தெரிந்த மருத்துவமனை என்பதால் கிளம்பும் போதே முகுந்தன் அழைத்து சொல்லிவிட்டான் அவர்களும் அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டனர்… கார் நின்றதும் உடனடியாக அவளை எமெர்ஜென்சி அறைக்கு மாற்றி அவளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது…
இன்னும் அர்ஜுனன் யாரிடமும் பேசவில்லை…. ஒரு இடத்தில வெறித்தவாறு அமர்ந்துவிட்டான்…
வாணன் வர்ணன் இருவரும் கொஞ்சம் தெளிவடைந்து இருந்தனர் தங்கள் மனைவிமாரின் உதவியால்…. நந்தினியும் ஜனனியும் அவரவர் கணவன்மார்களை தெளிவடைய செய்து இருந்தனர்….
Advertisement
ஆனால் இருந்த பதட்டத்தில் அர்ஜுனனை யாரும் கவனிக்கவில்லை…சிலமணி நேர சிகிச்சைக்கு பின் குழந்தைக்கும் தாயிற்கும் ஒன்றும் இல்லை… நலமாக உள்ளனர் என்று கூறிவிட்டு இன்னும் ஒரு மணிநேரம் கழித்து பாருங்கள் என்று கூறி மருத்துவர்கள் சென்றுவிட்டனர்….
ஒருமணிநேரம் கழித்து முதலில் அர்ஜுனன் சுபாவை பார்க்க சென்றான்… உள்ளே மயக்கத்தில் இருந்த அவள் அருகில் சென்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு “நான் தேவியை காதலிச்சது உண்மை தான் அம்மு…. எப்போ உன்னை கல்யாணம் பண்ணனும்னு வீட்டுல சொன்னாங்களோ அப்ப இருந்து அவ என் மனசுல இல்ல அம்மு….
நேத்து என்ன கேட்டுட்ட அம்மு… நம்ம குழந்தைங்க நம்ம காதலால் உருவாகலயானு கேட்டுட்ட… என்னோட காதலை நீ புரிஞ்சிக்கவே இல்லையா அம்மு….
Advertisement
எப்போ உன்னை தொட்டு தாலி கட்டினேனோ அப்ப இருந்து இப்போ வரைக்கும் நீ மட்டும் தான் அம்மு இருக்க… இனிமேலும் நீ தான் இருப்ப…. நீ என்னையே பாத்துட்டே இருந்தா நீ நிம்மதியா இருக்க மாட்ட அம்மு…
Advertisement
நீநான்பேசுறதைகேட்குறனுதெரியும்அம்மு…. எப்போ உனக்கு என்மேல் கோவம் குறையுதோ அப்போ என் போனுக்கு கூப்பிடு அம்மு அப்போ வரேன்… திரும்பியும் சொல்றேன் என் மனசுக்குள்ள முழுசா நீ மட்டும் தான் இருக்க அம்மு… லவ் யூ அம்மு…. சீக்கிரம் மாமாவை மன்னிச்சிடு அம்மு… நீ இல்லாம நான் இல்லடா தாரும்மா… ” என்று அவளை சிலநிமிடம் பார்த்தவாறு நின்றுவிட்டு முதலில் அவள் வயிற்றில் இருக்கும் அவர்கள் மகவுக்கு முத்தமிட்டு விட்டு பின் அவளின் தலையை கோதிவிட்டு நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டான்….
அர்ஜுனன் அங்கிருந்து நகர்ந்ததும் மெதுவாக கண்களை திறந்தாள் சுபத்திரா… அவன் பேசியதை அனைத்தும் கேட்டு தான் இருந்தாள்… அவன் முதலில் முத்தமிட்ட போதே மயக்கம் தெளிந்து இருந்தது…
அதன் பின் அவன் பேசியது அனைத்தும் அவன்பால் உருக வைத்தாலும் அவன் மறைத்துவிட்டானே என்ற கோவம் கண்களை திறக்க விடவில்லை…
Advertisement
அதன்பின் அவளை யோசிக்க விடாமல் மற்றவர்கள் உள்ளே அவளை பார்க்க வந்துவிட்டனர்…
அனைவரிடம் பேசினாலும் அவளின் தமையன்களிடம் பேசவில்லை.. அவளை அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்து அழைத்து செல்லலாம் என கூறிவிட்டனர்.. அவளுடன் வர்ணனும் ஜனனியும் இருக்க மற்றவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்..
