Skip to content
Post Views: 2,155
அத்தியாயம் _6
நீண்ட நெடிய யோசனையில் …
இதயத்திற்கும் மூளைக்கும் இடையேயான குடுமி பிடி சண்டையில் இதயமே வென்றது .
பிரபாவின் மனம் கஷ்டப்படும் என்ற எண்ணமே ….அந்த முத்து மாலையை அவள் அணிந்து கொள்ள போதுமான காரணத்தை கொடுத்தது .
Advertisement
தன் தாயை அழைத்து கொண்டு கிளம்பினான் பிரபா .
ஐந்து நட்சத்திர ஹோட்டல் அளவிற்கு இல்லை என்றாலும் …திருவான்மியூர் ஏரியாவில் பிரபலமான ஹோட்டல் தான் ” ராயல் ஹட் “
பிரபாவையும் , கல்யாணியையும் வாயிலில் நின்று வரவேற்றனர் பாலாஜி , நிஷா தம்பதிகள் .
Advertisement
தன் தாயை அழைத்து போய் …தங்கள் அலுவலக அறையில் அமர வைத்து ஜுஸ் கொடுத்து உபசரித்தான் பிரபா .
Advertisement
ஹோட்டல் நல்லாவே டெவலப் ஆகியிருக்கே பிரபா ….
கல்யாணி மகனின் வளர்ச்சி கண்டு பெருமை பட்டார் .
நீங்க வந்து பார்த்தா தானே தெரியும்? உரிமையாய் கோபித்தான் பாலாஜி.
Advertisement
நான் பார்த்து என்ன செய்ய போறேன் பாலா என்றவரின் குரலில் அவ்வளவு விரக்தி.
சற்று நேரத்தில் ஸ்வாதி வந்தாள் .
பாலாஜி ஸ்வாதியை அழைத்து போய் தன் தாய் பவானி …தன் மனைவி நிஷா இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் .
பிரபாவும் அவன் தாயும் அலுவலக அறையில் இருப்பதாக கூறி அழைத்து போனான் பிரபா .
ஸ்வாதி ஏற்கனவே இரண்டு முறை கல்யாணியை பார்த்திருக்கிறாள் .
அம்மா ….வணக்கம் ! நல்லா இருக்கீங்களா ? அன்பாய் கல்யாணியின் கரம் பற்றிக் கொண்டாள் ஸ்வாதி .
விழியிரண்டும் வெடித்து விடுமோ என்னும் அளவிற்கு ஸ்வாதியை பார்த்து ரசித்தான் பிரபானந்தன் .
அவள் அணிந்த முத்துமாலை கண்டு அவன் உள்ளம் களிப்புற்றது .
புடவையில் எந்த பெண்ணும் அழகு தான் அதில் ஸ்வாதி மட்டும் விதிவிலக்கா என்ன…?
நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர்களின் செய்கைகள் அனைத்தும் நமக்கு பேரழகாக தான் தோன்றும் போல….
ஸ்வாதியின் புடவை ஆகட்டும் …சுருள் சுருளான அவள் கேசம் சிறு க்ளிப்பிற்குள் அடங்கி நின்றதாகட்டும் , புடவைக்கு தோதான நிறத்தில் கை நிறைய அவள் அணிந்திருந்த வளையல் ஆகட்டும் … வெள்ளை முத்துக்கள் பதித்த ஜிமிக்கி ஆகட்டும்,தோகை மயிலென பட படக்கும் மை தீட்டிய அவள் நீள் விழியாகட்டும்… அனைத்தும் அழகாகவே இருந்தது பிரபானந்தன் கண்ணிற்கு .
ஸ்வாதி ஆர்மியில் பிரபாவோடு அவன் தாய் கல்யாணியும் இணைந்து கொண்டார் என்று உறுதிபட கூறலாம் .
புடவையயில் நளினமாய் நடமாடும் ஸ்வாதியை அவர் கண்கள் மொய்த்தது .
பாலாவிற்கு தன் உற்ற தோழனின் பார்வையை கண்டு பாவமாய் இருந்தது .
சற்று நேரத்தில் அலங்கரிக்கபட்ட பார்ட்டி ஹாலில் ….பெரிய பிளாக் பாரஸ்ட் கேக் வீற்றிருக்க ….தேவதை போல் உடையணிந்த ரேஷ்மி தன் தாய் நிஷாவின் கரம் பற்றி கேக் வெட்டினாள் .
முதல் கேக் துண்டை குழந்தை கரம் பற்றி நிஷா பாலாவிற்கு ஊட்ட….குழந்தையை அள்ளி கொண்ட பாலா குழந்தை கரம் பற்றி பிரபாவிற்கு கேக் ஊட்டினான் .
குட்டி ஏஞ்சல் அங்கிளுக்கு கேக் கொடுத்தீங்களா செல்லம் ….ச் ச் சோ ஸ்வீட் குட்டிம்மா …குழந்தை கன்னம் கிள்ளி கொஞ்சினான் பிரபா .
