Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 22 1

 

மழைத்துளி 22

 

அன்று மாலை தன் நண்பனான ஆற்றங்கரை பிள்ளையாரை லதாவுடன் சென்று தரிசித்து வந்த வரு , இரவு எப்போது வரும்  என்று மணிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அழகிய சில்க்காட்டன் புடவையில் அப்போதுதான் கோவிலுக்கு போய் வந்த அடையாளமாக நெற்றி நிறைய குங்குமத்துடன் இருந்தவளிடம் சங்கரி பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.



Advertisement

 

காலையிலயே ஃபோன் செய்திருந்தான் ஆதி , இரவு பத்து மணிக்கெல்லாம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து விடுவேன். எப்படியும் பனிரெண்டு மணிக்கெல்லாம் வீடு வந்து விடுவேன் என்று. அதனாலயே வருவின் இந்தக் காத்திருப்பு .நேரம் ஆக ஆக பெரியவர்கள் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டதால் நேரத்தோடு உறங்கச் சென்று விட, லதாவும் பரணியும் ஏதோப் பேசிக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்தனர்.

 

Advertisement

அவர்கள் இருவரும் சோர்வாகத் தெரிய , இருவரையும்  உறங்கச் சொன்னவளிடம் , லதா

Advertisement

 

“நீயும் போய் படுமா வந்ததும் ஃபோன் பண்ணுவான்.. ” என்று விட்டு அறைக்குள் சென்று விட்டார்.

 

Advertisement

அதே நேரம் சண்முகம் கார் ஓட்ட அருகில் அமர்ந்து தங்கள் ஊரின் அழகை இருளில் ரசித்துக் கொண்டே வந்தான் விக்ரம். இன்னும் ஓர் அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்து விடலாம்.உடல் மனம் இரண்டும் மனைவியைத் தேட அவளின் நினைவில் முகத்தில் புன்னகை தானாக ஒட்டிக் கொண்டது.

 

” சின்னவரே….. என்ன பொஞ்சாதி ஞாபகமா…”

 

“அங்கிள்…. நீங்க பெரிய ஆள் தான் போங்க….” எனச் சிரித்தவனிடம் ,

 

“பின்ன அந்த வயசு கடந்து தானப்பு நானும் வந்தேன்…” இப்பொழுது அவர்கள் ஊர் செல்லும் சாலையில் திரும்பி , அந்த ஆற்றுப்பாலத்தை கடந்தது கார் .அதுவரை இருந்த இலகுவான மனநிலை காணமல் போனது போலாகிற்று விக்ரமிற்கு, நான்கு வருடங்களுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது புதுப்பித்துக் கட்டியதால் பார்க்க அழகாக இருந்தது.

 

“என்ன சின்னவரே பாலத்தை இப்படி பாக்கீக … இத புதுசாக்கிறதுல நம்ம வீட்டுப் பங்கு அதிகம்… அதும் அப்ப உங்கள ஊருக்கு அழைச்சிட்டுப் போகும் போது ரெண்டு மூணு பேரு சாகக் கிடந்தானுகனு நாம தானய்யா ஆம்புலன்ஸ் வரச் சொன்னோம். அவனுகளால பேச நடக்கவெல்லாம் முடியலயாம் .. போலீஸ்ல அவனுக ஒன்னும் சொல்லல அப்புறம் என்ன அவனுக கம்பெனிகாரனே கூட்டிட்டு போயிட்டான் போல…. அதுலருந்து உங்கப்பாரு இதுல கேமரா வச்சி கட்டிக் கொடுத்துருக்காரு…. பொது இடம் எல்லாம் … யாரும் எவனும் தப்பிக்க முடியாதுல….”

 

கேட்டுக் கொண்ட விக்ரம் சிரித்துக் கொண்டான். இதற்கெல்லாம் திட்டம் போட்டுத் தந்ததே அவன் தானே…. அவர்கள் பங்களிப்பு என்பதைக் காட்டிலும் அவனது பங்களிப்பு அதிகம் என்பது தான் உண்மை…..எத்தனைக் கோடிகளில் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கிறான். அவன் பூர்விக இடத்திற்கு , உறவுகளுக்கு இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி.

