Skip to content
Post Views: 912
“இங்க பாருங்க சீனியர் என்னால இந்த ஹாஸ்பிடலுக்குள்ள வர முடியாது அதனால நீங்க மூணு பேரும் உள்ள போய் செக் அப் பண்ணிட்டு கூப்பிடுங்க நான் இந்த கார்ல வெயிட் பண்ற ஓகே”என்று தனது குடும்பத்தை ஹெல்த் செக்கப்புக்காக ஹாஸ்பிடலுக்கு கூட்டி வந்த சரண் தனது தாத்தாவிடம் சொன்னான்.
“இதுங்க ரெண்டுக்கும் வேற வேலையே இல்ல வா நாம உள்ள போவோம்” என்று இருவரையும் திட்டி விட்டு விநாயகம் தனது மனைவியை கூட்டிக் கொண்டு உள்ளே சென்றார்.
“என்ன ஜூனியர் சீனியருக்கு ஹாஸ்பிடல்னா அலர்ஜி உனக்கு தெரியாதா உள்ள வாடா” என்று கெஞ்சினார் வேதாச்சலம்.
“யாரு உங்களுக்கு ஹாஸ்பிட்டல் அலர்ஜி. ம்…. எனக்கு தெரியாது நினைக்காதிங்க சீனியர் உங்க தில்லு முள்ளு எல்லாம் எனக்கு நல்லா தெரியும். அதனால மரியாதையா உள்ள போங்க. உங்களோட தால்(Dhal)இங்க வேகாது போங்க சீனியர்” என்றான் அவரின் வலையில் சிக்காமல்
Advertisement
“என்ன ஜீனியர் காலையிலேயே ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்களா எந்த பக்கம் பால் போட்டாலும் சூப்பராக பாக்கெட் பண்றீங்க” என்றார் சரணாகதியாக
“என்ன சீனியர் அதுக்குள்ள சரண்டர் ஆயிட்டீங்க” என்றான் நக்கலாக
“ வேற என்ன பண்ண வரவர என் ஜூனியருக்கு மூளை அதிகமாயிட்டே வருது நான் என்ன பண்ண” என்று அலுத்து கொண்டார்.
Advertisement
“போங்க சீனியர் இதெல்லாம் நாங்க எவ்வளவோ பாத்தாச்சு இதுக்கு அப்புறம் எல்லாம் என்னை எதுவும் உங்களால பண்ண முடியாது போங்க இவ்வளவு நேரம் உங்களுக்காக ஒருத்தி வெயிட் பண்ணிட்டு இருப்பா அவ கூட சேர்ந்து எல்லாரும் செக்கப்பும் முடிச்சிட்டு சீக்கிரமா வர வேலையை பாருங்க” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது சாண்டல் கலர் புடவையில் கையில் தனது டாக்டர் கோட்டை பிடித்துக் கொண்டு ஐந்தடி உயரத்தில் ரோஜாப்பூ நிறத்தில் தோல் வரை புரளும் தலை முடியை சிறிது எடுத்து கிளிப் போட்டு அதில் சிறிதளவு மல்லி பூவை சூடி முகத்தில் சிறிய கரும்பொட்டை வைத்து அவர்கள் முன்னாடி புன்னகை முகமாய் வந்து நின்றாள் சாரா.
Advertisement
“ஹாய் வேதா டார்லிங் எப்படி இருக்கீங்க” என்றாள் புன்னகையுடன் சாரா
“எது இந்த கிழ போல்ட் டார்லிங்கா” என்று வாய்க்குள் கடுப்புடன் முணுமுணுதான் சரண்
அதற்குத் தாத்தா “சாரா குட்டி நான் சூப்பரா இருக்கேன் டா நீ எப்படி இருக்க”
Advertisement
“எது குட்டியா சீரியர் வரவர உனக்கு கண்ணு சரியா தெரியல பாருங்க மல மாடு மாதிரி நிக்கிறா இவ உனக்கு குட்டியா. வேணா அமுல் பேபி இல்ல பருத்திமுட்டனு சொல்லு சீனியர் ” என்று தாத்தாவிடம் அவளின் புஷ்டியான தேகத்தை பார்த்து கலாய்த்தான் சரண்.
