Skip to content
Post Views: 984
பத்து வருடங்கள் கழித்து
டெல்லி அப்துல் வீட்டில் சத்தம் காதை கிழித்தது … ஆனால் அப்துல ஆஷாவோ இதை கண்டுகொள்ளவே இல்லை … அவர்களுக்கு இது தான் பழகி இருந்ததே … ஆனால் அர்ஜுனன் தான் தன் மகளை ஆச்சர்யமாய் பார்த்து கொண்டு இருந்தார் … அவனை பொறுத்தவரை நிரவி அமைதியானவள் யாரையும் எதிர்த்து பேச மாட்டாள் …
Advertisement
ஆனால் இன்று ரியாஸுடன் நேருக்கு நேர் நின்று சண்டை போட்டு கொண்டு இருக்கும் தன் மகளை ஏக் க மாய் பார்த்து கொண்டு இருந்தார் … வீட்டில் உள்ளோரிடம் பேசினாலும் முன்பு இருந்த நெருக்கம் இப்போது இல்லை …. அமைதியாக தான் இருப்பாள்…
இன்றும் அவர் வந்ததும் வாங்க என்று அழைத்ததோடு சரி அதன் பின் பேசவில்லை… விடியற்காலை தான் அர்ஜுனன் டெல்லி வந்து இருந்தார் … அப்போது நிரவி உறங்கி கொண்டு இருந்தாள்… காலை ஏழு மணி இருக்கும்… “எருமமாடே ஏன்டா இப்படி பண்ண” என்ற வாக்கியத்தில் தான் அவள் காலை விடிந்தது…
Advertisement
ரியாஸ் அவள் அறையில் இருந்து ஓடி வர தண்ணீர் வலிய நிரவி ஓடி வந்தாள்… “டேய் பன்னிக்குட்டி போலீஸ் மாதிரியா டா பண்ற…. அத்தம்மா இவனை பாருங்க… தூங்கிட்டு இருக்க அப்ப தண்ணி ஊத்துறான்….” என்று சலுகையாய் ஆஷா மீது சாய்ந்து கொண்டாள் …
Advertisement
அவரும் “ஏன் டா சின்ன புள்ள மாதிரி பண்ணிட்டு இருக்க … பிள்ளைக்கு இன்னிக்கு லீவ் தானு … தூங்க விடேன் டா ஏன் இப்போ எழுப்பி விட்ட … போலீஸ் ஆனா பெரிய இவனா நீ … நில்லு அப்பா கிட்டயே சொல்றேன் …” என்று மிரட்டி னார் ….
“ம்மா இன்னிக்கு அவளுக்கு காலேஜ் லீவ் தான் … ஆனா வாக்கிங் போக வேண்டாமா …. அதுக்கு தான் எழுப்பினேன் … போய் வாக்கிங் போக சொல்லுங்க …. ஏய் குட்டச்சி ஒழுங்கா ப்ரெஷ் ஆகிட்டு வாக்கிங் போ … ம்மா நான் இன்னிக்கு சீக்கிரம் போகனும் … நான் கிளம்புறேன் ம்மா … நான் வர மிட் நைட் ஆகிடும் … ரெண்டு பேரும் அப்பாவை டார்ச்சர் பண்ணாம சீக்கிரம் தூங்க போயிடுங்க .. நான் வர வரைக்கும் சாப்பிடாம இருக்க கூடாது … சாப்பிட்டுட்டு கதை பேசிட்டு எழுந்தி ட் டு இருக்க கூடாது …..” என்று கூறிவிட்டு திரும்பும் போது தான் அர்ஜுனன் இருப்பதை கவனித்தான் …
“வாங்க மாமா .. எப்போ வந்திங்க …” என்று அவரிடம் பேச சென்றான் …
Advertisement
