Skip to content
Post Views: 832
“கொஞ்சம் அமைதியா இருங்க. ப்ளீஸ் சத்தம் போடாதீங்க” என்று அந்த கூட்டத்தை பார்த்து திட்டிவிட்டு அவர்கள் அமைதி ஆகாததால், “உங்களுக்கு எல்லாம் அவரு வந்தா தான் சரியா இருக்கும்” என்று திட்டிக்கொண்டு, “இந்தம்மா இப்ப ஏன் அழுற அதான் பண்ண வேண்டிய தப்பெல்லாம் பண்ணிட்ட இல்ல. மாட்டிகிட்ட உடனே அழுகிறாயா என்ன இப்ப எங்களோட இன்ஸ்பெக்டர் வருவாரு அவருக்கு நீ என்ன பதில் சொல்றனு நாங்களும் பார்க்கோம்” என்றார் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தனது எதிரே அனைத்து குற்றங்களையும் செய்து விட்டு ஒன்றும் தெரியாது போல் அழுது கொண்டு இருந்த அக்கா தங்கையை பார்த்து
“ஐயா எனக்கு ஒன்னும் தெரியாது ஐயா எல்லாம் இவ தான்யா பண்ணா. எல்லாத்துக்கும் காரணம் இவ தான்யா. எனக்கு ஒன்னும் தெரியாது என்ன விட்டுருங்க ” என்று சொல்லி அழுதாள் அக்கா.
“எனக்கு ஒன்னும் தெரியாதும்மா இப்ப இன்ஸ்பெக்டர் வருவார் அவர்கிட்ட நீங்க என்னாலும் பேசிக்கோங்க” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அங்கே வந்து ஜீப்பை பார்த்து அதன் அருகே சென்றான்.
Advertisement
ஜீப்பில் இருந்து இறங்கிய திரு தனக்கு எதிரே வந்த சுப்புராஜ் பார்த்து, “என்ன சுப்பு ஏதாச்சும் சொன்னாங்களா இல்ல இனி தான் சொல்ல வைக்கணுமா”
“அந்த அக்கா தங்கச்சி இல்ல அக்காவுக்கு எதுவும் தெரியாதாம் சார் எல்லாத்துக்கும் காரணம் தங்கச்சி தானா” என்றான் நக்கலாக
Advertisement
“ஓ அப்படி சொல்றாங்களா சரி வாங்க நம்ம பேசி பார்ப்போம்” என்று அவர்களின் அருகே சென்றவன், “எதுக்கு சுப்பு இவ்வளவு கிரவுடா இருக்கு எல்லாரையும் போக சொல்லுங்க இங்க என்ன டிராமாவா காட்டுறாங்க” என்றான் சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்து கடுப்பாக
Advertisement
“சொன்னா கேட்க மாட்டாங்க சார்”
“ என்ன சுப்பு சொல்றீங்க அடுத்து இன்ஸ்பெக்டர் ஆகனும் நெனப்பு இருக்கா இல்லையா இந்த கூட்டத்தை உங்களால் கண்ட்ரோல் பண்ண முடியாதா” என்றான் கடுப்புடன்
அவன் சொல்லியதை கேட்டு தலை குனிந்து நிற்கிறான் சுப்பு.
