Skip to content
Post Views: 374
“செல்லம் இன்னைக்கு காலேஜ் லாஸ்ட் டேட் இதுக்கு அப்புறம் டெய்லி உன்னை பார்க்க முடியாது டா. இனி நினைச்ச நேரம் எப்படி உன் பக்கத்துல வந்து உட்கார்ந்து உன் கைய புடிச்சுக்க முடியும். உன்ன ரொம்ப மிஸ் பண்னுவேன் டா” என்று விழியின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டு வருத்தமாக பேசினான் அன்பு.
“ஏய் என்னப்பா நீ இதுக்கு போய் பீல் பண்ற இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சி நாமதான் மேரேஜ் பண்ண போறோமே அதோட ரெண்டு பேரும் பக்கத்துல தானே இருக்கப் போறோம் நெனச்ச உடனே பாக்குற தொலைவு தான் அப்புறம் என்ன” என்று அவனை சமாதான செய்தாள் விழி
“என்னை நீ இவ்ளோ ஈஸியா சொல்ற உன்ன பாக்காம என்னால கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது தெரியுமா. அதோட என்ன நீ அஞ்சி வருஷம் கழிச்சி மேரேஜ் பண்ணலாம்னு சொல்ற நோ வே அவ்ளோ நாள் என்னால வெயிட் பண்ண முடியாது”
“அப்ப எப்ப மேரேஜ் பண்ணலாம்னு சொல்ற இப்ப நமக்கு வெறும் இருபது வயசு தான் ஆகுது இப்பவே கல்யாணம் பண்ணி என்ன செய்ய. அதோட எனக்கு நிறைய கனவு இருக்கு அதெல்லாம் நிறைவேற்றின பிறகு தான் நான் மேரேஜ் பத்தி யோசிக்க முடியும் ”
Advertisement
“என்னடி புதுசு புதுசா என்னென்னமோ சொல்ற என்னால உன்ன பிரிஞ்சி ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது நெஸ்ட் இயர் லாஸ்ட் குள்ள ஒரு நல்ல வேலையில ஜாயின் பண்ணிட்டு உங்க வீட்ல வந்து பேசி மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன் தெரியுமா”
“என்ன ஒன் இயர்லயா சான்சே இல்லப்பா”
“செல்லம் அப்படியெல்லாம் சொல்லாத அடுத்த வருஷம் நம்ம மேரேஜ் பண்றோம். அதுக்கு அடுத்த வருஷம் உன்ன மாதிரி வெள்ளையா குள்ளமா ஒரு பேபி டால்ல புரொடிஸ் பண்றோம் சரியா குட்டிமா”
Advertisement
“என்ன பேபியா சான்சே இல்லப்பா நானே பேபி தான் நீ எனக்கு ஒரு பேபி தரலான்னு பார்த்தியா டூ ஸ்டெப் தள்ளியே நில்லு. பக்கத்துல வந்த கொன்றுவேன் டா”
Advertisement
“ஏய் செல்லம் குட்டிமா நீ சொன்னேன்ல உனக்குன்னு ஒரு கனவு இருக்குனு அதே மாதிரி இது என்னோட கனவு”
“ஏது இதுவா உன் கனவு ஆள பாரு”
“ஏய் அது இல்லடி நீ எப்படி உங்க அப்பாவை யாருகிட்டயும் விட்டுக் கொடுக்காம அவர் மேல உயிரா இருக்கியோ அதே மாதிரி என்னோட பொண்ணும் என் மேலே உயிரா இருந்து என்னை யாருகிட்டயும் விட்டுக் கொடுக்காம இருப்பால்ல. அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பெயர் கூட செலக்ட் பண்ணிட்டேன் தெரியுமா” என்றான் உற்சாகமாக
Advertisement
