அவர்கள் கிளம்பி போனதும் பேசியதில் மனம் ஓய்ந்து போய் ஆராதனா அப்படியே தரையில் தாத்தாவின் நாற்காலிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள்.
நடந்ததை பார்த்து எதுவுமே பேசாமல் இருந்த பராங்குசம்தம்பதியர் தங்களது அருகில் வந்து உட்கார்ந்தஆராதனாவின் தலையை பாசமாக தடவி விட்டனர்.
“பாத்தீங்களா பாட்டி..அவங்கஎப்டிபேசறாங்க..இதுவரைக்கும் எங்கமேலஅக்கறையேஇல்லாமஇருந்தவங்க.. சினிமால நடிக்க போறேன்னுதெரிஞ்சதும் ஓடி வர்றாங்க..”
Advertisement
“அவனுக்கு அப்பாவோட பிறந்த நாள் கூட நினைவேஇல்ல..எதாவது ஒரு வார்த்தை. பேசினானா..பாருங்க..வந்தான்..பொம்மை மாதிரி நின்னான்..அவங்கபோகலாம்னுசொன்னதும்..அப்படியேரோபா மாதிரி கிளம்பி போயிட்டான்..”
“எனக்கு நெஞ்சேவெடிச்சிடும் போல இருக்கு..”என சொல்லி சுசீலாவின் மடியில் படுத்து கதறி அழ ஆரம்பித்தாள்.
அவள் சற்று தெளிந்ததும் மணி “இப்ப கேட்க கூடாது தான்…ஆனா..நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துலஇருக்கேன்..மா..நீநடிக்கறதை பத்தி என்ன முடிவு எடுத்திருக்கனுசொன்னா..நான் பிரபு சார்க்கு சொல்ல வசதியா இருக்கும்..” என கேட்டான்
Advertisement
அவள் “அண்ணா..நான் ஏற்கனவே சொன்னது தான்.. இதுல யோசிக்க எதுவும் இல்ல..தாத்தா பாட்டி முடிவு தான் என் முடிவு..” என தீர்மானமாக பதில் சொன்னாள்
Advertisement
சில நிமிடங்கள் யாரும் எதுவும்பேசாமல்அமைதியாக கழிந்தது. தன் தொண்டையைகனைத்து கொண்ட பராங்குசம் “பிரபு ரொம்ப பெரிய ஆள் மா..அவரைபகைச்சுக்கறதுசரியில்ல..அதனால் அவரோட இந்த படம் மட்டும் நீ நடிச்சுகொடுத்திடு..அடுத்ததுஎன்னனு பிறகு பார்க்கலாம்..”
“அங்க நம்ம வீட்டு பொண்ணுக்கு நல்ல பாதுகாப்பாஇருக்கும்..மணி உன் கூடவே இருப்பான்..நானும் இந்த படம் முடியறவரைக்கும் உன் கூட வரேன்.. அதனாலஉங்கபாட்டிக்கும் டென்ஷன் இல்லாமநிம்மதியா இருக்கும்..” என விஷயங்களை தெளிவாக பேசினார்.
“தாத்தா..நீங்கசொல்றது தான் சரி..அப்டியேபண்ணிடலாம்..நான் கெளம்பறேன்..சார் கிட்ட பேசிட்டு என்ன விஷயம்னுசொல்லுங்க..நான் காலைலவரேன்…” என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
Advertisement
“நடந்ததை பார்த்து ஏற்கனவே மனம் நொந்திருந்தவர் “சரி..எதைபத்தியும்யோசிக்காம போய் நிம்மதியாதூங்கிட்டுகாலைல வா கண்ணு ” என சொல்லி அனுப்பி விட்டு..”மணி.. பிரபுக்கு போன் பண்ணி குடு..” என அவனை போன் செய்து தர சொன்னார்.
அவன் போன் செய்ததும் உடனே போனை எடுத்த பிரபு “சொல்லு மணி..” என்றதும் “நான் பராங்குசம்பேசறேன் தம்பி.. மணியோடஅப்பா..நீ இப்ப வேலை எதாவது செஞ்சுட்டுட்டுஇருக்கீயா..இல்லப்ரீயாஇருக்கீயா..உன் கிட்ட அஞ்சு நிமிஷம் பேசணுமே தம்பி..” என சொன்னதுமே
“சொல்லுங்க ஐயா..வீட்டுல தான் இருக்கேன்..இப்ப எந்த வேலையும்இல்ல..என் கிட்ட என்ன பேசணும்..”
