Skip to content
Post Views: 6,089

கிரிஜா பாலாவின் காலில் விழுந்து அழுது கொண்டே “என்னை மன்னிச்சிடுங்க.. அப்ப எதோ தெரியாம பண்ணிட்டேன்….. அதுக்கு அப்பறம் உங்க கிட்ட உண்மையை சொல்லணும்னு நினைப்பேன்.. ஆனா பயம் என்னை தடுத்துடும்… மன்னிச்சிடுங்க” என்று கதறினார்….
பாலா அவரிடம் “சரி அதவிடு சசிக்கு தான் முதல் மரியாதை தரணும்னு அந்த பொண்ணு கூட சேர்ந்து எவளோ வேல செஞ்சி இருக்க… அப்ப கூட மனசு உறுத்தல…. இத்தனை வருஷம் நாம வாழ்ந்த வாழ்க்கை ஒண்ணுமே இல்ல… ஆரம்பத்துல இருந்து பொய்யோட தான் என்கூட வாழ்ந்து இருக்க என் கண்ணு முன்னாடியே வராத…
Advertisement
எத்தனை நாள் குற்றவுணணர்ச்சில தவிச்சி இருக்கேன் தெரியுமா…. அந்த குற்றவுணர்ச்சில என் புள்ளைங்கள கூட நான் கவனிக்கல…. எல்லாம் உன்னால தான் உன் நிழல் கூட என்மேல படக்கூடாதுனு நினைக்குறேன் தயவு செஞ்சி என் முன்னாடி வராத” என்று அவர் வெளியே செல்ல முற்படும்போது “அப்பா ” என்று சசிகுமார் அழைத்தான்….”
Advertisement
அப்போது தான் அனைவரும் அவனை பார்த்தனர்….. அவன் முகம் அத்தனை கலங்கி இருந்தது.. அவன் கண்களில் இருந்து கண்ணில் வெளியேறிக் கொண்டு இருந்தது….
Advertisement
அனைவரையும் பார்த்து கை எடுத்து கும்பிட்டு “என்னை மன்னிச்சிடுங்க எல்லாரும்…. எனக்கு உரிமை இருக்குனு தெரிஞ்சி தான் நான் இவளோ திமிரா யாரையும் மதிக்காம இருந்தேன்… அது இப்ப உண்மை இல்ல.. பாட்டி அன்னிக்கு இந்த வீட்டுல உரிமை இல்லனு சொன்ன அப்ப கூட நமக்கு அப்பாவோட சொத்து இருக்குல்லனு நினைச்சேன்…
Advertisement
ஆனா அதுவும் எனக்கு சொந்தம் இல்லை…. எனக்கு உரிமை இல்லாத வீட்டுல எனக்கு எந்த வேலையும் இல்ல.. என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க… நான் இந்த வீட்டை விட்டு போறேன்…” என்று கூறி அவன் போட்டு இருந்த கழுத்து செயின் மோதிரம் அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு ரேவதியிடம் திரும்பி “ரேவா எல்லா நகையையும் கழட்டு… எல்லாத்தையும் பாட்டி கிட்ட குடுத்துட்டு வா போலாம்” என்று கூறினான்….
அவளோ “உனக்கு என்ன பைத்தியமா சசி எதுவும் வேணாம்னு சொல்லிட்டு போற… உன் அம்மாவுக்கு உரிமை இருக்குல்ல இந்த வீட்டுல அது உனக்கு தானு சொந்தம் அதை வாங்கிட்டு வா போலாம்.. எதுவும் வேணாம்னு சொல்ற… அதை கேளு அப்பறம் நாம தனியா போலாம்” என்று ரேவதி கூறினாள்
“இல்ல ரேவா எனக்கு எதுவும் தேவையில்ல வா உன்ன நான் பாத்துப்பேன்… வா போலாம்” என்று கூப்பிட்டான்…
“ஆமா நீ லட்சம் லட்சமா சம்பாதிக்கிற… உன்கூட வந்து நானும் பிச்சை எடுக்கவா… உன் அம்மாவோட பங்கை பிரிச்சி வாங்கிட்டு வா போலாம்” என்று விடாபிடியாக நின்றாள்..
