Skip to content
Post Views: 945
“ஏன் பா என்னாச்சி இவ்வளவு கோவமா இருக்கீங்க. அப்படி என்ன பண்ணாங்க ரெண்டு பேரும்” என்றான் திரு.
“அத ஏன் டா கேக்குற”
“மிஸ்டர். திருப்பூர் குமரன் அவர் தான் சொல்லுறாரு இல்ல கேக்காதீங்க”
“டேய்”என்று அவர் கத்த
Advertisement
“மகனே அப்படியெல்லாம் கத்தாத அப்புறம் பெஷர் அதிகமாகி ஹார்ட்அட்டாக் வரும். எனக்கு இருக்கிறதே ஒரே பிள்ள உனக்கு ஏதாவதுனா நான் என்ன பண்ணுவேன்” என்றார் செண்டிமெண்டாக
“என்ன மாமா சொல்லுறீங்க ஹார்ட் அட்டாக்கா”என்றாள் அதிர்ச்சியாக புஷ்பா.
“ஆமா ப்ளவர் இப்பல்லாம் யாருக்கு என்ன வரும்னு சொல்ல முடியாது. அதனால மிஸ்டர். ப்ளவர கொஞ்சம் நல்லா பாத்துக்கோ மா”
Advertisement
“ஆமா மா அவன பாரு எப்படி இருக்கானு எப்படி வியர்த்து இருக்கு பாரு இதுல தொப்பை வேற எதுக்கும் அவன கூட்டிட்டு போய் ஃபுல் பாடி செக்கப் பண்ணுமா” என வேதாச்சலம் மண்ணில் வியர்வை சிந்தி உழைத்து முறுக்கிய உடலுடன் நின்ற தனது மகனை பார்த்து ஏதோ நோயாளியை சொல்வது போல் சொன்னார்.
Advertisement
“ஆமாம்மா என் பிரண்டோட அப்பாவுக்கு கூட இப்படி தான் இருந்துச்சு அவங்க கேர்லெஸ்ஸா விட்டாங்க இப்ப அவர் பக்கவாதத்துல இருக்கிறார் தெரியுமா” என்று சரண் மேலும் பயம் கூட்ட
“என்னங்க வாங்க இப்பவே போய் நம்ம டாக்டர் கிட்ட ஒரு ஃபுல் பாடி செக்கப் பண்ணிடுவோம் நீங்க இல்லனா என்னால எப்படி…” என்று பயந்து அழத்தொடங்கி விட்டார் புஷ்பா.
“ஏன் டி அவங்க உன்ன பயம் காட்டுகிறாங்க. உனக்கு அது கூட தெரியலையா. நல்ல என்ன பாருடி என்ன பாத்தா நோயாளி மாதிரியா உனக்கு தெரியுது” என்று படிக்கட்டு போல வலிமையாக இருந்த உடலை காட்டினார் விநாயகம்.
Advertisement
“இல்ல நான் நம்ப மாட்டேன் நீங்க வாங்க நம்ம போய் ஃபுல் செக்கப் பண்ணிக்கலாம்” என்று அழுகையுடன் அவரை வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்தாள்.
“ஏய் சொன்னா கேளுடி எனக்கு ஒன்னும் இல்ல பாரு நல்லா தான் இருக்கேன். என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க உங்களால இவ அழறா பாருங்க. திரு நீயாவது சொல்லுடா உங்க அம்மாக்கு”
“அம்மா இங்கே பாருங்க அவங்க ரெண்டு பேரும் சும்மா பொய் தான் சொல்றாங்க. அப்பா நல்லா ஆரோக்கியமா தான் இருக்கார். உங்க திருப்திக்கு வேணா நாளைக்கு நம்ம பேமிலி டாக்டர்க்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்குகிறேன். நீங்களும் அப்பாவும் போய் ஃபுல் பாடி செக்கப் பண்ணிக்கோங்க” என்று தனது அன்னையை தோளோடு அணைத்து சமாதானம் செய்தவன் தனது தாத்தா மற்றும் தம்பியை முறைத்து, “இப்ப நீங்க பண்ணதுக்கு பனிஷ்மென்ட் நாளைக்கு நீங்களும் ஃபுல் பாடி செக்கப் பண்ணுகிறீங்க. டேய் இவங்க எல்லாத்தையும் நீ தான் கூட்டிட்டு போறேன்” என்றான் கட்டளையாக
“போடா என்னால முடியாது. அதுவும் அந்த ஹாஸ்பிடலுக்கு எல்லாம் நான் போக மாட்டேன்”
“என்ன ஜீனியர் இப்படி கழட்டி விட பாக்குறீங்க”
“போங்க சீனியர் உங்களுக்காக கூட அந்த ஹாஸ்பிடலுக்கு நான் வரமாட்டேன்”
“டேய் எனக்கு தெரியாது நீ தான் போற” என்றான் அழுத்தமான குரலில்.
