Skip to content
Post Views: 1,251
விலகாதே உயிரே
Episode 1
“உரிமைக்காக ஒற்றை முடிச்சு
உறவுக்காக இரண்டாம் முடிச்சு
ஊருக்காக மூன்றாம் முடிச்சு”
என்று மூன்று முடிச்சு போட்டு தொடங்கிய பந்தம் இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருவதற்கு கோர்ட் வாசலில் விவாகரத்திற்காக நின்று கொண்டு இருப்பாள் என்று தீபா நினைத்திருக்க மாட்டாள்.
Advertisement
தீபா அவள் அம்மா அப்பாவுடன் நின்று கொண்டு இருக்கும்போது காரில் தேவா இறங்கி தீபாவை நேருக்கு நேர் பார்த்தான் தீபா பார்க்காதது போல் திரும்பி விட்டாள். இவள் எப்படி அவனை பார்க்க முடியும் அவன் செய்தது எல்லாம் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது..
தீபாவின் அட்வகேட் அவளிடம் வந்து 40 நிமிடங்கள் ஆகும் அது வரை இங்கே நிற்காமல் காரில் உட்காருங்கள் நான் சிறிது நேரம் கழித்து கூப்பிடுகிறேன் என்றார்.. தீபாவும் காரில் வந்து அமர்ந்து ac ஆன் பண்ணி கண்ணை மூடி சாய்ந்து பழைய நினைவுகளை அசைப்போட்டாள்.
தீபா ஒரு கிராமத்தில் இருந்து வந்த பெண் அங்கு நன்றாக படித்து பரதம் நாட்டியம் எல்லா கலையும் கற்று சென்னைக்கு வந்து ஒரு பள்ளியில் சேர்ந்து அதை குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்திருந்தால், அவளுக்கு நாட்டிய கலை தான் உயிர் போன்றது.. சிறு வயதில் இருந்தே அவளுக்கு நாட்டியம் பிடிக்கும் அதனால் விரும்பி கற்றுக் கொண்டாள் அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவளிடம் இருந்தது.
குழந்தைகளுக்கு பள்ளியில் கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் மாடியில் வகுப்பு எடுத்தாள்.. அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான் ..அவளது அப்பா தீபாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.. அப்போது நெருங்கிய உறவினர் மூலமாக ஒரு வரன் வந்தது.. மாப்பிள்ளை நன்றாக படித்து நல்ல வேலையில் பணிபுரிகிறார் சொந்தமாக வீடு உள்ளது என்று கூறினார்கள்..
Advertisement
தீபாவின் அப்பாவும் மாப்பிள்ளை வீட்டை பார்த்து நான் அக்கம் பக்கத்தில் எல்லாம் மாப்பிள்ளை பற்றி விசாரித்தார்கள்.. அவருக்கும் தேவாவின் குடும்பத்தை பிடித்து இருந்தது. ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்தார்கள்..
Advertisement
தேவா அவளை காண்பதற்கு அவள் பரதம் சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு வந்தான்… தற்போது அவள் பரதம் ஆடுவதை பார்த்து மெய் மறந்து நின்றான்…
கலை தனில் சிறப்பு
இவள்
நளினம் சேர்த்து
நானம் கலந்து
அழகில் நிறைந்து
நிற்பதாலோ…
விழிகளில் கலந்த
பரதம்
பாதங்கள் பதமாய்
ஜதி போட
விரல்கள் கலை வடிவம்
சொல்ல
உன்
வதனம் வடிவாய்
வடிக்கிறது
பாவம் தனை
இமைகள் கொட்ட
சுவை சேர்க்கும் புருவங்கள்
இதழ்கள் புன்னகைக்க
கன்னங்கள் சகபாடிகள்
மொத்தத்தில்
உன்
அங்ககங்கள் அதனையும்
நடமிடும் பரதம் ……
Advertisement
அவளை பார்த்ததும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது… அவளிடம் சென்று பேச வேண்டும் என்று ஆசைப்பட்டான்…. அவள் பரதம் ஆடும் அழகை மறைந்திருந்து ரசித்துக்கொண்டு தான் இருந்தான்…
தீபா அதை பார்த்து விட்டாள்..
ஹலோ எக்ஸ் கியூஸ் மீ….
ஏன் சார் நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க…
என்று கேட்டா….
உடனே அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் திருத்திருவென்று முழித்தான்….
உங்கள தான் கேட்கிறேன் யார் நீங்க????
உடனே அவன்,”நா தேவா….உங்க அப்பா எங்க வீட்டுக்கு உங்க ஜாதகம் கொண்டு வந்தார்கள்”…
அவளுக்கு புரிந்து விட்டது….
இங்க நீங்க….
எப்படி….
வந்திங்க…..
என்று கேட்டாள்….
நான் வரவில்லை…என் கால் தான் இங்கே இழுத்து வந்து விட்டது…என்று சொன்னான்😀😀😀😀😀….
தேவா சொன்னதை கேட்டு தீபா சிரித்து விட்டாள்……
இப்போ எதுக்கு இங்க வந்தீங்க அப்படி என்று கேட்டாள்..???
உங்களுக்கு என்ன வேண்டும் நீங்கள் மட்டும் இங்கு வந்திருப்பது அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் தயவுசெய்து போங்க என்று சொன்னாள்…
நான் ஏன் வந்தேன் என்று உன்னிடம் சொல்லவா???
உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று தான் வந்தேன், நீ பரதம் ஆடிய அழகில் மெய் மறந்து நின்றேன்….
உன்னிடம் ஒன்று கேட்கவா???
“வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்கு பிடித்த உன்னுடன் மட்டுமே” …..
“நீமூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன்”…
நீஎன்னை விட்ட விலக நினைக்கும் அந்த நொடிக்கு முன் நீ நினைத்து பார்க்க முடியாத தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்…
நான் இதுவரை இப்படி எல்லாம் காதல் வசனம் பேசியது இல்லை உன்னை பார்த்த உடன் என்னமோ மனதில் தோன்றியது…
என்று தீபாவை பார்த்து அவன் கூற அவள் வெட்கப்பட்டாள் அவள் நலினம் மிகவும் அழகாய் இருந்தது அவனுக்கு பார்ப்பதற்கு..
நேற்று வரை எதையோ தேடினேன்.. இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக….
ஏன் தீபா அமைதியாக இருக்கிறாய், உனக்கு என்னை பிடிக்கவில்லையா என்று அவன் கேட்டான்… அவள் வெட்கத்தில் தான் தலை குனிந்து இருந்தால் நிமிர்ந்து பார்த்தால், அவனைப் பார்த்து
“இதனால் தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது, உன்னை மட்டும் தான்! “
“தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை.”.
தீபா இப்படி கூறவும் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.. உடனே தீபா இந்த இடத்தை விட்டு இப்போ போங்க யாராவது பார்த்தால் பிரச்சனையாகிவிடும் என்றாள்.
ஓகே கிளம்புறேன் உன் மொபைல் நம்பர் மட்டும் கொடு நான் போய் விடுகிறேன் என்று தேவா சிரித்துக் கொண்டே கூறினான்…
நீங்க போங்க நான் நம்பர் சொல்றேன் என் நம்பரை அவன் செல்போனில் பதிந்து கொண்டான்….
கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் சந்தோசம் உன் அன்பு.
“உன் முந்தானையில் ஒரு முகக்கவசம் கொடு ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன் இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்”.,❤️❤️❤️❤️
என்று கூறி தேவா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்…
அன்று இரவு முழுவதும் தேவா மொபைலை பார்த்துக் கொண்டிருந்தா
தீபாவிடம் இருந்து அழைப்பு வரும் என்று,
காதலில் காத்திருப்பு என்பது ஒரு சுகமானது. …
சுகமான காத்திருப்பு என கூறினாலும் ஒவ்வொரு நிமிடம் தாமதிக்கும் போதும் மரண வலியை உணர்த்துகிறது…..
அவள் எப்போது ஃபோன் பண்ணுவாள் அவள் இனிமையான குரலை கேட்க வெகு நேரம் மொபைலை கையிலே வைத்துக் கொண்டிருந்தான்…
அப்போது தேவாவின் தங்கை வந்தாள்…
என்னாச்சு அண்ணா எதற்கு மொபைல் பார்த்துக் கொண்டே இருக்கிறாய் என்ன பண்ணுகிறாய் என்று கேட்டால்,”நான் காத்திருப்பது, என் தேவைக்காக அல்ல! என் தேவதையின் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்”.. என்ற பதில் கூறினான்…
சரி ஓகே அண்ணா கொஞ்ச நேரம் மொபைல் என்னிடம் கொடு உன்னை அப்பா அழைக்கிறார் என்ன என்று போய் கேள் என்றாள்…
உடனே தேவா விரைந்து வந்து ஹாலில் அமர்ந்தான்
அப்பா….
அம்மா…. அப்பா எங்கே???
அப்பா என்னிடம் எதுவும் பேச வேண்டும் என்று சொன்னார்களா.???
ஆமா தம்பி அப்பா உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள் இப்ப வந்து விடுவார்கள் என்று அம்மா கூறியதை கேட்டு அமர்ந்திருந்தான்..
அப்படியே அவள் அம்மா இரண்டு தோசை ஊற்றி தேவாவிற்கு எடுத்துக் கொண்டு வந்தால் அம்மா தக்காளி சட்னி இல்லையாமா சரி ஓகே இன்னைக்கு இந்த கருவேப்பிலை துவையல் தானா என்று அம்மாவிடம் செல்லமாக கேட்டான்…
கருவேப்பிலை சாப்பிடுடா அதான் முடிக்கு நல்லது புது மாப்பிள்ளையா ஆக போற இன்று அம்மா சொல்லிக்கொண்டு கிச்சனுக்குள் சென்று விட்டாள்…
உடனே தேவாவின் அப்பா என்னடா சாப்பிட்டுட்டு இருக்கியா சரி சாப்பிட்டு முடிச்சிட்டு என்னோட ரூமுக்கு வா உன்னிடம் நான் கொஞ்சம் பேசணும் என்று சொல்லி அங்கிருந்து ரூமுக்குள் சென்று விட்டார்..
தேவாவும் சாப்பிட்டு முடித்து அப்பாவை காண ரூமுக்குள் சென்றான்…
என்னாச்சு அப்பா???
இங்க வந்து பக்கத்துல உட்காரு தேவா உன் கிட்ட ஒன்னு பேசணும்….
error: Content is protected !!