Niththirai Kalaiththa Maayaval 14
இமைகளில் கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே
நான் விறல் நீட்டினேன்
Advertisement
உன் கைய்யொடு கைசேரத்தான்
உன் உறவும் இல்லை
என் நிழலும் இல்லை
Advertisement
இனி என் காதல்
Advertisement
தொலைதூரம்தான்…..
நான் சாம்பல் ஆனாலும்
Advertisement
என் காதல் வாழும்.
அந்த சாம்பல் மீதும்
உனக்காக சில பூக்கள் பூக்கும்
வீட்டில் அனைவரிடமும் கூறி கொண்டு… கோவில் செல்வதாக கிளம்பியா இருவரையும் கண்ட வைஷு தான்… நானும் கூட வந்தேன் தீருவேன்…. என்னையும் கூட்டி செல்லுங்கள் என்று ஒரே அடம்….
இலக்கியன் சமாதானம் செய்தும் அடங்கவே இல்லை…பின் அவளை சமாதானம் செய்து… அவளை உறங்க வைத்து விட்டு கிளம்ப… வீட்டிலேயே மணி பத்தை கடந்தது….
கோவிலை அடைந்த இருவரையும்… சன்னிதானத்தில் நின்று… கடவுளை தரிசிக்க… அவர்களுக்கு எதிரே இருந்த பெண்மணிகள் அவர்களுக்குள் எதோ குசுகுசுவென பேசி கொண்டு இருக்க… அதை கவனிக்காமல் இருவரும் தங்கள் வேண்டுதலில் கவனமாக இருந்தனர்…
“கடவுளே… இன்னைக்கு இவங்க கிட்ட சொல்ல போற விஷயத்தை கேட்டு இவங்க எப்படி ரியாக்ட் பன்னுவாங்கனே யூகிக்க முடியல… எதோ ஒரு தைரியத்தில் இங்க வரைக்கும் கூட்டிகிட்டு வந்துட்டேன்… நான் கூற போவதை கேட்டு என் மேல் கோவ பட்டால் கூட பரவாயில்லை… ஆனால் என்னை பிரியும் எண்ணம் மட்டும் இவருக்கு வர கூடாது” தன் வேண்டுதல் தனக்கே ஆச்சர்யமாக இருந்தது அன்பிற்கு…
வீட்டில் இலக்கியனிடம் இவள் மேல் எதுவும் இல்லை இல்லை என்று கூறி இருக்க.. இப்போதோ மனம் உருகி இறைவனிடம் வேண்டும் போது… அனைத்தும் இவளாக வேண்டும் என்று வேண்டும் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை அன்பால்….
[the_ad id=”6605″]
அப்போ இலக்கியன் சொன்னது உண்மையா இருக்குமா? ச.. ச… அது எப்படி மீரா மேல் தானே தன்னுடைய அணைத்து காதலையும் வைத்து உள்ளோம்… அப்டி இருக்க மனம் இவளை கேட்பது ஏன் என்பது மட்டும் புரியாமலே இருந்தது அன்பிற்கு
மறுபுறமோ… “கடவுளே… வழனுன்ற ஆசையே விட்டு போனா இந்த சூழ்நிலைல போய் எனக்கு இப்டி ஒரு குடும்பத்தை குடுத்து இருக்கியே.. உனக்கே நியாமா… என்னோட வாழ்நாள் மொத்தத்துலயும் என் மேல் கட்டப்படாத அன்பை இப்போ ஒரு மாசத்துல எனக்கு மொத்தமா குடுத்து இவங்க அன்புக்கு அடிமை ஆக்கிடியே… இது நியாமா”….
“இப்போ மனசு இங்கயே… இப்டியே இவரோட மனைவியா வாழனும்னு ஆசை படுத்தே… அதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்…. மறுபடியும் ஒரு திருமணத்தை என்னால நினைத்து பார்க்க முடியுமா என்ன… இறக்கும் எண்ணம் கொண்ட எனக்கு வாழு என்று நீ கொடுக்கும் வரம் கூட சாபம் தானே உனக்கு புரியவில்லையா?”
“இறுதியாக… நான் அவர் கிட்ட சொல்லணும்னு நெனச்சி வந்து இருக்க விஷயத்தை சொல்லிடனும் ஆண்டவா.. அதில் எந்த தடையும் வராமல் பாத்துக்கோ”
புலம்பிக்கொண்டு இருந்தாள் இனியவள்….