“அதான் பா..எங்கஆராதனாவை நீ எடுக்கறபடத்துலஹீரோயினா நடிக்க கூப்பிட்டதா மணி சொன்னானே..அது விஷயமா தான் பேசணும்..”
“ஏற்கனவே ஒருத்தர் பாதி நடிச்சிருக்கும்போது..அவங்களைஎடுத்துட்டு அந்த இடத்துல என் பேத்தியை நடிக்க வெக்கறது உன்னோட விருப்பமா இருக்கலாம்..நம்ம சினிமா துறையில இருக்கிற சென்டிமென்ட் பத்தி உனக்கு தெரியாததுஇல்ல தம்பி… அவ இந்த ஒரு படம் தான் நடிப்பேன்னு சொல்லி இருக்கா..ஒரு வேளை தொடர்ந்து நடிச்சா..அவளை தேடி வர்ற எல்லா படமும் இதே மாதிரி பாதியிலநடிக்கற மாதிரியே வெச்சு அவளுக்கு பேரே அதே மாதிரி மாத்திடுவாங்க..”
“அதுவும் இல்லாம…அந்த பொண்ணோடபொழப்பை கெடுத்து என் பேத்தி வாழ்ந்தானு ஒரு கெட்ட பேர் அவளுக்கு வர கூடாதுனு நான் நினைக்கிறேன் தம்பி..” என தான் சொல்ல வந்ததை கோர்வையாக சொல்லி முடித்தார்.
நடுவில் குறுக்கிடாமல் எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட பிரபு அவர் பேசி முடித்ததும் “நீங்க சொல்றது எல்லாம் நியாயமா தெரியுது..ஐயா..ஆனா என் நிலையை கொஞ்சம் யோசிச்சுபாருங்க..”
“உங்க கிட்ட சொல்றத்துக்குஎன்ன..ஏற்கனவேபடத்துக்கு தேவையான பணம் எல்லாத்தையும்தன்ராஜ் சார் குடுத்திட்டாரு.. நானும் ரூபாக்கு இந்த படத்துலநடிக்கறத்துக்கு அவர் சொன்ன மாதிரி முழு பணமும் செட்டில்பண்ணிட்டேன்..”
“பாதி படம் ஷீட்டிங்எடுக்கற வரைக்கும் அமைதியாஇருந்துட்டு இப்ப இன்னும் பத்து லட்சம் குடுத்தா தான் மீதி படத்துலரூபாநடிப்பானுஅவ அம்மா சொல்றாங்க ஐயா..ரூபாவை எப்படியும் ரீச்பண்ணவேமுடியல..அவபோனேஅவங்கம்மா தான் எடுக்கறாங்க… “
“தன்ராஜ் சார் காசு விஷயத்துலகறாரானுஆளுனு உங்களுக்கு தெரியாததுஇல்ல..மறுபடியும் போய் காசு கேக்க முடியாது.. என் கிட்டயும்அவ்ளோ காசு இல்ல..நானும் ஒரு பெரிய ப்ரேக்எடுத்துக்கிட்டு தான் மறுபடியும் இந்த படத்தைடைரக்ட்பண்றேன்..”
“அவகுடுத்தகுடைச்சலை தாங்க முடியாம என்ன பண்றதுனேதெரியாம நான் தலையை பிச்சிக்கிட்டு இருக்கும் போது தான் உங்கபேத்தியைபாத்தேன்..மணி கிட்ட பேசினேன்..” என நடந்ததை தெளிவாக எடுத்துரைத்தார்.
“நான் ஒண்ணு சொன்னாதப்பாநெனக்கமாட்டீங்களே..” என பீடிகையோடுபராங்குசம்பேச..”நீங்கவயசுலபெரியவங்க..உங்கமேல எனக்கு எப்பவும் மதிப்பு அதிகம்..உங்களை நான் எங்கப்பா ஸ்தானத்துல தான் வெச்சிருக்கேன்..”
“எனக்கு தப்பாநடக்கற அளவுக்கு எதுவும் பேச மாட்டீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்குங்க ஐயா.. என்ன சொல்லணும்னுநெனக்கறீங்களோ..அதை எந்த தயக்கமும்இல்லாமதைரியமாசொல்லுங்க..”என ஊக்கம் கொடுத்ததும்..
