Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரால் உயிரை தொடுக

Uyiraal Uyirai Thoduga 1

 

குத்து! அப்படித்தான்!விடாதே!டேய் விடுடா அவனை!அடேய் எந்திரிடா!அவன் ஜெயிச்சுற போறான்!….ஐயோ போச்சு போச்சு மடப்பய அநியாயமா தோத்துட்டான் போடா போடா உனக்கு போயி சப்போட்டு பண்ணேன் பாரு என்னைய சொல்லனும்என்ற அவளின் அப்பத்தா தையல்நாயகியின்பேச்சை கேட்டு சிரித்தபடியே அறைக்குள் நுழைந்தாள் வனரோஜா. 

 

கையிலிருந்த காபியை அவர் முன் நீட்டியபடி, 



Advertisement

 

காலங்காத்தால என்ன அப்பத்தா இதெல்லாம்?ராத்திரி தான் பதினோரு மணி வரைக்கும் நாடகத்தை அலற விட்டு என் தூக்கத்தைக் கெடுக்குற!இப்பவாச்சும் கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சா என்ன? டபிள்யு டபிள்யு எஃப் பாக்குற வயசா உனக்கு?”என்று செல்லமாக கடிய காபியை வாங்கியவர், 

 

Advertisement

நான் என்னத்த பண்ண கண்ணு!இந்த தினு பையன்தான் பழக்கி விட்டுட்டான் விட முடியல…”என்று சின்ன பேரன் தினேஷை குறை கூறியவர், 

Advertisement

 

என் தங்கபுள்ள டிபன் சாப்பிட்டுச்சா?”என்று அவரின் செல்லமான மகள் வயிற்றுப் பேரன் ஜீவத்ரனை பற்றிக் கேட்க, 

 

Advertisement

ம்ஹூம் நான் அஞ்சு மணிக்கு எந்திரிச்ச போதே உங்க தங்கபுள்ள இல்ல! இன்னிக்கி நடவுக்கு வாராங்க இல்ல அதான் சீக்கிரம் வயலுக்கு பேயிட்டாங்க போலஎன்று ரோஜா கூற, 

 

வேலைன்னு வந்துட்டா இந்த பயலுக்கு சோறு தண்ணிக் கூட வேணாம்!ரோசா கண்ணு நீ உன் மாமானுக்கு டிபனை கொண்டுட்டு போ!மிச்ச வேலைய நா பாத்துக்குறேன்என்று அவர் எழுந்து வர, 

 

வேண்டா அப்பத்தா பெரியம்மா திட்டுவாங்க! நான் முத்துகிட்ட கொடுத்து அனுப்பறேன்என்று அவள் பயந்தபடி கூற 

 

நீ பயப்படாத கண்ணு அவ ஏதாச்சும் சொன்னா நான் பாத்துக்குறேன்.. நீ போனா புள்ள கொஞ்சம் ஜாஸ்தி சாப்பிடுவான்! நீ போ தோசை தானே நான் ஊத்துறேன்என்று அவர் கூறிவிட சரியென்று சூடான தோசை ஊற்றி அதை டப்பாவில் போட்டுக் கொண்டவள் அத்தோடு அவனுக்கு பிடித்த பூண்டு கார சட்னியை எடுத்துக் கொண்டு அவள் பெரியப்பா முருகேசனின் வயலை நோக்கி நடையை கட்டினாள். 

 

அவள் வயலை அடைவதற்குள் நாம் ரோஜாவின் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டு வந்துவிடலாம்.ரோஜாவின் அப்பத்தா தையல்நாயகி அவரின் கணவர் சிவநேசனுக்கு மூன்று மக்கள் செல்வங்கள். மூத்தவர் முருகேசன்,இரண்டாமவர் ரோஜாவின் தந்தை சற்குணம் மூன்றாவது ஜீவத்ரனின் அன்னை லஷ்மி. 

 

முருகேசனுக்கு சிவநேசனின் தங்கை மகள் வனஜாவை திருமணம் செய்து வைத்தனர்.மூன்று வருடங்கள் முடிந்தும் குழந்தை பிறக்கவில்லை. லஷ்மியை பக்கத்து ஊரில் இருக்கும் வரதராஜனுக்கு திருமணம் முடிக்க பெற்றோர் உற்றோர் இல்லாததால் அவனும் வீட்டோடு மாப்பிள்ளையாக இங்கேயே இருந்துவிட்டான்.மூன்றாவது மகன் சற்குணம் வீட்டில் வேலை செய்யும் கமலியை விரும்பிவிட அவன் பிடிவாதத்தால் திருமணம் செய்து வைத்தாலும் இனி வீட்டு படி ஏறக் கூடாது என்று தீர்மானமாகக் கூறிவிட்டார் சிவநேசன். என்றேனும் தந்தை மனம் மாறுவார் என்ற நம்பிக்கையோடு சற்குணமும் கமலியும் அவர்களின் வயலுக்கு அப்பால் குடிசைப் போட்டுக் கொண்டு வசித்தனர். 

