Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-18-1

“டேய் ஏன் டா தூங்காம அந்த செல்லையே பாத்துட்டு இருக்க. அத கையில எடுத்து ஓபன் பண்ணியும் பாக்கல. இன்ஸ்டா வேற அன்இன்ஸ்டால் பண்ணி இருக்க என்ன தான் டா உன் ப்ரோப்லேம் சொல்லுடா”என்று கத்திக் கொண்டிருந்தான் சுரேஷ்.

 

அவன் கத்தியத்தை காதில் வாங்கியதாய் எந்த வித அடையாளமும் இல்லாமல் எதோ ஹார்ரெர் மூவி பார்ப்பது போல் தலையை முதல் கால் வரை போர்வையால் மூடி படுக்கையில் அமர்ந்து தன் மொபைலை பார்த்து கொண்டியிருந்தான் கார்த்திக்.

“டேய் அவன் தான் அவ்வளவு சத்தமா கேக்கான் இல்ல. பதில் சொல்லு டா. ஏன் இப்படி இருக்க”என்றான் பாலா



Advertisement

“டேய் இரண்டு பேரும் கேக்கோம் நீ என்ன தான் டா பண்ணுற. உனக்கு ஏதாவது பிரச்சனையா சொல்லுடா. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் சொல்லுடா” என்றான் பொறுமையாக சுரேஷ்.

அப்போதும் அவன் அப்படியே இருக்க அதில் கடுப்பான பாலா, “டேய் மலமாடு சொல்லி தொலடா” என்று கத்தினான்.

அப்போது கதவு திறக்கப்பட பாலா, சுரேஷ் இருவரும் திரும்பி பார்த்தனர். அப்போதும் திரும்பி பார்க்காமல் அந்த மொபைலை பார்த்து இருந்தான் அவன்.

Advertisement

 

Advertisement

“டேய் என்னாச்சு ஏன் டா இப்படி கத்திட்டு இருக்கீங்க”என்று கதவை திறந்து உள்ளே வந்த சரண் கேட்டான் அவர்களை பார்த்து

“வாடா நல்லவனே எங்களுக்கு இந்த பிரச்சனையும் இல்ல உன் மச்சானுக்கு தான் ஏதோ ப்ரோப்லேம் மா. என்னனு கேளு”என்றான் நக்கலாக பாலா

“டேய் சும்மா இருக்கடா எப்ப பார்த்தாலும் அவன கிண்டல் பண்ணவேண்டியது. நீ சொல்லுடா மச்சான் உனக்கு என்னாச்சி”என்றான் சரண்

Advertisement

அப்போதும் அவன் அமைதியாக இருக்க சரண் மற்ற இருவரையும் திரும்பி பார்த்தான்.

“இதே தான் நாங்களும் கேட்டோம். நோ ரெஸ்பான்ஸ் அந்த பாடிய முதல உயிர் இருக்கானு தொட்டுப் பாரு”என்றான் சுரேஷ்.

“ஆமா டா எதுக்கும் போய் தொட்டு பாரு எதாவது ஆவி அடிச்சிடானு. அவன் முழி வேற சரி இல்ல”

“டேய் கொஞ்ச நேரம் சும்மா இருக்க டா”என்று அவர்களை அதட்டி விட்டு கார்த்திக் அருகில் சென்று அவன் இரு புஜத்தையும் பிடித்து அசைத்தான்.

அதில் தன் உணர்வு வந்தவன், “மச்சான்”என்று சரணை கட்டி கொண்டு அழத் தொடங்கிவிட்டான்.

அவன் அப்படி அழுத்ததும் பயந்து போன சரண் இருவரையும் பார்க்க, “மச்சான் கண்டிப்பா மோகினி பிசாசு தான் அடிச்சிருச்சி போல”என்றான் பாலாவிடம் சுரேஷ்.

“ஆமா டா மச்சான் நீ சொன்ன மாதிரி தான் இருக்கும் போல எதுக்கு நம்ம கொஞ்சம் தள்ளியே நிப்போம்” என்றான் பாலா

அதில் கடுப்பான சரண் இருவரையும் முறைத்துபார்த்து விட்டு, “மச்சான் டேய் என்னடா ஆச்சி.ஏன் இப்படி அழுற” என்றான்.