Advertisement
“என்ன சுப்பு நீங்க போலீஸ் இவ்வளவு மென்மையா இருக்காதீங்க சொன்னா கேக்குறீங்களா” என்றவன் சுற்றிப் பார்த்தான். அனைவரும் தங்களுக்குள்ளே தன்னை நீதிபதியாக நினைத்துக் கொண்டு குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு சத்தமாக, “ஹலோ ஜட்ஜஸ் எல்லாரும் உங்களோட தீர்ப்பு சொல்லி முடிச்சிட்டீங்கன்னா இப்ப நான் விசாரணை தொடங்கலாமா இல்ல நீங்க பேசி முடிக்கும் வர வெயிட் பண்ணட்டுமா இல்ல அந்த வேலையும் நீங்களே பாக்கீங்களா ” என்றான் நக்கலாக”
அவனின் குரலில் எல்லோரும் அமைதியாகி விட, “இப்ப சொல்லுங்க சுப்பு என்ன கேஸ்”
“அது வந்து சார் இந்த அக்கா தங்கச்சில தங்கச்சி ஒரு முஸ்லிம் வீட்ல வேலைக்கு சேர்ந்து இருக்காங்க. அந்த வீட்டுல இந்தம்மா இந்த அம்மாவோட புருஷன் இறந்துட்டாங்க இவங்களோட ரெண்டு பசங்க வெளிநாட்டில் வேலை செஞ்சு அங்கே செட்டில் ஆயிட்டாங்க. இந்த அம்மா மட்டும் தனியா இங்க இருக்கறதுனால இவங்க அவங்களுக்கு கூடமாட ஒத்தசைக்கு வேலை செஞ்சிட்டு இருந்திருக்காங்க. இந்தம்மா இவங்க மேல வச்ச நம்பிக்கை இல்ல வீட்டுல உள்ள எல்லா பொருளையும் இவங்கள நம்பி விட்டுட்டு தன்னோட மகனை பார்க்க வெளிநாட்டுக்கு போய் இருக்காங்க போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வந்து பார்த்தா இவங்க லாக்கர்ல இருந்த தங்க கட்டில 30 தங்க கட்டிய காணும். இவங்க கிட்ட கேட்டு இருக்காங்க அவங்க நான் எடுக்கவே இல்லைன்னு தன்னோட பையன் மேல சத்தியம் பண்ணியிருக்காங்க அத உண்மை நெனச்ச இவங்க நம்மகிட்ட வந்து கேஸ் கொடுத்தாங்க நம்ம விசாரிச்சதில்ல இந்த தங்கச்சி தான் அங்க இருந்த தங்க கட்டி எடுத்துட்டு வந்து அக்கா கிட்ட கொடுத்திருக்காங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த தங்கத்தை உருக்கி அக்காவோட பொண்ணுக்கு நகை செஞ்சு லாக்கர்ல வச்சிருக்காங்க. அதோடு மட்டுமில்லாமல் அந்த நகைய பேங்க்ல அடமானம் வச்சு அதுல வந்த காசு வச்சு இவங்க மீட்டர் வட்டி வேற விட்டிருக்காங்க சார். அதுவும் இந்த நகை திருட்டுப் போய் 6 மாசம் ஆகுது எங்க உடனே வெளியே எடுத்தா கண்டுபிடிச்சிருவாங்கனு 5 மாசம் வெயிட் பண்ணி இப்ப இந்த வேலைய பார்த்து இருக்காங்க சார்” என்றார் சுப்புராஜ்.
“ கில்லாடிங்க தான்.சரி இப்போ ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க”
“இந்த நகைய எடுத்தது தங்கச்சி தானாம் அக்காவுக்கு இதுல எந்த சம்பந்தமும் கிடையாதா அதனால் அக்காவ வெளியே விடனுமா சார்”
“ ஆமா சார் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது எல்லாம் இவ பண்ணுன வேலை சார். எனக்கு ஒண்ணுமே தெரியாது என்ன விட்ருங்க சார்” என்றாள் அக்கா
“ ஓ அப்படியா உங்களுக்கு ஒன்னும் தெரியாது அப்படி தான”
“ஆமா சார் எனக்கு ஒண்ணுமே தெரியாது”
“ ஆமாம்மா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. அந்த லாக்கர் ல இருக்குற 30 சவரன் நகை உங்க பொண்ணுக்கு தான”
“அது வந்து சார்”
“என்னம்மா அது உங்க பொண்ணு நக தான இல்ல வேற யாருக்கும் மா”
“ஆமா சார் ஆனா அது திருட்டு பொருள்னு எனக்கு தெரியாது சார்”
“ ஏய் அரஞ்சனா மூஞ்சி பேந்துட்டு போயிரும் பொய் மேல பொய் சொல்லுறியா. பொம்பளனு பார்க்குறேன் இல்லன்னா லாடம் கட்டிடுவேன். இத்தனை மாசம் அந்த பணத்துல தான நல்லா அனுபவிச்ச இப்ப என்ன இவ மாட்டிட்டான்னு பொய் சொல்றியா. இந்த நடிப்பு எல்லாம் வேற யார்கிட்டயும் வச்சுக்க” என்று அக்காவை திட்டி விட்டு அழுது கொண்டு இருந்த தங்கையை பார்த்து, “போயும் போயும் இந்த அக்காவுக்காக கஷ்டப்பட்டு திருடிட்டு வந்தியா எப்படி மாட்டிக்கிட்டோம்னு உன் மேல பழிய தூக்கி போடுறா பாரு” என்று திட்டினான். அதில் தலை குனிந்து கொண்டு இருவரும் மேலும் அழுதனர்.
