒரு இடத்தை   தேடினர்.

 யாரோ  அழைப்பது  போல்  இருந்தது. இருவரும்  திரும்பி பார்க்க.

மீனாட்சியும் , யோகாவும்  திவ்யாவை  இங்கே  வா, ஒரு  இடம்  இருக்கு என்று அழைக்க.

நளினி போ  திவ்யா  அங்கே ஒரு  இடம்  இருக்காம். நான்  இங்கே  உங்காந்துகிறேன்  என்று அவளை  அனுப்பி  வைத்து விட்டு. அவரின்  பக்கத்து  வீட்டு  பெண்ணின்  அருகில்  அமர்ந்தார்.

மீனாட்சி வாங்க என்று திவ்யாவை  தனது பக்கத்தில்   அமர்ந்து கொள்ள இடம் தந்தாள்.

திவ்யாவின் இடது  பக்கத்தில மீனாட்சியும் வலது பக்கம் யோகாவும், யோகாவின் பக்கத்தில் பார்கவி  அமர்ந்து இருந்தாள்.

மீனாட்சி அவளின்  மகளை    மடியில் வைத்து இருந்தாள்.

திவ்யா  மீனாட்சியிடம்  உட்கார இடம் தந்ததுக்கு  தாங்யூ  என்று   சொன்னாள்.

ஏன் திவி தாங்யூ எல்லாம்  சொல்லுற இது ஒரு சின்ன விசயம் நல்ல உங்காரு.

அனிகா குட்டியை பார்த்தவள். ஆண்டி கிட்ட வர்ரீயா என்று திவ்யா அழைக்க.

குழந்தை   மீனாட்சி முகத்தை பார்த்தது.

போ என்று  அனிகாவை திவ்யாவிடம்  தந்தாள்.

குழந்தை திவ்யா  மடியில் அமர்ந்து கொண்டு  உங்க  நேம்  என்ன.

 என் பேர திவ்யா அரிய நாச்சி.

எந்த  ஸ்கூல்  போறீங்க.

நானா, நான்  ஸ்கூல் எல்லாம் போகல. காலேஜ்  முடிச்சுட்டு. இங்கே  பங்குனி பொங்கலுக்கு  வந்தேன்.இருவரும்  பேசிக் கொண்டு  இருப்பதை தொலைவில்  இருந்து  ஆண்டவர்  கனி  பார்த்து  கொண்டு  இருந்தான்.

அவள்  தன் குடும்பத்தோடு ஒன்றாக  அமர்ந்து  இருப்பதை பார்த்தவன். நான்  எடுத்து முடிவு சரிதான்  என்று ஒருமுறை  அவனுக்கே, அவனே  எடுத்த  முடிவில்  சரியாக  நில்  என்று  சொல்லிக்கொண்டு.

காலம்  யாருக்காகவும்   காத்திருக்காது  என்று நினைத்தவன்.

அவனுக்கு தெரிந்த ஒரு ஊர்  பெரியவரிடம்  தான்  செய்ய  போவதை  பத்தி  சொல்லி  அபிப்ராயம்  கேட்க.

பதரி  போனவர், வேண்டாம்  தம்பி தப்பா  போனா  பெரிய  பிரச்சனையா   வரும். பாத்து  செய்ங்க  என்று அறிவுரை சொன்னார்.

விளக்கு பூஜை முடிவதற்காக காத்து  இருந்தான்.

விளக்கு  பூஜை  ஆரப்பமானது. அனைவருக்கும்   கோவிலிருந்து விளக்கு  பூஜைக்கு  தேவையான பொருள்களை   அவர்களே குடுப்பார்கள்.

பிறகு  விளக்கு ஏற்றும் நேரத்தில் கடவுள் பாடல்களை  பாடி,  பூக்களாலும், குங்குமத்தாலும்   விளக்கிற்கு  அர்ச்சனை  செய்து. விளக்கை  தெய்வமாக நினைத்து  பூஜை  செய்து முடித்தார்கள்.

 அனைவரும் விளக்கு பூஜை  முடிந்ததும். விளக்கை  ஏற்றிய வாறே  கோவிலை  ஒரு வலம் வந்து. விளக்கின்  தீபம்  அனையாத வாறே  வீட்டுக்கு எடுத்து  சென்று  கொண்டு செல்வார்கள்.

