Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyindri Vaazhveno

Neeyindri Vazhvaeno 20 2

“நல்லா தான் எழுதினேன். நீங்க சொல்லுங்க நான் எப்படி அங்க வர்றது?”

“நீ இங்க வர போன வாரமே எல்லா ஏற்பாடும் பண்ணி ஆச்சு. அப்பா உன்கிட்ட பாஸ்போர்ட் கேட்டது மறந்து போச்சா…”

“ஓ… இதுக்குத்தான் கேட்டாங்களா….”

“நாளை மறுநாள் சாயங்காலம் அஞ்சு மணிக்கு உனக்குச் சென்னை ப்ளைட். திரும்பச் சென்னையில இருந்து லண்டனுக்கு நைட் பத்து மணிக்கு ப்ளைட். நீ சென்னையில ப்ளைட் ஏறும் வரை உதய் உன்னோட இருப்பான்.”



Advertisement

“ஒருநாள் போதும் இல்லையா சாதனா உன்னோட திங்க்ஸ் எடுத்து வைக்க… ரொம்ப எடுத்திட்டு வராத… நான் வேற உனக்கு இங்க வாங்கி வச்சு இருக்கேன். நாலைஞ்சு செட் எடுத்துக்கோ போதும். மறக்காம ஜெர்கின் எடுத்துக்கோ… தேவைப்படலாம்.”

ரிஷி பேசிக்கொண்டே செல்ல… சாதனாவிற்கு  எல்லாம் கனவு போல் இருந்தது. அவள் அமைதியாக இருப்பதை உணர்ந்த ரிஷி “ஓகே தான சாதனா… வந்திடுவ தான… இப்ப சொல்றேன்னு கோபமா…. நீ இதையே நினைச்சிட்டு ஒழுங்கா படிக்கலைன்னா… அதுதான் சொல்லலை……”

“கோபம் இல்லை… நான் வரேன்.”
“குட், பாஸ்போர்ட் விசா ஹன்ட்பாக்ல வச்சுக்கோ… நான் உனக்காக லண்டன் ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவேன். சென்னையில ப்ளைட் ஏறினதும் கால் பண்ணு. பாய்.”

Advertisement

ரிஷி உடனே வைத்து விட…. அடப்பாவி அதுக்குள்ள வச்சிட்டானே என நினைத்த சாதனா விளக்கை அனைத்து விட்டு படுத்துக்கொண்டாள்.

Advertisement

மறுநாள் காலை எழுந்த சாதனா சித்ராவை செல்லில் அழைத்துத் தான் லண்டன் போவதை பற்றிச் சொல்லி ஆலோசனை கேட்க….

“நீ போகக் கூடாதுன்னு சொல்ல மாட்டேன். இது ஆரம்ப நாட்கள் தான். அதனால பிளைட்ல போறது பத்தி ஒன்னும் இல்லை… ஆனா அங்க போய் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாத. அதே நேரம் கரெக்ட் டைம் சாப்பிடு. நல்லா சத்தானதா சாப்பிடு. நல்லா தூங்கி எழுந்துக்கணும்.”

 

Advertisement

[the_ad id=”6605″]

 

“உன் கணவரோட இருக்கிற குஷியில வயற்றில் இருக்கும் குழந்தையை மறந்துடாத… நான் சொல்றது உனக்குப் புரியும்.”

சித்ராவுடன் பேசிய பிறகு தான் சாதனாவால் நிம்மதியாகத் தன் பயணத்தைப் பற்றித் திட்டமிட முடிந்தது. மதிய உணவு நேரம் தன் புகுந்த வீட்டிற்குச் சென்றவள். தன் மாமனார் மாமியாருடன் உட்கார்ந்து உணவை முடித்ததும், தன் அறைக்குச் சென்று விட்டாள்.

ஒரு பெட்டியில் இரண்டு சுடிதார், மூன்று ஜீன்ஸ், நான்கு டாப்ஸ், நீளமான பாவாடைகள் இரண்டு, புடவைகள் இரண்டு என்று விதவிதமாக எடுத்து அடுக்கியவள், மறக்காமல் சித்ரா கொடுத்த மாத்திரைகளையும், அதன் மருந்து சீட்டோடு எடுத்து வைத்துக்கொண்டாள்.

 

விமானத்தில் மருந்து மாத்திரைகள் வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லும் போது… அதற்கான காரணங்கள் சரியாக இருக்க வேண்டும்.

