Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 17 1

அத்தியாயம்…17

திரும்பவும் வசுந்தரா… “என்ன மணி கண்டுக்கவே மாட்டேங்குற…ஓ நாத்தனார் கெத்தை  காட்டுறியா…?” என்று கிண்டல் செய்வது போல்  வீரேந்திரன் முன்  அவளிடம் சாதரணமாக பேசுவது போல் பேசினாள்.

எப்போதும் மணிமேகலை தன் சித்தி மகனிடமும் சரி…அவள் குடும்பத்தில் இருப்பர்களோடும் சரி பேசுவது என்ன…?அவர்கள் எதிரில்  மற்றவர்களிம்  கூட  பேச மாட்டாள். அந்த தைரியத்தில் தான் வசுந்தரா மணிமேகலையிடம் பேச்சை வளர்த்தது.

அவளின் திட்டத்தை புரிந்துக் கொண்ட மணிமேகலை… “நாத்தனாரா…யார்…?என் அம்மா அப்பாக்கு நான் ஒரே பெண் தானே… என்னை பத்தி எல்லா தெரிஞ்சி பேசுற நீ. உனக்கு இது தெரியாதா…?” என்று மணிமேகலை கேட்டாள்.



Advertisement

சத்தியமாக இது வசுந்தரா என்ன…?அங்கு இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்த வாசுதேவனும் சரி. வீரேந்திரனும் சரி, அவளின் இந்த பேச்சை எதிர் பார்க்கவில்லை என்று  தான் சொல்ல வேண்டும்.

வீரேந்திரன் மணிமேகலையை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே, அவளின்  சூட்கேசை தான் எடுத்துக் கொண்டான் என்றால்..

வாசுதேவனோ அதிர்ச்சியோடு மணிமேகலையை பார்த்திருந்தான். அவனுக்கு தெரிந்தது மணிமேகலை வாய் திறாக்காத பரம சாதுவான பெண். அதை வைத்து தான் அவன் அடுத்து அடுத்து தன் திட்டத்தை வகுத்து வசுந்தராவுக்கு கொடுத்தது.

Advertisement

ஆனால் மணிமேகலையின் இந்த பேச்சு…என்ன இவள் இவ்வளவு தைரியாக பேசுறா…அதுவும் என் முன்னே நான் அண்ணன் இல்லை என்பது போல் பேசுகிறாள் என்றால், வீட்டில் தங்களை பற்றி சொல்லி விடுவாளோ என்று  கொஞ்சம் பயத்துடன்  தான் வசுந்தராவை திரும்பி பார்த்தான்.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

 

வசுந்தராவும்  முதலில் மணிமேகலையின் பேச்சில் கொஞ்சம் ஆட்டம் கண்டாள் தான். ஆனால் அடுத்து அவள் நினைவுக்கு வந்தது மணிமேகலையின் பலவீனமான அவள் சிறுவயதில் செய்த அந்த சிறுசெயலை மனதில் கொண்டு  வாசுதேவனை பார்த்து கண் காட்டி….

“நான் பார்த்துக் கொள்கிறேன்.”  என்பது போல் வசுந்தரா  சொன்னாள். இந்த சைகை பாஷையும், வீரேந்திரன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.  அவனுக்கு ஒன்று  மட்டும் தெள்ள தெளிவாக புரிந்தது.

அது மணிமேகலையை வைத்து,  வாசுதேவனும், வசுந்தராவும் ஏதோ செய்கிறார்கள் என்று. அத்தோடு இந்த வசுந்தரா இனி மணிமேகலைக்கு தோழியாக இருக்க மாட்டாள். அவள் சொன்னது போல் அண்ணியாக மட்டுமே தான் நடந்துக் கொள்வாள்.

ஆனால் இப்படி வசுந்தரா  தைரியமாய் மணிமேகலையை  வைத்து திட்டமிடுகிறாள் என்றால், ஏதோ   ஒன்று இருக்கிறது என்று வீரேந்திரனின் மனது சொன்னது.  மணிமேகலை எப்போதும் சொல்லும் வட்டிக்காரன் புத்தி…கணக்கிட ஆரம்பித்த நொடி… அவர்களின் செயல்களையும் கண்காணிக்க ஆராம்பித்து விட்டது.

