Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-21-2

மன்னவன் பேரைச் சொல்லி

மல்லிகை சூடிக் கொண்டேன்..

மன்மதன் பாடல் ஒன்று

நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்

சொல்லத் தான்.. எண்ணியும்

இல்லையே பாஷைகள்

என்னவோ..ஆசைகள்

எண்ணத்தின் ஓசைகள்..

மாலை சூடி

ம்ம்ம்..

மஞ்சம் தேடி

ம்ம்ம்..

மாலை சூடி

ம்ம்ம்..

மஞ்சம் தேடி

ம்ம்ம்..

காதல் தே..வன் சன்னிதி

காண, காணக் காண, காண…

   என்ற பாடலை  பாடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்று பால் வண்ண நிறத்தில் சேலை கட்டி தனது நீண்ட கூந்தலை சீவி கொண்டு இருந்த தனது மனைவியை பார்த்து அப்போதுதான் டூட்டி முடிந்து வீட்டுக்குள் வந்த  திரு சத்தம் செய்யாமல் அவளின் அருகில் போய் நின்று, “இதோ வந்துட்டேன் செல்லக்குட்டி உன்னோட காதல் தேவன்” என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தனது முன்னே இருந்த கண்ணாடியில் இருவரின் உருவத்தை பார்த்தான்.

 

அவனின் இந்த திடீர் தாக்குதலில் நிலைத்தடுமாறிய பாரதி, “மாமா ஏன் மாமா எப்ப பார்த்தாலும் என்னை இப்படி பயமுறுத்துற. உங்களுக்கு கொஞ்சம் கூட ரொமான்ஸ் பண்ண தெரியாதா முரட்டு மாமா. கொஞ்சம் லூஸ் விட்டு கட்டிக்க தெரியாதா மூச்சு முட்டுது மாமா விடு” என்று அவன் கைகளுக்குள் இருந்து பிடிக்காத மாதிரி சினங்கினாள்.

 “ஏண்டி என்னவோ பிடிக்காத மாதிரியே அப்படி சினுங்குற. உனக்கு நான் இப்படி வந்து பிடிக்கிறது ரொம்ப பிடிக்கும்னு எனக்கும் தெரியும். அதனால ரொம்ப சினுங்காதடி என் சில்வண்டு” என்றான் கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்து



Advertisement

 தனது கள்ளத்தனத்தை கண்டுபிடித்த மாமனின் முகத்தை பார்க்க முடியாமல் உதட்டை கடித்து குனிந்தாள் பாரதி.

“ ஏய் பாருக்குட்டி அது என்னோடது அத கடிக்கிறதுக்கு உனக்கு உரிமை இல்லை” என்று அவள் கடித்த உதட்டை தனது கைகளால் விடுவித்து, “உனக்கு உரிமை உள்ளது இங்க இருக்கு பாரு. அதவேனா கடிச்சு டேமேஜ் பண்ணு. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று அவனின் உதட்டை காண்பித்தான்.

 அவன் சொன்னதைக் கேட்டு குங்குமமாய் சிவந்தவள் விருட்டென்று திரும்பி அவன் தோள்களில் முகத்தை புதைத்துக் கொள்ள, “பாரு குட்டி இங்கே முகத்தை பாருடி”என்று தனது தோளில் புதைந்திருந்த அவள் முகத்தை கைகளால் நிமிர்ந்த முயற்சிக்க மீண்டும் அழுத்தமாய் அவன் தோள்களில் முகம் புதைத்து கொண்டாள் பாரதி.

Advertisement

“ஏய் பாருக்குட்டி எந்த கிண்டலும் பண்ண மாட்டேன் மாமா முகத்தை கொஞ்சம் பாருடி” என்று சொல்லி அவள் முகத்தை நிமிர்த்தி தனது முகத்தை பார்க்க வைத்தான்.

Advertisement

 அப்போதும் கண்களை மூடிக்கொண்டு அவன் முகத்தை பார்க்க மறுக்க, “செல்லம் கொஞ்சம் முகத்தை பாருடி” என்று அவள் கன்னத்தில் தனது தாடியை வைத்து தேய்க்க அதில் கூசியவள் “மாமா” என்று சிணுங்கி கொண்டு அவன் முகத்தை பார்க்க அதற்காகவே காத்திருந்தவன் போல நொடியில் அவளின் உதட்டை கவ்விக்கொண்டான் திரு.

 ஐந்து நிமிடம் பபுள்கம் போல அவள் உதட்டை மென்று முழுங்கி பின்பு விடுவித்தான். அவன் விடுவித்ததும் தனது சிவந்திருந்த உதட்டை கண்ணாடியில் பார்த்த பாரதி, “ முரட்டு மாமா எப்ப பாரு இதே உனக்கு வேலையா போச்சு” என்று சொல்லி தனது உதட்டினை துடைக்க தொடங்கினாள்.

