Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-21-1

“ஏய் இப்போ உனக்கு என்னடி பிரச்சனை சொல்ல சொல்ல கேட்காம ஒரே வம்பு பண்ணிக்கிட்டு இருக்க கொஞ்சமாவது அடுத்தவங்க சொல்றத காது கொடுத்து கேளுடி. அப்பதான் மத்தவங்க உணர்வு என்னன்னு புரியும். எப்பவுமே நீ நினைக்கிறது மட்டும் தான் நடக்கும்னு நினைக்காதே. முதல்ல மத்தவங்க சொல்றத கேளு அதுக்கு அப்புறம் எது கரெக்ட் நீயே யோசி” என்றான் சரண் அந்த காபி ஷாப்பில் தனது முன்னே அமர்ந்திருந்த சாராவை பார்த்து

 

மூச்சு பிடிக்க தனது முன்னே இருந்து பேசியவனை சிறிதும் பொருட்படுத்தாமல் நக்கலுடன், “ஓ சரி சார் சொல்லுங்க அப்படி நீங்க என்ன சொல்றீங்க நானும் கேக்கேன்” என்றாள் சாரா.

“ஏய் மூஞ்ச அப்படி வச்சிக்காதடி அத பாத்தாலே டென்ஷன் ஏறுது. சரி சொல்லு உன் பிரச்சனை தான் என்ன இப்ப என்ன தான் உனக்கு பண்ணனும்” என்றான் கோபமாக சரண்.



Advertisement

“ஏன் சாருக்கு தெரியாதா எனக்கு என்ன வேணும் அப்படின்னு”

“ஏய் மெண்டலாடி நீ சொன்னா கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டியா உன்னோட ஏதோ ஒரு இத்துபோன பிரண்டு பைனான்ஸ் காரன் கொடுமை தாங்க முடியாம தற்கொலை பண்ணிகிட்டா எல்லா பைனான்சும் அப்படி இருக்கும்னு உனக்கு தெரியுமா. இங்கே எத்தனையோ பைனான்ஸ் சேவைக்காக மட்டும் பண்றாங்க தெரியுமா உனக்கு. இந்த தொழிலுக்கு எல்லாரும் காசு பார்க்கணும்னு மட்டும் வர்றது கிடையாது சிலர் சேவை மானபான்மையுடனும் வருவாங்க அதை முதல்ல புரிஞ்சிக்கோ. நீ ஏன்டி இந்த பைனான்ஸால அழிஞ்சு போன குடும்பத்தை மட்டும் பார்க்க எத்தனையோ குடும்பம் இதானால முன்னேறி வந்திருக்கு அதை பாருடி. எல்லா விஷயத்திலும் உள்ள நெகட்டிவ் மட்டும் பாக்காத எத்தனையோ பாசிட்டிவ் இருக்கு அதையும் கொஞ்சம் பாருடி” என்றான் கடுப்புடன்

“என்னடா பெரிய பாசிட்டிவ் இருக்கு நூத்துல பத்து பேருக்கு நல்லது செஞ்சி இருக்கீங்களா ஆனா உங்களால பாதிக்கப்பட்ட மீதி 90 பேருக்கு நீங்க என்ன சொல்ல போறீங்க. பைனான்ஸ்னு நீங்க உள்ள வந்த பிறகுதான் மக்களுக்கு சேமிப்போட அர்த்தமே மறந்து போச்சு. மிந்தியெல்லாம் இருக்குறத வச்சு வாழ பழகுனாங்க ஆனா இப்போ தீபாவளி பொங்கல் வருதா உடனே போய் ஒரு லோன் எடு அதை வைத்து நல்லா ஆடம்பரமா செலவு பண்ணு அதுக்கப்புறம் வருஷம் ஃபுல்லா அந்த லோனை கட்டு அத கட்ட முடியலையா உடனே அடுத்த லோனெடு அந்த லோனை வைச்சி இந்த லோன் கட்டு. இப்படியே லோன் எடுத்து கட்டி அத அடைக்க மறுபடியும் லோன் எடு இப்படியே பண்ணி பண்ணி ஒரு அஞ்சு வருஷத்துல அவங்கள ஒரு பெரிய கடனாளியா ஆக்கி அவங்க சொத்து வீடு எல்லாத்தையும் விக்க வச்சு அவங்கள நடுத்தெருவுக்கு வர வைக்கிறீங்க. சம்டைம்ஸ் அவங்கள தற்கொலைக்கு தூண்டி சாக கூட வைக்கிறீங்க நீங்க எல்லாம் இதுல எங்க இருந்துடா பாசிட்டிவ் இருக்கு சொல்லு” என்றாள் ஆதங்கமாக.