கோவிலில் பெண்கள்  கூட்டம்  அதிகமாக  இருந்தது.

யோகாவும்,  மீனாட்சியும்  கொஞ்சம் கூட்டம் குறையட்டும், பிறகு  கோயிலுக்கு சென்று அம்மனை வழிபடலாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர்.

திவ்யா  நளினியை  தேடினாள்.

அவர்  ஒரு  பெண்ணிடம் பேசிக்கொண்டு வா என்று  கண்களால் அழைக்க.

இவள்  யோகாவிடமும், மீனாட்சியிடமும்  வர்றேன் என்று  சொல்லிவிட்டு, குழந்தைக்கு பாய் சொல்லி, பக்கத்துல இருந்த பார்கவியிடம் வர்றேன் என்று   தலையசைத்து விட்டு, நளினியிடம் வந்தாள்.

கோவிலில்  பெண்கள் கூட்டம் குறைவது போல்  தெரிய, நளினி திவ்யாவை கோவில்   உள்ளே போடா  நான் வர்றேன் என்று  நீண்ட  நாள் பார்க்காமல் இருந்த  தூரத்து சொந்தகாரரிடம் பேசி கொண்டு இருக்க. அந்த பெண்மணி  திவ்யாவை  யார் என்று கேட்க.

நம்ம  வேணி பொண்ணு. அன்புக்கு  அவளை கல்யாணத்துக்கு  பேசி வச்சுருக்கோம். வர வைகாசியல  கல்யாணம் பண்ண முடிவு  பண்ணி இருக்கோம்  என்று இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

திவ்யா கோவிலுக்குள் விளக்கு  அனையாமல் மெல்ல  எடுத்து  சென்று  அம்மன் சன்னிதானத்தில் வணங்க  முற்பட. பெண்கள் வரிசையாக  கூட்டமாக நின்றதாள். இவளுக்கு  சாமியை  பார்க்க முடியாமல் இருந்தது. வேற எங்கே நின்னு சாமியை பார்க்க என்று இவள்  இடம் தேட. எதிரில்  நின்று இருந்தான் ஆண்டவர் கனி.

இவளுக்காக நீண்ட  நேரமாக காத்துக்கொண்டு  இருந்தான்.

இவளை பார்த்து கண்களால்  அருகில் அழைக்க.

ஆண்கள்  வரிசையில்  ஆட்கள் இல்லாமல்  இருக்கு.  ஐ அங்கே கூட்டம்  குறைவா இருக்கு அங்கே போயி  நின்னா  சாமி நல்லா தெரியும் என்று  அவனிடம்  வந்தாள். இந்த மதுரை பஸ்  இன்னைக்கு  பாசமா கூப்பிடுது. ஆண்டவர் கனிக்கு இவள் வைத்த பேர்( மதுரை பஸ்).

இல்லனா  என்ன பார்த்தாலே மூஞ்ச  திருப்பிக்கும்  என்று மனதில் பேசிக்கொண்டே  ஆண்டவர்  கனியின் பக்கதில் போய் நின்றவள் நன்றி சொல்லி விட்டு அம்மனை பார்க்க  அவ்வளவு அழகாய் இருந்தது அன்றைய அலங்காரம் அவளோ அம்பாளை  பார்த்து நிற்க.

தன் அருகில்   நின்ற திவ்யாவை   நிறைந்த பார்வை பார்த்தவன். அவளிடம்  கண்மூடி  வேண்டிக்கோ என்று சொல்ல.

சரி என்று  தலையாட்டியவள்.  கண்களை மூடி  அம்மனை  வேண்டிய  படியே நின்றாள்.

ஆண்டவர் கனி  தன் பாக்கெட்டில் வைத்து  இருந்த  தாலி  ஜெயினை   எடுத்து  அம்மனை  பார்த்து  வேண்டியவன், திவ்யா அரிய நாச்சியின்  கழுத்தில்  தாலி ஜெயினை  போட்டு விட்டு. அவளை  திவ்யாஆண்டவர்கனியாக  மாற்றி இருந்தான்.

தன்  கழுத்தின்  மீது  ஏதோ  கனமான  பொருள்  விழுவது  போல  தெரிய, நிமிர்ந்து பார்த்தாள்.

ஆண்டவர்கனியின்  கையில்  குங்குமத்தை  எடுத்து  அவள்  உச்சி நெத்தில் வைக்க.