 

“ஓ…. ” எனக் கேட்டுக் கொண்டான். அவர்கள் கோவிலை நெருங்க , வண்டியை நிறுத்தச் சொன்ன விக்ரம் ,

 

“அங்கிள் நீங்க வீட்டுக்கு கிளம்புங்க .. ” என்றவன், காரிலிருந்து ஒரு பையை எடுத்துக் கொடுத்து ,

 

“இது தங்கச்சி குழந்தைக்காக வாங்கினேன்…. இப்போதான் நீங்களும் தாத்தா ஆனிங்கனு தெரியும் .. இது எடுத்துட்டுப் போங்க ” என்றவன் கையிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் ஒரு ஐந்தை எடுத்துக் கொடுக்க , அவர் மறுக்க மறுக்க கையில் வைத்து அனுப்பினான்.

 

இப்போதும் கோவில் முன்பு அலங்கார விளக்குகள் எல்லாம் போடப்பட்டு இருந்தது. இன்னும் ஐந்து நாட்களில் பொங்கல் விழா ஊரில் களைகட்டும் ,அதனாலயே இந்த அலங்காரங்கள். கோவில் முன்பு சிறிது நேரம் விழிகளை மூடி நின்றவன் , கடைசி முறை வருகையில் திலீபன் அந்த நேரம் அவனுக்காக காத்திருந்ததை நினைவுக் கூர்ந்து , அவனுக்கு அழைத்து விட்டான்.

 

“ஏய் மாப்ள என்னடா இந்நேரம் கூப்பிடுற … ஊருக்குப் போய்ட்டு இருக்கேன்னு சொன்ன … ”

” ஊர்ல நம்ம கோவில் முன்னாடி நிக்கிறேன் …நீ ஸ்பெஷல் கரகாட்டம் பார்க்க வெய்ட் பண்ணிட்டு இருந்த இடத்துல …..”

 

“ஷ் …. வெளிய சொல்லாதடா அப்புறம் ஊருக்கு வந்ததும் உன் தங்கச்சி அனுப்ப மாட்டா…. ஆமா வீட்டுக்கு சீக்கிரம் போகாம இங்க என்ன இன்னும் பண்ற ….”

 

” அடங்குறியா நீ…. ” எனச் சிரித்த விக்ரம் ,

 

“பழைய நினைவுகள் ….ரெடியாகிட்டியா … என் மருமகனுக்கு பெயர் வைக்கப் போறாங்களாம் …பெரிய ஏற்பாடு எல்லாம் நடக்குது….” என்றவாறே காரை எடுத்தவன் வீட்டின் முன்பு வந்து தான் ஃபோனை வைத்தான்.இவன் கார் சத்தம் கேட்கவுமே கதவு திறக்கப்பட , அழகோவியமாக நின்றுக் கொண்டிருந்த மனைவியை அள்ளிக் கொள்ள ஆசைப் பெருக , பொருட்களைக் கூட எடுக்காமல் வேகமாக படியேறி அவளருகில் வர , வருவின் உதடுகள் துடிக்க , விழிகள் மகிழ்ச்சியில் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது.

 

அவன் கைகள் அவளை அணைக்க எழ ,பின்னிருந்து சங்கரி பாட்டி வந்தவர் ,

 

” எய்யா …. வந்துட்டியா … ” என்று அவனருகில் வந்து நின்றுக் கொண்டு அவன் கைப்பிடித்து உள்ளே அழைத்து வர , உள்ளே பேசிக் கொண்டிருந்த லதாவும் பரணியும் வெளியே வந்தனர். அதுவும் பரணி லதாவிடம் ,

 

“அக்கா பிள்ளை வந்தது நமக்குத் தெரியாமையா இருக்கு. புதுசா கல்யாணம் ஆன பிள்ளைங்க ரொம்ப நாள் கழிச்சு பார்க்குதுகளேனு நாம ஒதுங்கி இருந்தா , இந்த அத்தை இருக்காகளே…. கொஞ்சமாச்சும் யோசனை வேண்டாம்….”

 

சிரித்த லதா , “ஷ் பரணி கேட்டுறப்போகுது… வாப் போகலாம்…” என்றவாறு மகனிடம் சென்றார்.

 

” கேட்டா கேட்டுட்டு போகட்டும்…. “என்றவாறு அவரும் பின் தொடர்ந்து சென்றார். அவருக்கு தாய்மாமன் மனைவி என்பதால் சங்கரியிடம் சலுகை கொஞ்சம் அதிகமே.

