Skip to content
Post Views: 824
“என்னாச்சி என் தங்கத்துக்கு ஏன் காலையிலேயே இவ்வளவு கோவமா இருக்காங்க” என்றான் ராஜ்குமார் நடுரோட்டில் முகம் சிவந்து கோபமாக திருவை திட்டிக்கொண்டு நின்ற தனது அத்தை பெண்ணை பார்த்து
“ஐ ராஜ் மாமா” என்று அவனை நோக்கி திரும்பியவளின் முகம் நொடியில் புன்னகை முகமாக மாறியது.
“ஐ ராஜ் மாமா இல்ல உன்னோட ஒரே ஒரு மாமாவே தான் என் அத்தை பெத்த ரத்தினமே” என்று அவளைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தவன் கண்கள் ஒரு நொடி அவளின் அருகில் நின்றவளை பார்த்துவிட்டு மீண்டது.
“மாமா” என்று சிணுங்கியவள், “ஏன் மாமா என்ன கலாய்க்க இரு நான் என் அத்தைக்கிட்ட சொல்லிக் கொடுக்கேன்” என்று பொய்யாக அவனை மிரட்டினாள்.
Advertisement
“ஏன் உன்னோட அத்தை கிட்ட மட்டும் சொல்ற உன் பின்னாடி வந்துகிட்டு இருக்கிற உன் தாய்மாமா கிட்டயும் சேர்த்து சொல்லு எனக்கு ஒன்னும் பயம் இல்லப்பா” என்றான் கேத்தாக
“ஐயோ மாமாவா”என்று பயத்துடன் திரும்பி பார்த்துவிட்டு, “அப்பா தப்புச்சேன் நல்ல வேலை இல்லை ஏன் மாமா என்ன ஒரே பயமுறுத்துற” என்று சிணுங்கினாள்.
“ஏய் எதுக்கு இப்படி பயப்படுற உன்னோட மாமா தான என்ன செஞ்சிர போறாருன்னு நீ இப்படி பயந்து நடுங்கற. அத்தைய சொல்லணும் உன்னை ஏன் தான் இப்படி பயந்தாங்கோலியா வளர்த்து வச்சாங்களோ”
Advertisement
“யாரு இவ பயந்தாங்கோலியா அது சரி. அம்மாடி பயந்தாங்கோலி நீ நின்னு உன் மாமாகிட்ட பொறுமையா பேசிட்டு வா நான் காலேஜ் போறேன்” என்று சொல்லி ராஜை முறைத்து பார்த்துவிட்டு வேகமாக நடந்தாள் கீதா.
Advertisement
“என்னாச்சி தங்கம் மேடம் ஏன் இப்படி கோவமா போறாங்க”என்றான் போகும் அவளை பார்த்து கொண்டு
“அதுலாம் ஒன்னும் இல்ல நம்ம தனியா பேசணும் போறா. சரி மாமா கிளாஸ்க்கு
டைம் ஆகிட்டு நான் போறேன்”
Advertisement
“வா தங்கம் நான் உன்ன பைக்ல கூட்டிட்டு போறேன்”
“ஐயோ வேண்டாம் மாமா”
“ஏன் டா என்னோட வர மாட்டியா”என்றான் ஏக்கமாக
“வேற வினையே வேண்டாம் மாமா. நான் உன் பைக்ல வந்து அத யாராவது பாத்துட்டு போய் உங்க வீட்டுல சொன்னா என்ன ஆகும்னு நெனைச்சி கூட பாக்க முடியல”என்றாள் பயத்துடன்
“ஏன் நான் ஒன்னும் யாரையோ கூட்டிட்டு போகல என்னோட அத்த பொண்ணு தான நீ. வா அப்படி என்ன தான் நடக்குனு பாப்போம்”என்று அவளின் கையை பிடித்து இழுத்தான்.
“ஐயோ விடு மாமா. இப்ப நீ என் கையை பிடிச்சது மட்டும் உன் வருங்காலம் பாத்தா என்ன ஆகும் தெரியுமா”என்றாள் நக்கலாக
“ஏன் அவளுக்கு என்ன”என திரும்பி கீதாவை பார்த்தான்.
அவள் பஸ் ஸ்டாபில் நின்று பஸ் வருகிறதா என்று பார்ப்பதை போல இவர்களை தான் முறைத்துப் பார்த்து கொண்டுயிருந்தாள். இவன் திடீரென திரும்பிப் பார்க்கவும் முகத்தை திருப்பி கொண்டாள்.