அதிர்ச்சியானவள்!   தன்  கழுத்தில்  என்னவென்று  பார்க்க  கனாமான  தாலி  ஜெயினை  பார்த்தவள். என்ன  இது, ஏன்  இப்படி  பண்ணீங்க என்றவள்  கண்கலங்கி  கேட்க.

 அவனோ  உன்னை   எனக்கு  பிடிச்சுருக்கு  விட  முடியல. அதான்  இப்படி .

அவளோ  அதிர்ச்சியாக  தலைவேற  சுத்துவது  போல  தெரிய கண்களை  மூடி  திறந்து  பார்த்தவள். கண்கள்  இருட்டுவது போல்  தெரிய மயங்கி  சரிய போக  , திவ்யா  என்றவன் விளக்கையும்  அவளையும்  சேர்த்து  பிடித்திருந்தான்.

விளக்கை கீழே வைத்துவிட்டு  திவ்யாவை  தூக்கி  தோளில்  போட்டான்.

இவன் தாலி  கட்டியதை பார்த்த ஒருவர்  வெளியே வந்து   நளினியிடம்  உன்  மருமகளுக்கு அங்க  ஆண்டவர் கனி  தாலி கட்டிட்டான். நீ இங்கே பேசிட்டு இருக்க.

 நளினி  வேகமாக  கோவிலுக்குள் சென்று  திவ்யாவை பார்க்க.

ஆண்டவர் கனி  திவ்யாவின்  நெத்தில்  குங்குமம் வைத்ததை  பார்த்தவர். டேய்  என்ன  பண்ணுற   என்று  அருகில் வருவதற்குள். திவ்யா  மயங்கி  சரிவதற்கு  முன்பாக ஆண்டவர் கனி தூக்கியதை  பார்த்தவர்.

டேய்  என் மருமகளை விடுடா என்று அவனின்  அருகில் வந்தார்.

அவ  உங்க  மருமக  இல்ல  என்  பொண்டாட்டி என்றவன்.

திவ்யாவை  தூக்கிய  படியே  அவனின்  வீட்டுக்கு  சென்றவன்.  அவன்  அம்மா  லட்சுமியின்  அறையில்  உள்ள  பெட்டில்  படுக்க வைத்து  விட்டு.

தன் அம்மாவிடம்  இவ  தான்  உங்க   மருமக, என்  பொண்டாட்டி திவ்யா என்று  சொல்லி  விட்டு.

 எப்படியும்  நான்  பண்ணது  தெரிஞ்சு  ஊர்கூட்டம்  போட்டு  இருப்பாங்க  போயிட்டு வர்றேன்மா. அவளுக்கு  கொஞ்சம் உடம்பு  சரியில்ல  மயக்கத்துல  இருக்க  பாத்துக்கோங்க  என்று சொல்லி விட்டு ஊர் கூட்டம்  நடக்கும்  பில்டிங்  வந்து  முதல் ஆளாக அமர்ந்து கொண்டான்.

 நளினி கணவரிடமும், ஸ்ரீஜெயமிடமும்  நடந்ததை  சொல்ல.  என்ன நடந்தது என்று  கேட்டு  கொண்டவர்கள். ஊர் தலைவரிடம்  சொல்ல.

 அவரோ கூட்டம் நடத்தி என்ன நடந்தது  என்று விசாரிப்போம்  அனைவரையும்  கூட்டம் நடக்கும் இடத்துக்கு வர சொன்னார்.

 ஆண்டவர் கனிக்கு தெரியும். ஸ்ரீ ஜெயம் ஊர்  கூட்டம்  கூட்டி  விசாரிப்பார் என்று  நினைத்தான். அது போலவே நடந்தது.

ஊர் பெரியவர்கள் ஒரு ஒருவராக  ஊர்  கூட்டம்  நடக்கும் இடத்துக்கு  வந்து கொண்டு இருக்க.

 கோவிலில்  வைத்து ஆண்டவர்கனி திவ்யாவின் கழுத்தில்  தாலி கட்டியதை  பார்கவி, மீனாட்சி, யோகாவும் அனைவரும்  தூரத்தில் இருந்து பார்த்தனர்.