மருத்துவமனை விட்டு சென்ற அர்ஜுனன் வீட்டிற்கு செல்லாமல் தோப்பு வீட்டிற்கும் செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டான்… அவன் சென்றதை யாரும் கவனிக்கவே இல்லை…
சுபா கட்டிலில் நடுவில் அமர்ந்து இருக்க வாணனும் வர்ணனும் அவளுக்கு இருபுறமும் வந்து அமர்ந்து கொண்டனர்…
இருவரும் அவளிடம் மன்னிப்பு கேட்க வந்த போது ” அண்ணா நீங்க மன்னிப்பு கேட்பிங்கனு தெரிஞ்சி தான் உங்க கிட்ட பேசல ண்ணா… நீங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க கூடாது அண்ணா….. அது நானா இருந்தாலும் சரி…. நடந்தது பத்தி பேச வேணாம் ண்ணா.. ” என்று கூறி வாணன் தோளில் சாய்ந்து கொண்டாள்….. வர்ணன் கையை பிடித்து கொண்டாள்… அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டும் முன் வாணன் துடைத்து விட்டான்….
உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே….
என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே…..
பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே…..
நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே…..
நாட்கள் மேலும் இரண்டு வாரம் சென்று இருந்தது…. சுபாவிற்கு பிரசவ தேதி நெருங்கி இருந்தது… மருத்துவர் இன்னும் பத்து நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி இருந்தது….
அனைவருக்கும் தெரிந்து தான் இருந்தது சுபா கூறாமல் அர்ஜுனன் அய்யனார்புறம் வர மாட்டான் என… ஆனால் அவளிடம் பேச யாரும் முன் வரவில்லை….
ஆரவும் அர்ஜுனனை தேட ஆரம்பித்து இருந்தான்… சொல்லிவிட்டு சென்று இருந்தாலும் இத்தனை நாள் பிரிந்து இருந்தது இல்லை… அதனால் அழ ஆரம்பித்து இருந்தான்….
இந்த இரண்டு வார காலத்தில் சுபாவிற்கும் அர்ஜுனன் மேல் இருந்த கோவம் குறைந்து தான் இருந்தது…. அவளும் அர்ஜுனனின் அருகாமையை தேட ஆரம்பித்து இருந்தாள்…
அலைபேசியில் இருக்கும் அர்ஜுனன் புகைப்படத்தை பார்த்து பேசிக்கொண்டு இருப்பாள்… அதை அணைத்து கொண்டு தான் தூங்குவாள்….
இங்கு அவள் அவன் நினைவில் வாட அங்கு அவனும் அவனின் அம்முவின் நினைவில் தான் சுழன்று கொண்டு இருந்தான்…
இந்த மூன்று வாரத்தில் இளைத்து தான் போய் இருந்தான் அவளின் நினைவில்… எப்போதும் அவனுடன் இருக்கும் அவளின் போட்டோவை பார்த்து தான் நாட்களை கழித்து கொண்டு உள்ளான்….
இந்த மூன்று வாரத்தில் இத்தனை நாள் அழுகாத அழுகை எல்லாம் அழுது தீர்த்து இருந்தான்….
தற்போது கூட அந்த புகைப்படத்தை பார்த்து ” இன்னும் என் மேல இருக்குற கோவம் போகலையா அம்மு… இந்த மாமாவை கடைசி வர மன்னிக்கவே மாட்டியா அம்மு…. சத்தியமா நீ இல்லாம இருக்க முடியல அம்மு… உன்னோட வாசனை.. உன்னோட அருகாமை… உன்னோட அணைப்பு… இது இல்லாம என்னால இருக்க முடியல அம்மு… சீக்கிரம் மாமாவை மன்னிச்சுடு அம்மு…” என்று கூறி அந்த புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தான்…..
உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே..
குழந்தைய போல மடியில போட்டு தூங்காம நீ என்ன தாலாட்டுவ மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா தாயா நீ உன்கையால் சோறூட்டுவ…
பசியே இல்லனு பலவாட்டி சொல்ல ஒழுங்கா திண்ணுன்னு குணம்காட்டுவ புடவ பொட்டுனு எதையும் கேட்காம புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ…..
குலசாமி தந்திட்ட பூவ வணங்காமா வச்சிட்டேன் நோவ ஒழுங்கா நா ஆவ நீ தான் தேவ ….