“ஏய் செல்லக்குட்டி அதுக்கு தான் மாமா இருக்கேனே” என்று சொல்லி அவள் கையை தடுத்து எனது விரலால் அவள் உதட்டை வருட தொடங்கினான். அவன் வருடலில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் “மாமா” என்ற சினுங்களுடன் மீண்டும் அவன் தோள்களில் தன்னை புதைத்துக் கொண்டாள் திவ்யபாரதி.

Advertisement

“ஏய் சரிடி இனி ஒன்னும் பண்ண மாட்டேன் கொஞ்சம் என் மூஞ்ச பாரு”

“போ மாமா இப்படி தான் சொல்லுவ அதுக்கு அப்புறம் திரும்பவும் என்ன வெட்கப்பட வைப்ப போ நான் உன் மூஞ்ச பாக்க மாட்டேன்”

“ ஏய் மாமா சத்தியமா சொல்றேன் டி இனி உன்னை எதுவும் பண்ண மாட்டேன் கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்”

“பிராமிஸா எதுவும் பண்ண மாட்ட தானே மாமா”

“ப்ராமிஸா எதுவும் பண்ண மாட்டேன். இங்க பாரு உனக்காக நான் என்ன கொண்டு வந்து இருக்கேன்னு” என்று தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த டைரி மில்க் சாக்லேட் அவள் கையில் கொடுக்க, “ ஐ டைரி மில்க் சூப்பர் மாமா சூப்பர்” என்று அவன் கன்னத்தில் பச்சக் என்று ஒரு முத்தம் வைக்க, “ஏய் என்னடி பண்ண இப்ப” என்றான் கடுப்பாக

“ என்ன மாமா முத்தம் தான வச்சேன் உனக்கு பிடிக்கலையா” என்றாள் மிரண்டு போய்

“அடியே சீல்வண்டு முத்தம்னா இப்படி வைக்கணும்” என்று அவளின் உதட்டை கவ்விக் கொண்டான்.

“போ மாமா எப்ப பாரு என் உதட்டை சாக்லேட் மாதிரி கடிச்சு கடிச்சி திங்கிறதே உனக்கு வேலையா போச்சு எப்படி வலிக்குது தெரியுமா ” என்றாள் குழந்தை போல் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு

“ ஐயோ செல்லத்துக்கு வலிக்குதா எங்க காட்டு மாமா மருந்து போட்டு விடுறேன்” என்று மறுபடியும் முத்தம் மிட வர

“போ மாமா எதுவும் வேண்டாம்” என்று அவனை தள்ளிவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தாள்.

“ஐயோ என் செல்லம் கோபப்படும்போது எவ்வளவு அழகா இருக்கு” என்று அவள் பக்கத்தில் அமர்ந்து அவளை சமாதானம் செய்ய

 அதில் மயங்கி அவனை அணைத்துக் கொண்டாள்.

“மாமா நான் இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா” என்றாள் அவன் அணைப்பில் இருந்து கொண்டு

“தெரியும் செல்லம் இருந்தாலும் நீயே சொல்லு மாமா அதை கேட்கேன்”

“ உனக்கு தெரியாது மாமா நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு. அப்பா இறந்த பிறகு ஒரு நாள் நைட் கூட நான் நிம்மதியா தூங்குனது கிடையாது. நான் மட்டும் இல்ல அம்மா தம்பி எல்லாருமே நிம்மதியா ஒரு நாள் கூட நிம்மதியா தூங்குனது கிடையாது. அடுத்த நாள் சாப்பாட்டுக்கு என்ன பண்ண பீஸ் கட்ட என்ன பண்ண குடும்ப செலவுக்கு காசு என்ன பண்ண இப்படி ஏதோ ஒன்னு எங்க மைண்ட்ல ஓடிட்டே இருக்கும். சும்மா பேருக்காக ஒருத்தர் வாட கூடாதுன்னு இன்னொருத்தர் மனசுக்குள்ள எல்லா கஷ்டத்தையும் வச்சுட்டு சும்மா பேசி சிரிச்சு இருப்போம். ஆனா எங்க மனசுக்குள்ள எப்பவுமே எதிர்காலத்தை பற்றி ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும். ஆனா நான் எப்ப உங்கள கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்தானோ அப்பவே எங்களோட எதிர்காலத்தைப் பத்தின பயம் இல்லாம போயிட்டு. மீந்தி எங்களுக்கு ஒன்னுனா யார் இருக்காங்குற நினைப்பே எங்கள பாதி தூங்க வைக்காது. ஆனா இப்ப எங்களுக்கு ஒண்ணுன்னா இந்த குடும்பமே வந்து நிற்கும் அப்படிங்கிற நினைப்பு எங்க மனசுல ஆழமாக பதிஞ்சிட்டு. நாங்களாவது பரவாயில்லை எப்படியோ பாதி ராத்திரி தூங்குவோம் ஆனா அம்மா தூங்கவே மாட்டாங்க நைட் ஃபுல்லா அழுதுகிட்டே இருப்பாங்க. ஆனா இப்ப அம்மா நிம்மதியா தூங்குவாங்க”

