Skip to content
Post Views: 128
தேவா உள்ளே வந்து ரம்யாவிடம் பேச தொடங்கினான்….
இந்தப் பாரு ரம்யா நான் உனக்கு நல்லதுக்கு தான் சொல்கிறேன் நான் சொல்லுவதை நீ கேள் என்றான்….
சொல்லு அண்ணா என்றாள் ரம்யா…
இன்று நான் உன்னை பார்த்தேன் ராஜேஷ் உடன் என்றான்..
Advertisement
அவன் சொன்னதும் ரம்யாவிற்கு பயம் வந்து விட்டது…
என்னன்னா சொல்ற நான் பேசியதை நீ பார்த்தியா அப்படி என்று கேட்டாள்….
அண்ணா என்னை மன்னித்துவிடு, நானே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்…..
Advertisement
எனக்கு அவனை தான் மிகவும் பிடித்திருக்கிறது… எனக்கு இப்போதைக்கு இந்த திருமணம் வேண்டாம் அண்ணா இதை சொல்ல தான் நான் இவ்வளவு நாள் துடித்துக் கொண்டிருந்தேன்… ஆனால் யாருமே நான் சொல்வதை கேட்கவே இல்லை இப்பொழுது நீயாக கேட்டாயே அண்ணா என்றாள்..
Advertisement
அவன் மிகவும் நல்லவன் எனக்கு அவனை மிகவும் பிடித்திருக்கிறது இன்னும் இரண்டு வருடத்தில் அவன் செட்டில் ஆயிருவான் அதன் பிறகு நம் வீட்டில் வந்து பேசுவான் என்ற ரம்யா சொல்லிக் கொண்டே இருக்க….
போதும் ரம்யா நிறுத்துறியா அவன் புராணத்தை கேட்க நான் ஒன்னும் இங்க வரல …
என்ன நெனச்சிட்டு இருக்க …
உன் மனசுல…
Advertisement
நானும் பாத்துகிட்டே இருக்கேன் என்ற தேவா கோபமாக சொல்லவும் உடனே ரம்யா அமைதியாகிவிட்டாள்..
அவன் எல்லாம் ஒரு ஆளா??
ஒழுங்கா படிப்பையே இன்னும் முடிக்கல தங்கச்சிக்கு இன்னும் கல்யாணம் பண்ணல, குடும்பத்தில் அவ்வளவு கடன் இருக்கு ,அப்பாவும் இல்லை, இவனை நம்பி எல்லாம் உன்ன பொண்ணு கொடுக்க முடியாது …
ஒழுங்கா நாங்கள் சொல்வதைக் கேட்டு பிரபுவா கட்டிக்கோ.. வேஸ்டா உன் லைஃப் கெடுத்துக்காதே… இந்த மாதிரியே பண்ணிட்டு இருந்த அப்புறம் என்ன நீ வேற மாதிரி பார்ப்பாய்…
அன்பா சொல்லும் போதே கேட்டுக்கொள் .காதல் எல்லாம் நமது குடும்பத்துக்கு ஒத்து வராது .தேவையில்லாமல் இதை அம்மா அப்பாவிடம் சொல்லி அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்…
இல்லை உன் இஷ்டப்படி தான் இருப்பேன் என்று சொன்னால் அடுத்த வாரமே திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்து விடுவேன் ..ஒழுங்கா இருந்துக்கொள் .
இன்னொரு முறை அந்த பையனை பார்த்து பேசினால் என்று நான் பார்த்தேன் நடப்பதே வேறு என்று அவளை திட்டி விட்டு வேகமாக சென்று விட்டான்….
தேவா அப்படி சொல்லி விட்டுப் போனதும் ரம்யா அழுது கொண்டு இருந்தாள்… அண்ணன் அவளை புரிந்து கொள்வான் என்று நினைத்தாள் ஆனால் அவனும் இப்படி பேசி விட்டான்…..
