Skip to content
Post Views: 4,651

வாணன் வர்ணன் அப்போது தான் மருத்துவமனை வந்து இருந்தனர்… அவர்களை அழைக்க தான் முகுந்தன் வெளியில் வந்தான்… அவனே தெளிவாக சொல்ல தான் வந்தான்… இல்லை என்றால் பதறுவார்கள் என….
Advertisement
அப்போது தான் அர்ஜுனனை பார்த்தான்… பார்த்ததும் இவன் முன்பே இவனின் காதலை சொல்லி இருந்தால் சுபாவிற்கு இது நடந்து இருக்காதே என நினைத்து அந்த நேரத்தில் இருந்த கோவத்தை காட்டிவிட்டான்….
முகுந்தன் மிகவும் நிதானமானவன்… ஆனால் அந்த நேரத்தில் இருந்த பதட்டம் அவனை யோசிக்கவிடாமல் அர்ஜுனனை அடிக்க வைத்து விட்டது….
Advertisement
Advertisement
வாணன் வர்ணன் பின்னால் வந்த நந்தினி கண்மணி மருதாயி பாட்டி மாரியப்பன் செண்பகம் அனைவரும் கேட்டு இருந்தனர்….
அனைவருக்கும் அவன் சொல்லாமல் இருந்தது கோவமாக இருந்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை….
Advertisement
மருதாயி பாட்டி தான் அவன் சட்டையில் இருந்த ரத்தக்கறையை பார்த்து பதறி அவர் தான் விசாரித்தார்…
அதன்பின் தான் அனைவரும் அவனை நோக்கினர்… வாணன் பதறியபடி “அர்ஜுன் உனக்கு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு ரத்தம் உன்மேல… உனக்கு எங்கயோ அடிபட்டு இருக்க அர்ஜுன் வாயை திறந்து சொல்லுடா” என்று அவனை ஆராய்ந்தபடி கேட்டான்….
அவனோ யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாமல் பித்து பிடித்தவாறு நின்று இருந்தான்…
தேவியின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவரை பார்த்துக்கொண்டனர்… பின் தேவியின் அப்பா தயங்கியவாறே சோர்ந்த முகத்துடன் இவர்களில் அருகில் வந்து “நா…ன் நான் பேசலாமா???” என்று துக்கம் தொண்டையை அடைக்க கேட்டார்…
அவரை தெரியவில்லை… அவரின் பின் வந்த தேவி அம்மாவின் அழுத முகத்தை பார்த்து என்ன நினைத்தார்களோ சரி என தலையசைத்தனர்….
“நீங்க பேசுனதை கேட்டோம்… நீங்க சுபா பாப்பாவுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்ட் பண்றதை பத்தி சொன்னிங்க… எங்க பொண்…. பொண்ண..ணோட ஹார்ட் சுபா பாப்பாவுக்கு செட் ஆனா அதையே ட்ரான்ஸ்பிளான்ட் பண்ண முடியுமான்னு டாக்டர்கிட்ட கேட்டு என் பொண்ணோட ஹார்ட்டை எடுத்துக்க சொல்லுங்க” என்று கூறி அழுதவாறே கூறி முடித்தார்….
அவர் கூறியதை கேட்டு அவ்விடமே அமைதியாகியது….. யாருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை…. தேவி இறந்துவிட்டாள் என்று கேட்டு அனைவரும் எப்படி உணர்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை….
அனைவரும் அர்ஜுனனின் முகத்தை தான் பார்த்தனர்… அவனோ தேவியின் இறப்பு செய்தியில் இருந்தே முழுதாக வெளியே வராதவன் சுபாவின் காதல் அதன்பின் அவளிற்கு ஏற்பட்ட விபத்து அனைத்தும் கேட்டு அவனால் எதுவும் யோசிக்க கூட முடியவில்லை.. ஸ்தம்பித்த நிலையில் தான் அர்ஜுனன் நின்று இருந்தான்…..
ஆனால் அவனை யாரும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை…. தேவியின் பெற்றோர்களே டாக்டரிடம் சென்று பேசினர்…. இவர்களின் முடிவை கேட்டு அவர் பாராட்டினார்… அவருக்கு உயிர்ப்பே இல்லாத சிரிப்பை உதிர்த்துவிட்டு அவருடன் சுபாவை சார்ந்தோர் இருக்கும் இடத்திற்கு மருத்துவருடன் சென்றனர்….
அந்த மருத்துவர் சுபாவை கண்காணித்து கொண்டு இருக்கும் மருத்துவரிடம் பேசி தேவியின் இதயம் சுபாவிற்கு பொருந்துமா என பார்க்க முடிவெடுத்து இருவரின் ரத்த வகையை கேட்டு அறிந்தனர்…
சுபாவை சார்ந்தோர் அவளுக்கு இதயம் பொருந்த வேண்டும் என வேண்டுகோள் வைத்து கொண்டு இருந்தனர்… தேவியின் பெற்றோரோ தங்கள் மகள் சுபாவின் மூலம் வாழ வேண்டும் வேண்டினர்….