“ம்… நல்ல கனவு தான் சொல்லு பாப்போம். அப்படி என்ன பேரு செலக்ட் பண்ணி இருக்கீங்கனு” என்றாள் கிண்டலாக
“அதுவா மான்விழி எப்படி இருக்கு” என்றான் அவள் முகத்தை பார்த்து எதிர்பார்ப்புடன்
“ஏய் என்ன இதுலையும் எங்க அப்பாவ காப்பி அடிக்க நீ”
“போடி என் மாமனார் தானே நான் காப்பி அடிச்சா அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு நீ சொல்லு எப்படி இருக்கு குடும்ப தலைவன் அன்பரசன், தலைவி இமைவிழி அன்பரசன், குழந்தை மான் விழி அன்பரசன் சூப்பர்ல” என்றான் எதிர்கால கனவோடு
அன்று அவனின் அந்த பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தவள் இன்று அதே பேச்சை கேட்கும்போது தன்னை உயிரோடு தணலிட்டது போல உணர்ந்தாள். எப்படி இவனால் ஒன்றும் நடக்காதது போல் தன்னிடம் அதே வார்த்தையை சொல்ல முடிகிறது அதுவும் தன் கண்களைப் பார்த்து அவன் மேல் ஒரு தவறும் இல்லாதது போல் அல்லவா பேசுகிறான். முதலில் எப்படி இவனால் தன்னிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேச முடிகிறது. இப்படி பேசும் அவனை எதுவும் செய்ய முடியாத தன்மீதே அவளுக்கு கோபம் வந்தது. அவளின் அந்தக் கோபத்தை அப்படியே இவனின் பேச்சை கேட்க தன்னை அழைத்து வந்தவன் மீது திரும்பியது.
அதுவரை அன்பின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று திரும்பி தன்னை முறைத்து பார்த்ததும் ஜெர்க்கானவன், “எங்க அவர் கல்யாணப் பண்ணி குழந்தை பெத்து பெயர் வச்சதுக்கு என்னை ஏங்க முறைக்கிறீங்க” என்று தனது அருகில் நின்றவளின் காதில் குனிந்து கேட்டான்.
அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மீண்டும் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“நான் செவனேனு தான்ங்க நிக்கேன். என்ன போய் எதுக்கு முறைக்கிறீங்க. நான் வேற எங்க அம்மாவுக்கு ஒரே பையன் தெரியுமா” என அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக புலம்ப
அதில் கடுப்பானவள், “யோவ் அது என்ன எப்ப பார்த்தாலும் எங்க அம்மாக்கு நான் ஒரே பையன் சொல்கிறீங்க. நான் மட்டும் என்ன பத்து பேர் கூடவா பொறந்தேன்” என்று அவன் மீது உள்ள கோபத்தை அப்படியே இவனிடம் காட்டினாள்.
“ஏங்க இப்படி டென்ஷன் ஆகுறீங்க. அதிகமா டென்ஷன் ஆனா சீக்கிரம் கெளவி ஆயிடுவீங்க தெரியுமா”
“என்ன நான் கிழவியா. என்னை நல்லா பார்த்து சொல்லுங்க நான் கிழவி மாதிரியா இருக்கேன்”
“யாரு சொன்னா கண்ணு இருக்கிறவன் யாரவது உங்கள பாத்து கிழவின்னு சொல்லுவானா. நல்லா மெத்து மெத்துன்னு ரோஸ்பட் மாதிரி இருக்கீங்க” என்று அவளை ரசித்துப் பார்த்து சொன்னான்.
