Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-5

“பருவதம்மா, நாளைக்கு காலையில உங்களுக்கு சர்ஜரி பண்ணப்போறாங்க…. நீங்க வேணும்னா பாருங்களேன், சர்ஜரி முடிஞ்ச ரெண்டு மாசத்துல‌ நீங்க பி.டி.உஷா மாதிரி ஓடோ ஓடுன்னு ஓட போறீங்க….” என்று ஆழினி கூறியதை கேட்டு அவளை முறைத்தவர்

“ஏய், என்னைய வச்சி மறுபடியும் மறுபடியும் காமெடி கீமெடி பண்ணலையே….” என்று நக்கலாக வினவிய பருவதத்தை கண்டு சிரித்தவள்

“ச்சே ச்சே….” என்று ஆழினி கூறியவாறு பருவதம் உட்கொள்ள மாத்திரையை வழங்க, அவரும் சிரித்தவாறு அவள் அளித்த மாத்திரைகளை விழுங்கிருந்தார்.

இவ்விருவர்களின் சம்பாஷனைகளை வெறும் பார்வையாளராக பார்த்து கொண்டிருந்த விஜய சிவமாறனின் மனமானது தன் அன்னையின்‌ மாற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்திருந்தது.



Advertisement

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழினியும் தன் அன்னை பருவதமும் உரையாடியதை அறையின் நுழைவு வாயிலில் நின்று கேட்டு கொண்டிருந்தவன் அறையிலிருந்து ஆழினி சென்ற பிறகு தன் அன்னையிடம் அறுவை சிகிச்சை பற்றி கூற, அவரும் எவ்வித வாக்குவாதமின்றி அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்திருந்தார். தான் பேசியிருந்தால் கூட தன் அன்னை அவ்வளவு எளிதில் சம்மதம் அளித்திருக்கமாட்டார் என்பதை ஆழினியின் உரையாடலை வைத்து அவனும் அறிந்து கொண்டான்.

நாளை பருதவம்மாவிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்திருக்க, இந்நிமிடம் வரை எவ்வித பயமின்றி அமர்ந்திருக்கும் தன் அன்னையின் இந்நிலைக்கு முழுமுதற்காரணம் ஆழினி தான் என்று விஜய சிவமாறன் நன்றாக அறிவான்.

பருவதம்மாவிற்கு மாத்திரைகளை அளித்துவிட்டு அவ்விடத்திலிருந்து ஆழினி சென்றுவிட, தன் அன்னையின் படுக்கைக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன்

Advertisement

“நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு உங்களுக்கு சர்ஜரி இருக்கும்மா…. நீங்க பயப்படாதீங்க, சர்ஜரி முடியுற‌ வரைக்கும் நான் வெளிய தான் இருப்பேன்….” என்று சிவாமாறன் கூறியதை கேட்டு சிரித்தவர்

Advertisement

“நான் ஏன்டா பயப்படப்போறேன்? அனஸ்தேஷியா கொடுத்ததும் நான் தூங்கிடுவேன் உன் சித்தப்பா எனக்கு சர்ஜரி பண்ணப்போறாரு அதுக்கப்புறம் நான் ரூம்க்கு வந்துடப்போறேன் இதுல என்ன பயமிருக்கு? இன்னொன்னு தெரியுமா? சர்ஜரி முடியுற வரைக்கும் ஆழினி என் கூடவே இருப்பா அதுனால எனக்கு பயமெதுவும் இல்ல…. நீதான் பயப்படுறன்னு நினைக்குறேன், நீ ஒன்னும் பயப்படாத எல்லாம் நல்லதாவே நடக்கும்….” என்று பருவதம் கூறியதை கேட்டவன் அவரை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

“ஹாஸ்பிடல் வரதுக்கு பயந்தவங்க, இப்போ உங்க சர்ஜரிக்கு எனக்கு தைரியம் சொல்றீங்களா?” என்று தன் அன்னையிடம் சிவமாறன் நக்கலாக வினவ

“எல்லாத்துக்கும் ஆழினி தான் காரணம்…. அதுசரி, டிஸ்சார்ஜ் எப்போன்னு உன் சித்தப்பா கிட்ட கேட்டியா?”

Advertisement

“சர்ஜரிக்கு பயமில்லன்னு சொன்ன, இப்போ என்னடான்னா டிஸ்சார்ஜ் எப்போன்னு கேக்குற?”