கடவுளுக்கு இவர்களின் வேண்டுதல் கேட்டதோ என்னவோ தேவியின் இதயம் சுபாவிற்கு பொருந்தும் என மருத்துவர்கள் கூறினர்….
அப்போது தான் அனைவருக்கும் மூச்சே வந்தது….
அர்ஜுனனை மயக்க மருந்து குடுத்து உறங்க வைத்து இருந்தனர்… யார் என்ன கேட்டும் பதில் சொல்லாமல் பித்து பிடித்தவாறே நின்று இருந்தான்… அதனால் அவனை உறங்க வைத்து இருந்தனர்….
அர்ஜுனனின் காதல் அவனின் குடும்பத்திற்கு சொல்லவில்லை… சொல்லியும் எந்த பயனும் இல்லை என்பதற்காக சொல்லவில்லை…. சசியிற்கு மட்டும் தெரியும் முகுந்தன் சொல்லிவிட்டான்….
மருத்துவர்கள் வெற்றிகரமாக தேவியின் இதயத்தை சுபாவிற்கு பொருத்தி அறுவை சிகிச்சையை செய்து முடித்து இருந்தனர்…
தேவியின் பெற்றோர் அவளின் அணைத்து உறுப்புகளையும் தானம் செய்வதாக கூறிவிட்டனர்… அவர்கள் மேல் அனைவருக்கும் பெரும் மதிப்பே உருவாகி இருந்தது….
நேரங்கள் யாருக்கும் காத்திராமல் செண்டு இருந்தது…. தேவியின் உடலை அவளின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அவளின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்….
அவர்களுக்கு உறவினர்கள் என்று யாருமில்லை… தேவியின் பெற்றோர் காதல் திருமணம் எனவே அவர்கள் வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை… காஞ்சிபுரத்தில் அவர்களுக்கென ஒரு சொந்த வீடு உள்ளது… விடுமுறையில் அங்கு தான் சென்று வருவர்…
இருவர் மட்டும் இருப்பதை பார்த்து வாணன் வர்ணன் முகுந்தன் தான் அவர்களுக்கு உதவியாய் இருந்தனர்…. அர்ஜுனனும் விழித்து இருந்தான்… அவன் விழித்த போது வாணனும் முகுந்தனும் தான் இருந்தனர்…
வாணனை பார்த்தவுடன் அணைத்து கொண்டு அழுதுவிட்டான்…. பின் அவனே “உங்க கிட்ட வேணும்னு மறைக்கல அத்தான்… ஸ்கூல் படிக்குற அப்ப லவ் பண்றது தம்பிகளுக்கு தப்பான எடுத்துக்காட்டா இருக்க கூடாதுனு எனக்குன்னு கரெக்ட்டான வயசு வரப்ப சொல்லாம்னு இருந்தேன்… இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை அத்தான்….
அம்மு மனசுல எப்ப காதல்னு உணர்த்துனேன்னு எனக்கே தெரியல அத்தான்…. அவ கூட பேசிக்கூட ரொம்ப வருஷம் ஆகுது அத்தான்…. எனக்கு என்ன நடக்குதுனே புரியல அத்தான்… ” என்று கூறி அழுதான் அர்ஜுனன்….
அவனை சமாதானம் படுத்தி அவனையும் அழைத்து கொண்டு வாணன் முகுந்தன் தேவியின் பெற்றோருடன் காஞ்சிபுரம் சென்றனர்….
அவளுக்கு இறுதி காரியம் செய்துவிட்டு தேவியின் பெற்றோரிடம் ” நாங்க மூனு பேரு உங்க பசங்க தான்… இனிமே உங்களுக்காக நாங்க இருக்கோம்… தேவியோட இதயம் சுபாவுக்கு வெச்சதுனால சொல்லல… நீங்களும் எங்களுக்கு அப்பா அம்மா..,” என்று கூறி வாணன் விடைபெற்றான்…
முகுந்தனும் வாணனின் கூற்றை ஆமோதித்து கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்றான்….
அர்ஜுனன் தயங்கியப்படியே அவர்களின் முன் நின்றான்… தேவியின் அப்பாவோ அர்ஜுனனை அணைத்து “அவளோட ஆயுசு அவளோ தான் தம்பி…. அவளை நினைச்சு கவலை படாத… உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு… எத நினைச்சும் வருத்த படாத… ” என்று கூறி விடை குடுத்தார்…
காரில் மூவரும் யாருடனும் பேசவில்லை…வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் சுபா அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு வந்து இருந்தனர்….