 

மேலும் ஒரு ஆண்டுக்கு பின் லஷ்மி ஜீவத்ரனை பெற்றெடுத்தாள் . மூத்த மருமகள் தான் குழந்தை இல்லாமல் இருக்க நாத்தனார் முதலில் அதுவும் ஆண் பிள்ளையை பெற்றது வனஜாவுக்கு தாங்க முடியாமல் வயிறு எரிந்தது.தாயின் அழகையும் தந்தையின் கம்பீரத்தையும் கொண்டு வளர்ந்த ஜீவா வீட்டில் வனஜாவை தவிர எல்லோருக்கும் கண்ணின் கருமணி தான். 

 

வருடங்கள் செல்ல ஜீவாவிற்கு ஐந்து வயதானப் போது வனஜாவிற்கு வினோதினி பிறந்தாள்.குழந்தை பிறந்ததே என்றில்லாமல் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று அப்போதும் வனஜாவிற்கு நோபாளம் தான். ஆனால் ஒரு குழந்தை கூட இல்லாத சற்குணம் கமலியை நினைத்து அவளுக்கு சந்தோஷமே! 

 

முருகேசன் வனஜாவிற்கு இரண்டாவதாக மகன் தினேஷ் பிறந்து இரண்டாண்டுகள் சென்ற பின்னரே சற்குணம் கமலிக்கு வனரோஜா பிறந்தாள்.அதுவரை தன் வைராக்கியத்தையும் கோபத்தையும் இழுத்துப் பிடித்த சிவநேசனால் பேத்தியை விட்டுவிட முடியாமல் மகனையும் மருமகளையும் மன்னித்து குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார்.வாய்விட்டு கூறாவிடினும் மகனை நினைத்து வருந்தும் மனைவிக்காக என்பதும் ஒரு காரணமே. 

 

வனஜாவை தவிர வீட்டினர் எல்லோருமே சற்குணம் கமலியை அரவணைத்துக் கொண்டனர்.அதிலும் பெயருக்கேற்ப ரோஜா மலராக இருந்த ரோஜாவை கீழே விடுவதே இல்லை.ஒருவர் மாற்றி ஒருவர் அவளை தூக்கிக் கொண்டே திரிய தையல் நாயகி தான், 

 

அடேய் புள்ளய கீழே படுக்க வைங்கடா இப்படியே தூக்கிட்டு திரிஞ்சா அதுக்கு சூடு ஜாஸ்தி ஆயிரும்என்று கத்துவார்.எல்லோரும் அதற்கு பணிந்தாலும் ஜீவா மட்டும் அதை காதிலேயே வாங்க மாட்டான்.பள்ளி விட்டு வந்து வீட்டு பாடம் முடியும் வரை தான் அவன் பொறுமை எல்லாம்.அதன் பின் அவனை கண்டு குரலும் கேட்டவுடன் கை கால்களை உதைத்து உரத்து சத்தமிடும் ரோஜாவின் அருகில் தான் அவனை பார்க்கலாம். 

 

வினோதினி தினேஷிடம் அவனுக்கு பிரியம் தான் என்றாலும் அதைவிட ரோஜாதான் அவனுக்கு மிகவும் நெருக்கம். 

 

குட்டிம்மா! இன்னிக்கு அந்த அருண் செமத்தயா அடி பின்னிட்டேன் நம்ம ரவி பாவம் அவனுக்கு சரியா நடக்க முடியாது இல்ல அவனை போய் எப்பவும் நொண்டின்னு கேலி பேச்சிட்டே இருந்தான் இன்னிக்கி என்னால தாங்க முடியலை! வெச்சு செஞ்சிட்டேன் இனி அவன் ரவி பக்கம் வர மாட்டான்என்று இரண்டே வயதான அவனின் குட்டிம்மாவிற்கு புரியுமா என்றெல்லாம் யோசிக்காது அவனின் மனதில் இருப்பதை எல்லாம் அவளிடம் தான் கூறுவான். 

 

ரோஜாவுக்குமே ஜீவா மாமா தான் எல்லாம்!பெற்றோர்,அவளை இளவரசியாக கொண்டாடும் தாத்தா அப்பத்தா,உடன் விளையாடும் அக்கா அண்ணாவை விட ஜீவா சென்றவிடமெல்லாம் அவன்பின்னே வால்பிடித்து செல்வது மட்டுமே அவளுக்கு பிடித்தமான செயல். 