சில மெல்லிய நகைகள் மட்டுமே எடுத்துக்கொண்டாள். அதோடு சில ஒப்பனை பொருட்கள் என்று ஒரு மணி நேரத்தில் எடுத்து வைத்து முடித்தவள், கீழே வந்து வேலை செய்பவரை அழைத்துத் தன் பெட்டியை எடுத்து வந்து காரில் வைக்கச் சொல்ல… ஜோதி அவளைத் திகைத்துப் போய்ப் பார்த்தார்.

“என்ன சாதனா அதுக்குள்ள கிளம்பிட்ட? நீ நாளைக்கு இங்க இருந்து போறேன்னு இல்ல நினைச்சேன்.”
“நான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் அத்தை. அதுவும் அப்பாவும் எனக்காக இன்னைக்கு வீட்ல இருக்காங்க.” சாதனா தயக்கமாகச் சொல்ல…

“அவங்க வீட்லயும் ரெண்டு நாள் இருக்கட்டுமே…. நீ கிளம்பு மா…” என்றார் ராஜ்மோகன். அவர் சொன்னதும் ஜோதியும் “சரி சாதனா பத்திரமா போயிட்டு வா… நாளைக்கு உனக்குப் போன் பண்றேன்.” என்றார்.

“சரிங்க அத்தை போயிட்டு வரேன். வரேன் மாமா…” சாதனா விடைபெற… ராஜ்மோகனும் , ஜோதியும் அவளை வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.

அங்கேயே இருந்து கொண்டு தான் கர்ப்பம் என்பதைச் சொல்லாமல் மறைப்பது கஷ்ட்டமாக இருந்ததால் தான், சாதனா தன் மாமனாரும் வீட்டில் இருக்கும் நேரமாகச் சென்று… தன் உடமைகளோடு அங்கிருந்து உடனே கிளம்பியும் விட்டாள். அவர்களுக்குத் தெரிந்தால் கண்டிப்பாக அவளை லண்டன் செல்ல விடமாட்டார்கள்.

தன் மாமியாரிடம் சொன்னதற்காகச் செல்லும் வழியில் காரை ஒரு பெரிய கடையில் நிறுத்தி உள்ளே சென்று உள்ளாடைகள் மட்டும் சிலது வாங்கிக் கொண்டாள். திரும்பத் தன் பிறந்த வீட்டிற்கு வந்ததும் தான் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது.

சந்தானம் அவளுக்காக வீட்டில் இருப்பது உண்மை தான். அவளைப் பார்த்ததும் சந்தானம் “என்ன மா ரொம்பக் களைப்பா இருக்க….” எனக் கேட்க…

“பரிட்சைக்காக சரியா தூங்காம படிச்சது தான்பா… வேற ஒன்னும் இல்லை…” என்றாள் சாதனா.

“சரி மா… கொஞ்ச நேரம் படுத்து தூங்கிட்டு வா…” என அவளை அறைக்கு அனுப்ப…. இப்படி எல்லோரிடமும் பொய் சொல்வதை நினைத்து சாதனாவிற்கு  மிகவும் கஷ்ட்டமாக இருந்தது.

மறுநாள் மாலை தான் லண்டன் கிளம்புவதால்… அதுவரை சாதனா நன்றாக ஓய்வு எடுத்தாள். அவள் லண்டன் செல்வது தெரிந்து வெற்றியும், ப்ரீதாவும் அவளைச் செல்லில் அழைத்துப் பேசினர்.

“நீங்க போகாத போது… நாங்க மட்டும் ஹனிமூன் போகக் கஷ்ட்டமா இருந்தது சாதனா…. இப்ப தான் நிம்மதியா இருக்கு.” என்றான் வெற்றி.
அவருக்குத் தேர்தல் வேலை இருந்த போதும், சந்தானம் மகள் கிளம்பும் வரை வீட்டில் இருந்தார். சாதனாவே வீட்டில் இருந்து கிளம்பும் முன் தன் மாமியார் மாமனாரை செல்லில் அழைத்துச் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

மாலை ஆறரை மணிக்கு எல்லாம் சென்னை வந்திருந்தனர். உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான நிலையத்திற்கு நடந்து சென்றனர். உதய் இருந்ததால்…. அவன் சாமான்களைக் கொண்டு வர… அதோடு நிறைய நேரமும் இருந்ததால்… சாதனா நிதானமாக நடந்து வந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

பத்து மணி விமானத்திற்கு ஏழு மணிக்கெல்லாம் ரிப்போர்ட் செய்து லக்கேஜ் ஒப்படைத்து விட்டு கைப்பையோடு சாதனா காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவள் போர்டிங் செய்யும் வரை உதய் உடனிருந்தான். அவள் விமானம் கிளம்பும் வரை விமான நிலையத்தில் இருப்பதாகச் சொல்லி இருந்தான்.