ரம்யாவிற்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை…
ரம்யா ராஜேஷுக்கு போன் பண்ணினாள்…
அவனிடம் தேவா சொல்லியது அனைத்தையும் சொன்னாள் உடனே ராஜேஷ் அதிர்ச்சி அடைந்தான்…
உன் அண்ணாவா இப்படி பேசியது உன் அண்ணாவிற்கு உன்னை மிகவும் பிடிக்கும் தானே உன் ஆசையை நிறைவேற்றுவான் என்று சொன்னியே இப்போது உன் அண்ணா இப்படி சொல்லி விட்டான் என்று ராஜேஷ் கேட்க…..
அதான் ராஜேஷ் எனக்கும் புரியல அண்ணன் தான் எனக்கு சப்போர்ட் பண்ணுவான் என்று நினைத்தேன்…
ஆனால் அண்ணாவை இப்படி கோபமாக பேசி விட்டான்…
நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் பேசாமல் நான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டாள் ரம்யா….
ராஜேஷ் அவசரப்படாதே அவசரத்தில் நாம் எடுக்கும் எந்த முடிவும் நிதானமாக இருக்காது என்று அவளுக்கு அறிவுரை கூறினான்….
எனக்கு உன்னை நாளை நேரில் பார்க்க வேண்டும் ராஜேஷ் என்று ரம்யா சொல்லிக் கொண்டு போனை வைத்து விட்டாள்….
இப்போது தேவா நிதானமான மனநிலையில் இல்லை….
ரம்யா எல்லாவற்றையும் புரிந்து நடந்து கொள்ளும் நல்ல பெண்ணாக வளர்ந்தாள். இப்போது ஏனோ காதல் என்ற வலையில் இப்படி சிக்கி விட்டால் இவளை அதிலிருந்து பத்திரமாக மீட்டு எடுக்க வேண்டும் அம்மா அப்பாவிற்கு தெரிந்தால் மிகவும் வேதனைப்படுவார்கள்..
இதை நான் தான் சரி செய்ய வேண்டும் என்று தேவா எண்ணிக்கொண்டு இருந்தான்….
அப்போது தேவாவின் மொபைல் போன் ஒலித்தது…
தீபா தான் அழைத்தாள்…
என்னாச்சுங்க உங்க போனே காணோம் ரொம்ப பிசியா இருக்கீங்களா என்று கேட்டாள்….
அப்படியெல்லாம் இல்லை தீபா கொஞ்சம் தலைவலி… வேறொன்றும் இல்லை மா… என்றான்…
அச்சோ சரிங்க ரெஸ்ட் எடுங்க… நாளை நாம் சந்திக்கலாமா என்ற தீபா கேட்டாள்…
உடனே தேவா….
கண்டிப்பாக எப்போது எங்கே என்று மட்டும் சொல் என சொன்னான்….
நாளை செவ்வாய்க்கிழமை நான் அம்மன் கோவிலுக்கு செல்வேன் நீங்களும் அங்கே வாரீங்களா என்று கேட்டாள்…
கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னான்…
சரிங்க பாய் டேக் கேர் ….
சொல்லிவிட்டு …
தேவா போனை வச்சிடாதீங்க இன்னொன்னு சொல்லணும் என்றாள்…
கோவிலுக்கு வரும்போது உங்கள் தங்கையின் கூட்டிட்டு வாருங்கள் ப்ளீஸ் என்றாள்….
தேவாவிற்கோ ரம்யாவை கோவிலுக்கு தன்னுடன் அழைத்து வாங்க என்று தீபா கூறியது அதிர்ச்சியை தந்தது….
ஏன் ஏன் தீபா என்னாச்சு என்று கேட்டான்??
ஒன்னும் இல்லங்க ஒரு விஷயம் உங்கள் இருவரிடமும் நான் சொல்ல வேண்டும் அதனால் தான் கூப்பிடுகிறேன் என்றாள்….
இவனுக்கும் மனதிற்குள்ளேயே பயம் ஒருவேளை ரம்யா பிரபுவிடம் எதுவும் போன் பண்ணி சொல்லி விட்டாளா அதை தான் தீபா நம்மிடம் இப்போது கேட்க போகிறாளா என்று யோசித்துக் கொண்டே இருந்தான்…..