Advertisement

“ஏய் என்னடி ஓவரா பேசுற ஊர்ல நடக்கிறது எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத சரியா. என்னடி தெரியும் உனக்கு எங்க கிட்ட அஞ்சு ரூபா வட்டிக்கு லோன் வாங்கிட்டு அதை 20 ரூபாய் வட்டிக்கு வெளியே விட்டுறாங்க அது தெரியுமாடி உனக்கு. பெருசா பேச வந்துட்ட இந்த லோன் எடுத்து எத்தனையோ பசங்க அவங்க டிகிரியை கம்ப்ளீட் பண்ணி இருக்காங்க அது தெரியுமா உனக்கு. எத்தனையோ பேஷண்ட் அவங்களோட ஹெல்த் இஸ்யூ சரி பண்றதுக்கு இந்த லோன் உதவியா இருக்கு அது உனக்கு தெரியுமா. ஏன் இப்ப இருக்கிற தங்க விலைக்கு ஒரு கிராம் தங்கம் வாங்கணும்னாலும் இல்ல ஒரு கல்யாணத்தை நடத்துனாலும் இந்த லோன் எவ்வளவு அவசியமா அவங்களுக்கு இருக்குன்னு தெரியுமா உனக்கு. இந்த காலத்துல பக்கத்து வீட்டுக்காரன் ஒரு நூறு ரூபா கூட நம்மள நம்பி கடனா தரமாட்டான் அப்படி இருக்கும் போது பெருசா எந்த டாக்குமெண்ட்டும் இல்லாம ஒரு ஆதார் கார்டு,பான் கார்டு, ரேஷன் கார்டு, பேங்க் புக் இத மட்டும் வச்சு யாருடி இவ்ளோ பெரிய அமௌன்ட் தருவாங்க. அதுவும் நாங்க வட்டிக் கடைக்காரர் மாதிரி எல்லா காசையும் மொத்தமா கேட்கலையே அவங்களால தர முடிஞ்ச அமௌன்ட் தான் நாங்க போட்டு கொடுக்கோம் சரியா எதுவும் தெரியாம இந்த மாதிரி பேசிட்டு இருக்காத” என்றான் சரண் புரிந்து கொள்ளாமல் பேசும் சாராவை கண்டித்து

Advertisement

“ஓ எப்படி பத்தாயிரம் ரூபாய் வாங்கினா அது கட்டி முடிக்க 12 மாசம் ஆகுது. இதுல ஃபர்ஸ்ட் ஆறு மாசம் உங்களுக்கு வரவேண்டிய இண்ட்ரஸ்ட் மட்டும் தான் மக்கள் கட்டுறாங்க. அடுத்த ஆறு மாசத்துல தான் மெயின் பேமென்ட் நீங்க வாங்குறீங்க. இதுதான் நீங்க மக்களுக்கு பண்ற சேவையா” என்றாள் நக்கலாக

“ ஏய் நீ என்ன வேணா சொல்லிக்கடி அவங்க தேவைக்கு காசு வாங்குறாங்க. அதை திரும்ப அவங்களே கட்டுறாங்க. அவங்களுக்கு தான் தெரியும் இந்த அமௌன்ட் நம்மளால கட்ட முடியும் அப்படின்னு. அதே மாதிரி எந்த கம்பெனி நியாயமான கம்பெனி எது டுபாக்கூர் கம்பெனி எல்லாத்தையும் அவங்க சர்வே பண்ணி லோன் எடுக்கணும். அத விட்டுட்டு சும்மா எங்களையே குறை சொல்ல கூடாது சரியா”

“ டேய் ஏன்டா நீ இப்படி மனசாட்சி இல்லாம பேசுற. அவங்களே படிக்காம ஒருவேளை சோத்துக்கு கூலி வேலை செய்ற மக்கள் அவங்களால எப்படி நல்ல கம்பெனி எது பொய்யான கம்பெனி எதுன்னு சொல்லி சர்வே பண்ண முடியும். நீங்க வச்சிருக்கீங்களே கலெக்சன் ஏஜென்ட் அவன் சொல்றத நம்பி இது நல்ல கம்பெனி நினைச்சு அவங்க லோன் வாங்குகிறாங்க. ஆனா நீங்க என்ன பண்றிங்க அவங்கள மென்டலி டார்ச்சர் பண்றீங்கடா”

