Skip to content
Post Views: 2,464

கேரளாவில் கைது செய்யப்பட்ட காருண்யாவும் அய்யாதுரையும் சிவகங்கை கொண்டுவரப்பட்டனர்… அவர்கள் வர இரவு ஆனதால் அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர்… பிரஸ் யாருக்கும் இன்னும் தகவல் சொல்லவில்லை… பிரஸ் அனைவரும் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தனர்… அதனால் தான் அதியும் அரசுவும் இந்த காவல் நிலையைதிற்கு கொண்டு வந்து இருந்தனர்…
அவர்களை போலீஸ் ஜீபில் கொண்டு வராமல் வேறு வாகனத்தில் அழைத்து வந்து இருந்தனர்…
Advertisement
ஏன்னென்றால் கேரளாவில் ஆளுங்கட்சியில் அமைச்சர் கைது செய்ததால் அங்கு பெரும் பிரச்சனையே வெடித்தது… இதை பார்த்த ஆஷாவின் அம்மா ரேவதியிடம் “ம்மா இந்த அமைச்சர் தான் எங்களை மிரட்டுற ஆளு.. அப்பறம் இந்த பொம்பளயும் இந்த ஆளும் தான் இவரை கூட்டிட்டு போனதா எங்க ஆளுங்க சொன்னாங்க” என்று அர்ஜுனன் போட்டோவை காட்டி கூறினார்…..
Advertisement
Advertisement
அய்யாதுரை பெயரை கூகிள்ல் போட்டு அவர் யார் என்று தெரிந்து கொண்ட ஜேம்ஸ் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்தான்…
Advertisement
சுபாவோ அமைதியாகவே இருந்தாள்… இந்த அமைதி எப்போது சிதற போகிறது என்று அவளுக்கே தெரியாது…
இங்கு அதி அர்ஜுனன் மற்றும் ரித்திகாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்று இருந்தான்… குழந்தைகள் அனைவரும் மீனாட்சி(அதியின் அக்கா) வீட்டிற்கு சென்று இருக்க உடன் தாத்தாவும் பாட்டியும் சென்று இருந்தனர்….
வீட்டிற்கு நிவேதாவும் சுந்தர் அப்பாவும் சிவாம்மாவும் மட்டுமே இருந்தனர்… அதி ஏற்கனவே இவர்களை பற்றி கூறியதால் மேற்கொண்டு அதை பற்றி எதுவும் கூறவில்லை….
அதி அர்ஜுனனிடம் அர்ஜுனன் எதை பத்தியும் இன்னிக்கு யோசிக்காம தூங்குங்க…. எப்படியும் நாளைக்கு நியூஸ்ல உங்களை பத்தி வரும்.. அப்போ உங்க வீட்டுல இருக்குறவங்களுக்கு உங்க வைப்க்கு எல்லாருக்கும் தெரிஞ்சிடும் கண்டிப்பா உங்களை தேடி வருவாங்க… அப்போ பாத்துக்கலாம்…. எதை பத்தியும் கவலை படாதீங்க… குட் நைட்… என்று கூறி தன் அம்முவுடன் உறங்க சென்று விட்டான் தேவதூதன்….
அர்ஜுனனுக்கு சுபாவின் முகமே கண்முன் வந்து இம்சை செய்து கொண்டு இருந்தது… காலையில் அதி காட்டிய போட்டோவில் அவனையே காதலோடு பார்த்தவாரு நின்று இருந்தாள் சுபா… அவள் கண்ணில் தெரிந்த அவனுக்கான காதல் சொல்லியது… அவள் எவ்வளவு விரும்பி இருக்கிறாள் இவனை என்று… அவளை பார்க்க மனது துடித்தாலும் மறந்து போனது ஞாபாகம் வந்தால் நன்றாக இருக்கும்… வந்த பின் போகலாம் என்று மனதை அடக்கி கொண்டு இருந்தான்…
அவன் யோசனையில்நின்று கொண்டே இருப்பதை பார்த்த ரித்திகா “அப்பா” என்று அழைத்தாள்… அவளின் சத்தத்தில் நினைவுக்கு வந்த அர்ஜுன்ன அவளை உறங்க வைத்துவிட்டு தானும் உறங்கினான்…. நாளை நடக்க போவதை அறியாமல்…
இங்கு கேரளாவில் ஜேம்ஸ் அனைவர்க்கும் இரவு உணவு வாங்கி வந்து இருந்தான்… மதிய உணவு யாரும் உண்ணவில்லை… இரவு உணவை மறுத்த சுபாவை கட்டாய படுத்தி உண்ண வைத்து இருந்தாள் ரேவதி…
“மதி ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வரேன் இங்கயே இரு” என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான் ஜேம்ஸ்…
அப்போது தான் ஜேம்ஸ் ரேவதியை மதி என்று அழைப்பதை கவனித்தாள் சுபா…. “உன்னை ஏன் மதினு கூப்பிடுறாரு உன் ஹஸ்பண்ட்” என்று கேட்டாள்….