“அது சரி இந்த ரெண்டு பேரையும் பார்த்தா அப்படி ஒன்னும் அறிவுள்ள மாதிரி தெரியலையே இந்த ஐடியாவை யார் இவங்களுக்கு கொடுத்தது”
“எல்லாம் அந்த அக்காவோட மகன் தான் சார்” என்று கூட்டத்தில் எப்படியும் தன்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்காவின் மகனை பிடித்து திருவின் முன்பு நிறுத்தினான் சுப்பு.
அவன் கையைப் பிடித்து இழுத்து தோளில் கை போட்டுக்கொண்டு, “ஓ சார் வேலை தானா எல்லாம் உங்க பேர் என்ன சார்” என்றான் தோளிலிருந்து கையால் கழுத்தில் லாக் செய்து கொண்டு
“சார் விட்டுருங்க சார் எனக்கு ஒன்னும் தெரியாது சார்” என்று அவன் கதறலை கருத்தில் கொள்ளாமல்
“ஓ உங்களுக்கு ஒன்னும் தெரியாது அப்படித்தானே சார். சரி நேத்து மார்வாடி கிட்ட ஒரு தங்க பிஸ்கட் விற்க போனியே அது எங்க இருந்து வந்தது சொல்லுடா எங்கிருந்து வந்துச்சு ” என்றான் கழுத்தை இறுக்கிக் கொண்டு
“ சார் நீங்க விடுங்க சார் நான் உண்மைய சொல்றேன்” என்றான் திணறலாக
“சரிடா சொல்லு” என்று அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்க
அதுதான் சமயம் என்று கூட்டத்தை நோக்கி அவன் ஓட
அதே நேரத்தில்,
“ஏய் யாருடி அது இவ்ளோ சூப்பரா பேசுறது வாடி உள்ள போய் யாருன்னு பாத்துட்டு வருவோம்” என்று சொல்லி கீதாவை கூட்டத்தினுள் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் பாரதி.
“வேண்டாம்டி சொன்ன கேளு அங்க ஏதோ பிரச்சினை கூட போலீஸ் எல்லாம் வந்திருக்காங்க நம்ம உள்ள போக வேண்டாம் டி” என்று அவள் சொல்லியதை காதில் வாங்காமல் இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
அவள் உள்ளே வந்து நிற்க அந்த சமயத்தில் அவளை நோக்கி ஓடிவந்தவன் அவளின் கையைப் பிடித்து இழுத்து தனது சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த சின்ன சைஸ் பாக்கெட் கத்தியை எடுத்து அவளின் கழுத்தில் வைத்து, “சார் சொன்னா கேளுங்க நான் ஒரு தப்பும் பண்ணல என்னை விட்ருங்க இல்லனா இந்த பொண்ணோட கழுத்த நான் அறுத்துடுவேன்” என்று திருவை மிரட்டினான்.
“ஷிட் இதுக்கு தான் சொன்னேன் க்ரௌட் கிளியர் பண்ணுங்க நீங்க கேட்டீங்களா இப்ப பாருங்க அந்த பொண்ணோட கழுத்துல போய் கத்திய வச்சிருக்கான்” என்று சுப்புவை திட்டி விட்டு அவனின் அருகே மெல்லமாக நடந்து வந்து, “சரிடா நான் ஒன்ன எதுவும் பண்ணல விட்டுறேன் அந்த பொண்ணோட கழுத்தில் இருந்து கத்திய எடு” என்று அவனிடம் பேசிக்கொண்டு அவன் அருகில் சென்றான்.