“பாத்தியா மாமா உன் வரும்காலம் பயங்கர காரமா நிக்குது”என்றாள் கிண்டலாக
“என்னவாம் அதான் 3 வருசமா அவ பின்னாடி அலைஞ்சியும் பிடிக்கலனு சொல்லிடா தான அப்புறம் என்ன நான் என் அத்த பொண்ணுக் கிட்ட பேசத்தான் செய்வேன் அவளுக்கு என்னவாம்.என் அப்பா சொன்னாலே நான் கேக்க மாட்டேன் அவ முறைச்சா பயந்துடுவோம் பாரு”என்று அவளை பார்த்து திட்டிக்கொண்டுயிருந்தவன் மீண்டும் அவர்களைநோக்கி திரும்பிவளை பார்த்து, “ஏய் இங்க ஏன் டி திரும்பிற மூஞ்சிய பெத்துடுவேன்”என்று அவளிடம் எகிறான்.
“ஆமா போயும்போயும் இந்த காட்டானா பாக்குறாங்க. ஆளும் டிரெஸ்ஸும் தாடியும் பாரு அப்படியே பரதேசி மாதிரி இருக்கு இவனை பார்த்துட்டாலும்” என்று அழகு கட்டிக்கொண்டு திரும்பிக் கொண்டாள்.
“குந்தாணி ஏதோ சொல்லி திட்டுறா மட்டும் தெரியுது. ஆனா என்ன பேசுறான்னு தெரியல”
“விடு மாமா உன் ஆளு உன்ன மாதிரி அரை மெண்டல் தான இருப்பா”
“அதுவும் கரெக்ட் தான்” என்று அவளைப் பார்த்துக் கொண்டு சொன்னவன், “தங்கம் சைடு கேப்புல மாமாவும் கலாய்க்க பாத்தியா” என்றான் அத்தை மகளை பார்த்து
“அச்சச்சோ என் மாமாவ நான் கலாய்ப்பனா என்ன மாமா சொல்ற” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு
“நீ இருக்க பாத்தியா சரியான வாலு” என்று அவளை தலையை தட்டி அவன் சிரிக்க
“ஏன் மாமா தலைய கலைக்க. நான் கஷ்டப்பட்டு பின்னிட்டு வந்து ஹேர் ஸ்டைல் தெரியுமா” என்று சினுங்கினாள்.
“எது இந்த ரயில் பூச்சி போற மாதிரி அங்கவும் இங்கவும் தலையில பாத போட்டு இருக்கியே இதுவா உன் ஹேர் ஸ்டைல்” என்று மீண்டும் அவள் தலையை கலைக்க
“மாமா இதுதான் இப்போ உள்ள ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல் தெரியுமா இது பின்ன காலைல இருந்து நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும் மாமா. அது போய் கலைச்சி விட்டுட்டியே மாமா” என்றாள் அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு
“ஐய்யோ தங்கம் அழாதீங்க இப்ப என்ன உன் ஹேர் ஸ்டைல சரி பண்ணனும் அவ்வளவு தான இரு நானே பண்ணி விடுறேன்” என்று சொல்லி அவளின் கலைந்த முடியை சரி செய்தான்.
“இப்போ ஓகேவா”
“எப்படி மாமா இவ்வளவு சூப்பரா இத கரெக்ட் பண்ணுன. இது பின்ன காலைல இருந்து நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா நீ என்னன்னா அசால்டா பண்ற”
“ஏய் உன் மாமா படிச்சது ஹேர்ஸ்டைலிஷ் தான். பின்னே எனக்கு இது வராமயா போகும்”
“என்ன மாமா சொல்ற நீ இன்ஜினியரிங் படிச்சதா ஊர்ல எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க”
“அது உன் மாமா படிக்க சொன்னது பட் நான் அதை படிக்கல. அவருக்கு தெரியாம சென்னைல இன்ஜினியரிங் படிக்கிறதா சொல்லிட்டு இதுதான் படிச்சிட்டு வந்தேன். படிச்சி என்ன பண்ண வேலைக்கு போகும்போது கரெக்டா உன் மாமாவுக்கு தெரிஞ்சுட்டு. என்னோட பையன் போயும் போயும் மேக்கப் பண்றவனா அந்த வேலை வேண்டாம் சொல்லி நான் வேலை பார்த்த இடத்தில் வந்து சண்டை போட்டு இங்கே கூட்டிட்டு வந்துட்டாரு. அவருக்கு நான் அவரோட தொழிலை பாக்கணும்னு ஆசை. எனக்கு நான் ஒரு பெரிய ஹேர் ஸ்டைலிஷ் ஆக ஆசை. அதான் அவரு ஆசையும் நிறைவேத்தாம என் ஆசையை நிறைவேத்தாம இப்படி ஊர் சுத்திட்டு அலையுறேன்” என்றான் விரக்தியாக.