 

அவர்களின் சந்தோஷமான குடும்பத்தில் எதிர்பாராது விழுந்த இடியால் ஜீவா ரோஜா பந்தம் இன்னுமும் இறுகிப் போனது.நீண்ட நாட்களாக குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்காததால் தான் கமலிக்கு அவ்வப்போது கரு கலைகிறது என்று வருந்திய தையல் நாயகி, 

 

உங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு சாங்கியமும் சரியா பண்ணல ராசா! புள்ளைக்கு முடி எறக்க போனதோட சரி! எனக்கு என்னமோ குலதெய்வத்துக்கு பொங்கல் வெச்சா கமலிக்கு சரியாயிரும்னு தோணுதுஎன்று கூற சரியென்று ஜீவா ரோஜா அவர்களின் பெற்றோர் மட்டுமே கிளம்பினர்.வனஜா கோயிலுக்கு செல்ல முடியாத சமயம். தான் வராமல் தன் குழந்தைகளையும் அனுப்ப முடியாது என்று விட்டாள் அவள்.முருகேசனும் வெளியூர் சென்றிருக்க வனஜாவிற்கு துணை என்று பெரியவர்கள் வீட்டில் இருந்து கொண்டனர்.விதி தான் அப்படி சதி செய்ததோ? 

 

கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து திரும்பும் வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.ஆனால் வழியில் காபி கடை அருகே காரை நிறுத்த ஐந்து வயதான ரோஜா இயற்கை உபாதையில் நெளிய ஜீவாவை அவளை அழைத்துச் செல்லுமாறு பணித்தார் கமலி. சிறிது புதர்கள் அடங்கிய பகுதிக்கு குட்டியை தூக்கிச் சென்றவன் விஷ ஜந்து ஏதாவது இருக்கிறதா என்று அங்கே கிடந்த கம்பால் சரி பார்த்த பின்பே அவளை அங்கே இறக்கி விட்டவன், 

 

குட்டிம்மா இங்க யாருமில்ல சீக்கிரம் போயிட்டு வந்துடுடா நீ அந்த பக்கம் இருக்கேன் பயப்படாம போ!”என்று கூற, 

 

போயிடாத மாமா நா சீக்கிரம் வதேன்என்று அவள் கூறியபடியே அவள் முடித்து வந்த நேரம் ஹோ என்ற கூச்சலில் பதறியடித்து அவர்கள் ஓடி வந்தப் போது நிலை பிழன்ற லாரி இவர்கள் காரில் மோதி கார் சுக்குநூறாகி இருந்தது. 

 

கண்ணெதிரே நடந்த கோர காட்சியில் ஜீவா அதிர்ந்து நிற்க ரோஜாவோ அலறி மயங்கி சரிந்திருந்தாள்.குடும்பத்தோடு சந்தோஷமாக கோயிலுக்கு சென்ற மக்கள் பிணமாக திரும்பி வர இடிந்துப் போயினர் வயதான பெற்றோர். 

 

காரியங்கள் முடிந்தாலும் போலீஸ் கேசால் ரணங்கள் குத்திக் கொண்டு தான் இருந்தது. பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்காக முயன்று தங்களை தேற்றிக் கொண்டனர்.வயதிற்கேற்ப ஜீவா வருத்தத்தை மறைத்து திடமாக இருந்தாலும் தாயின் மடியை தேடி கதறும் ரோஜாவை தான் யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.ஜீவாவிடம் மட்டும் சிறிதே அடங்கினாள்.கொஞ்சி கெஞ்சி உணவு கொடுத்து அவளை உறங்க செய்பவன் அவனே. ஆனால் கண்ணால் கண்ட காட்சி மனதாழத்திலிருந்து கனவுகளாக அவளை தாக்க நடு இரவில் விழித்து அழுதாள் குழந்தை. 

 

ஜீவாதான் கைக்குள்ளேயே வைத்து அவளை தேற்றியது.பகலும் இரவும் பாடுப்பட்டு அவளை தேற்றிக் கொண்டு வந்தான்.மெல்ல மெல்ல தேறி வந்தவள் அவனே உலகம் என்று ஆகியிருந்தாள்.மக்களை இழந்தது சிவநேசனை ஒடுக்கி இருக்க அவரும் சில ஆண்டுகளில் மறைய முருகேசனே வீட்டின் தலைவர் ஆனார். அதுவரை அடங்கி இருந்த வனஜாவின் ஆர்பாட்டமும் அதிகமானது.பெற்றோர் இல்லாத மக்கள் இருவரும் வேண்டாத சுமையாகத்தான் தெரிந்தனர்.ஆனால் தங்கை மீது பாசம் வைத்திருந்த முருகேசனிடம் அவர்களை விரட்டி விடுமாறு வனஜாவால் கூற முடியவில்லை.அந்த வெறியை அவர்கள் திட்டி வைது வேலை வாங்கி எனத் தீர்ந்துக் கொண்டாள்.தையல்நாயகி மட்டுமே அவர்களுக்கு ஆதரவு.மருமகளின் அட்டகாசம் எல்லை மீறாமல் அவர்தான் தன் பேர பிள்ளைகளை காப்பாற்றி வந்தார். 