“நீங்க எதுக்கு வீணா வெயிட் பண்றீங்க? நீங்க போங்க.” சாதனா சொன்னதற்கு,

“உங்க ப்ளைட் கிளம்பினதும், சார்க்கு போன் பண்ணி சொல்லிட்டு தான் மேடம் போவேன்.” எனச் சொல்லிவிட்டான்.

இரவு எட்டு மணி ஆனதும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவையே சாதனா சாப்பிட்டாள். அது தவிரத் தேவைபட்டால் விமானத்தில் சாப்பிட உணவும், பழங்களும் வைத்திருந்தாள். கர்ப்பமாக இருப்பதால்… வெளி உணவுகளைத் தவிர்க்க நினைத்தே வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்தாள்.

விமானத்தில் ஏறி அமர்ந்ததும் தன்னுடைய அப்பா ,ஜோதி, வெற்றி என எல்லோரையும் அழைத்துப் பேசியவள் கடைசியாக ரிஷியை அழைத்தாள்.

“ஹாய் சாதனா ப்ளைட் ஏறிடியா….” ரிஷி உற்சாகமாகக் கேட்க….

“நான் வர்றது கூட உங்களுக்கு நியாபகம் இருக்கா…முந்தாநாள் நைட் ஒரு போன் பண்ணீ கிளம்பி வான்னு சொன்னது…. அப்புறம் ஒரு போன் கூடப் பண்ணலை…..”

“சாரி கோபமா… உனக்காகத்தான் தீயா வேலை பண்ணிட்டு இருக்கேன். அப்ப தான உன்னோட ஊர் சுத்தலாம்.” ரிஷி சொன்னதும், சாதனாவின் முகம் தாமரையாக மலர்ந்தது.
நம்ம வீட்டுக்காரரா இப்படி என்ற சந்தேகத்தில் கையை வேறு கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்.

“அச்சச்சோ… எப்படி இப்படி? எனக்காக எல்லாம் நீங்க பார்பீங்களா என்ன?” சாதனா கேட்டதும், அந்தப் பக்கம் ரிஷிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“ஹே… அது என்ன உனக்காக. மத்த எல்லோரையும் விட நீ தான் முதல்ல. அதனால இனி அப்படிப் பேசாத என்றான் ரிஷி.”

லண்டன்ல எதாவது போதி மரம் இருக்கா என்ன? எனக் கேட்க வந்தவள், வேண்டாம் அவனே இப்ப தான் ஒழுங்கா பேசுறான் என்று நினைத்து வாயை மூடிக் கொண்டாள்.

ஆனால் அதே சமயம் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள். இதையே தான் கர்ப்பம் எனத் தெரிந்த பிறகு ரிஷி சொல்லி இருந்தால்…. குழந்தைக்காகச் சொல்கிறான் என்று தான் நினைத்திருப்பாள்.

எந்தக் கட்டாயமும் இல்லாமல் வருவது தானே உண்மையான அன்பு…. வார்த்தையில் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை…. அதை உணர்தினாலே போதும்.

ரிஷி எப்போதும் தன்னை விட மாட்டான் என்று சாதனாவிற்கு த் தெரியும். அதே நேரம் திருமணம் செய்து கொண்டோமே என அவன் கடமைக்காக வாழ்வது அவளை மிகவும் பாதித்து இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல என்பதே… மனதில் இருந்த பெரும் பாரம் இறங்கியது போல இருந்தது.

 

[the_ad id=”6605″]

அவளுக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்து விட… இருக்கும் இடம் உணர்ந்து தன்னைக் கஷ்ட்டப்பட்டுக் கட்டுபடுத்தினாள்.

“சாதனா எதாவது பேசு…” ரிஷி சொல்ல….

“நான் வச்சிடுறேன் ரிஷி.” என்றாள்.

“ஏன்? இன்னும் கொஞ்ச நேரம் பேசு.” என்றவன் “நீ வர பத்து மணி நேரம் வெயிட் பண்ணனுமா….” என்றான் தாபமாக.

டேய் ! என்னைக் கொல்லாதடா… என நினைத்தவள் “நாம நேர்ல பேசுவோம். நான் வச்சிடுறேன்.” எனப் போன்னை வைத்தே விட்டாள்.

சாதனா மனதில் ரிஷியையும் வயிற்றில் அவர்கள் குழந்தையையும் சுமந்துபடி பயணம் செய்ததால்…. அவளுக்கு அந்தப் பயணம் சிரமமாகவே இல்லை. மிகவும் சுகமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!