 

விக்ரமிற்கு தன் குடும்பத்தார் தன் மீது வைத்திருக்கும் அன்பு அறிந்தது தான் என்பதால் சுற்றிலும் நின்றவர்களுக்கு பதிலளித்தாலும் பார்வை மனைவியைத் தொட்டு தொட்டு மீள ,

 

பரணி சங்கரியிடம் வந்து , “அத்தை பேரன் பொங்கல் முடிஞ்சுதான் கிளம்புவான் , நாளைக்கு பொறுமையா பேசலாம்…” என அழைத்துக் கொண்டு செல்ல ,

 

“அமிர்தா மா தோசை மாவு கரைச்சு வச்சுட்டேன் .. நீ பார்த்துக்கிறியா… நான் போய் படுக்கிறேன்.” என அவரும் சென்று விட , அவள் பின்னோடு வந்த சங்கரி , சமையல் மேடை ஓரமாக இருந்த பாத்திரத்தை வருவுக்குச் சுட்டிக்காட்டி ,

 

” அறைக்கு போகும் போது அதை சூடு பண்ணி எடுத்துட்டுப் போம்மா…. நான் அப்பவே போட்டு வச்சுட்டேன் …” என்றவர் , தன் புடவை முந்தானையில் பொதிந்திருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து ,

 

“என் பேரன் கூட நூறு வருஷம் சந்தோஷமா குடும்பம் நடத்தி , இந்தக் குடும்பத்து வாரிசுகளை  நல்லபடியா சுமக்கணும் தாயி… உன் மாமியக்கள  நான் இப்படி கவனிச்சதில்ல …ஏன்னா அவளுகளுக்கு எடுத்துச் சொல்ல , கவனிக்க அவங்கள பெத்தவ இருந்தாங்க…. உனக்கு அப்படியில்லயே தாயில்லாத குறையே எம்பேத்தியாளுக்கு வரக்கூடாது” என்று விட்டு வெளியேறினார்.

 

வரு பாட்டியின் வார்த்தைகளில் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லோரையும் அதட்டி உருட்டி வேலை வாங்குபவர் இப்படிப் பேசுவது…. புன்னகைத்துக் கொண்டவள் , விக்ரமுக்கு தோசை வார்க்க ஆயத்தமாக ,

 

திடீரென்று பின்னிருந்து ஒரு இறுக்கமான அணைப்பும் , கன்னத்தில் அழுத்தமான முத்தமும் தரப்பட , உடல் நடுங்க அப்படியே நின்றவளை விட்டு விட்டு சமையலறை வாசல் வந்தவன் ,

 

” எடுத்துட்டு மேல வா…” என்றவன் படியேறப் போக ,தாத்தாப் பார்த்து விட்டார் .அவனைப் பிடித்து வைத்து அவர் அன்பைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.

 

தோசைக் கரண்டியில் கை வைக்க, கிடுகிடுவென நடுங்க ஒரு வித பரவசத்திலயே வார்த்தெடுத்து உணவுகளை ஒரு பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு அமிர்தா அறைக்கு வந்து விட்டாள்.

 

சிறிது நேரம் அவன் வரவிற்காக கட்டிலில் அமர்ந்தவள், அவனது அணைப்பையும் முத்தத்தையும் கண்ணுக்குள் கொண்டு வந்து அப்படியே படுத்துக் கொண்டாள். அவளாக அவனை அணைத்த போது வராத தாபமும் ஏக்கமும் இப்போது உடலையும் மனதையும் ஏதோ செய்ய இரு கைகளையும் கூப்பி கண்ணமடியில் வைத்து உடலைக் குறுக்கி படுத்துக் கொண்டாள்.

 

பேரனின் முகம் பார்த்தவர் எழுந்துக் கொண்டே ,

 

“பேரா , காலையில கிளம்பி டவுனுக்கு போற வேலையிருக்கு , அப்படியே அம்பைக்கு போய்ட்டு நைட் தான் வருவோம்.அதுவரையிலும் வீட்டையும் , பேத்தியையும் கவனிச்சுக்க ….” என்று விட்டு அறைக்குள் சென்று விட்டார்.

 

அவர் சொன்னதில் முகத்தில் முறுவல் உண்டாக வேகமாக படியில் ஏறி அறைக்கதவைத் திறக்க, கட்டிலில் மனைவியைக் கண்டவன் , ‘தொப்’ என்று அவளருகில் விழுந்தான் , அந்த அரையடி உள்ளிழுக்கும் மெத்தையில் அருகில்தான் விழுந்தான் , அவள் மேல் விழவில்லை .முதுகுப்புறம் படுத்து அவளிடையில் கைபோட்டு இறுக்கிக் கொள்ள ,

 

பழைய நினைவில் அவன் புறம் திரும்பியவள் கண்ணீர் பெருக பெருக …. அவன் முகமெல்லாம் முத்தமிட்டவள் இறங்கி அவன் நெஞ்சோடு தலை வைத்து இறுக்கிக் கொண்டாள். அவளது கண்ணீர் மட்டும் நிற்கவில்லை .அவன் இதயப் பகுதியை நனைத்து ஈரம் உணர்ந்து , அவளை விலக்கி முகம் பார்க்க முனைய , அவள் எடுத்தால் தானே ,விலகவே மனமின்றி அணைத்துக் கொண்டவளை தானும் அணைத்துக் கொண்டான்.