“ மச்சான மோசம் போயிட்டேன்டா” என்று அவன் திரும்பவும் அழ

“ அட நாதாரி பயில மோசன் போன போய் கழுவ வேண்டியது தான அதுக்கு ஏன் உட்கார்ந்து இப்படி அழுறா” என்றான் பாலா.

“ டேய் ஏன்டா இப்படி அவனை கலாய்ச்சிட்டு இருக்கீங்க கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு தான் இருங்க டா” என்றான் கோபமாக சரண்.

“ மச்சான் நீ சொல்லுடா எதுக்குடா அழுகிற யார் உன்னை மோசம் பண்ணது”

“ அது வந்து மச்சான் என்று அவன் சொல்லும்போது போன் ரிங் ஆக அந்த சத்தத்தில் பயந்து போன கார்த்திக், “ மச்…சா..ன் மச்..சா..ன் என்..ன அ…வ காப்பா..த்துடா அ..து வரு…து அ..து வரு..து” என்று மொபைலை பார்த்து சொல்லியவன் சரணை இறுக்கி கட்டிக் கொண்டான்.

 

“டேய் மச்சான் என்ன டா சொல்லுற. யார்கிட்ட இருந்து உன்ன காப்பாத்தணும். எது வருது டா. எங்க வருது”

“இ…இதோ இந்த போன். இது தான் டா”

“போன்ல என்ன டா. மொபைல் ரீங்காக தான செய்து எடுத்து பேச வேண்டிய தான”என்ற பாலா அதனை அட்டன் செய்ய, “டேய் பண்ணாத”என்ற கார்த்திக் சொல்லை மதிக்காமல் அவனிடம் கொடுத்தான்.

” டேய் எடுக்காதன்னு சொன்னா கேட்டியா டா” என்றவன் பயத்துடன் அவர்களை பார்த்து கொண்டு, “ஹாலோ” என்றான்.

அதான் பிறகு முப்பது நிமிடங்கள், “ம்”..,”இல்ல”..,”சரிங்க” என்பதை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை அவன்.

 அவன் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மூவரையும் பார்த்து பெருமூச்சி விட்டவன் அதனை ஆப் செய்து  மீண்டும் அந்த மொபைலை டெபிள் மீது வைக்க, “டேய் இப்ப சொல்ல போறியா இல்லயா. நானும் வந்ததுல இருந்து பாக்கேன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அந்த போனையே முறைச்சி பாத்துட்டு இருக்க என்ன தான் டா உன் பிரச்சனை முதல இப்ப பேசுனது யாரு சொல்லு சொல்லுடா” என்று கோவமாக கத்தினான் சுரேஷ்.

“டேய் ஏன் டா எப்படி டென்ஷன் ஆகுற. கொஞ்சம் பொறுமையா இருடா”என்றான் சரண்.

“என்ன பொறுமையா இருக்க சொல்லாத உன்னால முடிஞ்சா அவன் கிட்ட பதில வாங்கு”

“சரி டா நான் கேக்கேன். போதுமா டேய் நீ சொல்லு டா உனக்கு என்ன ப்ரோப்லேம் சொல்லு”

“அத ஏன் டா கேக்க”

“சரி வாங்கடா இவன் சரிப்பட்டு வர மாட்டேன். நம்ம போய் தூங்குவோம் வாடா” என்றான் கொட்டாவியுடன் பாலா.

“டேய் நான் சொல்லுறேன் கேளுங்க டா”

“சொல்லி தொல டா பன்னாட”

“டேய் நோ பேட் வேர்ட்ஸ்”

“சாரி டா சொல்லு டா பொன்னாட ஓகே வா டா” என்க

ஓகே என்பதை போல் கை காட்டினான் சுரேஷ்.

“டேய் கொஞ்சம் சும்மா இருங்க டா. நீ சொல்லு மச்சான்”

“மச்சான் அத ஏன் டா கேக்க”என்று அவன் ஆரம்பிக்க, “டேய் நீ என்ன சொல்லுவனு தெரியும் உன் வாயை மூடு”என்று பாலாவை பார்த்து சொல்லி விட்டு, “மச்சான் திரு அண்ணா கல்யாணம் நடந்துச்சில”

“ஆமா மாப்ள அதுக்கு வந்த பொண்ணு யாரையாவது கையை புடிச்சி இழுத்துட்டியா”என்றான் பாலா.