 எல்லோரும்  அதிர்ச்சியாகி நிற்க மீனாட்சி  யோகாவிடம்  என்ன சித்தி இவன் இப்படி பண்ணிட்டான்.  தெரியலே இப்படி   யாருமே இல்லாத மாதிரி நடந்துக்குறான். என்னடி  இவன் பண்ணுறான். எனக்கு  ஒன்னும் புரியல. நம்ம  கனியா இது  என்று புலம்பிய  படியே வீடு வந்து  சேர்ந்தனர்.

 யோகா லட்சுமி அறைக்கு   வந்து பார்க்க. திவ்யா படுத்து இருந்ததை பார்த்தவர்.  ஆண்டவர்  கனி  இவளை  இங்கே  தூக்கிட்டு வந்துட்டானா என்றவர் அக்காவிடம்  அனைத்தையும் கூற.

லட்சுமி தன் மகன் செய்த காரியத்தை  நம்ம முடியாமல் தங்கை பார்த்தார்.

பார்த்துக்கலாம்  க்கா என்று அக்காவிடம்  நம்பிக்கையாக சொன்னவர்.  அறையை விட்டு

வெளியே வந்து  மீனாட்சியிடம்  அப்பாவுக்கு, சித்தப்பா  கால்  பண்ணு என்று  சொல்லி. ராமசுப்புவிடம்  போனில் நடந்ததை  சொல்ல.

நம்ம ஆண்டவர் கனியா  இப்படி. அவனா  இப்படி செய்தான் என்று யாராலையும்  நம்ப  முடியவில்லை. எல்லா  விசயத்திலும்  சரியாக  நடக்கும்  தன்  மகன் ஒரு  பொண்ணை  கோவிலில்  வைத்து  தாலி  கட்டியதை  அவரால்  நம்ப முடியவில்லை. இப்போ  எங்கே  அவன்  என்று  யோகாவிடம் ராமசுப்பு  கேட்டார்.

மீனாட்சியிடம்  யோகா  அண்ணா எங்கே என்று கேட்க.

அவன் ஊர் கூட்டம்  நடக்கும்  இடத்துக்கு  போயிருக்கானாம்.

 நீங்க போயி என்ன  நடக்குதுன்னு பாருங்க மாமா.

சரி என்றவர்  அவரின் தம்பி முருகேஷனையும்  அழைத்துக் கொண்டு ஊர் கூட்டம் நடக்கும் இடம் சென்றார்.

விசயம் கேள்வி பட்டு பெரியசாமியும்  வந்து இருந்தான்.

எல்லோரும்  வந்து இருந்தனர் ஊர் கூட்டத்திற்கு  நளினியோ  அழுத வண்ணம் இருக்க, தமிழ் அவரை அழதே  என்னன்னு பார்ப்போம் என்று மனைவியை தேற்றினார்.

இந்த பக்கம் ஆண்டவர் கனி அவனின் அப்பா, சித்தப்பா, அவன் தம்பி என்று நின்று இருக்க.

எதிர் பக்கம்  நளினி, தமிழ், ஸ்ரீ ஜெயம்  அனைவரும் நின்றனர். இருவருக்கும் நடவில்  ஊர் பெரியவர்கள்,  கோவில் மெம்பர்  சிலர் சேரில் அமர்ந்திருந்தார்கள்.

 கூட்டம் தொடங்கியது  ஊர் தலைவரில்  ஒருவர்  ஆண்டவர் கனியிடம்  நீ பண்ணுணது தப்பு  ஆண்டவர் கனி.   கோவிலில  வச்சு, யாருக்கும்  தெரியாம தாலி  கட்டி இருக்க.  ஏன் அப்படி  பண்ண. விளக்கம்  சொல்லு என்று   அவனிடம் கேட்டார்.

ஆண்டவர் கனி  நான் பண்ணுணது தப்பு தான். எனக்கு  அந்த  பொண்ணை  பிடிச்சுருந்தது அதான். வேற  வழி  தெரியல.

என்னப்பா  பொண்ண  பிடிச்சிருந்தா. பொண்ணு விட்டுல போயி  பொண்ண கல்யாணம் பண்ண  கேளு அத விட்டுட்டு இது என்னப்பா  நீ பண்ணி வச்சுருக்க.