“சார் நெஜமா என்ன விட்டுவீங்களா. நான் எந்த தப்பும் பண்ணல சார் இப்படி ஒரு திருட்டு நடந்ததுனு எனக்கு தெரியாது சார். தயவு செஞ்சு என்னை விட்ருங்க சார் என்ன ஒன்னும் பண்ணாதீங்க” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும்போதே அவர்களுக்கு அருகில் வந்த திரு அவன் கையில் ஒரு அடியை போட்டு கத்தியை கீழே விழ செய்து அவனின் கையை பின்னாடி மடக்கி பிடித்தான்.
“ஏன் டா தப்பு பண்ற எல்லா பேரும் கடைசியா சொல்றது நான் எந்த தப்பும் செய்யல சார் தான. உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் முன்னாடியே நீ இப்படி பண்ணுவ. உள்ள வச்சு ஒன்ன லாடம் கட்டினா தான் சரிப்பட்டு வருவ. சுப்பு இவனை கூட்டிட்டு போயி ஜீப்ல ஏத்துங்க அப்படியே அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஏத்துங்க” என்று சொல்லி அவனை சுப்புவிடம் ஒப்படைத்துவிட்டு தனது முன்னே இன்னும் அதிர்ச்சி விளங்காமல் நின்றவளை பார்த்து, “சுப்பு அப்படியே ஜீப்ல தண்ணி பாட்டில் இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க” என்றான்.
சுப்பு வந்து தண்ணீர் பாட்டில் தந்தவுடன் அதனை வாங்கி சிறிது தண்ணீரை கையில் ஊற்றி அவளின் முகத்தில் அடித்தான். அதில் தெளிந்து தனது முகத்தில் தண்ணீர் ஊத்தியவனை பார்த்து முறைக்க, “என்ன முறைப்பு இப்ப வேண்டி கிடக்கு ஆள பாரு என்ன கூட்டம் நடந்தாலும் அத வந்து வேடிக்கை பார்க்க வேண்டியது. கூட்டமா வந்து பாக்க இங்க என்ன டிராமாவா நடத்துறாங்க. படிச்ச பொண்ணு தான கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா படிக்காதவங்க தான் வந்து வேடிக்கை பார்க்குறாங்கனா உங்களுக்கு என்ன வந்துச்சு. ஒரு பொம்பள பிள்ளைக்கு தன்னை சுத்தி நடக்கிறது எல்லாம் தெரிய வேண்டாமா அப்படி என்ன வேடிக்க வேண்டி கிடக்கு. கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா உன்னோட உயிர் உனக்கு இல்ல. இனியாவது பரக்க பாக்காம அறிவோடு இருக்க பாரு” என்று அவளை திட்டி விட்டு ஜிப்பில் ஏறி அவளை ஒரு முறை பார்த்துவிட்டு சென்றான்.
அவன் திட்டி சென்றது கூட தெரியாமல் அவமானத்தில் அசையாமல் நின்றவளின் அருகே வந்த கீதா அவளின் தோளில் கை வைத்து அசைக்க, “ஏன் டி இந்த ஆளுக்கு என்ன பார்த்தா என்னன்னு தெரியுது. சுத்தி எத்தனை பேர் நின்னு வேடிக்கை பாக்குறாங்க அவங்க எல்லாம் விட்டுட்டு என்ன மட்டும் திட்டிட்டு போறாரு ஆளையும் மூஞ்சியும் பாரு இனிமே இந்த ஆள பார்க்கவே கூடாது டி. போயும் போயும் இவர் குரல் கேட்க உள்ள வந்தேன் பாத்தியா என்ன சொல்லணும். கடவுளே இனி ஜென்மத்துக்கும் இந்த ஆளு மூஞ்சிய நான் பார்க்கவே கூடாது” என்றவளின் வேண்டுதலுக்கு கடவுள் செவி சாய்க்காமல் விட அன்றிலிருந்து சரியாக மூன்று மாதம் கழித்து திருமதி. திவ்ய பாரதி திருகுமரன் ஆனாள் அவள்.
error: Content is protected !!