“ ஏன் அப்படி சொல்ற”

“ என் அம்மாக்கு இருந்தது ரெண்டே ரெண்டு கடமை தான். ஒன்னு என்னோட கல்யாணம் இதோ ராஜா மாதிரி இருக்கிற உங்களை நான் கல்யாணம் பண்ணிட்டேன். என்னோட லைப் செட்டில் ஆயிட்டு. அடுத்து என்னோட தம்பி அவனும் இப்ப டாக்டர் படிக்க காலேஜ்ல சேர்ந்து மூன்று மாதம் ஆகிட்டு கிட்டத்தட்ட அவன் லைப்பும் செட்டில் தான். சோ அம்மாவுக்கு இனி எத நெனச்சும் கவலைப்பட எதுமே கிடையாது. இப்ப அவங்க நிம்மதியா தான இருப்பாங்க. என்ன மாமா நான் சொன்னது கரெக்ட் தான” என்றாள் கணவனின் முகம் பார்த்து பாரதி.

“என் பாருக்குட்டி என்னைக்கு தப்பா சொல்லி இருக்கு. ராஜாத்தி எப்பவும் கரெக்டா தான் சொல்லுவா” என்று அவள் கன்னத்தில் இருக்கை வைத்து பிடித்துக் கொண்டு கொஞ்சினான் திரு குமரன்.

 “என் செல்லக்குட்டி இன்னைக்கு செம ஜாலியா இருக்கு போல அப்ப இன்னிக்கு நைட் மாமாவுக்கு செம கவனிப்பு தான் சொல்லு”

“எப்படி மாமா கரெக்டா சொன்ன இன்னைக்கு பாரு உன் பாருக்குட்டியோட பெர்பார்மன்ஸா” என்றாள் வேகமாக

“ செல்லம் அப்ப இன்னிக்கு நைட் மாமாக்கு கில்மா தான். இப்பவே போய் நல்ல ஒரு குளியல் போட்டுட்டு வரேன்டி என் செல்லக்குட்டி” என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி செல்லப் போனவன் தனது போன் ரிங் ஆகும் சத்தத்தில் டேபிள் மீது வைத்திருந்த போனை எடுத்துப் பார்த்து, “சரண் தான் கால் பண்றான். இந்த ராத்திரி வீட்டில் இருந்துட்டு எதுக்கு போன் பண்றான்னு தெரியலையே” என்று தன்னை பார்த்துக் கொண்டிருந்த பாரதியை பார்த்து சொல்லியவனுக்கு, “அத ஆன் பண்ணி பேசுங்க உங்களுக்கே தெரியும் அவர் எதுக்கு கால் பண்ணினார்னு” என்றாள் பாரதி

“வரவர உனக்கு குசும்பு அதிகமாயிட்டுடி அப்புறமா உன்ன வச்சிக்கிறேன் இரு” என்று அவளை மிரட்ட அதற்கு படுக்கையில் அமர்ந்திருந்து அவனைப் பார்த்து ஒழுங்கு காட்டினாள் பாரதி.

“ அடிங்க இருடி வரேன்” என்று சிரிப்புடன் அவளை மிரட்டி விட்டு அதனை ஆன் செய்து காதில் வைக்க அதில் கூறப்பட்ட செய்தியில் அவன் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது.

 அவன் முகத்தையே பார்த்திருந்த பாரதி, “என்னாச்சு மாமா ஏன் மாமா முகம் இப்படி வாடி இருக்கு. சரண் அத்தான் என்ன சொன்னாங்க” என்றாள் அவனை நெருங்கி வந்து

“ அது அத்தை அத்…தை அத்தை..க்கு” என்று அவன் திணற

“ அம்மாக்கு என்ன மாமா சொல்லு மாமா ஏன் அமைதியா இருக்க அம்மாவுக்கு என்ன ஆச்சு சொல்லு மாமா” என்று அழுகையுடன் அவன் சட்டையை பிடித்து கேட்டாள் பாரதி.

“ அத்தைக்கு ஒன்னும் இல்ல லைட்டா மயக்கம் போல ஹாஸ்பிடல் சேர்த்து இருக்காங்க வா போலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு இந்திராவை சேர்த்திருக்கும் ஹாஸ்பிடல் நோக்கி காரில் சென்றவனின் மனதில், “அத்தைக்கு எப்பவும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது போல. இப்பதான் சந்தோசமா இருக்கேன்னு என்கிட்ட சொன்ன இனி எப்படி தான் நடக்க போறத தாங்க போறாளோ தெரியலையே முருகா” என்று தனது அருகே உள்ள சீட்டில் அமர்ந்து எதுவும் தெரியாமல் அழுது கொண்டிருந்த தனது மனைவியை பார்த்து மனதில் நினைத்துக் கொண்டான் திரு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!