“டேய் எதுக்குடா இவள கலாய்க்க அவ என்ன அவ்வளவு குண்டாக இருக்கா ரொம்ப ஓவரா தான் பேசுறடா நீ” என்று அவனைக் கண்டித்தார் வேதாச்சலம்
“என்ன வேதா டார்லிங் இங்க நின்னு வெட்டி பசங்க கூட பேசிட்டு இருக்கீங்க”என்றாள் நக்கலாக சரணைப் பார்த்து
“சீனியர் தேவயில்லாம என்னை பத்தி யாரும் பேச கூடாத.அதுவும் டாக்டருக்கு படிச்சிட்டு சும்மா பொழுது போக்குற ஆளெல்லாம் பேசவே கூடாது”என்றான் அவளை சீண்டும் விதமாக.
“வேதா டார்லிங் பாருங்க நான் சும்மா பொழுது போக்குற டாக்டரா”
“பின்ன இல்லையா பொழுது போகாம தான இங்க நின்னு வெட்டியா பேசிட்டு இருக்க அப்போ நீ வெட்டி டாக்டர் தான”
“யாரு நான் வெட்டி டாக்டரா நீ தான்டா வெட்டி ஆபிஸர்” என்றாள் கோபமாக
“யாரைப் பார்த்து வெட்டி ஆபிஸர் சொல்ற என்ன நம்பி ஒரு ஆபீஸே இருக்கு தெரியுமா. இப்ப கூட எத்தனை பேர் எனக்காக வெயிட் பண்ணுறாங்க தெரியுமா. என்னோட ஒத்த கையெழுத்துக்கா எத்தனை பேர் காத்துட்டு இருப்பாங்க தெரியுமா” என்றான் கெத்தாக
“ஓ தெரியுமே அது கூட எத்தனை பேர் உங்களை அசிங்க அசிங்கமா பேசுறாங்கன்னு தெரியும். உங்களோட கம்பெனி அழிஞ்சு போகணும்னு சொல்லி எத்தனை பேர் வேண்டுறாங்கனு எனக்கு தெரியும்”
“ஏய் என்ன ஓவரா பேசுற. நாங்க என்ன அடுத்தவங்களை ஏமாத்தியா பிழைக்கிறோம் விட்டா ஓவரா பேசிட்டு போற”
“ஏமாற்றி பிழைக்கிறீங்களா தெரியாது ஆனா அடுத்தவங்களோட கண்ணீரில பிழைக்கிறீங்க இது எனக்கு சுத்தமா பிடிக்கல எப்ப இத நிறுத்த போறீங்க” என்றாள் அழுத்தமாக
“ஏய் போடி உன் கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா இப்ப என்ன அந்த கம்பெனி நாங்க மூடனும் அதுக்கா தான நீ இப்படி எல்லாம் பண்ற.ஆனா நீ என்ன பண்ணினாலும் அந்த கம்பெனி நாங்க மூட மாட்டோம். என்னோட மாமாவுக்கு சப்போட்டா நான் பக்கபலமா எப்பவும் இருப்பேன். உன்னால ஆனத பாத்துக்கடி போடி” என்றான் கோபமாக
“ஓ இதனால நம்ம ரெண்டு பேருக்குள்ள பிரிவு வந்தாலும் நீ அவருக்கு தான் சப்போர்ட் பண்ணுவ அப்படித்தான”
“ஆமான்டி உன்ன இழக்க வேண்டியது வந்தாலும் நான் என்னோட மாமாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்” என்றான் உறுதியாக
“பாத்தீங்களா தாத்தா அப்ப இவனுக்கு நான் முக்கியம் இல்ல என்ன பண்ணாலும் அவனோட மாமாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாராம் இப்பவே இப்படி பண்ற இவன கல்யாணம் பண்ணா நான் எப்படி தாத்தா நிம்மதியா வாழ முடியும்” என்று தாத்தாவிடம் முறையிட்டாள் சாரா
“சரி பண்ணாத போ உனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்கள பண்ணு ஓகேவா. இதுக்கு தான் சீனியர் நான் இங்க வர மாட்டேன்னு சொன்னேன். அவன் கேட்டானா பாருங்க எப்படி பேசுறானு இவக்கூட மனுஷன் வாழ முடியுமா போடி உனக்கு யாரை பிடிச்சிருக்கோ கல்யாணம் பண்ணனு. தாத்தா நான் ஆபீஸ் போறேன் உங்கள பிக்கப் பண்ண கார்த்திக் வர சொல்லுறேன்” என்று அவளை திட்டி விட்டு வேதாச்சலத்தின் பதிலை கூட எதிர்பார்க்காமல் தனது வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான் சரண்.