சரி என்பது போல் தலையை ஆட்டிவிட்டு, “அங்க போனா அவ வேற இருப்பாளே ஐயோ கடவுளே நாளைக்கு என்னை எப்படியாவது காப்பாத்திரு” என்று தனக்குள் பேசிக் கொண்டான்.
“பாத்தியாப்பா இவங்க பண்ண கலாட்டாவால நான் சொல்ல வந்தத மறந்துட்டேன்” என்றவர் தனது தந்தை மற்றும் மகனை முறைத்துக் கொண்டு, “டேய் இன்ஸ்டால என்னன்னு சொல்லி போட்டீங்க” என்றார் தனது இளைய மகனை பார்த்து கோபமாக
“ நாங்க என்ன போட்டோம். நாங்க ஒன்னும் போடலையே. அப்படியே போட்டாலும் நாங்க ஆயிரம் போடுவோம் நீங்க எதை பத்தி கேள்வி கேக்குறீங்க தெளிவா சொல்லுங்க என்ன நடந்ததுனு”
“ஓ சார் தெளிவா என்ன நடந்ததுன்னு சொன்னா தான் பதில் சொல்வாரோ”
“என்ன சீனியர் என்ன கேள்வின்னே தெரியாம எப்படி பதில் சொல்ல முடியும் உங்க புள்ள கிட்ட தெளிவை கேள்வி கேட்க சொல்லுங்க” என்றான் தெனாவட்டாக.
“டேய் அப்பாகிட்ட எப்படி பேசுற மரியாதை பேசு டா. எல்லாம் நீங்க கொடுக்குற இடம் தான் தாத்தா. அப்ப நீங்க டென்ஷன் ஆகாம என்ன கேட்கணுமோ அதை தெளிவாக கேளுங்கள் அவன் பதில் சொல்லுவான்” என்று மூவரையும் சமாதானம் செய்தான் திரு.
“சரி டா நான் சொல்றேன்”
“பார்ரா நாங்கள் கேட்டா பதில் சொல்ல மாட்டாரு அவருக்கு அவர் பிள்ளை கேட்டா தான் பதில் வரும் பாருங்க சீனியர் உலகம் எப்படி சுத்துதுன்னு”
“டேய் நீ கொஞ்ச நேரம் சும்மா இருடா அப்பா நீங்க சொல்லுங்க”
“ஒரு மாசத்துக்கு முன்னாடி நீ என்ன சொன்ன திரு நம்ம தோட்டத்துல பாதியா பிரிச்சி கார்டன் வைக்க சொன்னியா இல்லையா”
“ஆமாப்பா சொன்னேன் அதுக்கு இப்ப என்னாச்சி”
“சொல்லுறேன் டா அந்தக் கார்டனை இதுங்க ரெண்டும் சேர்ந்து லவ்வர்ஸ் பார்க்னு சொல்லி இன்ஸ்டால ஸ்டோரி போட்டு இருக்காங்க. அத பாத்துட்டு நம்ம ஊருக்கு பக்கத்துல ஊர்ல உள்ள எல்லா லவ்வர்ஸும் இன்னைக்கு நம்ம தோட்டத்துக்கு வந்துட்டாங்கடா. வந்தது மட்டும் இல்லாம இது லவ்வர்ஸ் பார்க் தான நாங்க கொஞ்ச நேரம் லவ் பண்ணிக்குறோம்னு வேற கேக்குறாங்க டா. இதுல 40 வயசுக்கு மேல உள்ளவாங்க வேற எனக்கு ஒரு லவ்வர் கிடைக்குமா கேக்குறாங்க டா ” என்றார் நொந்து போய் மனிதர்.