“என்னோட சொத்தை பார்த்து தான் என்னை லவ் பண்ணியா ரேவா… என்னை லவ் பண்ணலயா… ” என்று வேதனையுடன் கேட்டான்…
அவளோ எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் “ஆமா உன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சு தான் லவ் பண்ணேன்… உன் குடும்பத்துக்கு இவளோ சொத்து இருக்குனு தெரிஞ்சி லவ் பண்ணேன்… ஆனா நீ இந்த குடும்ப வாரிசே இல்ல… உங்க அம்மாவோட பங்கை வாங்கிட்டு வா” என்று அலட்சியமாகவே கூறினாள்…
அதோடு விடாமல் உன்னை பத்தி முன்னாடியே தெரிஞ்சி இருந்தா உன் பின்னாடி வந்து இருக்கவே மாட்டேன்’ என்று கூறினாள்…
“நான் எந்த சொத்தும் வாங்க மாட்டேன்.. என்கூட வரதுனா வா.. இல்லனா உன் அப்பா வீட்டுக்கு கிளம்பு” என்று அவன் உடைந்து போய் கூறினான்…
“அப்படினா சரி நீ கட்டுன தாலி இந்தா டிவோர்ஸ் நோட்டீஸ் வரும் கையெழுத்து போட்டு அனுப்பு” என்று கூறிவிட்டு அவன் கட்டிய தாலியை அவன் மேல் வீசிவிட்டு வீட்டை வெளியேற பார்த்தாள்…
மருதாயி பாட்டியோ ரேவதியுடம் “அம்மாடி உனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லல இனிமே…. அதுனால அவங்க போட்ட நகையை கழட்டி வெச்சிட்டு போ” என்று கூறினார்…
பட்டு பாட்டியோ “போட்டது போட்டதாவே இருக்கட்டும் மருது அந்த நகை இனிமே வேண்டாம்” என்று கூறினார்…
ஆனால் மருதாயி பாட்டியோ விடவில்லை…. “அந்த நகையை உண்டியல்ல கூட போடலாம் இந்த பொண்ணுகிட்ட இருக்க கூடாது…” என்று விடாபிடியாக அவளிடம் இருந்த நகையை வாங்கிக் கொண்டு தான் அனுப்பி வைத்தார்…
அவளோ அனைவரையும் சபித்துவிட்டு தான் சென்றாள்…. யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை….
அனைவரும் சசியை தான் பார்த்தனர்… அவள் வீசிவிட்டு சென்ற தாலியை தான் பார்த்து கொண்டு இருந்தான்… அர்ஜுனனின் கண்ணசைவில் கர்ணன் போய் அவனின் தோளை தொட்டான்….
அவ்வளவு தான் வெடித்து அழுதான்.. அவன் அழுதது அனைவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது… சிறிதுநேரம் அழுத அவன் மீண்டும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வீட்டை விட்டு செல்ல வாசற்கதவை நோக்கி சென்றான்….
பட்டு பாட்டி தான் அவனை தடுத்தார்…. ஆனால் அவனோ “இல்ல பாட்டி நான் இங்க இருக்குறது இனி சரியா இருக்காது நான் போயிடுறேன் பாட்டி” என்று கூறி யார் தடுத்தும் கேட்கமால் வீட்டை விட்டு சென்றுவிட்டான்…
யாருக்கும் என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை….. அர்ஜுனன் கர்ணனிடம் எதோகூறி அவனை வெளியே அனுப்பிவைத்தான்….