தன் மகன் கையில் குழந்தையை வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் கண் கொள்ளா காட்சி கண்டு கண்ணீர் முட்டியது கல்யாணிக்கு .
கண்கலங்கிய தாய் முகம் கண்டவன் …ம்மா…குட்டிமாவுக்கு வாங்கின கிஃப்ட் கொடுங்க என்றான் .
கல்யாணி தங்க வளையலை குழந்தைக்கு அணிவித்தார்.
ஸ்வாதியும் தன் கிஃப்ட் கொடுத்து குழந்தைக்கு வாழ்த்து கூறி முத்தமிட்டாள்.
பஃபே முறையில் உணவு …. விருந்தினர் அனைவரும் உணவில் மும்மரமாக .
ஸ்வாதி ரெஸ்ட் ரூமிற்குள் செல்ல … பக்கத்தில் ஆண்களுக்கான அறையில் இருந்து வெளியில் வேகமாய் வந்த பிரபா …குனிந்து யோசனையோடு வந்து கொண்டிருந்த ஸ்வாதியோடு மோதி நின்றான் .
இருவரின் தலையும் முட்டி கொண்டது .பிடிமானம் இல்லாமல் … நிலை தடுமாறியவள் தோள் பற்றி இறுக்கி பிடித்து தன் பலத்தை அவளில் செலுத்தி …அவளை நிலை நிறுத்தினான்
விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் இமைகள் அடித்து கொள்ள ….சிலையாய் நின்றாள் ஸ்வாதி .
முகத்தோடு முகம் உரசும் நெருக்கத்தில் அவன் கம்பீர முகத்தில் குழைவை கண்டு ஸ்தம்பித்தாள் .
ஆள் அரவம் அருகில் கேட்கவே ….ஸாரி சார் …திக்கி திணறி அவன் பிடியில் இருந்து தன்னை மீட்டு கொண்டவளால் அவன் பார்வையில் இருந்து தன் இதயத்தை மீட்டு கொள்ள வழி கிட்டவில்லை .
பேதை அவளின் விக்கித்த நிலை கண்டு ….தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன் மௌனமாய் ந(க)டந்து போனான் .
அவளை தீண்டிய இன்பம் ….அவன் கட்டுடலை கபளீகரம் செய்தது .
ரெஸ்ட் ரூம் போய் …வெளியே வந்தவளின் எதிரே ஒரு கரம் நீண்டு இருந்தது .
” விழியுயர்த்தி யாரென்று பார்த்தாள் “
சுதாகர் …..அருவெறுக்கதக்க பார்வையுடன் நின்று கொண்டிருந்தான் .
என்ன அப்படி பார்க்கிற …? அவன் ஏதோ உள்நோக்கம் கொண்டு சிரித்தான் .
“அவள் ஓரடி பின்னே சென்றாள்”
அவளின் தோள் மீது கை வைத்தவனின் கையை ஆக்ரோஷமாய் தட்டி விட்டாள் .
ஓ ….ஓனர் தொட்டா தேனா இனிக்குது….வேலைக்காரன் நான் தொட்டா தீயா சுடுதா ?
வில்லத்தனமான சிரிப்புடன் அவன் நெருங்க …
ச்சீ பொறுக்கி …உன் கேடு கெட்ட புத்தி இப்படி தான் யோசிக்கும் …அவள் கண்ணகியாய் முறைக்க….
பெரிய பத்தினி தெய்வமா நீ …?
நீ முறைத்தால் நான் பஸ்பமாயிடுவேனா … அவன் சிரிக்க ..
இவனோடு வார்த்தையாடுவது வீண் வேலை என்பதை உணர்ந்து ..அவனை அலட்சியம் செய்து நடக்க தொடங்கினாள் .
என்னடி பெரிய இடமா பிடிச்சிட்டோங்கிற திமிரா ..? அவள் முடியை கொத்தாக பற்றினான் .
அடுத்த நிமிடம் ….ஓங்கி விழுந்த அறையில் சுருண்டு விழுந்தான் சுதாகர் .
தட தடக்கும் இதயத்துடன் இமை உயர்த்தினாள் ஸ்வாதி…அருகே தீ கங்கு விழிகளுடன் பிரபா நின்று கொண்டிருந்தான் .
சுதாகர் பயத்துடன் சுருண்டு கிடக்க ….அவன் மார்பில் தன் ஷூ காலால் மிதித்தான் பிரபா .
ச்சீ …என்ன கேடு கெட்ட கேரக்டர்டா நீ ….?
நீ திருந்துவேன்னு தான் உன்னை கூடுவாஞ்சேரியில் இருந்து திருவான்மியூர்க்கு மாத்தினேன் .
உன் ஈன புத்தி மாறவேயில்லை . அவன் சட்டையை கொத்தாக பற்றி இழுத்து அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான் .
சார் ….என்னை மன்னிச்சுடுங்க …அவன் கை கூப்பினான் .
ஸ்வாதி நீ போ…! கர்ஜித்தான் பிரபா.