பின் வசுந்தரா மணிமேகலையின் பேச்சை கவனிக்காத வாறு வீரேந்திரனிடம்… “இப்போ என்ன அண்ணா நேர  நகை கடைக்கு போகலாமா துணிகடைக்கு போகலாமா…?” என்று என்னவோ வீரா வசுந்தராவின் ஒட்டி பிறந்த சகோதரனை போல அண்ணா என்று அழைத்து பேசினாள்.

இதை கேட்ட மணிமேகலை… ‘இது எப்போத்திலிருந்து என்று  நினைத்தவள்’

வீரேந்திரனிடம்… “எனக்கு ரொம்ப டையடா இருக்கு. எதுன்னாலும் நீங்க போங்க.” என்று சொன்னவளின் பேச்சில்…

வாசுதேவன் முதன் முறையாக மணிமேகலையிடம்…  “நீ இங்கு எங்கே இருப்ப…அதுக்கு எங்களோட  வந்தா உன் கல்யாண பர்சஸையும் சேர்த்து  முடிச்சிடலாம். இல்லேன்னா திரும்பவும் நாம சென்னை வருவது போல ஆயிடும்.” என்று  பேசியவனின் பேச்சை கேளாது போல வீரேந்திரன் பக்கம் திரும்பிய மணிமேகலை…

“நீங்க போறதுன்னா போங்க. எனக்கு ரொம்ப டையடா இருக்கு. இங்கே எங்காவது ஒரு ஓட்டல்ல ரூம் புக் பண்ணி கொடுத்தா நான் ரெஸ்ட் எடுத்துக்குவேன். நீங்க உங்க ஷாப்பிங்கை பார்த்துக்குங்க.” என்று சொன்னாள்.

மணிமேகலை வாசுதேவன் பேச்சை சட்டை செய்யாது அவனுக்கு பதில் அளிக்காது… வீரேந்திரனை பார்த்து  பேசியது வசுந்தராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

“உன்னோட அவர் ஏழு வயசு பெரியவர். உன் அண்ணா அது உனக்கு நியாபகம் இருக்கா…?” என்று  வசுந்தரா மணிமேகலையை பார்த்து கேட்டாள்.

வீரேந்திரன் முன் சாதரணமாக நடக்க வேண்டும் என்று தான்  நினைத்ததை, மணிமேகலையின் இந்த அலட்சிய பேச்ச   தகர்த்தெரிந்து விட்டது. அதனால் கோபமாக சண்டை போடுவது போல் தான் வசுந்தரா  பேசினாள்.

மணிமேகலையும்… “என் இந்த பேச்சு உனக்கு இப்போ தான் தெரியுதா…?நான் எப்போவும் இது போல் தானே உன்னிடம் அவங்கல பத்தி பேசி இருக்கேன்.” என்பது போல் பேசி வைத்தாள்.

ஆம் மணிமேகலை எப்போதும்  அவள் சகோதரர்களை பற்றி  பேச்சு எடுத்தாலே… “எனக்கு அவங்க பேச்சு எல்லாம் தேவையில்லை. நீ அவனை பாக்குறியா உன் வரை பார்த்துக்கோ…” என்று சொல்வாள்.

கூடவே… “பாத்து ஏமாந்து போயிடாதே…ஏன்னா எனக்கு அவங்கல பத்தி அவ்வளவா தெரியாது.”

தன்   சித்தி மகனின் நலனை  விட தன் தோழி அவனிடம் ஏமாந்து போயிட போறா என்ற நல்ல எண்ணத்தில் தான் மணிமேகலை அப்போது அப்படி பேசியது. ஆனால் இருவரும் சேர்ந்து தன்னை இப்படி ஏமாற்றுவார்கள் என்பது அவள் எதிர் பாராத ஒன்று.

மணிமேகலையின் இந்த எடுத்தெரிந்த பேச்சு…இந்த தைரியமான அணுகு முறை அனைத்தும் ச்சுந்தராவுக்கு புதியது தெரிந்தது. தன்னை விட்டு இரண்டு வருடம் தானே பிரிந்து இருந்தாள். இந்த குறுகிய காலத்தில் இத்தனை மாற்றங்கலா…?என்று வசுந்தரா வியந்து போனாள்.