Advertisement

“ ஏய் யாருடி டார்ச்சர் பண்றது அவங்க வாங்குற அமௌன்ட்க்கு தவனை கட்ட நாங்க பத்து நாள் டைம் குடுக்கோம்டி. அந்தப் பத்து நாளுக்குள்ள அவங்களால கட்ட முடியாதா. சும்மா மெண்டல் பிரஷர் பண்றோம்னு சொல்லி தேவை இல்லாம பேசாதடி”

“டேய் நீங்க கஸ்டமர பிரஷர் பண்ணல ஓகே ஒத்துக்குறேன். ஆனா உங்களோட கலெக்சன் ஏஜென்ட அவ்ளோ பிரஷர் பண்றீங்க. நீங்க போடுற பிரஷர் தாங்க முடியாம அவன் போய் அந்த கஸ்டமர தான் அசிங்கமா பேசுறாங்க. அவங்களோட பேச்ச தாங்க முடியாம எத்தனை பேர் சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணி இருக்காங்க தெரியுமா. தினமும் என்னோட ஹாஸ்பிடல்ல அத்தனை கேஸ் பார்க்கிறேன். ஒரு நாள் ஹாஸ்பிடல் வாடா அப்ப தான் நான் ஏன் சொல்றேன் உனக்கு புரியும்” என்றவளுக்கு பதில் சொல்ல தெரியாமல் அவன் அமைதியாக இருக்க,

“ நான் சொல்ல வர்றது உனக்கு புரியுது. இருந்தாலும் உன்னோட மாமாகாக நீ ரொம்ப தான் சப்போர்ட் பண்றடா. ஆனா ஒன்னு மட்டும் சத்தியமான உண்மை நீ என்னதான் சொன்னாலும் அவங்கள கடனாளி ஆக்குற முதல் ஆள் நீங்க மட்டும்தான் என்கிறது எப்பவும் மாறாது. என்ன பொறுத்த வரைக்கும் என்னோட ஃபேமிலிக்கு இந்த பைனான்ஸ் கம்பெனி தேவையில்லை. அடுத்தவங்களோட கண்ணீர்ல வர்ற அந்த பணமும் எனக்கு தேவை இல்லை. எப்ப இந்த பைனான்ஸ் கம்பெனியை மூடுறீங்களோ அப்பதான் உன்கிட்டயும் எங்க அப்பா கிட்டையும் நான் பேசுவேன். அதுவரைக்கும் நீங்க யாரோ நான் யாரோ தான் டா” என்றாள் தீர்மானமாக

“போடி என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காம மெண்டல் மாதிரி பேசுற நீ எனக்கு தேவையே இல்ல போடி நீ பேசலன்னு இங்க யாரும் அழுதுட்டு இல்ல போறதுன்னா போடி உன்ன யாரும் இங்க தடுக்கல. வந்துட்டா கம்பெனிய மூடு பாவம் புண்ணியம்னு. ஊர்ல யாரும் செய்யாததையா நாங்க செய்றோம். நாங்க இத மூடுனாலும் இன்னும் பத்து பேரு எங்கள மாறி இத திறக்க தான் செய்வான். நாங்களாவது நியாயமான காசு வாங்குறோம். ஆனா அவங்க அப்படி வாங்க மாட்டாங்க முதல்ல அதை புரிஞ்சுக்க சரியா. அம்மா மதர் தெரசா நீங்க தான் இந்த உலகத்திலேயே ரொம்ப நல்லவங்க நாங்க எல்லாம் கெட்டவங்க தான் எங்க கூட நீங்க பேசலாம் வேண்டாம். நீ உங்களை மாதிரி நல்லவங்க கூடவே சேர்ந்து நீங்க பேசுங்க போங்கம்மா” என்று கடுப்புடன் அவளை கத்திவிட்டு வெளியே சென்றவனை பார்த்து, “ லூசு என்ன போக சொல்லிட்டு அது கிளம்பி போகுது பாரு. என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டாங்க. இவங்கள வச்சுட்டு என்னதான் பண்ண போறேன்னு தெரியல” என்று தனியே உக்காந்து புலம்பிய சாரா

  “கடவுளே நான் என்னதான் சொன்னாலும் இவங்க ரெண்டு பேரும் புரிஞ்சுக்காம இருக்காங்க. இதனால என்னோட குடும்பத்துக்கு எந்தவித கெட்ட பேரும் ஆகாம நீ தான் காப்பாத்தணும்” என்று கடவுளுடன் வேண்டிக் கொண்டு தனது காரை நோக்கி சென்றாள் சாரா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!