“ஏன் மாமா பீல் பண்ற. நீ கவலைப்படாத பெரிய மாமாவுக்கு எப்படியாவது உன் ஆசைய புரிய வச்சு நீ ஆசைப்பட்ட மாதிரி பெரிய ஹேர் ஸ்டைலிஷ் ஆவ மாமா”
“யாரு உன் மாமாக்கு புரிய வச்சியா. அட போ தங்கம். என்னோட வாழ்க்கை கனவெல்லாம் அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு. ஆனா என்னோட கனவை சிதைச்ச உன் மாமாவை சும்மா விடுவேன் மட்டும் நினைக்காதே. அதுக்காக தான் எந்த வேலையை செய்யாமல் இப்படி வெட்டியா ஊர் சுத்திட்டு அலையுறேன். நான் இப்படி சுத்துறது பார்த்து உன் மாமா வருத்தப்படணும். ஒருவேளை வருத்தப்பட்டு பையனோட ஆசைய நிறைவேற்றி வைப்பாரா பார்க்கலாம். ஆனா அது நடக்காது அவர் உடம்புக்குள்ள ஜாதி வெறியும் அதிகார வெறியும் நிறைஞ்சிருக்கு கண்டிப்பா ஒரு நாளும் அவர் மனசு மாறாது” என்று சொல்லி தனது அத்தை மகள் வருந்துவதை பார்த்து, “ நீ தங்கம் எதுக்கு வீணா வருத்தப்படுற சரி பாப்போம். நீ ஒன்னும் பீல் பண்ணாத உன் மாமா நான் சொல்றதை கேட்கலைன்னா மொத்தமா க்ளோஸ் பண்ணிடலாம் சரியா”என்று அவன் கழுத்தை அறுப்பது போல் காட்ட
“அய்யோ கொலையா வேண்டாம் மாமா” என்று கண்களை விரித்து அலறினாள்.
“தங்கம் தங்கம் ஏன் இப்படி பயப்படுற இப்பவே நான் என்ன உன் மாமாவை கொலை பண்ண போறேன்னு சொன்னனா. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே அலற” என்று சொல்லி சிரிக்க தொடங்கினான்.
“போ மாமா எப்ப பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க. நான் போறேன் போ” என்று கோபித்துக் கொண்டு தனது தோழி நோக்கி சென்றாள் திவ்யபாரதி.
அதனைப் பார்த்து இன்னும் சத்தமாக அவன் சிரிக்க முகத்தை திருப்பி அவனைப் பார்த்து தனது நாக்கை வெளியே நீட்டி அழகு காட்டினாள்.
அதற்கு அவன், “அடிங்க” என்று அவளை அடிப்பது போல் வர
“ஐயோ மாமா வராரு” என்று சொல்லி அப்போது வந்து நின்ற பஸ்ஸை நோக்கி வேகமாக ஓடினாள்.
“பார்த்து மெதுவா போ தங்கம்” என்று அவளைப் பார்த்து கத்தினான். அப்போதும் வேகமாக போகும் அவளை புன்னகையுடன் பார்த்து நின்றான் ராஜ்குமார்.
இதனை அந்த வழியாக சென்ற இருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவனின் கண்ணுக்கு சிறு குழந்தைகள் விளையாடுவது போல் தெரிய அதனை பார்த்து சிரித்துக் கொண்டு கடந்து சென்றான்.
ஒருத்தியின் கண்கள் வஞ்சமாக அவர்களின் பார்த்து, “ஓ என் அண்ணன் மகனை வளைச்சு போட்டு மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள வரலாம்னு பிளான் பண்றீங்களா ஆத்தாளும் மகளும். நான் இருக்கிற வரைக்கும் உங்க ரெண்டு பேரால அந்த வீட்டுக்குள்ள வரவே முடியாது. உன் அம்மாவே அந்த வீட்டை விட்டு துரத்தி இருக்கேன். போயும் போயும் ஊர் பெயர் தெரியாத ஒரு அனாதைக்கு பிறந்த உன்ன மறுபடியும் அந்த வீட்டுக்கு நான் வர விட்டுவிடுவேனா. சிரிக்கவா செய்ற இதுதான் உன்னோட கடைசி சிரிப்பா இருக்கும். இனி பாரு ஒவ்வொரு நாளும் ஏன்டா பிறந்தனு உங்கள அழவிடல நான் வசுந்தரா இல்ல” என்று வஞ்சமாக சொல்லி தனது தந்தை வீட்டில் நோக்கி நடை போட்டாள் திவ்யபாரதியின் பெரியம்மாவும் ராஜ்குமாரின் அத்தையுமான வசுந்தரா.
error: Content is protected !!