அதில் சுற்றி இருந்த அனைவரும் சிரித்து விட அனைவரையும் முறைத்துப் பார்த்தான் திரு.
“சீனியர் என்னனு சொல்லி ஸ்டோரி போட்டிங்க” என்று மெதுவாக தனது தாத்தாவிடம் கேட்டான் சரண்.
“அ..து வ..ந்து”
“என்ன வந்து போய் இழுக்காம என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க வேதா பாய்” என்றான் பல்லை கடித்துக் கொண்டு
“அது ஒன்னும் இல்லடா ஃப்ளவர் கார்டன் இங்கு அனைத்து வகையான ஃப்ளவரும் கிடைக்கும்னு போடுறதுக்கு பதிலா லவ்வர்ஸ் கார்டன் அனைத்து வகையான லவ்வர் இங்கே கிடைக்கும் அப்படின்னு போட்டுட்டேன்” என்று சொல்லி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டார் வேதாச்சலம்.
“சீனியர்” என்று பல்லை கடிக்க
“டேய் என்னடா குசுகுசுன்னு ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க என்ன நடந்துச்சு சொல்ல போறீங்களா இல்லையா” என்றான் கோபமாக திரு.
அவன் கேட்டதும் தனது சீனியரை முறைத்து விட்டு திருவைப் பார்த்து, “அது ஒன்னும் இல்லடா சீனியர் சின்னதா ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிட்டாரு”
“அப்படி என்னடா ஸ்பெல்லிங் மிஸ்டேக் சொல்லு கேட்போம்” என்றான் கார்த்திக் கேலியாக
அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு, “ அது சீனியர் கண்ணு தெரியாம பிளவர் கார்டன் போடுறதுக்கு பதிலா லவ்வர்ஸ் பார்க்னு போட்டுட்டாங்கடா” என்றதும் தன்னை கண்ணு தெரியாமல் என்று சொல்லியதால் கோபமான வேதாச்சலம், “டேய் என்னடா யாருக்கு கண்ணு தெரியாது. உங்களுக்கு தான்டா கண்ணு தெரியாது பீர் அடிச்சு அடிச்சு உங்க கண்ணு மழுங்கி போச்சு என்ன பாத்து கண்ணு தெரியாதுன்னு சொல்லுவியா டா”
“என்ன பீர் அடிச்சா. டேய் அந்த பழக்கம் வேற உங்களுக்கு எல்லாம் இருக்கா” என்ற புஷ்பா தனது இளைய மகனையும், அவன் நண்பர்களையும் முறைத்துப் பார்த்தார்.
“இப்படி போட்டு குடுத்துட்டீங்களே சீனியர்” என்று அவர்கள் தாத்தாவை பார்த்து முறைக்க
“சாரிடா ஜூனியஸ் ஏதோ உணர்ச்சி வேகத்துல உண்மையை சொல்லிட்டேன் மன்னிச்சுக்கோங்க” என்றார் கொஞ்சலாக
“டேய் உண்மைய சொல்லுங்கடா அங்க என்னடா தாத்தாவை முடிச்சிட்டு இருக்கீங்க” என்று புஷ்பா அதட்ட
அவர்கள் பதில் சொல்வதற்கு முன் திருவின் மொபைல் அடிக்க, “ஹலோ சொல்லுங்க சுப்புராஜ்”
“…..”
“சரி அவங்கள அங்கயே பிடிச்சு வைங்க நான் இதோ வரேன்” என்று சொல்லி ஃபோனை வைத்தான் திரு.
“அம்மா அர்ஜெண்ட் கேஸ் விஷயமா வெளியே போறேன் நைட் நான் வர லேட் ஆகும் அதனால சாப்பிட்டு நீங்க தூங்குங்க எனக்காக வெயிட் பண்ணாதீங்க. டேய் நீங்களும் டிரஸ் எடுத்துட்டு இங்க வந்து தங்கிருங்கடா. அம்மா அப்பா தாத்தா நான் போயிட்டு வரேன்” என்று சொல்லி தனது தம்பி மற்றும் அவனின் நண்பர்களை பார்த்து தலையை ஆட்டி விட்டு அர்ஜெண்டாக வெளியே கிளம்பி சென்றான் திரு.
error: Content is protected !!