ஆண்டவர் கனி   எல்லாரையும் பார்த்து  எனக்கு திவ்யாவை  பிடிச்சு இருந்தது. அவளை  அன்புக்கு  கல்யாணம் பண்ண  பேசி,  முடிவு பண்ணி வச்சுருந்தது  தெரிஞ்சது.   நான்  போயி பொண்ணு  கேட்டா  தர மாட்டாங்க. அதுக்கு தான்  நான் இப்படி பண்ணேன். எல்லாரும்  என்னை  மன்னிச்சுருங்க  என்றவன். நான் திவ்யாவை நல்ல  பாத்துப்பேன் என்று கூறிமுடித்தான்.

 நளினி  பொங்கி விட்டார். நீ யாருடா  என் மருமகளை  பார்க்குறது. என் வீட்டு  பிள்ளையை  யாருக்கும்  தெரியாம தாலி  கட்டி  தூக்கிட்டு  போய் இருக்க. வர சொல்லு  என்மருமகளை  என்று கேட்டார்.

ஊர் தலைவர் , அந்த பொண்ணு  எங்கப்பா என்றார்.

 ஆண்டவர் கனி  அவளுக்கு  உடம்பு  சரியில்லை மயங்கிட்டா. என் வீட்டுல  தான்  இருக்கா தெப்பக்குளத்தில் நடந்ததை சொல்லி  அவளுக்கு உடல்  நலம்  சரியில்லை என்று கூறினான்.

அந்த  கூட்டம் நடக்கும்   அறைக்குள்  வேகமாக  நுழைந்தான்  அன்பு. வந்தவன்  நேராக  ஆண்டவர் கனியின் சட்டையை பிடித்து  இருந்தான். என்னடா  பண்ண  என் திவ்யாவை  என்று  அவனின்  சட்டையை  பிடித்து  சண்டை வந்தான்.

பெரிய சாமி  இருவருக்கும் நடுவில் சென்று  டேய்  என் அண்ணண் சட்டையை விடுடா என்று  பேசிக்கொண்டு இருக்க.

 மூன்று பேரும்  பேசிக்கொண்டு சண்டை போட.

ஊர்தலைவர் சண்டை போட  வேண்டாம் பேசி  தீர்க்கலாம் என்று  சொல்ல. ஸ்ரீ  ஜெயம் அன்புவை   பிடித்து  இழுத்து வந்தார்.

அன்பு பொறுமையா இருப்பா பேசலாம் என்று ஊர் தலைவர் சொல்ல.

என்ன பேசனும்  எனக்குன்னு கல்யாணம் பண்ண பேசி  வச்ச  பொண்ண இவன் எப்படி தாலி கட்டலாம்.

அவனுக்கு பிடிச்சு இருக்குன்னு  சொல்லுறான் பா.

 பிடிச்சு இருந்தா  தாலி  கட்டலாமா, நான்  யாரை யாவது  எனக்கு  பிடிச்சுருக்கு சொல்லி  தாலி  கட்டவா என்று கோபமாக  பேச.

ஊர் தலைவர் பொறுமையா  பேசு தம்பி  என்று சொல்லிக்கொண்டு.

என்ன  பொறுமையா  பேச.

ஆண்டவர்கனியை  காண்பித்து இவன்  வீட்டு  பொண்ண  எனக்கு  பிடிச்சிருக்குன்னு  சொல்லி  நான்  தாலி  கட்டவா என்று சத்தமாக பேசியவன்.

அங்கே இருந்த எல்லோரும் அன்பு பேசுவது சரி என்று  அமைதியாக  இருக்க.

பதில்  சொல்லுங்கட, உன்  வீட்டு  பொண்ண  எனக்கு  பிடிச்சுருக்குன்னு  சொல்லி  தாலி கட்டவா  என்றவன். பெரியசாமியை  பார்த்து  உனக்கு நிச்சயம்  பண்ண   பொண்ண நான்  தாலி கட்டி  எனக்கு  பிடிச்சுருக்கு சொன்னா  என்னடா  பண்ணுவ என்று கேட்டவுடனே.

பெரியசாமி  அன்புவின் மேல்  பாய்ந்து இருந்தான். அடிக்க.

ஆண்டவர் கனி  தம்பியை  பிடித்து  இழுத்து வந்தான்.

டேய் என் பார்கவி  மேல் கைய வச்சுப்பாரு.  உனக்கு  இருக்கு என்று கத்தினான்.