டேய் ….காலேஜ் படிக்கிற ரெண்டு தங்கச்சி இருக்காங்க அம்மா இல்லாத குடும்பம்னு பாலா ரிக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டதால் தான் உனக்கு வேலை கொடுத்தேன் . அவனுக்காக மட்டும் தான் உனக்கு வேலை கொடுத்தேன்.
காலேஜ் போற உன் தங்கச்சிங்க கிட்ட எவனாவது இப்படி நடந்துகிட்டா என்னடா பண்ணுவ …?பிரபாவின் உறுமலில் ஆட்டம் கண்டது அவன் கை,கால்கள் .
அவ என்னோட ஸ்வாதி . இனி அவளை பார்க்க மட்டும் இல்லை …நினைக்க கூட கூடாது!
உனக்கு என்னோட ஹோட்டலில் வேலை இல்லை …ஓடிடு ..! அவனை பிடித்து தள்ளினான் பிரபா .
ஸ்வாதி விஷயத்தை சொன்னதால் ஓடி வந்தான் பாலாஜி .
அவன் பங்கிற்கு அவன் இரண்டு அறை கொடுத்தான் .
அண்ணா என்னை மன்னிச்சிடுங்க ..பாலாவை பார்த்து கெஞ்சினான் .
” டேய் பாலா …அவனை போக சொல்லு ..! “
என் ஸ்வாதி மேல கை வைக்கிற அளவுக்கு போயிட்டான் ….பிரபாவின் ரௌத்திரம் கண்டு பாலாஜி பயந்து போனான் .
சுதாகர் போ ….! அவனை இழுத்து கொண்டு போய் வெளியில் விட்டு வந்தான் பாலாஜி .
உணவு பதார்த்தங்களோடு ..கருப்பட்டி ஜிலேபி …தினை மாவு லட்டு வைத்திருந்தார்கள் .
இது ஸ்வாதி ஐடியா ….பிசினஸ் கால்குலேஷன் தான் . விருந்தினர் மத்தியில் விளம்பரம் கிடைக்குமே ….
பிரபா எதுவும் நடவாவது போல் …அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான் .
ஸ்வாதியால் இயல்பாக இருக்க முடியவில்லை .
பயமும் ,.பதட்டமும் அவள் கண்களில் தெரிந்தது .
ஏன் இப்படி நின்னுட்டு இருக்க? போய் சாப்பிட வேண்டியது தானே ….? மென் குரலில் கேட்டான் பிரபா .
ஒருமை வந்தமர்ந்து கொண்டது அவன் பேச்சில் .
அவள் அமைதியாக நிற்க ….யாராவது ஊட்டி விட்டா தான் சாப்பிடுவியா என்றான் .
வேகமாய் ஓடி போய் ஒரு பிளேட்டை எடுத்துக் கொண்டாள் .
பாலா …ஸ்வாதியிடம் நேரடியாகவே தன் நண்பன் உதய்குமாரை அறிமுகம் செய்து இவன் தம்பி ஆதவனுக்கு உங்களை பேசவா என்றான் .
நல்ல குடும்பம் ….மாப்பிள்ளை RI …..நீங்க என்ன ஸ்வாதி சொல்றீங்க …?அவள் கண்களையே கூர்ந்து நோக்கினான் .
ஸா …ஸாரி ஸார் !எனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இல்லை . சுற்றி வளைக்காமல் சொல்லிவிட்டாள்.
ஸ்வாதிக்கு தொடர்ந்து அடி மேல் அடி …. சுதாகரை கடந்து வந்தால் பாலா இப்படி மாப்பிள்ளை பார்த்து சொல்கிறானே …?
ஸ்வாதி மெல்ல நழுவி கல்யாணி , பவானி அவர்களோடு சேர்ந்து கொண்டாள் .
என்னடா பாஜி …ஸ்வாதி காதை கடித்த …? சிரித்தபடியே கேட்டான் பிரபா .
உன்கிட்ட சொல்லி இருந்தேனே ….உதய் தம்பி ஆதவனுக்கு நம்ம ஸ்வாதியை பார்க்கலாம்னு .
சட்டென்று வாடியது அவன் முகம் .
என்னடா முகம் ஒரு மாதிரி இருக்கு? நமட்டு சிரிப்புடன் கேட்டான்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல நான் நார்மலா தான் இருக்கேன்.
ஆமா ஸ்வாதி என்ன சொன்னா ?
திக் …திக் இதயத்தோடு கேட்டான் .
இப்போ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இல்லைனு சொல்லிட்டா…. சிரிப்புடன் சொன்னான்.
இப்போது தான் சீராய் மூச்சு வந்தது பிரபாவுக்கு .
இவ ஓகே சொல்லலைனாலும் …அவ பேரெண்ட்ஸ் அவளை கம்பெல் பண்ணுவாங்க தானே ?
இருபத்து நாலு வயசு ஆகிடுச்சு இல்ல …கிராமத்தில்இதுக்கு மேல விடமாட்டாங்களே …
கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்த பிரபாவின் இதயத்தில் ஆசிட் ஊற்றினான் பாலாஜி .
——தொடரும் —–
error: Content is protected !!