“சர்ஜரிக்கு தான் பயமில்லன்னு சொன்னேன் ஆனா இந்த ஹாஸ்பிடல்ல இருக்கிறதுக்கு பிடிக்கல…. உன் சித்தப்பா கிட்ட இன்னும் எத்தனை நாள் நான் இங்க இருக்கனும்னு கேட்டு சொல்லு என் மனச அதுக்கு தயார் பண்ணிக்கிறேன்….”

“உங்க மனச நாளைக்கு ஒரு நாள் மட்டும் தயார் படுத்திக்கோங்க ஏனா சர்ஜரி முஞ்ச அடுத்த நாளே நீங்க டிஸ்சார்ஜாகிடுவீங்க…. உங்களை வீட்டுல வச்சி பார்த்துக்க ஹோம் நர்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கேன்….”

“ஹோம் நர்ஸா? எதுக்குடா?”

“நான் இல்லாத நேரத்துல உங்களை யார்ம்மா பார்த்துப்பாங்க? ஒருவேளை நான் கூடவேயிருந்தாலும் உங்களுக்கு ட்ரெஸிங், ஃபிசியோ, டையட் ஃபுட்னு ஏகப்பட்டது இருக்கு…. அதெல்லாத்துக்கும் நர்ஸ் இருந்தாத்தான் உங்களுக்கு நல்லது…. குறிப்பா வீட்டுல உங்களை பார்த்துக்க ஒருத்தவங்க இருந்தா நான் நிம்மதியா வேலை செய்வேன்….”

“என்னவோ சொல்ற எல்லாம் உன் இஷ்டம் போல நடக்கட்டும்…. சரி, எந்த நர்ஸ் என்னை பார்த்துக்க ஏற்பாடு பண்ணிருக்க?”

“தெரியலம்மா, சித்தப்பா சஜஸ்ட் பண்றேன்னு சொன்னாரு….”

“சிவா, எனக்கொரு யோசனை….. ஏன் ஆழினியை எனக்கு ஹோம் நர்ஸா வைக்கக்கூடாது?”

“ஆழினியா?”

“அதான் என்னை பார்த்துக்குறாளே அந்த பொண்ணு தான்…. உன் சித்தப்பா கிட்ட பேசி அழினியை ஹோம் நர்ஸா நம்ம வீட்டுக்கு வர சொல்லுடா பிளீஸ்….” என்று பருவதம் கெஞ்சகலாக கூற,  அவரிடம் மறுப்பு தெரிவிக்க இயலாதவன்

“சரிம்மா, நான் சித்தப்பா கிட்ட ஆழினி பத்தி பேசுறேன்….” என்று கூறிய சிவமாறனின் நினைவலையில் கடந்த கால நினைவுகள் அனைத்தும் நிழற்படமாய் நிகழ ஆரம்பித்துவிட்டது. அதை சிரமப்பட்டு புறம்தள்ளியவன் அலைபேசியின் வாயிலாக ராஜவேலிடம் அனைத்தையும் கூற, அடுத்த இருபதாவது நிமிடத்தில் ராஜவேலின் அறையில் அவருக்கு எதிரில் நின்றிருந்தாள் ஆழினி.

சிவமாறன் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஆழினியிடம் கூறியவர்

“ஹோம் நர்ஸ்க்கு நான் வேறொருத்தவங்களை ஏற்பாடு பண்ணிட்டேன்ம்மா ஆனா பருவதம் அண்ணி நீதான் வேணும்னு என் கிட்ட ரொம்ப ரெக்வொஸ்ட் பண்ணாங்க அதான் உன் கிட்ட கேக்குறேன்…. நான் உன்னை கம்பெல் பண்ணல உன்னோட டெசிஷனும் எனக்கு முக்கியம்….”

“இல்ல சார், என் ஸிச்சுவேஷன் உங்களுக்கு தான் தெரியுமே…. எப்படி சார் நான் அவங்க வீட்ல ஸ்டே பண்றது?”

“இல்லம்மா, நீ அவங்க வீட்ல ஸ்டே பண்ணனும்னு அவசியமில்ல…. உன் டியூட்டி காலையில எட்டு மணியிலிருந்து நைட் எட்டு மணிவரை மட்டும் தான்…. மத்த நேரமெல்லாம் அவங்க பையன் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாங்க….”

“என்னால இப்போ எந்த முடிவும் எடுக்க முடியாது சார்…. எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்….”