 டேய் சொன்னதுக்கே  வலிக்குது  உனக்கு. உன்  அண்ணன் எனக்கு  பேசி  வச்ச திவ்யா  கழுத்தில்  தாலி  கட்டுனா நான்  சும்மா விடுவேனா  என்று  அன்புவும், பெரியசாமியும்   மாறி, மாறி சத்தம்  போட.

ஊர்  தலைவர் எழுந்து   வந்து  இரண்டு  பேரையும் சமாதானம் பண்ணியவர்.

நாளைக்கு   ஆண்டவர் கனி  தாலி கட்டுன பொண்ணும், அவங்க  அப்பா, அம்மாவையும்  வர சொல்லுங்க. அவங்க  வந்து பேசட்டும் மத்த  யாரும்  பேச வேண்டாம்.

பொண்ண பெத்த வங்க  என்ன  முடிவு  சொல்லுறாங்களோ அதன் படி  செய்யலாம் என்று முடிவு  பண்ணி  நாளை காலையில  10   மணிக்கு ஊர் கூட்டத்துக்கு  வந்துருக்கப்பா  என்று  அனைவரையும்  அனுப்பி வைத்தார்.

 பெரிய சாமி  அன்புவை  முறைத்தபடி  வெளியில்  வந்தான்.

 அனைவரும்  அவர், அவர்  வீட்டுக்கு  செல்ல  இரவு 10 மணிக்கு மேல் ஆகியிருந்தது.

அன்பு  வீட்டு வந்ததும்  தன் அம்மாவை  திட்டி   கொண்டு இருந்தான். உங்களை யாரு  அவளை  வெளியே கூட்டிட்டு  போக  சொன்னது. நான்  சொல்லிட்டு  தானே  போனேன்.

நான் எங்கேடா  அவளை  விளக்கு  பூஜைக்கு  கூட்டிட்டு போனேன், உங்க  அப்பா தான்  மருமக  ஆசைப்படுது  கூட்டிட்டு போன்னு சொன்னாரு. நாளைக்கு வேணி வந்த  என்ன பதில்  சொல்வேன் என்று புலம்பிக்கொண்டு இருந்தார் நளினி.

டெல்லியில  உள்ள  திவ்யாவின்  அம்மாவுக்கு  நடந்ததை  சொல்லி  நாளைக்கு  வருமாறு  சொல்லிவிட்டனர்.

வேணி அவரின்  கணவரிடம்  அனைத்தையும்  சொல்லி  புறப்பட தயாராக இருந்தார்.

இங்கே  ஆண்டவர்  கனியின் குடும்பம்  வீடு  வந்து  சேர  இரவானது.

யோகா  லட்சுமியின்  அறைக்கு வந்து  பார்க்க.லட்சுமி திவ்யாவை அழதமா என்று சமாதானம் பண்ணி கொண்டு இருந்தார். அவளோ    யார் சொல்வதும் காதில் விலாமல்  அழுது , அழுது  முகம்  வீங்கி  போய்  கண்ணீரோடு  அமர்ந்து இருந்தாள்.

லட்சுமி   யோகாவை பார்த்து இந்த பொண்ணு கண் முளிச்சதுல  இருந்து  அழுகுது. என்ன  சொன்னாழும்  சமாதானம் ஆகல. நீ  கொஞ்சம்  பேசு  யோகா  என்று  தங்கையிடம்  சொல்ல.

யோகா  திவ்யாவின்  அருகில் வந்த  கட்டிலில் அமர்ந்தார்.

திவ்யா நிமிர்ந்து யோகாவை பார்க்க இவர்  இங்கே  யார் எப்படி  என்று யோசித்தவள்.

 நான் ஆண்டவர் கனியின்  சித்தி, இவ என் அக்கா என்று லட்சுமியை  அறிமுகம்  படுத்தியவர். பின்பு  மீனாட்சி ஆண்டவர் கனியோட தங்கச்சி என்று கூற.

திவ்யா  ஓ.. என்று மனதில்,  தங்கச்சி பொண்ண, காப்பாத்தி  குடுத்ததற்காக வா, என்னை  இவர் கல்யாணம் பண்ணார். திடிர்னு ஏன்னு இப்படியின்னு  நெனச்சேன். எப்பையும்  மூஞ்ச  திருப்பற ஆலு,  பக்கத்துல வான்னு  கூப்பிட்டப்போ நான்  உஜாரா  ஆகியிருக்கனும்  தப்பு  பண்ணிட்டேன் என்று  கண்கலங்க.