 

படிக்க விருப்பம் இருந்தாலும் அத்தையின் குத்தல் பேச்சால் பன்னிரண்டாம் வகுப்போடு நின்று விட்ட ஜீவா மாமனுக்கு தோள் கொடுத்து அவர்களின் வயல் தோப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள தொடங்கினான்.வெறும் விவசாயத்தோடு இருந்ததை ரைஸ் மில் சர்க்கரை ஆலை என்று விரிவுப்படுத்தியது ஜீவாதான்.முதலாளியின் மருமகன் என்று கர்வம் கொள்ளாமல் வேலை செய்பவரோடு தானும் ஒருவனாக இறங்கி வேலை செய்வான்.அதனாலயே அவன் மேல் அவர்களுக்கு அளவு கடந்த மரியாதை. 

 

அன்றும் நடவு என்று வயலுக்கு வந்தவன் ஒரு ஆள் குறைவு என்றதும் அவனும் நடவு செய்ய தொடங்கிவிட்டான்.கல்லென்ற கொலுசொலியில் ரோஜா வருவதை அறிந்துக் கொண்டாலும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை அவன்.காலை அவளிடம் சொல்லாமலும் உணவு உண்ணாமலும் வந்ததிற்கு அவளிடம் சரியான மண்டகப்படி கிடைக்கப் போவது அவனுக்கு நிச்சயம். 

 

அவன் எதிரே வரப்பில் நின்றவள் முறைக்கிறாள் என்பது பார்க்காமலே தெரிந்தது அவனுக்கு.அவன் பக்கத்தில் நட்டுக் கொண்டிருந்த முனியம்மா பாட்டி, 

 

தம்பி!புள்ள உன்னைய தான் பாசமா பாத்திட்டு இருக்குஎன்று கேலியாக கூறி சிரிக்க, 

 

ஷ் சும்மா வேலைய பாருங்க நீங்க! நிமிர்ந்து பார்த்தா நான் அம்புட்டு தான்!”என்று கிசுகிசுக்க, 

 

நான் வந்து நிக்கறது உங்களுக்கு தெரியல அப்படித்தானே மாமா?”என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க நிமிர்ந்தவன் அப்போது தான் அவளை பார்த்தது போல, 

 

ஏய் குட்டிம்மா நீ எப்ப வந்த?ஆமா இந்த படபடக்கற வெயில்ல எதுக்கு வந்த நீ?”என்று கேட்க, 

 

எதே எதுக்கு வந்தேன்னா கேக்குற! பாவம் காலைல ஒன்னும் சாப்பிடாம வந்திட்டியேன்னு டிபனை தூக்கிட்டு வந்தேன் பாரு என்னைய சொல்லனும் போ நான் கோவமா போறேன்என்று அவள் திரும்பி நடக்க அங்கிருந்த முள் காலை பதம் பார்த்து விட ஆவென கத்தியவள் காலை பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள். 

 

ஏய் குட்டிம்மா என்னச்சுடாஎன்று பதறி ஓடி வந்தான் ஜீவா. 

 

அச்சோ முள்ளு குத்திருச்சா!பாத்து போக மாட்டியா! வயசுதான் ஏறி இருக்கு இன்னும் குழந்தையாவே இருக்க!”என்று அவளை கடிந்தவன் அவள் காலை தூக்கி தன் தொடை மேல் வைத்தவன் முள்ளை அவளுக்கு வலிக்காமல் மெல்ல எடுத்து விட்டான்.அவன் பதட்டத்தில் பாசத்தை கண்டவள் கண்களில் நீர் நிறைந்தது. 

 

சின்ன முள்ளு தான் மாமா அதை விடு! கையை கழுவிட்டு வா சாப்பிடலாம்என்று அவள் கூற சரியென்று பம்பு செட்டில் கை கால் கழுவிக் கொண்டு அவன் வர டிபனை அவனுக்கு தட்டில் போட்டுக் கொடுத்தாள் ரோஜா. 

 

அச்சோ உனக்கு சந்தோஷமான விஷயம் சொல்லனும்னு நினைச்சு வந்து மறந்தே போயிட்டேன் பாரு! நாளைக்கு வினு அக்கா வராங்களாம் மாமா இந்த முறை எப்படியும் உங்க நிச்சயதார்த்தம் பண்ணிபுடனும்னு அத்தைக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு! சீக்கிரம் நம்ம வீட்ல பீ பீ டும் டும்என்று அவள் கைதட்டி குதூகலிக்க அதை கேட்டவனுக்கோ ஏனோ அந்த விஷயம் உற்சாகத்தை அளிக்காதது ஏன் என்று அவனுக்கே புரியவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!