“ஓகேம்மா, டேக் யுவர் ஓன் டைம்…. நல்லா யோசிச்சு சொல்லு ஆனா நாளைக்குள்ள சொல்லிடும்மா…. ஏனா அவங்க அடுத்த நாள் டிஸ்சார்ஜாகுறாங்க….”

“ஓகே டாக்டர்…. நான் வார்ட்க்கு போறேன், தாங்க் யு….” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்த ஆழினியின் சிந்தனை முழுவதும் ராஜவேலிடம் நாளை என்ன கூறவேண்டும் என்பதை பற்றி மட்டுமே யோசித்து கொண்டிருந்தது.

நிமிடங்கள் அத்தனையும் நேரங்களாய் கரைய தன் பணியை முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த ஆழினியை தன் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு வரவேற்றிருந்தான் இன்பன். அவனை கண்டு மெலிதாக சிரித்தவளின் முகம் சட்டென்று கோபமாக மாறியது. ஏனென்றால் அவனுக்கு பின்னால் நின்றிருந்த இருச்சக்கர வாகனத்தில் நீலவேணியும் அவளுடன் ஆதவ் கிருஷ்ணனும் அமர்ந்திருந்தனர்.

இன்பனின் அருகில் சென்று தன் கைப்பையை அவனிடத்தில் பொத்தென்று வைத்தவள்

“மூணுப்பேரும் ஒன்னா வந்திருக்கிறது பார்த்தா டவுட்டா இருக்கே? என்னடா விஷயம்?” என்று வினவிய ஆழினியிடம் இன்பன் ஏதோ கூற வருவதற்குள்

“அம்மா…. பன்னு, எனக்கும் அத்தைக்கும் ஐஸ்கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தான்…. உன்னை விட்டுட்டு சாப்பிட எங்களுக்கு பிடிக்கல அதான் உன்னையும் எங்களோட கூட்டிட்டு போக வந்தோம்….” என்று ஆதவ் கிருஷ்ணன் தன் மழலை மொழியில் கூற

“நைட் டைம்ல ஐஸ்கிரீம் வேண்டாம் ஆது கண்ணா ஜலதோஷம் பிடிக்கும்….” என்று ஆழினி கூற

“ஒருநாள் சாப்பிடுறதுனால ஒன்னுமாகாது…. அப்படியே ஜலதோஷம் பிடிச்சாலும் மாத்திரை கொடுக்கத்தான் நீ இருக்கியே அப்புறம் என்ன உனக்கு….” என்று இன்பன் முழுவதும் கூறி முடிப்பதற்குள் ஆழினியின் முறைப்பில் கப்சிப்பென்று தன் வாயை மூடிக்கொண்டான்.

“அண்ணி, ஒரு நாள் தான? எனக்காக பிளீஸ்….” என்று நீலவேணி கெஞ்சலாக கூற, அவளது அண்ணி என்ற அழைப்பில் அதிர்ந்தவள்

“எதே? அண்ணியா? டேய் இன்பா, எனக்கு ஹார்ட் எக்குத்தப்பா துடிக்குதுடா…. நீலா, நீ என்னை அண்ணின்னு கூப்பிடதுனால இன்னிக்கு நாம கண்டிப்பா ஐஸ்கிரீம் சாப்பிடுறோம்….” என்று ஆழினி கூறியவாறு நீலவேணியின் இருச்சக்கர வாகனமிருந்த இடத்திற்கு அருகில் செல்ல

“ஆழினி, அங்கெங்க போற? என் வண்டியில ஏறு? அந்த பப்பாளி ‘அவன் அத்தை கூடத்தான் வருவேன்னு’ அடம்பிடிச்சு வேணியோட போயிட்டான்…. இப்போ நீயும் அதையே பண்ணப்போறியா?” என்று வினவிய இன்பனை கண்டு சிரித்தவள்

“ஆது கண்ணா, நீயும் நானும் ஒன்னா வண்டியில போகலாமா?” என்று ஆழினி கூறியதை கேட்டு ஆதவ் கிருஷ்ணன் கைத்தட்டி தன் குண்டு கன்னங்களில் குழி விழுகும் அளவிற்கு சிரிக்க, அவளை நீலவேணி குழப்பமாக பார்த்து கொண்டிருந்தாள்.