“டேய் சரண் நில்லுடா” என்று தாத்தா கத்த அதை காதில் வாங்காமல் போகும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து, “பாருங்க தாத்தா அவன் எப்படி சொல்லிட்டு போறான்னு. அப்ப இவனுக்கு நான் முக்கியம் இல்லையா” என்றாள் கண்ணீருடன்
அதில் அவளை திரும்பிப் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டு, “ஏம்மா நீ கொஞ்சம் அமைதியா பேசக்கூடாதா. அவனுக்கு முத்துவேலை எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியும் அதே மாதிரி உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு தெரியும் இருந்தும் ஏம்மா இப்படி சண்டை போடுற” என்றார் வேதனையாக
“எல்லாம் தெரியும் தாத்தா இருந்தாலும் எதுக்கு இந்த பைனான்ஸ் பிசினஸ் இவங்களுக்கு. நம்ம கிட்ட இன்னும் வேற தொழிலா இல்ல எதுக்கு தேவை இல்லாம இவங்களோட கண்ணீர்ல நம்ம வாழனும்” என்றாள் ஆதங்கமாக.
“ஏன் மா இப்படி எல்லாம் பேசுற அவங்க ரெண்டு பேரும் ஏதோ ஒரு நல்லது நினைச்சு தான இந்த பிசினஸ் பண்றாங்க அதனால நீ இப்படி பேசினா அவங்க ரெண்டு பேருக்கும் கஷ்டமா இருக்காதா”
“என் முன்னாடியே வந்து சொல்றாங்க தாத்தா உங்க அப்பாக்கு ஏன் இந்த தேவையில்லாத தொழில்னு. இருக்கிற சொத்து உங்களுக்கு போதலையா இன்னும் இன்னும் நிறைய சேர்க்கணுமா அதுக்காக தான் இந்த தொழில் பண்றீங்களான்னு கேவலமா பேசுறாங்க. அதோட சரணையும் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் என்ன லவ் பண்றான்னு சொல்லி ரொம்ப கேவலமா பேசுறவங்க தாத்தா. எனக்கு பிடிச்ச ரெண்டு பேரை எல்லாரும் இப்படி கேவலமா பேசும்போது எனக்கு எப்படி இருக்கும் தாத்தா அது சொன்னா இவங்க புரிஞ்சுக்காம அதையே திரும்பத் திரும்ப பண்றாங்க நானும் என்ன தாத்தா பண்ண முடியும்” என்றாள் வலியுடன்
“மத்தவங்க பேசுவதை பத்தி நீ ஏன் மா கவலைப்படுற இன்னும் நீயே அவங்க ரெண்டு பேரையும் ஒழுங்கா புரிஞ்சுக்கல அதனாலதான் நீ இப்படி எல்லாம் பேசுற அவங்க ரெண்டு பேரும் பத்தி உனக்கு புரியும்போது எல்லாம் உனக்கு தெளிவாகும் அதனால இப்போ ஏதாவது சொல்லி அவங்க மனச கஷ்டப்படுத்தாத” என்று அவளுக்கு அறிவுரை சொன்னார் வேதாச்சலம். அவர் சொல்லியத்தற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக நிற்க, “ சரி வாமா உள்ள போய் செக்கப் பண்ணுவோம்” என்று அவளை அழைத்துக் கொண்டு அந்த ஹாஸ்பிடலுக்குள்ள சென்றார்.
error: Content is protected !!