“இல்ல கட்டி பிடிச்சிட்டியா”இது சுரேஷ்

“இல்ல முத்தம் கொடுத்துட்டியா” இது பாலா.

“இல்ல பொண்ணுன்னு நினைச்சி அவங்க அம்மாவ”என்று சுரேஷ் சொல்ல வர எகிறி அவன் வாயை அடைத்த கார்த்திக், “ஏன் டா உங்க புத்தி இப்படி போகுது. நான் சொல்லுறத கேளுங்க டா. நீங்களா இமாஜின் பண்ணாதீங்க டா”என்று அவர்களை பார்த்து சொன்னவன், “மச்சான் அண்ணா மேரேஜ்ல நான் பாட்டுக்கு செவனேனு வேலை செய்யுற மாதிரி பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு இருந்தேன்”

“அதான் எல்லாருக்கும் தெரியுமே”

“டேய் பாலா பிரண்ட்னு கூட பாக்க மாட்டேன். சங்க கடிச்சி துப்பிருவேன் பாத்துக்க”

“என்னது சங்க கடிப்பியா ரைட் விடு இனி வாய் பேசுனா என்னனு கேளு” என தனது வாயை மூடி கொண்டான்.

“நீ சொல்லுடா மாப்ள அவன் கிடைக்கான்”

“அதான் மச்சான் நான் பாட்டுக்கு சிவனேன்னு பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு இருந்தேன். இந்த சீனியர் திடிர்னு என்னோட கையை பிடிச்சி இழுத்து இன்ஸ்டா லைவ்ல காட்டிடாரு. அப்ப ஆரம்பிச்சது தான் பிரச்சனை”என்றான் சோகமாக

“அதுல என்னடா பிரச்சனை. அதுல புல்லா பொண்ணுங்க தான இருப்பாங்க. நீ எப்பவும் என்ஜோய் தான பண்ணுவ. இப்ப என்னடா பிரச்சனை”

“கரெக்ட் தான் டா எப்பவும் நம்மள இன்ட்ரோ மட்டும் தான பண்ணுவாரு. ஆனா இப்ப என்னோட ஐடி ய பின் பண்ணிட்டாரு டா. அதுல இருந்து தான் பிரச்சனை. ஒரு செகண்ட் கூட என்ன நிம்மதியா இருக்க விட மாட்டக்காங்க டா”

“டேய் உண்மைய சொல்லு இதுக்கு எல்லாம் நீ பீல் பண்ண மாட்டியே”என்றான் சந்தேகமாக பாலா.

“அது வந்து டா மெசேஜ் பண்ண பொண்ணுங்கள ஒரு பொண்ணு மட்டும் சாப்டாச்சா, என்ன பண்ணுறீங்க, குட் மார்னிங், குட் நைட் இப்படி தொடர்ந்து விடாம மெசேஜ் பண்ணா டா அதனாலலல…”என்று அவன் நெளிய

“அதனால சாரும் மெசேஜ் பண்ணிங்களா”என்றான் அழுத்தமாக சரண்

“ச்சி ச்சி இல்ல டா நான் அப்படி பண்ணுவனா”

“ஆமா அவன் அப்படி பண்ண மாட்டான்”என்ற சுரேசை கட்டியணைத்து கார்த்திக், “நண்பன்டா நீ ஒருத்தன் தாண்டா என்ன புரிஞ்சு வச்சிருக்க” என்றான் பெருமையாக

“ஆமா மச்சான் நீ எப்படி மெசேஜ் பண்ணி இருப்ப உடனே கால் பண்ணி பேசி இருக்க மாட்ட. அப்படித்தானே நண்பா” என்க

அதில் கடுப்பானவன் அவனை முறைத்துக் கொண்டு, “இருந்தாலும் நீ என் நண்பன் தான் டா அப்படி தாண்டா நானும் பண்ணேன்” என்றான் பெருமையாக