அவன் பேச்சை கேட்டு முகம் சிவந்தவள் பொய்யாக அவனை முறைத்துப் பார்த்தாள். வெட்கத்தில் சிவந்த அவளின் முகத்தை ஆசையாக பார்த்து, “உன் இமைக்குள்ள இந்தக் கண்மணியே வச்சுக்க ரெடியா ஸ்வீட் ஹார்ட்” என்றான் உயிரை உருக்கும் பார்வையுடன் ஆழ்ந்த குரலில்
அவனின் அந்தப் பார்வையால் சுற்றம் மறந்து அவன் கண்களையே நோக்கி இருந்தவளை வெறுமையாக பார்த்து நின்றான் அன்பு.அவனுக்கு இவர்கள் இருவரையும் ஜோடியாக பார்க்க உள்ள ஏதோ செய்தது. அவர்களை இப்படி பார்க்க முடியாமல் அவர்களின் இந்த நிலையை எப்படி களைக்க என்று குழம்பிக் கொண்டு நின்றவனுக்கு உதவி செய்வதுபோல், “மாப்ள நாங்க எல்லாரும் இங்கதான் இருக்கோம் அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள போகுது எங்களுக்கும் சொன்னா நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்”என்றான் பிரதாப்
“அது ஒன்னும் இல்ல மச்சான் உங்க தங்கச்சி ஏன் இவ்வளவு குள்ளமா இருக்கான்னு கேட்டுட்டு இருந்தேன்”
“ஏன் என் தங்கச்சிக்கு என்ன அவ கரெக்டான ஹைட்ல தான் இருக்கா. நீங்கதான் ரொம்ப உயரமாக வளர்ந்து இருக்கீங்க”
“யாரு நான் நல்ல வளர்ந்து இருக்கனா உங்க தங்கச்சி பக்கத்துல யாரு நின்னாலும் அவங்க வளர்த்தியா தான் தெரியுவாங்க” என்று விழியை கலாய்த்தான்.
“யாரு நான் குள்ளமா இருக்கேனா நீங்கதான் நெட்ட கொக்குக் மாதிரி வளர்ந்து இருக்கீங்க” என்று சீறினாள் விழி.
“யாரு நான் நெட்ட கொக்கா நீ தான் குள்ள வாத்து”
“யாரு நான் குள்ள வாத்தா” என்று அவனை சீறி கொண்டு முறைத்தாள்.
“ஐயோ எதுக்கு சண்டை போடுறீங்க இரண்டு பேருமே கரெக்டா தான் இருக்கீங்க. என்ன மாப்ள ஆக்டர் ராணா மாதிரி ஹைட்டா இருக்காரு. என் தங்கச்சி ஸ்ரீதிவ்யா மாதிரி குள்ளமா இருக்கா. ஆனா ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் க்யூட்டா இருக்கு போதுமா” என்று அவர்களின் சண்டையை முடித்து வைக்க பார்த்தான் பிரதாப்.
“மச்சான் நீங்க சொன்னது ஒரு விதத்துல கரெக்ட்டு தான் நான் ராணா மாதிரி ஹைட்டா பிட்டா கரெக்டா தான் இருக்கேன். ஆனா உங்க தங்கச்சி எந்த ஆங்கில்ல இருந்து பார்த்தாலும் ஸ்ரீதிவ்யா மாதிரி இல்லையே” என்றான் விழியை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு
செலின் விழியை அப்படி பார்ப்பது பிடிக்காமல், “போதும் உங்க பேச்சி. வெளியவே நின்னு இன்னும் எவ்வளவு நேரம் பேச போறீங்க வாங்க வீட்டுக்குள்ள போவோம்” என்றான் அன்பரசன்.
“மாப்ள சில பேருக்கு வயிறு கபகபன்னு இப்ப எரியும்” என்று கிடைத்த கேப்பில் அன்பை கலாய்த்து விட்டு, “என்னதான் சொல்லுங்க நீங்க வேற லெவல் போங்க என் தங்கச்சியோட செலக்சன் என்னைக்கும் தப்பா போகாதுன்னு நிரூபிச்சிட்டா”
“ஏன் அப்படி சொல்றீங்க” என்றான் சிரிப்புடன்
“என் தங்கச்சியோட முகம் லேசா வாடுனாலும் என்னென்னவோ பேசி அவள அஞ்சு நிமிஷத்துல சரி பண்ணிடீங்க. இப்படி எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற வாழ்க்கை துணை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அது உங்க மூலமா என் தங்கச்சிக்கு கிடைக்கப் போகுது. என் தங்கச்சி ஒரு வைர மாதிரி அவளோட அருமை இங்க சில பேருக்கு தெரியவே இல்லை. நீங்களாவது கைல கிடைச்ச வைரத்தை பத்திரமா வச்சு பாதுகாப்பீங்கன்னு நம்புறேன்” என்றான் உருக்கமாக.