 யோகா  அழுகதடா,  என்று அருகில் அமர்ந்து கண்களை துடைத்து விட்டு தலை வருட.

ஆண்டி என்று யோகாவை  அணைத்து கொண்டு  ஓ என்று அழதவளை.

அவளின் முதுகை  தட்டி  கொடுத்தவர். அழாத  திவ்யாமா, தப்பு தான், எங்க  பையன்  பண்ணுனது  தப்புதான். அதற்கு  நீயேன்டா  அழுவுற. அழாதடா, தப்பு பண்ணுனது அவன், அவன்ட்ட போய்   கேளு  ஏன் இப்படி பண்ணன்னு, அவன திட்டு, அடி நீயேன்டா ம்மா அழுவுற அழாதடா பாரு முகம்  வீங்கி  இருக்க. உனக்கு ஏற்கனவே உடம்பு  சரியில்ல  எதாவது  உடம்புக்கு  ஆகிற போகுது, என்று  திவ்யாவிடம்  பேசி  கொண்டே  சமாதானம் பண்ண அவளிடம்  பேச்சு குடுத்தவர்.

மீனாட்சி என்றவர்  அவளை அழைத்து  தண்ணி  கொண்டு வா என்று சொல்ல.

மீனாட்சி கிச்சன் சென்று  தண்ணி  எடுத்து வந்தாள்.

அதை வாங்கி திவ்யாவிடம்  குடுத்து  குடி என்று குடிக்க வைத்தவர். போய்  மூஞ்ச  கழுவு  என்று அவளை  ரெஸ்ட்ரூம்  நோக்கி  அனுப்பி வைத்தார். அக்காவிடம் சாப்பிட எடுத்துட்டு வர்றேன் என்று  வெளியில் வர அனைவரும்  ஹாலில் அமர்ந்து இருந்தனர்.

மீனாட்சியை  அழைத்து  எல்லாரையும்  சாப்பிட வை, என்று சொல்லி விட்டு, லட்சுமிக்கும், திவ்யாவுக்கு  சாப்பிட இட்லி எடுத்து  சென்றார்.

அக்காவின் கையில் ஒரு தட்டை குடுத்த  யோகா  சாப்பிட  சொல்ல.  அவரோ  திவ்யாவை  கண் காண்பித்தார்.

நான் பாத்துக்கிறேன் என்று திவ்யாவின்  அருகில் வந்து அமர்ந்து சாப்பிடுடா  என்றார்.

அவளோ வேண்டாம் ஆண்டி என்று தலையாட்ட.

 யோகா கையில் இட்லியை பிய்த்து திவ்யா வாய் அருகே ஊட்ட  வர.

வேண்டாம் ஆண்ட்டி  என்று அழுதவளை.

வேண்டாம்டா  அழாகாத, உங்க  அப்பா, அம்மா  காலையில  வருவாங்க. அவங்கல  பாக்க  உனக்கு  தெம்பு  வேணாமா என்று பேசிக்கொண்டே  அவள் அசந்த  நேரம்  பார்த்து  இட்லியை  அவள் வாயில் வைத்து ஊட்டி  இருந்தார். இரண்டு இட்லி தான் சாப்பிடு.

நாளைக்கு ஊர் கூட்டத்துக்கு நம்மல  வர சொல்லி இருக்காங்க  என்று திவ்யாவிடம்  பேசிக்கொண்டே  இட்லியை  ஊட்டி முடித்தவர், அவ்வளவு தான்  நல்லா  தூங்கு. அக்கா  பக்கத்துல இருப்பா. நான் அடுத்த ரூம்புல  தான் இருப்பேன்  ஏதாவதுனா கூப்பிடு என்று  திவ்யாவிடம் சொல்லி விட்டு.

லட்சுமி சாப்பிட்ட  தட்டை  எடுக்க வந்த யோகாவை  கண்ணீர் மல்க  பார்த்தார் லட்சுமி.

ஏன்கா  நீ வேற  கண்னத்தொட, பாத்துக்கலாம் நம்ம பிள்ளைங்க தானே. அக்காளிடம் தைரியம்  சொல்லி விட்டு  வெளியில்  வர அனைவரும்  சாப்பிட்டு  கொண்டு இருந்தனர்.