 அவனை முறைத்துப் பார்த்த மூவரும் உனக்கு வெக்கமே இல்லையா என்பது போல் பார்க்க, “என்னடா இப்படி பாக்குறீங்க நீங்களும் இதுதான பண்ணுவீங்க என்னவோ நான் மட்டும் பண்ற மாதிரி என்ன அப்படி பாக்கறீங்க”

“ சரி ஓகே நாமளும் அப்படித்தான் பண்ணுவோம். ஆமா அதுல என்ன பிரச்சனை டா உனக்கு”என்றான் பாலா

“அந்தக் கதை ஏண்டா கேட்க முதல் நாள் என்னங்க, ஏங்க அப்படின்னு பேசுனா. அடுத்து இன்னைக்கு காலையில செல்லம், புஜ்ஜு குட்டி அப்படின்னு பேசுனோம் டா. மத்தியானம் என்னன்னா மாமா ஐ லவ் யூ நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாடா. இப்ப என்னடா நான் மாசமா இருக்கேன் மாமா சொல்லுறா டா. அதுக்கு நான் தான் காரணம்னு வேற சொல்ற டா நாளைக்கு டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கலாம் நானும் கூட போனுமாண்டா” என்று அவன் சொல்லி அழ

“அட ராஸ்கல் ஒரு வார்த்தை சொல்லவே இல்ல மச்சான் கங்கிராட்ஸ் டா” என்றான் சுரேஷ் அவனின் கையை பிடித்து  குலுக்கி கொண்டு

“ மச்சான் அப்பாலாம் ஆக போற எப்ப டா ட்ரீட் தரப்போற” என்றான் பாலா.

“ ஆமா மச்சான் எப்படியோ நீ சாதிச்சிட்ட சொல்லு மச்சான் எப்ப ட்ரீட் தர போற” என்றான் சரண் அவன் தோளில் கை போட்டுக் கொண்டு

“டேய் கடுப்பேத்தாதீங்கடா எப்படியாவது அந்த குந்தாணி கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வழியே சொல்லுங்கடா முதல்ல” என்றவன் மறுபடியும் மொபைல் ரிங் ஆக, “மச்சான் எப்படியாது இந்த குந்தாணி கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்கடா இல்லனா நான் சூசைட் பண்ணிப்பேன் டா” என்று அழ தொடங்கினான்.

 அவன் அழுவதை பார்த்து மூவரும் விழுந்து விழுந்து சிரித்து, “ மச்சான் நீ தானடா பீல் பண்ணிட்டு இருந்த தனியா இருக்கேன்னு. இப்ப நீ ஒரு குடும்பமாக போறடா” என்று சொல்லி சுரேஷ் சிரிக்க

“ஆமாண்டா மச்சான் தாத்தா தயவால நீ இப்போ பேமிலி மேன் ஆகப்போற வாழ்த்துக்கள் டா” என்றான் சுரேஷ் நக்கலாக

“ஆமாண்டா மச்சான் சீனியர் உன் வாழ்க்கைல விளக்கேத்தி வச்சுட்டாரு டா” என்றான் சரண்

“டேய் உங்கள கொல்ல போறேன் பாருங்கடா”என்று அவர்கள் மேல் பாய்ந்தான் கார்த்திக்.

 அவர்கள் மூவரையும் சரமாரியாக அடித்துக் கொண்டிருக்க  அடங்காமல் பாலா, “மச்சான் மச்சான் ஒரு நிமிஷம் இருடா” என்று அவன் அடிப்பதை நிறுத்தியவன், “எனக்கு ஒரு டவுட்டு டா உனக்கு பத்து மாசம் கழிச்சு குழந்தை பிறக்குமா இல்ல நாளைக்கே பிறந்துருமா. ஏன் கேட்கனா நேத்து தான் பேசின இன்னைக்கு மாசமாக்கிட்டு அப்ப கணக்குப்படி நாளைக்கு உனக்கு குழந்தை தானடா பிறக்கும்” என்றவனைப் பார்த்து அருகில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு, “இனி பேச உனக்கு நாக்கு இருக்காது டா” என்று அவன் நாக்கை அறுக்க அவன் மீது பாய்ந்தான்  கார்த்திக்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!