“என்ன மச்சான் இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்க தங்கச்சி வைரம்னு எனக்கு நல்லாவே தெரியும் அந்த வைரத்தை எப்படி பாதுகாக்கணும் எனக்கு தெரியும். பீல் பண்ணாதீங்க மச்சான் எல்லாம் சரியாயிடும்” என்றான் ஆறுதலாக
“உங்களுக்கு என்னோட வலி புரியாது மச்சான். சிலர் கையில் கிடைச்ச வைரத்தை தொலைச்சிட்டு இப்ப கையில இருக்க தங்கத்தை எப்படி பாதுகாக்கணும் சுத்தமா தெரியல” என்று அன்பை மறைமுகமாக குத்தி காட்டிவன், “நான் ஒருத்தன் தேவையில்லாம உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் பாத்தீங்களா வாங்க உள்ள போவோம். நீங்க மாமா கிட்ட வாங்கடா செல்லம் ” என்று அன்பின் கையில் இருந்த குழந்தையை வாங்கி அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
தன்னை கொஞ்சமும் மதிக்காமல் மறைமுகமாக தாக்கி விட்டு செல்லும் பிரதாப் மற்றும் செலினை முறைத்து பார்த்தவன் அப்போதுதான் அவனுக்கு ஒன்றும் புரிந்தது வந்ததிலிருந்து தன்னிடம் செலினை அறிமுகப்படுத்தியதை தவிர வேறு எதுவும் பேசாமல் சென்ற விழியை கண்டு கொண்டான்.
“ஐயோ கடவுளே என்ன ஏன் இப்படி கஷ்டப்படுத்துற. நான் என்ன மாதிரி பிரச்சினையில மாட்டுனேன்னு இவளுக்கு எப்படி புரிய வைப்பேன். சாரி விழி ஒன்ன தேவை இல்லாம கஷ்டப்படுத்திட்டேன். ஐ அம் சாரி விழி. இது எல்லாத்துக்கும் காரணமான உன்ன சும்மா விடமாட்டேன் டி” என்று இன்னும் தனது தவறை உணராமல் அடுத்தவரின் மீது போட்டுக் கொண்டிருந்தான். தனக்காக தானே பேசாத போது அடுத்தவர்கள் எப்படி தனக்காக பேசுவார்கள் என்பதை மறந்து போய் இருக்கும் அவனுக்கு காலம்தான் பதில் சொல்ல காத்திருக்கிறது.
இங்கே உள்ளே சென்றவர்களை, “அண்ணி” என்ற அழைப்போடு விழியை நோக்கி ஓடி வந்த அன்புவின் குட்டி தங்கையை பார்த்து, “பேமிலி மொத்தமும் ஒரு மார்க்கமா தான் சுத்திட்டு இருக்கும் போல” என்று தனக்குள் புலம்பியவன் திரும்பி விழியை பார்த்து, “போச்சுடா இவளுக்கு வேற வேலையே இல்ல எப்ப பார்த்தாலும் ஷாக்காயின் நிப்பா. இவள வேற மலை இறக்கணுமா” என்று மேலே பார்த்து புலம்பியவன் பக்கத்தில் ஏதோ நிழலாட திரும்பிப் பார்த்தவன் “ஐயோ பேய்” என்று கத்தி விட்டான்.
error: Content is protected !!