கண் திறந்த இருவரின் கண் முன்னும் கையில் தீபாராதனையுடன் ஐயர் நிற்க.. அவர் அவர் தங்கள் பிரசாதத்தை வாங்கி கொண்டு… அங்கிருந்து திரும்ப எத்தனிக்க…
அவர்கள் முன் நின்ற பெண்களோ….
“ஏம்மா மருமகளே!இந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ஆகுது.. கழுத்துல தாலி தான் இல்லை… வேற மதம்னு பார்த்தா… நெத்தியில குங்குமம் கூடவா வெச்சிக்க மாட்ட…உங்க வீட்டு பழக்கம் என்னவோ… ஆனால் இந்த ஊருல இதெல்லாம் எதிர் பாப்பாங்க இல்லை.. இப்டி குங்குமம் கூட இல்லாமல் கோவிலுக்கு, அதுவும் புருஷன் கூட ஜோடியா வந்து இருக்க”
அவள் என்னவென்று கூறுவாள்.. பாவம்… மனம் ஒரு புறம் அழ… இவள் ஒரு புறம் வாழ என்று… போகும் திசையே புரியாமல் தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்… பேதை
அவளின் தடுமாற்றத்தை புரிந்து… ஏன் என்று தெரிந்தவனாய்….
“அது ஒன்னும் இல்லை… பெரியம்மா… அவுங்க வீட்டுல நெருங்கிய ஒருத்தர் செத்துட்டாக… ஒரு மாசம் தான் ஆகுது… மூணு மாசத்துக்கு குங்குமம் வெக்க கூடாதுனு சொல்லி இருக்காங்க… அதனால தான்” இவன் கூறிய விளக்கத்திற்கு அவர்கள் “சரிதான்” என்று சென்று விட…
அன்பும் பிரகாரத்தை சுற்ற துவங்கியவனை வியப்பாய் பார்த்து கொண்டு இருந்தவள்…
“இவனுக்கு மட்டும் எப்படி நம்மள பத்தி எப்படி இவ்ளோ நல்லா தெரியுது…. நம்மளோட பேரை கேட்காமலே அதை சொல்லிட்டான்… இப்போ அக்காவும் மாமாவும் இறந்தது இவனுக்கு எப்படி தெரியும்… அதுவும் ஒரு மாசம்னு சரியா சொல்லுறான்” அவன் பின்னாலேயே பிரகாரத்தை சுற்றி வர… எதோ தோன்ற திடீரென அவ்விடம் யோசனையுடன் நின்றவளை காணாமல் பின்னால் பார்த்த அன்போ
அவளை நெருங்கி….” என்னங்க ஆச்சு.. ஏன் நின்னுடீக… வாங்க அங்க போய் உக்காந்து பேசுவோம்” என அவளை அழைக்க.. அவளோ அவனின் கண்ணை நேரே பார்த்தவள்
“இன்னைக்கு என்னங்க தேதி” என்றாள்
“29 ஆகுதுங்க” என்றான் பொறுமையாய்
அதை கேட்டவள் அவ்விடமே அமர்ந்து அழ ஆரம்பிக்க… எதற்கு, ஏன் என்று எதுவும் புரியாத அன்போ… என்ன சொல்லி சமாதானம் செய்வது என்பது கூட புரியாமல்.. அவளை கோவிலில் இருந்த ஆலமரத்தின் அருகில் கூட்டி சென்று அமர் வைத்தான்…
அப்போதும் அவளின் அழுகை நின்ற பாடில்லை… அங்கு இருந்த அனைவரும் அவர்களையே பார்க்க… அன்பிற்கு தான் சங்கடமாக போனது….