“நான் ஆறு மணிக்கு தான் வந்தேன் ரியாஸ் .. நான் வரதுக்குள்ள நீ வாக்கிங் போய்ட்டு ரூமுக்கு போயிட்ட .. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அமைதியா இருந்துட்டேன் … எப்படி இருக்க நல்லா இருக்கியா ” என்று கேட்டார் …
“நான் நல்லா இருக்கேன் மாமா …” என்று அவரிடம் பேசினாலும் அவன் கண்கள் நொடிக்கு ஒருமுறை மணியை பார்த்தவாறு இருந்தது … அதை அர்ஜுனன் கவனிக்கவில்லை … ஆனால் நிரவி அதை கவனித்து “வாங்க அப்பா ” என அவரது வரவேற்று விட்டு உனக்கு நேரம் ஆகலை யா .. என்று அவனிடம் கேட்டு அனுப்பி விட்டு “அப்பா நான் ப்ரெஷ் ஆகிட்டு வாக்கிங் போயிட்டு வரேன்” என்று கூறி கிளம்பிவிட்டாள் …
ரியாஸிற்கு மட்டும் அர்ஜுனன் வருவது தெரியாது .. மற்ற மூவருக்கும் தெரியும் … நிரவிக்கே தெரியாத விஷயம் அவளை அழைத்து செல்ல தான் அர்ஜுனன் வந்துள்ளான் .. அப்துல் ஆஷாவிற்கு மட்டுமே தெரியும் … நிரவியும் வாக்கிங் சென்று விட்டு அறைக்கு வந்து குளித்து விட்டு வந்ததும் வழக்கம் போல் அப்துல் அருகில் அமர்ந்து கொண்டாள் … அர்ஜுனன் அதை சிரிப்புடன் பார்த்து விட்டு உண்பதில் கவனமானான் … நிரவி பாவமாக ஆஷாவை பார்க்க கண் மூடி ஒன்றும் இல்லை என கூறி சாப்பிடுமாறு சைகையில் கூறினார் … அதன்பின் தான் நிரவி சாப்பிட ஆரம்பித்தாள் …
சாப்பிட்டு முடித்த பின் தான் அர்ஜுனன் நிரவியை ஊருக்கு வருமாறு கூறினார் … அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை … கடந்த இரண்டு வருடமாக அவள் அய்யனார்புரம் செல்வதே இல்லை … அவளை பார்க்க வேண்டும் என்றால் அவர்கள் தான் வந்து பார்த்து விட்டு செல்வர் …
அவன் அவ்வாறு கூறியதும் அப்துல் ஆஷாவை தான் திரு திருவென பார்த்தாள் … அர்ஜுனனுக்கே அவளை பார்த்து சிரிப்பு வந்து விட்டது … ஆஷாவோ “என்னை என்ன பாக்குற … நீ தான் சொல்லணும் … ரெண்டு வருஷம் அங்க போகாம இருந்துட்ட.. இனியும் அப்படி இருக்க முடியாது … கிளம்பி போ … ஒரு மாசம் லீவு தானு … லீவு முடிச்சிட்டு இங்க வா பாத்துக்கலாம் ….” என்று கூறினார் ..
அவளோ “அத்தம்மா யாஷ் கிட்ட சொல்லவே இல்லையே … அவன் கிட்ட சொல்லனும் ல ” என்று பாவமாக கேட்டாள் …
“அவன் கிட்ட நான் சொல்லிடுறேன் … சாயந்திரம் நாலு மணிக்கு பஸ் போய் டிரஸ் பேக் பண்ணு போ .. நான் வந்து ஹெல்ப் பண்றேன் ..” என்று கூறி நிரவியை அனுப்பி விட்டு “அண்ணா நான் அவ கூட ரூமுக்கு போறேன் … நீங்க இவர் கூட பேசிட்டு இருங்க ” என்று கூறி அறைக்கு சென்றாள் ….