 

அவள் அழுகை தேம்பலாக மாறும் வரை அணைத்திருந்த ஆதி , இப்போது அப்படியே எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக் கொள்ள , நெஞ்சில் சாய்ந்திருந்த வரு விலக முற்பட்டாலும் விடாமல் பிடித்துக் கொண்டான்.

 

“என்னை இவ்வளவு தேடுனியா ரிது….” என்றவன் வதனத்தில் வழிந்திருந்த கண்ணீர் துளிகளை விரல்கொண்டல்ல இதழ் கொண்டு துடைத்துக் கொண்டே கேட்க ,

 

“ஆம்” என்பதாக தலையசைத்தவள் , மெல்ல இமைப் பிரித்து அவன்  முகம் பார்க்க , முகமும் முகமும் அருகில் இருக்கையில் அதுவும் அவளிதழ் இழுக்கையில் விக்ரமால் பொறுக்க முடியவில்லை .சட்டென்று குனிந்து  அவ்விதழில் தன்னிதழைப் பொருத்தி விட்டான் .இத்தனை நாள் ஏக்கங்களை எல்லாம் அந்த இதழணைப்பிலயே தீர்க்கப் பார்க்க , அவள் மூச்சுக்கு தவிக்கும் போது தான் விட்டான்.

 

“அவள் நினைவில்

எனை மறந்தேனோ

 

வரும் கனவில்

தினம் மிதந்தேனோ

 

பார்வையில் சுகம்

 

சுகம் இதழ் போதையில் இதம்…

 

இதழ் விடுபட முகம் முழுதும் ரோஜா நிறம் கொண்டவள் ,

 

“சா… சாப்பாடு ….” என எழப் பார்க்க ,

 

“இப்ப நான் சாப்பிட்டுட்டு தான இருந்தேன்… அதுவும் தேன் …. ஸ்வீட் சாப்பிட்டுத் தானே எதுவும் ஆரம்பிக்கணும்… ம்….” எனக் கிசுகிசுக்க ,

 

இப்போது முகம் காண தயங்கி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவளிடம் , “ரிது … நீ பெஸ்ட் ஸ்டூடன்ட் தானே…. நான் சொல்லித் தந்தா உடனே படிச்சுக்குவதானே….” என்றவாறே அவன் கைகள் அவள் உடலில் ஊர்வலம் போக , உடல் கூசி சிலிர்த்தவளோடு கட்டிலில் சரிக்க….

 

கட்டிலில் தன் மீது உடல் அழுந்த படுத்திருந்தவனது நிலை , தங்களது முதல் சந்திப்பை ஞாபகப்படுத்த ,

 

“நான்…. எப்படி இப்படி ஆச்சு…. தெரிஞ்சுக்க.. வேண்டாமா …” கழுத்தில் இதழ் ஊர்வலம் போகும் போது வார்த்தைகள் தந்தியடித்து திக்கித் திணற ,

 

காதருகே வந்தவன் , ” உன்னையத் தெரிஞ்சுக்கிற வேலை தானே நடக்குது … அந்தப் பாடம் தானப் படிக்கிறேன் …”

 

தேன் துளி தூவும் நதி

காதலை பாடுதம்மா

 

தென்றலில் ஆடும் கிளி

மோகத்தை தூண்டுதம்மா….

 

மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி குறும்புடன் அவள் காதில் ,

 

“முதல் பாடம் இது தான் ….” என அவள் சேலையை தன் கையில் சுருட்டி வைத்திருந்ததைக் காண்பிக்க ,

 

திடுக்கிட்டு கண் விழித்தவள் அவனையே சேலையாக்கி கொள்ள ,பள்ளியறை ரகசியப்

பாடங்களைச் சொல்லித் தர ஆரம்பித்தான். என்றோ மனதை அவனிடம் கொடுத்தவள், இன்று தன் தேகத்தையும் முழுதாக அளித்தாள்.

இமை சுமையாய் விழியினிலே

 

கதை கதையாய் மொழியினிலே

 

காமனின் சபை

 

தனில் இரு காதலர் நிலை

 

காதலின் சுகம்

சுகம் இது வேறெங்கும் இல்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!