குழந்தைகள் மூவரும் உறங்கி இருந்தனர்… அதனால் அவர்களை தூக்கிக்கொண்டு சுபா நந்தினி ஜனனி மூவரும் அறைக்குள் சென்றனர்…
பட்டு பாட்டி இனிமேல் கிரிஜா இந்த வீட்டிற்குள் இருக்க கூடாது என நினைத்து அவரை பார்த்து “உன்ன நினச்சா அருவருப்பா இருக்கு கிரிஜா.. இத்தனை வருஷம் கழிச்சு உன்ன வீட்டை விட்டு அனுப்பவும் முடியாது.. ஒழுங்கா ஏற்பாடு செஞ்சு வெச்ச மாதிரி எல்லாரும் அந்த வீட்டுக்கு போறோம்… இன்னிக்கே போறோம்.. பாலா போய் எல்லாத்தையும் எடுத்து வைங்க” என்று கூறி அவரும் எடுத்து வைத்தார்…
கிரிஜா அழுதுகொண்டே உள்ளே சென்றார்… அவருக்கு சசிகுமார் சென்றது கூட பெரிய விஷயமாய் தெரியவில்லை… தன்னை இந்த வயதில் வாழாவெட்டியாய் அனுப்பிவிடுவார்களோ என்று தான் பயம்… பட்டு பாட்டி சொன்னதை கேட்டு கொஞ்சம் நிம்மதி அடைந்து அறைக்கு சென்றார்…
பாலா கிரிஜா வந்தவுடன் தான் உள்ளே சென்று தன் பொருட்களை எடுத்து வைத்தார்… அர்ஜுனன் அமைதியாக தான் இருந்தான்…
அவர்கள் கிளம்பும் போது கர்ணனும் வந்து விட்டான்… அவனையும் பாட்டி கிளம்ப கூறினார்….
ஆனால் அர்ஜுனன் அவரிடம் “பாட்டி அவன் என் தம்பி… அவன் எங்கயும் வர மாட்டான்… உங்க பையன் கூட நீங்க போறதா இருந்தா போங்க….. ஆனா என் தம்பி எங்கயும் வர மாட்டான்” என்று கூறி கர்ணனை தோளோடு அணைத்து அறைக்குள் அழைத்து சென்று விட்டான்…
பாட்டி பாலா மற்றும் கிரிஜாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் போய் அமர்ந்து கொண்டார்…
பாலாவும் கிரிஜாவை திரும்பி பார்க்காமல் போய் அமர்ந்து கொண்டார்… கிரிஜா அழுது கொண்டே போய் காரில் அமர்ந்தார்….
ராஜம்மாவின் கணவன் கருப்பையா காரை எடுத்தார்…. கார் பாலாவின் பூர்விக வீட்டை நோக்கி சென்றது…
இங்கு உள்ளே வந்த கர்ணன் அர்ஜுனை அணைத்து கொண்டு “அவங்க ஏன் அண்ணா இப்படி பண்ணாங்க… அவங்கள என் அம்மானு சொல்லவே அவமானமா இருக்கு ண்ணா” என்று கூறி அழுதான்….
“கர்ணா என்ன சின்ன புள்ள மாதிரி அமைதியா இரு.. எதுவும் யோசிக்காம தூங்கு… நைட் பேசிக்கலாம்” என்று கூறி அவன் தூங்கியவுடன் தான் தன் அறைக்கு சென்றான்…
அங்கு அவனின் அம்மு மகனை அணைத்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்…
இருவருக்கும் நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே செல்ல முற்படும் போது நந்தினி வெளியே வந்தாள் அறையில் இருந்து… அவளிடம் ” க்கா நான் வெளிய போயிட்டு வரேன்…. சுபா தூங்குறா பாத்துக்கோ…. இன்னிக்கு அத்தானையும் வர்ணனையும் இங்க வர சொல்லிடு க்கா… நான் வரேன்” என்று கூறி சென்று விட்டான்…
அங்கு காரில் சென்ற மூவரும் வீட்டை அடைந்தனர்… இறங்கி வீட்டுக்கு சென்று அவரவர் அறைக்கு சென்றனர்….
பாட்டி அவர் அறைக்கு சென்றுவிட்டார்…. பாலா அறைக்கு சென்று கிரிஜா உள்ளே நுழையும் முன் கதவை சாற்றி விட்டார்….
கிரிஜா எவ்வளவு கெஞ்சியும் கதவை திறக்கவே இல்லை… வேறு வழி இல்லாமல் கிரிஜா வேறு அறைக்கு சென்று அழுதுக்கொண்டே தூங்கிவிட்டார்….
பாட்டி நடந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட்டு கொண்டே தூங்கிவிட்டார்….
பாலாவோ தன்னுடைய மனைவி தனக்கு செய்த செயலை நினைத்து கவலைக்கொண்டு தூங்காமல் சுவரை வெறித்தவாரு படுத்து இருந்தார்…..
error: Content is protected !!