அமெரிக்காவில் இருந்தது கொஞ்ச காலமே ஆனாலும், அவளுடம் இருந்த தோழி சோனாலியின்  எந்த ஒரு செயலிலும் தெரியும் தைரியம். தன்னம்பிக்கையான பேச்சு. இதை பார்த்து இருந்தவளுக்கு இவள் போல தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று  நினைப்பாள்.கூடவே நாம் ஏன் இவள் போல் இருக்க மாட்டேங்கிறோம் என்றும் தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஜான் விக்டர் உடனான,திருமண பேச்சு பாதியில் தடைப்பட்ட போதும், நான் ஏன் தனக்கு திருமணம் பேசுகிறார்கள் என்று  தெரிந்ததும் வீட்டுக்கு அழைத்து…

“எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்ய எண்ணம் இல்லை.” என்று சொல்ல வில்லை.

கூடவே  மூட்ட  பூச்சுக்கு பயந்து வீட்டையே கொளுத்துவது போல், வீட்டில் பார்த்தவனை மணக்க பயந்து, தானே இங்கு ஒருவனை திருமணம் செய்ய நினைத்து அதுவும்  தோல்வியில் தழுவி …நான் என்ன மாதிரியான பெண் என்று தனக்குள் மறுகியவளை…

சோனாலி … “ நீ ஒரு தப்பும் செய்யல மணி. சின்ன வயசுல இருந்தே…நீ தனியா முடிவு எடுக்காது மத்தவங்க சொல் பேச்சு கேட்டு தான் நடந்து இருக்க…

நீயா முடிவு எடுத்த விசயம்..இங்கு வந்து படித்த்து தான். அது தான் அதை காப்பத்திக்க இப்படிஎல்லாம் செஞ்சிட்ட…போனது போகட்டும். இனி நீயா யோசிச்சி நட…உன் அறிவு என்ன சொல்லுதோ அதை கேட்டு நடந்துக்க…

உன்னை மீறி யாரும்  உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அதை மனசுல நல்லா நியாபகத்துல வெச்சிக்க…”

இந்த இரண்டு  வாரம் காலமாக சோனாலி மணிமேகலையின் மனதில் பதியும் படி பேசிய பேச்சு தான் மணிமேகலைக்கு இப்போது கை கொடுத்தது.

வசுந்தராவால் என்னை என்ன செய்து விட முடியும்…?ஒன்னும் செய்ய முடியாது. என்னை பத்தி ஏதாவது சொல்வது என்றால்,சொல்லட்டும்.

நான் தப்பு செய்தால் என் மன்னிப்பை என் அப்பா அம்மாவிடம் கேட்டுக் கொள்கிறேன். அதை வைத்து என்னை இவள் ஆட்டி படைக்கலாம் என்று நினைத்தாள். இனி அவ்வளவு தான்.

இதை நினைத்து தான் மணிமேகலை அமெரிக்காவை விட்டு  கிளம்பியதே…அவளுக்கு தெரிந்து விட்டது. வசுந்தராவின் இந்த செயல் தன்னை தொடரும் என்று. இனி என்னை வைத்து உன்னால் ஒரு காரியமும் நடத்தி கொள்ள முடியாது.

என்னுடைய இந்த பயந்த சுபாவமும், வீட்டில் நான் யாரிடமும் எதுவும் பேச மாட்டேன் என்று கணக்கிட்டு தானே…நீயும் வாசுவும் என்னை வைத்து கேம் ப்ளே செய்யிறிங்க…  இனி தான் இருக்கு என்பது போல் தான் தன் பேச்சை இன்று பேசினாள்.

மணிமேகலையின் இந்த தைரியம் வீரேந்திரன் தான் தன்னை மணக்க இருப்பவன் என்று தெரிந்தாலும் நிலைக்குமா…? மணந்த பின்னும் தொடருமா…? பார்க்கலாம்.