அர்ஜுனன் அப்துலிடம் “மச்சான் குட்டிம்மா ரியாஸை வா டா போடா னு பேசுறா … உங்க ரெண்டு பேருக்கும் கோவம் வரலையா …. சிரிச்சிட்டு பாத்துட்டு இருக்கீங்க …” என்று ஆச்சரியமாய் கேட்டான் …
அப்துலோ சிரித்து கொண்டே “அது அவங்க ரெண்டு பேரும் அமைதியா இருந்தா சண்டை போட்டு இருக்காங்க னு அர்த்தம் … இப்படி சண்டை போட்டுட்டு இருக்குறது தான் எங்களுக்கு பொழுதுபோக்கே … இப்போ வேலை இருக்குனு சொல்லிட்டு போய் இருக்கான் ல …. ஆனா நீங்க கிளம்புற அப்ப கரெக்டா வந்து நிப்பான் … வா வெளிய போயிட்டு வரலாம் …” என்று விட்டு ஆஷாவிடம் கூறிவிட்டு வெளியில் கிளம்பினர் …
மெய்யனூர்
இருபத்தி இரண்டு வயது கார்த்திகா கொஞ்சம் அழுத முகத்துடன் அறையில் அமர்ந்து இருக்க பதினெட்டு வயது அரு னே ஷோ “அக்கா எவ்வளவு நேரம் அழுதுட்டே இருப்ப … அப்பா அம்மா லவுக்கு ஒன்னும் எதிரி இல்லையே … நீ சொல்லிடு க்கா … மாமா ரெண்டு நாள் கழிச்சு தான் இந்தியா வருவாங்க … அதுக்குள்ள வீட்டுல பேசி முடிச்சிட போறாங்க … ஏற்கனவே ஒருத்தி அவ ஆசைப்பட்டது கிடைக்காம அங்க போய் உட்காந்துட்டு இங்க வராம இருக்கா நீயும் இப்போ அப்படி இருக்க போறியா … இப்போ நீ சொல்ல போறியா இல்லை நான் சொல்லட்டா …” என்று கேட்டான் …
“அருண் அமைதியா இரு … மாமா வந்துருவாரு .. அதுக்கு அப்பறம் பேசிக்கலாம் .. திருவிழா முடிஞ்சு தானே இதை பத்தி பேசுவேன் னு சொன்னாங்க … சும்மா பேசிட்டு தானே இருந்தாங்க … உறுதி யா சொல்லல விடு பேசி க்க லா ம் … நீ சொன்ன து ம் கொஞ்சம் பயந்து ட் டேன் …. மாமா வந்ததும் பேசிக்கலாம் … வீட்டுல எதுவும் சொல்லிட்டு இருக்கா த …” என்று கூறினா ள் …
“ஹ்ம்ம் அக்கா .. நான் எதுவும் சொல்ல மாட்டேன் … ஆனா திரும்பியும் வீட்டுல பே ச் சு எடு த் தா சொல்லி டு வேன் … மாமா போன வரம் போன் பேசுனா அப்ப கூட உன்னை நல்லா பாத்துக்க சொல்லி இருக்காரு … இப்போ நீ அழுதுட்டு இருந்தா அவ்வளவு தான் … பாட்டி மட்டும் இருந்து இருந்தா பாட்டியே எல்லாம் பாத்து இருந்து இருப்பாங்க … பாட்டியை நான் ரொம்ப மிஸ் பண்றேன் … என்று கூறிவிட்டு அம்மா அய்யனார்புரம் கிளம்பனும் னு சொல்லிட்டு இருந்தாங்க … முகம் கழுவிட்டு ரெடி ஆகிட்டு வா … நந்தினி ம்மா என்னை அங்க வீட்டுக்கு வர சொன்னாங்க நான் அங்க போயிட்டு வரேன் ” என்று தந்தையின் பைக்கை எடுத்து கொண்டு பறந்துவிட்டான் அந்த வாலிபன் ….
error: Content is protected !!