ஆண்டவர் கனி மட்டும்  சோபாவில் கண்மூடீ அமர்ந்து இருந்தான்.

ஏன்டி  மீனாட்சி  உன் பெரிய அண்ணே சாப்டானா.

இல்ல சித்தி வேணாமா.

 யோகா  மனதில் ஆண்டவர்கனியை  பண்ணுறத எல்லாம் பண்ணிட்டு  சாப்பிடமாட்டானா  போடா என்று புலம்பிய படியே கிச்சன் சென்றார்.

சித்தியின்  சத்தம் கேட்ட ஆண்டவர்  கண் திறந்து பார்த்தவன். யோகாவை காண  கிச்சன் சென்று  சித்தி என்று  யோகாவின்  தோளில்  கைவைத்தான்.

போடா  என்று அவனின் கையை  தட்டி விட்டார்.

மீண்டும் சித்தி என்று அவரை பின் இருந்து  சாரி சித்தி  என்ற அணைத்து கொள்ள.

போடா.  என்று அவனை தல்லி  நிருத்தியவர்  சித்தி,  நொத்தியின்னு  இனிமே என் கிட்ட வராத. நான்  வளர்த்தவனா நீ  போடா  என்று கண்கலங்க.

சாரி சித்தி, எனக்கு வேற வழி  தெரியல.

ஏன்டா  என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.

 அவள எனக்கு  பிடிச்சுருந்துச்சு  சித்தி, ஆன அவ கீலூர்  ஸ்ரீ ஜெயமோட  சொந்தமுன்னு தெரிஞ்சு  வேண்டாமுன்னு  நெனச்சேன். ஆன  அவ நம்ம  மீனாட்சி பொண்ண உயிர குடுத்து  காப்பாத்து நாளோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்.  அவள விட்டு யாரையும்  என்னால கல்யாணம் பண்ண முடியாதுன்னு  தோணுச்சு சித்தி.

அதுக்காக கோவிலுல வச்சு தாலி கட்டுவீயா.

 என்னைய,!  என்ன  பண்ண  சொல்லுறீங்க. அவள   அன்புக்கு கல்யாணம் பண்ண பேசி முடிச்சுட்டுடாங்க.  என்னால  அவங்க  வீட்டுக்கு எல்லாம்  போயி பேசி எல்லாம் கல்யாணம்  பண்ண முடியாது. நான் போனாலும்  திவ்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டாங்க.

 அதனால அந்த பொண்ணு விருப்பம் இல்லாமா  தாலி கட்டுவீயா. போடா  நான் உன்கிட்ட இருந்து இத எதிர்பாக்கலடா.

சித்தி சாரி சித்தி.

அத விடு  நாளைக்கு   திவ்யா அம்மா, அப்பா கூட்டத்துக்கு வருவாங்கல அவங்க  ஏதாவது பிரச்சனை பண்ண.

 அப்படி எதுவும் நடக்காது  சித்தி. கூட்டத்துல  இரண்டு பேர கரெக்ட் பண்ணி வச்சுருக்கேன்.

அட  பாவி பயலே. நடத்து, நடத்து நல்லா இருந்த சரிதான். சரி ரொம்ப நேரம் ஆச்சு  சாப்பிடு  என்று இட்லியை தட்டில் வைத்து கொடுத்தார்.

ஆமா  என்  பொண்டாட்டி சாப்டாளா.

சாப்டா,  நான் தான் ஊட்டி விட்டேன். பாவம் டா ரொம்ப  அழுகுற.

 இரண்டு நாள் அழட்டும் சித்தி நான் அப்பறம்  சமாதானம்  பண்ணிக்கிறேன்.

சரிடா போய்  தூங்கு காலையில கூட்டத்துக்கு போகனும்.

சரி சித்தி என்று அவன் அறைக்கு சென்றான்.

 யோகா  நாளை விடியிற  பொழுது எல்லாருக்கும்  நல்லதாக  இருக்கட்டும் என்று தூங்க சென்றார்.

விடியற் காலை  5 மணி  ஆண்டவர் கனி  வீட்டு வாசலில்  திவ்யாவின் அம்மா வேணி. யாருடா  வீட்டுல  என் பொண்ணை  தாலி  கட்டுனது. அவனை  வர சொல்லு  என்று  சத்தமிட்டார்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!