“என்னங்க இப்டி அழுகுறீங்க? எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க… என்னனு சொல்லிட்டு அழுத்துக்கோங்க” கெஞ்சி கொண்டு இருந்தான் அன்பு
அவனின் நிலை அவளுக்கு புரியாமல் இல்லை… ஆனால் அவள் என்ன செய்வாள்… அவளையே நொந்து கொண்டு அழுவதை தவிர வேறு வழி இல்லையே அவளுக்கு…
அவள் அவளின் வாழ்வின் அணைத்து சந்தோஷத்தையும் இழந்தது இந்த நாளில் தானே… வீட்டிற்கே இளவரசியாய்… துள்ளும் மங்கையாய்… வீட்டின் செல்ல பிள்ளையாய் இருந்த அணைத்து சுகங்களும்… அக்கா மாமாவின் ஈடு இணை இல்லாத அன்பும்… இல்லாமல் போனது இன்று தானே…
இந்த நாளை எப்படி மறந்தேன்… அதுவும் அவை நடந்து முடிந்த இரண்டே மாதத்தில் எப்படி மறந்தேன்… என்று தன்னையே நொந்து கொண்டு தான் இருந்தாள் அவள்.. அதன் அழுகை தான் இது….
[the_ad id=”6605″]
அன்பை பார்த்தவள்… இவன்… இவனும் இவனின் குடும்பமும் தான் இதற்கு காரணம்… அளவில்லாத அன்பை காட்டி… என்னை கோழையாக்கி…. அக்கா மாமாவையும் மறக்கும் அளவிற்கு இன்று நான் இருப்பதற்கு காரணம் இவர்களின் அன்பு தான்… இதோ இவன் மேல் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு தான்… வைஷு கூட தன் அம்மாவை இப்பொது எல்லாம் தேடுவது இல்லையே….
தனியே பார்த்து கொண்டு பேசாமல் இருப்பவளை… தோல் தொட்டு உலுக்கியன்… “வாங்க… நாம இங்க இருந்து போகலாம்…. அங்க பக்கத்துல கோவிலுக்கு எதிர்ல ஒரு இடம் இருக்கு….அங்க போகலாம்…
அவன் கூறி விட்டு முன் நடக்க… இனி தாமதிப்பது தனக்கும் வைஷுவிற்கும் சரியாக இருக்காது என்று புரிந்து கொண்டவள்… இன்று இவனிடம் அனைத்தையும் கூறி விட வேண்டும்… என்று முடிவுடனே பின் சென்றாள்
அங்கு சென்று ஒரு இடம் பார்த்து அமர்ந்தவர்கள்… யார் முதலில் பேசுவது என்ற குழப்பத்தில் இருவரும் இருக்க…
அன்பு எதோ பேச எத்தனிக்கும் போதே…
“எனக்கு உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்? ஒரு உதவி வேணும்னு தான் சொல்லணும்…செய்வீர்களா? ” தயங்கிய படி கெட்டவளை குழப்பத்துடன் பார்த்த அன்பு… “சரி” என தலை அசைக்க
“இங்க வீட்டுல இருக்கவங்க கிட்ட எப்படியாச்சும் உண்மையை சொல்லி என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லி… என்னையும் வைஷுவையும் இங்க இருந்து அனுப்பி வெச்சிடுறீங்களா?” கேட்டு விட்டான் அன்பு.. .. தான் கேட்கவே கூடாது என்று வேண்டிய வார்த்தைகளைளை…
மேலும் தொடர்ந்தவள்…..
“இதுக்கு மேலும் நான் இங்கு இருந்தாள்… உங்களுக்கும் எனக்கும் நல்லதாக இருக்காது… எப்படியாவது என்னை மதுரைக்கு அனுப்பிடுங்க… அங்க என்னோட தோழி கிட்ட போயிடுறேன்” முடித்தவளை கண் இமைக்காது பார்த்து கொண்டு இருந்தான் அன்பு….
நீங்க எதோ பேசணும்னு சொன்னீங்களே? அவனுக்கு நினைவு படுத்தினாள் இனியவள்…
“அவன் கூற தான் ஆசை படுகிறான்… துக்கம் தான் தொண்டையை அடைத்து கொண்டு வார்த்தையை வெளியே வர விடாமல் தொண்டையை அடித்து கொண்டு இருக்கிறது… உள்ளே அழுகின்ற மனதில் இவளிடம் எப்படி காண்பிப்பது” துடித்து கொண்டு இருந்த அன்பின் முகத்தை உரசி கொண்டு அவன் எதிரில் இருந்த இனியவளை தாக்க கூர்மையான கத்தி ஒன்று அவனை கடந்தது…
கத்தியின் வேகத்தை விட.. அங்கு நடப்பவற்றை புரிந்து கொண்ட அன்பு… இனியவளின் முகத்திற்கு நேரம் எதிரே… அவளின் கண் விழிக்கு மிகவும் அருகில் இருக்கும் போது அந்த கத்தியை பிடித்தவன்… அது அவளை காய படுத்தாத வகையில் அதை பின்னுக்கு எடுத்தவன்…
அப்போது தான் கவனித்தான்… கோவிலுக்கு பக்தர்கள் என்று வந்தவர்கள் சிலர் தங்களை தாக்க வந்த ஆட்கள் என்று…
எழுந்து நின்று.. இனியவளை தன் முதுகிற்கு பின் நிற்க வைத்து… அவளை பாதுகாத்தவன்….