நான் மட்டும் வரட்டுமா தீபா என்ற தேவா கேட்டான்…
இல்லை கண்டிப்பாக ரம்யாவை அழைத்து வாருங்கள் என்று சொல்லிவிட்டு நாளை பார்க்கலாம் என்று போனை வைத்து விட்டாள்….
இப்போது தேவாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை…
ரம்யாவிடம் போய் கேட்டு பார்க்கலாம் அவள் ஏதாவது பிரபுவிடம் சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்பார்கள் அவளை நம்ப முடியாது என்று நினைத்தான்…..
சரி இப்போது நாம் ரம்யா ரூமுக்குள் போய் பேசினால் அம்மாவும் என்னாச்சு என்று கேட்பார்கள் எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை நாளை காலை பார்த்துக் கொள்ளலாம்..
அவள் எப்படியும் கம்ப்யூட்டர் கிளாஸ் கிளம்புவாள் அப்போதே சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தான் தேவா….
அடுத்த நாள் காலை பொழுது விடிந்தது…..
சூரியன் உதிப்பதை வெளியே நின்று பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டே இருந்தான் தேவா…
“ஒவ்வொரு சூரிய உதயமும் ஒரு புதிய பக்கத்தைப் போன்றது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும், ..
நம்மை நாமே சரி செய்துகொள்ளவும், ஒவ்வொரு நாளையும் அதன் எல்லா மகிமையும் பெறவும் ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு அதிசயம்.”
இந்த அதிசயமான உலகில் அடுத்த நிமிடம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் …
இப்போது என்ன நடக்கப் போகிறது ரம்யாவை அழைத்துக் கொண்டு நான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு உள்ளே போய் ரம்யா என்று அழைத்தான்…
அவளும் என்ன அண்ணா என்று கேட்டாள்….
நீ வேகமாக கிளாசுக்கு கிளம்பு நான் உன்னை கொண்டு போய் விடுகிறேன் சீக்கிரமாக குளித்துவிட்டு கிளம்பி வா என்றான்..
அவளுக்கும் ஏன் அண்ணா நம்மை கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னான் ஒரு வேலை ராஜேஷை பார்க்க போகிறானா என்று மனதிற்குள் என் நிலை அண்ணனிடம் கேட்க தயங்கி சரி அண்ணா கிளம்பி விட்டு வருகிறேன் என்றாள்….
ரம்யாவும் கிளம்பி தேவாவுடன் உடன் போனாள்…
பாதி வழியில் போகும்போது ரம்யா
அண்ணா…
இந்தப் பக்கம் எனக்கு கிளாசுக்கு போக கூடாது நீ வழி மாதிரி வேற எங்கேயோ போகிறாய் அண்ணா என்று சொன்னாள்….
அது எல்லாம் எனக்கு தெரியும் நீ பேசாமல் அமைதியாக வா ரம்யா என்றான்….
அண்ணா எங்க போறோம்?? அதையாவது சொல்லு என்று ரம்யா கேட்டாள்..
கோவிலுக்கு போகிறோம் என்ற தேவா சொல்ல,
இப்போ எதுக்கு கோவிலுக்கு எனக்கு கிளாசுக்கு நேரமாகிவிட்டது நான் கிளாசுக்கு போக வேண்டும். என்றவுடன் ரம்யா திரும்பவும் சொன்னாள்…
இல்லை என்று நீ கிளாசுக்கு கொஞ்சம் தாமதமாக போகலாம் இப்போது கோவிலுக்கு போயிட்டு பிறகு போகலாம் என்று தேவா சொன்னான்….
சரி எதற்காக திடீரென்று கோவிலுக்கு அழைத்து போகிறாய் அண்ணா என்று ரம்யா கேட்க….
ஒன்னும் இல்லை உன் அண்ணி உன்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாள் …
அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை …
நாம் இருவரும் போய் அவளை பார்த்து பேசி விட்டு பிறகு உன்னை கிளாசில் விட்டு விடுகிறேன் சரியா…
அண்ணி எதற்காக என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்???