வாணன் வர்ணனிடம் ” பாப்பா நல்லா இருக்காளா வர்ணா… டாக்டர் என்ன சொன்னாங்க…” என்று கேட்டான்…
அவனோ ” பாப்பா நல்லா இருக்கா அண்ணா… இப்ப எந்த பிரச்சனையும் இல்ல… கைல எலும்பு முறிவு இருக்கு.. சரியாக ரெண்டு மாசம் ஆகுமாம்… அப்புறம்… ” என்று கூறி இழுத்து நிறுத்தினான்
“அப்புறம் என்ன டா சொல்லு ஏன் நிறுத்திட்ட…???” என்று பதறியப்படி கேட்டான் வாணன்
“அண்ணா தலைல அடிபட்டு இருக்குறதுனால பாப்பாவுக்கு மெமரி லாஸ் ஆகி இருக்க வாய்ப்பு இருக்காம்… பாப்பா கண்ணு முழிச்சா தான் தெரியும்னு சொல்லி இருக்காங்க… கண்ணு முழிக்க நாளைக்கு ஆகிடும்னு சொல்லி இருக்காங்க” என்று கூறினான்
மருத்துவமனையில் வர்ணனும் செண்பகம் அம்மாவும் இருக்க மற்றவர்களை உறங்க சென்றுவிட்டனர்… அர்ஜுனனை வற்புறுத்தி வாணன் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டான்….
அடுத்த நாள் அனைவரையும் பதற வைத்து தான் சுபா கண் திறந்தாள்…. மருத்துவர் அவளை பரிசோதனை செய்து விட்டு “அவங்க நல்ல இருக்காங்க… ஒருத்தர் மட்டும் வாங்க” என்று கூறி வாணனை மட்டும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்…
“ஹலோ மிஸ் சுபத்திரா… பெயின் எதோ இருக்கா உங்களுக்கு???” என்று கேட்டார்
“அவள் ஆமா டாக்டர் தலை வலிக்குது” என்று கூறினாள்…
“இது யாருனு தெரியுதா உங்களுக்கு…???” என்று வாணனை காட்டி கேட்டார்…
ம்ம் என்று தலை அசைத்து “என்னோட பெரிய அண்ணன் வாணன்” என்று கூறினாள்
“இவங்களுக்கு எந்த மெமரி லாசும் ஆகல” என்று கூறிவிட்டு சென்றார்…
“அண்ணா எனக்கு என்ன ஆச்சு.. அப்டினா என்னால காலேஜ்க்கு போக முடியாதா… எத்தனை நாளா இங்க இருக்கேன்” என்று கேட்டாள் சுபா….
பாப்பா என்ன கேட்ட காலேஜா… டேய் நீ காலேஜ் முடிச்சி ஆறு மாசம் ஆக போகுது டா… வெயிட் டாக்டரை கூட்டிட்டு வரேன்… எதை பத்தியும் யோசிக்க கூடாது என்று மருத்துவரை பார்க்க ஓடினான்…
அவரும் அவனிடம் கேட்டுவிட்டு “ஐ திங்க் அவங்களுக்கு குறிப்பிட்ட வருஷம் நடந்தது மறந்து போய் இருக்க வாய்ப்பு இருக்கு… இது ஞாபாகம் வரவும் வாய்ப்பு இருக்கு வராமையும் போகலாம்” என்று கூறிக்கொண்டே அவளின் அறைக்கு நுழைந்தார் மருத்துவர்….
“மிஸ் சுபத்திரா உங்களுக்கு கடைசியா என்ன நடந்து இருக்குனு ஞாபாகம் இருக்கா” என்று கேட்டார்…
“அது டாக்டர் நான் என்னோட போர்த் செம் பினிஷ் பண்ணிட்டு வீட்டுல இருக்கேன்…. நெஸ்ட் டே காலேஜ் போகணும்னு தூங்க போறேன் அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு” என்று கூறினாள்…
“டாக்டர் ஒன் அன்ட் ஹாப் இயர் மெமரி லாஸ் ஆகி இருக்கு போல… பாப்பா காலேஜ் முடிச்சி சிக்ஸ் மந்த்ஸ் ஆகுது” என்று கூறினான்…
“ஓகே முன்ன சொன்னது தான் எப்ப வேணாலும் மெமரி கைன் ஆகலாம்” என்று கூறி சென்று விட்டார்…
அதன்பிறகு வீட்டினரின் விசாரிப்பு அழுகை ஓய்வு தூக்கம் மாத்திரை என பதினைத்து நாட்கள் ஓடியது… சுபாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்…. இந்த பதினைந்து நாட்களில் ஒரு வருடத்தில் நடந்ததை குடும்பத்தினர் மூலம் தெரிந்து கொண்டாள்…
நிகழ் காலத்தில் வெளியில் கேட்ட பயங்கரமான இடி சத்தத்தில் நிஜ உலகிற்கு வந்து இருந்தாள் சுபா… அறிந்த உண்மைகளை நினைத்து இடிந்து போய் அந்த அறையில் இருந்து வெளியில் வந்து இருந்தாள் சுபா……
error: Content is protected !!