மணிமேகலையின் பேச்சு  வீரேந்திரனுக்கும் வித்தியசமாக தான் தெரிந்தது.இருந்தும் அதை வெளிக்காட்டாது…

வாசுதேவனிடம்… “உங்களுக்கு ஷாப்பிங் செய்யனும் என்றால் செய்துக்கோங்க. நான்  மணியை ஓட்டல் அறைக்கு கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லி விட்டு மணிமேகலையை பார்த்து…

“வா போகலாம்.” என்று அழைத்தான்.

இவனோடு ஒட்டல் அறையில் தனியாகவா… என்று மணிமேகலைக்கு அவனோடு செல்வதில் கொஞ்சம் தயக்கம் ஏற்ப்பட்டது.

இந்த தயக்கம் கூட வீரேந்திரன் மீது நம்பிக்கை இல்லாது இல்லை. அவள் தன் மீது வைத்திருக்கும்  நம்பிக்கையோடு, அவன் மீது அதிகம்  நம்பிக்கை வைத்திருந்தாள்.

அப்படி இருந்தும் மணிமேகலையின் இந்த தயக்கத்திற்க்கு காரணம், சின்ன வயதில் வெட்ட வெளியில் மொட்டை மாடியில் விளையாட்டு தனமாக  செய்த செயலை வைத்தே, தன் வீட்டில் இருந்தவர்கள் அப்படி பேசி வைத்தார்கள்.

இப்போது இவனோடு அறையில் இருந்தால்…மத்தவங்க வேண்டாம். இதோ என்னையே குறு குறுன்னு பார்த்துட்டு இருக்க இந்த வசுந்தரா போதும்…

 

[the_ad id=”6605″]

 

 

 

என்னை கட்டிக்கிறவன்  கிட்ட சொல்லிடுவேன் என்று சொல்லி அவளின் மத்த காரியத்தை நடத்திக்க பார்ப்பாள். இப்படி நினைத்து அவள் தயங்கி நிற்க…

வீரேந்திரன்  மணிமேகலையின் தயக்கத்தை பார்த்து  விட்டு… “அம்மா அப்பா எல்லாம் கூட ஒட்டல் அறையில் தான் இருக்காங்க. ஓட்டல் பக்கத்தில் கூட ஜவுளி கடை. நகை கடை இருக்கு… இப்போ கொஞ்சம்  ரெஸ்ட்டு எடுத்துக்கோ…சாயங்கலாமா கூட  ஷாப்பிங் போகலாம்.” என்று வீரேந்திரன் சொன்னான்.

“அத்தை மாமா எதுக்கு வந்து இருக்காங்க.” என்று கேட்டவள்…பின் ஏதோ நினைவு வந்தவளாய்…

“ஓ உங்களுக்கும் கல்யாணம்லே…ஏதோ ஒரு நியாபகத்தில் மறந்துட்டேன்.” என்று தலையில் அடித்துக் கொண்ட மணிமேகலை, கூடவே வீரேந்திரனிடம்.. அவனின் திருமணத்திற்க்கு வாழ்த்தும் தெரிவித்தாள்.

இப்போது வசுந்தராவும், வாசுதேவனும் குழம்பி போய் பார்த்து இருந்தனர். முதலில் வசுந்தரா  தான்  அனைத்தும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவள் கடைசியில்  மணிமேகலைக்கு விசயம் தெரிந்து தன்னை திட்டியதும்..

இதுவும் ஒரு வகையில் நமக்கு நல்லது தான் என்று விட்டு விட்டாள்.’ அப்போ  கல்யாணம் என்று தெரிந்தவளுக்கு, அது யாருடன் என்று தெரியவில்லையா…?’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள் யோசனையுடன் வீரேந்திரனை பார்த்தாள்.

வீரேந்திரனும் மணிமேகலையின் வாழ்த்தில்  அவன் முகம் யோசனைக்கு சென்றது தான். ஆனால் நொடியில் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவனாய்…

“உனக்கு நீயே வாழ்த்திப்பியா…?” என்று கேட்டு விட்டு…

“வா.” என்று திரும்பவும் அழைத்தான்.

இப்போது மணிமேகலைக்கு எந்த வித தயக்கமும் இல்லை. அங்கு அத்தை, மாமா இருக்கும் போது  யாரென்ன சொல்ல முடியும் என்று நினைத்தவள் வீரேந்திரன் பின் சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!