தன்னை சூழ்ந்த ஆட்களை ஒரு பார்வை பார்த்தவன்… தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவர்களை தொம்சம் செய்ய தயரானவன்… இனியவளை பாதுகாப்பதில் ஒரு கண்ணுடனே இருந்தான்…
முதலில் மூவர் முன் வந்து அறிவாளுடன் அன்பை தாக்க… நின்ற இடத்திலேயே அவர்கள் முறையும் அடித்து சாய்த்தான்….
பின் ஒருவன் கட்டையுடனும் காம்புடனும் அவனிடம் நோக்கி வர… இரண்டடி முன்னே வந்தவன்… கட்டையுடன் வந்தவனை அவனின் வயிற்றை பற்றி தூக்கி… கம்புடன் வந்தவன் மேல் தூக்கி போட… இருவருக்குமே உடல் நடுங்கி.. அவ்விடம் எழவும் வலிமை இன்றி… அவ்விடமே விழுந்தனர்…
முன்னேறி வந்து வந்து… அங்கு இருப்பவர்களை அடித்து துவைத்து கொண்டு இருந்தான் அன்பு…
[the_ad id=”6605″]
பல அறிவால்கள்….. பல கம்புகள் அங்கு கீழே விழுந்து கிடக்க.. அன்பு ஒருவனை அடித்து கொண்டு இருக்கும் போது… பின்னால் இருந்து ஒருவன் அவனை அரிவாளால் தாக்க முயற்சிக்க… சிறிது தப்பினாலும்… அறிவாளின் முனை அவனின் தோள்பட்டையை பதம் பார்த்தது….
தாக்கியவனை துரத்தி கொண்டு அன்பு ஓட.. அவனோ பக்கத்தில் இருந்த வயலில் இறங்கி ஓட துவங்குபவானை…..அவன் வேகத்திற்கு ஓடி அவனை அடித்து… அதே வயலில் போட்டு விட்டு வரும் போது…. அவனை தாக்க வந்த அனைவரும் கீழே விழுந்து கிடக்க…
அவன் பாதுகாத்த இனியவாளோ அங்கு இல்லை… அவள் கையில் இருந்த பூக்கூடையும் கீழே சிதறி கிடக்க… கண் அசரும் நேரத்தில் அவள் கடத்த பட்டாள் என்பது மட்டும் புரிந்தது அன்பிற்கு…
அன்று கண்ணிற்கு தெரியாமல் இருந்த உன்னை தொலைக்க வைத்த விதியோ… இன்று இவளை பாதுகாத்தே இருக்கும் போது துளைக்க வைத்ததை நினைத்து தனையே நொந்து கொண்டான்…
அங்கு அக்கம் பக்கம் இருக்கும் அனைவரையும் விசாரிக்க… முகமூடி அணிந்து இருந்த யாரோ நால்வர் அவளை இழுத்து கொண்டு காரில் போனதாய் கூறினார்…
எல்லாம் புரியும் நேரத்தில்….. எதையும் புரியாமல் தொலைத்து விட்டேனே என்று அழுதது அவனின் மனம்….
இவனின் மனம் குமுறி கொண்டு இருக்க… சுற்றம் பக்கம் பார்க்காமல்… தன்னை சுற்றி நடப்பது தெரியாமல், புரியாமல்….. அவன் நடு வீதியில் நின்று கொண்டு இருக்க…
எதோ ஒரு சத்தம் கேட்டு… அவ்வழி வந்து கொண்டு இருந்த சரக்கு லாரியை அவன் கவனிக்கும் முன்… அது அவனை நெருங்கி.. தன்னுள் இழுத்து கொண்டது….
மாயம் தொடரும்…….
