Skip to content
Post Views: 267
இந்தியாவில் பொழுதுபோக்கு தலைநகரமாகவும், பலரின் கனவுகளை நினைவாக்கும் கனவு நகரமாகவும் விளங்கும் மும்பையில் பாலிவுட்டின் பெவர்லி ஹில்ஸ் என்றும் அழைக்கப்படும் மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஜூஹூ. அற்புதமான அரபிக்கடல் சூழ்ந்துள்ள இந்த பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டுவது பல பிரபலங்களின் கனவாகும். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் பல ஏக்கர்களை சுற்றி வளைத்து மூன்று அடுக்கு கொண்ட அந்த வீட்டில் இருபத்தைந்து அறைகள், மாடுலர் கிச்சன், தியேட்டர், ஸ்விம்மிங் கூல், பார், ஜிம் , கோவில்,இன்டோர் அவுட்டோர் கேம்ஸ் அனைத்தும் விளையாட பிளே ஏரியா என எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமாக வீட்டில் மனிதர்களின் சின்ன பேச்சு சத்தமும் இல்லாது மயான அமைதியோடு அங்கே உள்ள பணியாளர்கள் தங்களின் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். அவ்வளவு பெரிய வீட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் சீருடை பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். இவ்வளவு பெரிய வீட்டில் உரிமையாளர்கள் என ஒருவரும் நம் கண்ணில் தென்படவில்லை. அப்படியானால் இந்த வீட்டில் உரிமையாளர்கள் யாரும் இல்லையோ என்ற கேள்விக்கு பதிலாக அந்த வரவேற்பு அறையில் இருந்த பெரிய போட்டோ பிரேம் நமக்கு பதில் சொல்கிறது இந்த வீட்டின் உரிமையாளர்கள் நாங்கள் தான் என. அதில் ஆண்மையின் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு ஆண்மகன் அந்த ராஜா காலத்து இருக்கையில் முகம் முழுவதும் கர்வம் உடன் தோரணையாக அமர்ந்திருக்க, அவன் அருகில் தேவதை கீழ் இறங்கி வந்தது போல் தனது முத்துப்பல் சிரிப்பில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தேவ கன்னிகையாக அவள் இருக்க, அந்த ஆண் மகனின் அகன்று கைகளுக்குள் பாதுகாப்பாக உலகில் உள்ள மொத்த அழகையும் தனக்குள் வைத்ததை போன்று பூஞ்சிட்டு ஒன்று புன்னகை முகமாய் பூத்திருந்தது.
Advertisement
இந்த புகைப்படத்தில் உள்ள மூவரையும் பார்ப்பவர்கள் கண்டிப்பா ஒரு நிமிடம் நின்று, “ப்பா.. என்ன ஜோடி டா பொருத்தமா எவ்வளவு அழகா, சந்தோசமா இருக்காங்க. வாழ்ந்தா இவங்கள மாதிரி வாழணும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது இவர்களின் தற்போதைய நிலை…?
Advertisement
Advertisement
ஒரு காலத்தில் இந்த பங்களாவில் எங்கு திரும்பினாலும் கொலுசு சத்தமும், அந்த தேவதை பெண்ணின் வளையல் சத்தமும், அந்தப் பூஞ்சிட்டின் சிரிப்பு சத்தமும் எதிரொலிக்கும் ஆனால் இன்று எந்த பக்கம் திரும்பினாலும் மயான அமைதி மட்டுமே…
அந்த தேவதை பெண்ணும், பூஞ்சிட்டும் இல்லாமல் அந்த பங்களா களையிழந்த ஓவியம் போல காட்சியளித்தது. இது மட்டுமா அப்படி காட்சி அளித்தது இல்லை அந்த திடமான ஆண்மகனும் களையிழந்து போய் தான் இருந்தான். அன்று சூரிய கதிர்கள் பூமியை வந்தடையும் முன்னே எழுந்தவன் இப்போது சூரியன் உச்சிக்கு சேர்ந்ததும் தான் எழுகிறான். ஆண்மையின் சின்னமாக திகழும் அவன் முகம் இப்போது மூடிகள் நிறைந்த புதர் போல் காட்சியளிக்கிறது. எப்போதும் அவன் இதழ்களில் புன்னகை இருக்கும் ஆனால் இப்போது மருந்துக்கும் அப்படி ஒன்றும் அவன் முகத்தில் தெரியவில்லை. இதோ இப்போது கூட மதியம் 12 மணி ஆனது கூட தெரியாமல் நேற்று இரவு மது உண்ட மயக்கத்தில் படுக்கை அறையில் புரண்டு கொண்டிருந்தான் அவன்.
Advertisement
அவன் வேறு யாரும் இல்லை. இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து முன்னணி நடிகராக, இரண்டு வருடமாக எந்த சினிமாவிலும் தலை காட்டாமல் இன்றும் பல பெண்களின் கனவு கண்ணனாக திகழ்பவன். அவன் ஏ.கே என சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் ஏகாந்த் கோஷெல்.
சினிமாக்கு வந்த மூன்றே வருடத்தில் உச்சத்தை தொட்டவன். பேர், பணம், புகழ் போதையில் மிதந்தவன் இப்போது அதனாலே தனது உயிர்களை தொலைத்து விட்டு முழு நேர குடிகாரனாக மதுபோதையில் கிடக்கிறான். ஒரு காலத்தில் அவனை உச்சத்திற்கு கொண்டு வந்து அழகு பார்த்த அவன் ரசிகர்களே இன்று அவனின் இந்த நிலைக்கு காரணம் என்றால் அது மீகையாகாது..
விமர்சனங்கள் எப்போதும் ஆபத்தான ஒன்று. எந்த விமர்சனத்தால் உச்சம் தொட்டானோ அதே விமர்சனத்தால் அகல பாதாளத்திற்கு தள்ளப்பட்டான். இப்போது அவன் நேசித்த தொழிலையும் தொடர முடியாமல், உயிராக நேசித்த உறவுகளையும் தொலைத்து விட்டு தனிமையில் மதுவின் பிடியில் மிதந்து கொண்டிருக்கின்றான்.
அவனிடம் இருந்து திருடி சென்ற நெஞ்சத்தை மீட்டெடுத்து அவனை சுற்றியுள்ள சூழ்ச்சியை அவிழ்ப்பானா என்பதை இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்….
திருடிய நெஞ்சை மீட்கவே வருவான்…
கனவு கண்ணன் ஏ.கே…
error: Content is protected !!