“என்ன பார்க்குற? போ நீலா, நீயும் இன்பாவும் ஒன்னா வாங்க, நானும் ஆதுவும் ஒன்னா வரோம்…. என்னையே பார்க்காம சீக்கிரம் இறங்கு நீலா, ஐஸ்கிரீம் கடையை மூடிடப்போறாங்க….” என்று ஆழினி கூறியவாறு அவளை இன்பனின் இருச்சக்கர வாகனத்திற்கு அருகில் விரட்டியடிக்க, இன்பனை கண்டு நக்கலாக சிரித்தவன்

“பன்னு…. நீயும் வேணி அத்தையும் லவ்ஸ் பண்ணிட்டு பின்னாடியே வாங்க, நானும் அம்மாவும் ஐஸ்கிரீம் கடைக்கு போறோம்…. பாய் பன்னு, பாய் அத்தை…. நாங்க தான் ஃபர்ஸ்ட் கடைக்கு போகப்போறோம்…. வண்டியை ஃபாஸ்டா ஓட்டும்மா….” என்று உற்சாகமாக கூறிய ஆதவ் கிருஷ்ணனின் கூற்றில் இன்பனும் நீலவேணியும் கூச்சத்தில் நெளிய, அவர்களை கண்டு கண்ணடித்து சிரித்த ஆழினி தன் மகனை அழைத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டாள்.

தன்னெதிரில் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவனை கண்டு நாணத்துடன் சிரித்தவளை இரசித்தவன்

“இப்படியே எவ்வளவு நேரம் நிக்கலாம்னு உத்தேசம்? ஓஹோ, சிச்சுவேஷன் சாங் எதாவது வரும்னு வெயிட் பண்றியா?” என்று வினவிய இன்பனை முறைத்தவள் இருச்சக்கர வாகனத்தில் அவன்‌ பின்னால் அமர்ந்து தன்னவனின் தோள்களை தன் இரு கரங்களால் பிடித்து கொள்ள, அவளது கரங்களை மென்மையாக பிடித்து தன் இடையில் சுற்றிவிட்டு வாகனத்திலிருக்கும் கண்ணாடியில் தெரியும் அவளது பிம்பத்தை கண்டு அழகாக சிரித்தவன்

உன் விழியில் வழியும் பிரியங்களை.. பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை.. உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழை ஆனேன்….” என்று பாடியவாறு இருச்சக்கர வாகனத்தை இயக்கிய இன்பனின் செயலில் நாணம் கொண்டவள் அவனது முதுகில் சாய்ந்து அவளவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.

காதலில் மூழ்கியிருந்த இருவரும் தங்களின் இரவு நேர பயணத்தின் பொழுதினில் அமைதியாய் இலயித்திருக்க, அதை முதலில் கலைத்தது நீலவேணி தான்.

“இன்பா, ஆழினி அக்காவுக்கு ஒரு அலையன்ஸ் வந்திருக்குன்னு சொன்னியே அவங்க கிட்ட பேசுனியா?” என்று நீலவேணி வினவ, அவளிடம் ஆமென்பதை போல் தலையசைத்தவன்

“பேசுனேன் வேணி…. அவர் நேம் விஜய்…. சொந்த ஊர் சென்னை தான், பிஸ்னஸ் பண்றாங்க…. அவங்க வீட்ல ஆழினி ஃபோட்டோ பார்த்துட்டு ஓகே சொல்லிட்டாங்க ஆனா அவர் என் கிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொல்றாங்க….”

“போய் பேசிட்டு வா இன்பா…. அப்பாவும் அவங்க ஃபேமிலி பத்தி விசாரிச்சதா அம்மா சொன்னாங்க…. ரொம்ப நல்ல ஃபேமிலியாம், ஆழினி அக்காவுக்கு ஏத்த இடம்னு சொன்னாங்க….”

“தெரியும் வேணி, ஆறுமுகம் மாமா சொன்னாரு…. ஆனா….”

“என்ன ஆனா?”

“ஆழினியை எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கப்போறேன்னு தெரியல டி…. அழகாயிருந்த அவளோட வாழ்க்கை எப்படியெப்படியோ போயிடுச்சு, இனிமேலாவது நல்லாயிருக்கனும்னு நான் ஆசைப்படுறேன் வேணி….”

“பாஸ்ட் பத்தி யோசிக்காத இன்பா…. ஆழினி அக்கா கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க…. நீ ஃபீல் பண்ணாத, நாளைக்கு விஜய் சார் கிட்ட பேசு எல்லாம் நல்லதாவே நடக்கும்….” என்று நீலவேணி கூறியதை கேட்டு தன் தலையை சரியென்பதை போல் அசைத்து வைத்தான் இன்பன்.

 

ஒளி வீசும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!