பார்க்க வேண்டும் என்றால் நீ மட்டும் பார்க்க போ எனக்கு நேரம் ஆகிவிட்டது என்று ரம்யா சொல்ல…
இப்போ நீ அமைதியா வரப் போறியா இல்லையா??? பேசாமல் வா உன் அண்ணி என்ன சொல்கிறாள் என்று போய் கேட்போம்…
இன்றைய தேவாவும் ரம்யாவும் பேசிக்கொண்டே கோவிலை அடைந்தார்கள்….
கோவிலுக்கு சென்றார்கள்.. ரம்யா நீ சாமிக்கு பூ வாங்கிக்கொண்டு வா நான் முன்னாடி போகிறேன் என்ற தேவா முதலில் போனான்….
தீபா சாமியை சுற்றி வந்து கொண்டிருந்தாள்…
அதை வைத்த கண் வாங்காமல் தேவா பார்த்துக் கொண்டேன் என்றான்…
தேவா பார்ப்பதை அறிந்த தீபா அவன் அருகில் நடந்த வந்தாள்…
என்னங்க கோவிலுக்கு வந்துட்டு சாமியை கும்பிடாமல் எங்க பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்டாள்…
கோவிலில் அழகு சிலைகள் அனைத்தும் அசையாமல் இருக்க,
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்…
நீ கோவிலை சுற்றிவரும் போது..!!!
என்ன தீபாவிடம் சொன்னான்…
போதுங்க சாமி கும்பிடலாம் இது கோவில் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்….ரம்யாவை எங்கே?? என்று தீபா கேட்டாள்…
இதோ பின்னாடி வருகிறாள் என்றான்….
ரம்யா தூரத்தில் யோசித்துக்கொண்டே வந்தால் அண்ணி எதற்காக என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள் என்று 🤔🤔🤔😔😔😔😔…..
ரம்யா வருவதை பார்த்த தீபா கை அசைத்தாள்…
ரம்யாவும் அங்கிருந்து வரும்போது ஹாய் அண்ணி என்று சொல்லிக்கொண்டே வந்தாள்….
ரம்யா அருகில் வந்து அண்ணி எப்படி இருக்கீங்க என்று கேட்டாள் …உடனே தீபா நான் நலமாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டாள்…
நான் சூப்பரா இருக்கேன் என்று ரம்யா சொன்னா…
உடனே ரம்யா அண்ணா நீயும் அண்ணியும் பேசி கொண்டு இருங்கள்… நான் சாமிக்கு இந்த பூவை கொடுத்து அர்ச்சனை பண்ணி விட்டு வருகிறேன் என்று சொல்லி நகர்ந்தாள்…
உடனே தேவாவும் சரி என்று சொன்னான்…
தீபா தினமும் இந்த கோவிலுக்கு வருவியா என்று கேட்டான்….
இல்லை இல்லை செவ்வாய் வெள்ளியில் வருவது வழக்கம் அப்படி என்று சொல்லிவிட்டு நான் உங்களுடனும் ரம்யாவிடமும் என் அண்ணனை பற்றி ஒன்று சொல்ல வேண்டும் அதற்கு தான் வர சொன்னேன் என்றாள்…
சரி சொல்லு என்றான்…
இருங்க ரம்யா வரட்டும்…..
நீங்க சாப்டீங்களா என்று கேட்டாள் தீபா…
சாப்பிட்டு தான் வந்தேன் தோசை புதினா சட்னி என்று சொன்னான்….
நீ???
நான் இன்னும் சாப்பிடவில்லை சாமி கும்பிட்டு வீட்டுக்கு போய் அதன் பிறகு தான் சாப்பிடுவேன் என்றாள்….
ரம்யா கோவிலை சுற்றி முடித்து வந்து இவர்கள் அருகில் உட்கார்ந்தாள்….
ரம்யா உனக்கு என் அண்ணாவை பிடித்திருக்கிறதா உண்மையாக சொல் என்று கேட்டாள் தீபா…
அது வந்து ….
பிடிச்சிருக்கு ….