“தம்பி..இப்ப மணி பத்தாகபோகுது.. நீங்க சிரமம் பார்க்காம..தன்ராஜ் போன் பண்ணி அவரை நேர்ல உடனே வந்து பாக்கணும்..ரொம்ப அவசரம்னு சொல்லி வீட்டுக்கு போயி இதை எல்லாம் சொல்லிடுங்க..வேற யார்மூலமாவதுஅவர்க்குதெரியறத்துக்குமுன்னால நீங்களே சொல்லிடறதுநல்லது..அவர் என்ன முடிவு எடுக்கறாரு அதுக்கு கட்டுப்படலாம்..”
“அந்தம்மா அதிக நாளா தொல்லை தரல..இப்ப ஒரு வாரம் தான் பிரச்சினைபண்றாங்கனுதெளிவாசொல்லுங்க..என்ன பணம் போட்டதால..கொஞ்சம் சத்தம் போடுவாப்பல..”
“அவர் சத்தம் போடறவரைக்கும்அமைதியாஇருங்க…அதுக்கு பிறகு என்ன பண்ணணும்னு அவர் சொல்வாரு..” என பராங்குசம் சொன்னார்
அதை கேட்டதுமே பெரிதும் மகிழ்ந்த பிரபு “ரொம்ப.. ரொம்ப சந்தோஷம் ஐயா..வேற யாராவது இருந்தா இதை பெரிய பிரச்சனை ஆக்கி இருப்பாங்க..நீங்களா இருக்கவே இதுக்கு ஒரு வழி சொன்னீங்க…நான் இப்பவே நீங்க சொன்ன மாதிரியே பண்றேன்..” என சொல்லி அவருடைய போன் காலை கட் செய்து விட்டு தன்ராஜை அழைத்து பராங்குசம் சொன்னது போல வார்த்தை மாற்றாமல் பேசி அவரிடம் அனுமதி வாங்கி கொண்டு நேராக அவர் வீட்டுக்கு போனார்.
தன்ராஜ் வீட்டுக்கு போய் சேர்ந்ததும் அவரை வரவேற்று உட்கார வைத்த தன்ராஜ் அவர் மனைவியை அழைக்க அவரும் வந்து உட்கார்ந்து கொண்டார்.
காரில் வரும் போதே பிரபு என்ன பேச வேண்டும் என யோசித்தபடிவரவே..கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் நடக்கும் விஷயங்களை அவரிடம் தெளிவாக எடுத்து சொன்னார்.
அதை கேட்டதுமே “ஏன் எங்கிட்ட நீ மொதல்லயேசொல்லல..பணம் என்ன மரத்துலயாகாய்க்குது..அந்த பொம்பளை காலைலஅப்டிபண்ணும்போதே நீ சொல்லி இருந்தா..அப்பவே கூப்பிட்டு பேசி இதை சரி செஞ்சு இருக்கலாம்..”
“இப்ப என்ன பண்றதுசொல்லு..பாதி படம் எடுத்த பிறகு அடுத்தது வேறஆளையாமாத்த முடியும்.. இது என் பேரனோட அறிமுக படம்..ஏதாவதுதப்பாநடந்தா.. அவனோட எதிர்காலம் என்னாகும்னு நீ கொஞ்சம் கூட யோசிக்கலையா..” என ஆரம்பித்து கோபமாக பிரபுவை தொடர்ந்து திட்ட எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கேட்டு கொண்டார்.
பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அவருடைய மனைவி ராஜலட்சுமி “போதுங்க..அந்த தம்பி என்ன இதை எல்லாம் எதிர்பார்த்திட்டாஇருந்தாரு..உங்க கிட்ட சொல்ல கூடாதுனுநெனச்சிருந்தா இது உங்களுக்கு தெரியவே போறதேஇல்ல..”
“ராத்திரி நேரத்துல வந்து சொல்றாருனு எவ்வளவு பதறி போய் இருந்தா இதை சொல்வாரு..” என அவரை சமாதானம் செய்தார்.
“என் கிட்ட பேசறத்துக்குமுன்னால நீ யார் கிட்டயாவதுபேசினியா..” என சரியான கேள்வி கேட்ட தன்ராஜைமனதுக்குள் பாராட்டிய பிரபு “ஆமா சார்..காஸ்ட்யூம் சப்ளையர் பராங்குசம் ஐயா கிட்ட பேசினேன்..” என்றார் (தொடரும்)