என்று தேவாவை பார்த்தபடி சொன்னாள்…
என் அண்ணன் கொஞ்சம் கோபப்படுவான் உங்களிடம் இப்போது நன்றாக பேசுகிறானா போன் பண்ணுவானா?? என்ற தீபா கேட்டுக் கொண்டே போனாள்…
ம்ம்…பேசுவாங்க….என்று ரம்யா சொன்னாள்…
என் அண்ணனுக்கு அனாவசியமாக மற்றொரு ஆணுடன் பேசுவது பிடிக்காது.. அவன் அப்படி ஆனதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றாள்…..
என் அண்ணனுக்கு இரண்டு வருடத்திற்கு முன் ஒரு பெண்ணை அப்பா பார்த்தார்….
அப்போது அந்தப் பெண்ணும் அண்ணாவிடம் நன்றாக தான் பேசியது…
நிச்சயதார்த்தம் நாள் குறிக்கும் முன் அந்தப் பெண் வேறு ஒருவர் நபருடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை அண்ணன் பார்த்தான் அப்பொழுது கூட அண்ணன் சந்தேகப்பட்ட வில்லை….
அந்தப் பெண்ணிடம் கேட்டான் அதற்கு அவளோ பிரண்ட் என்று சொல்லிவிட்டாள்…
சரி என்று அதன் பிறகு அண்ணன் அதைப் பற்றிய அந்த பெண்ணிடம் கேட்கவில்லை….
அதன் பிறகு அண்ணா அந்த பெண்ணுடன் ஒருநாள் வெளியே சென்று உள்ளார் அப்போது அந்த பெண்ணுடன் வேறொரு நபர் வந்து பேசிக்கொண்டே இருந்தார்…..
இது என்னுடைய காலேஜ்மெண்ட் என்ற அந்த பெண் கூலாக பதில் சொல்லவும் அதையும் அண்ணா கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்…..
நிச்சயதார்த்தம் தேதி குறிக்கும் வேளையில் அந்தப் பெண் யாருடனும் ஓடிப் போய்விட்டாள் என்று அவரது வீட்டில் இருந்து சொன்னார்கள் ..
அதை கேட்ட அண்ணனுக்கு மிகவும் அதிர்ச்சி .. எப்படி வேறொரு நபரை காதலித்து என்னை திருமணம் செய்வதற்கு இந்த பெண் சரி என்று சொன்னால் என்று அண்ணன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டு பெண்களே வேண்டாம் திருமணமே வேண்டாம் என்று கோபப்பட்டான்..
அப்போது இருந்து அவன் திருமணமே வேண்டாம் இந்த பெண்களை இப்படித்தான் என்ற ஒரு தவறான கண்ணோட்டத்தில் இருந்தான்..
உங்களைப் பார்த்த பிறகு தான் திருமணத்திற்கு சரி என்று சொன்னான்…
அதனால் தான் நானே நான் வேறொரு நபருடன் பேசினால் அண்ணா கோபப்பட்டு கண்டிப்பான்..
ஆனால் அதெல்லாம் பாசம் தான் சந்தேகம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று ரம்யாவிடம் தீபா சொல்லிக் கொண்டே இருந்தாள்…
இதைக்கேட்ட தேவா சரி இதெல்லாம் ஏன் இப்போது சொல்கிறாய் என்னாச்சு என்று கேட்டான்….
இல்லை நிச்சயதார்த்தம் வரை வந்து அது நின்றதுக்கு அண்ணன் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டான் இப்போது நடக்க இருக்கும் திருமண நல்லபடியாக நடக்க வேண்டும் அதனால் தான் நான் ரம்யாவிடம் இதை எல்லாம் சொல்கிறேன் என்று தீபா சொன்னாள்….
ரம்யா எனக்கு ப்ராமிஸ் பண்ணு நல்லபடியாக இந்த திருமணம் நடப்பது உன் கையில் தான் இருக்கிறது என்று தீபா கேட்க ரம்யா தயங்கினாள்….
அண்ணி….
அது வந்து….
ரம்யா அண்ணி சொல்றத கேளு என்றான் தேவா….
error: Content is protected !!