“நான் திருந்த ஆரம்பிச்ச நாட்கள்ல அந்த பேர் என்னை ரொம்ப மன உளைச்சலை தந்தது… நான் செஞ்ச தப்பான செயல்கள் அதிகமா ஞாபாகம் வந்தது… அது தான் வேற இடம் வேற பேர் எல்லாம்… இங்க எல்லாருக்கும் மதினு சொன்னா தான் தெரியும்” என்று ரேவதி கூறினாள்…
பின் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போதே முகுந்தன் வீட்டிற்கு வந்து இருந்தான்… அவனின் கார் சத்தம் கேட்டு வேகமாக ஓடியவள் அவன் கையை பிடித்து கொண்டு அண்ணா அவர் உயிரோட இருக்காரு ண்ணா… அதுவும் சிவகங்கைல தான் இருக்காரு… நான் சொன்னதை நீங்க நம்பவே இல்லை… இப்போ பாருங்க என்று சந்தோசமாக கூறிக்கொண்டு இருந்தவள்…. பின்பக்கம் இருந்து இறங்கிய கண்மணியை பார்த்து முகுந்தனின் பின் நின்றுவிட்டாள்….
கண்மணி நேராக வந்தவள் அவளை இழுத்து கன்னத்தில் பட்டென்று அறைந்து விட்டாள்…. சுபா அழுதுக்கொண்டே கன்னத்தில் கையை வைத்து அவளையே பார்த்தவாறு நின்றுவிட்டாள்… முகுந்தன் தான் “கண்மணி” என்று கத்தி கொண்டே இருவருக்கும் நடுவில் வந்து நின்றான்….
அவனை கண்டுகொள்ளாதவள் “அவங்க போக சொன்னா போயிடுவியா… நானும் உன் அண்ணனும் என்ன செத்தா போய்ட்டோம்… அவங்க ஒருத்தங்களுக்காக உன்னையே உயிரா நினச்ச எல்லாரையும் விட்டுட்டு வந்துடுவியா…. நீ இல்லாம அங்க யாரும் அவங்களாவே இல்ல தெரியுமா… மத்தவங்களுக்காக ஒவ்வொருத்தரும் அவங்க சோகத்தை மறைச்சி சிரிச்சிட்டு இருந்தோம்டி…. ஆனா நீ எங்க எல்லாரையும் தவிக்க விட்டு இங்க வந்து உன் புருஷன் நினைப்போட வாழ்ந்துட்டு இருக்க….” என்று கூறி மீண்டும் அறைந்தாள்….
கண்மணியை இழுத்து கொஞ்சம் தள்ளி நிறுத்தியவன் “போதும் நிறுத்து கண்மணி என்ன அடிச்சிட்டே இருக்க…. அவ அந்த நைட் எப்படி இருந்தா தெரியுமா… எந்த நிலைமைல இருந்தா தெரியுமா…. அந்த நிலைமைல நீ பார்த்து இருந்தா அழுதே இருப்ப…. அந்த சூழ்நிலைல எனக்கு அவ கேட்குறதை செய்றது தவிர வேற வழி இல்ல .. அது தான் செஞ்சேன்….” என்று கோவமாக கூறினான்…
“என்ன இவ இல்லாம எல்லாரும் எப்படி இருந்தாங்க தெரியும்ல…. தோ இவ விட்டுட்டு போனாளே அவ பொண்ணு அவ எவ்வளவு கஷ்டப்பட்டானு பாத்தல.. நம்ம என்ன தான் தங்கமா பார்த்தாலும் அவளுக்கு அம்மா அப்பா பாசம் இல்லாம அவ எப்படி இருந்தானு உனக்கு தெரியும்ல… அஞ்சு வயசு பொண்ணுக்கு என்ன தெரியும்…. போறவ அவளையும் கூட்டிட்டு போய் இருந்தா அந்த பொண்ணாச்சும் சந்தோசமா இருந்து இருக்குமே…. அவ ஒன்னொன்னும் கேட்க எவ்வளவு கஷ்ட படுறா….” என்று கோவமாக கேட்டாள் கண்மணி….
சுபா எதுவும் கூறாமல் அழுதவாறே நின்று இருந்தாள்…. அப்போது தான் ஜேம்ஸ் வந்தான் அங்கு… வந்தவன் நேராக ரேவதியிடம் சென்று “மதிமா… அர்ஜுன் ப்ரோ இப்போ மதுரைல இருக்காரு… மதுரை கமிசனர் வீட்டுல இருக்காரு… கன்பார்ம் பண்ணிட்டேன்… அது அர்ஜுன் ப்ரோ தான்” என்று கூறினான் …
அப்போது தான் முகுந்தனும் கண்மணியும் ரேவதியை கவனித்தனர்…. இருவரும் அவளை பார்த்து அதிர்ந்து விட்டனர்… ஆனால் அவளோ ஒரு நிர்மலான புன்னகையை அவர்களை நோக்கி வீசினாள்…
சுபா அதற்குள் அழுகையில் இருந்து மீண்டு முகுந்தனிடம் “அண்ணா எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசலாம்…. வாங்க எல்லாரும்” என்று உள்ளே அழைத்து சென்றாள்….
உள்ளே சென்றவள் இருவரும் சாப்பிட்டார்களா என்று கேட்டு அவசரமாக இருவருக்கும் சாம்பார் வைத்து இட்லி செய்து சாப்பிட வைத்தாள்…
பின் கண்மணி அருகில் சென்று அவள் கையை பிடித்து “அந்த நேரத்துல நான் நானாவே இல்ல… அவங்க பேசுனது மட்டும் தான் எனக்குள்ள கேட்டுட்டே இருந்தது…. எனக்கு அந்த நேரத்துல ஆதரவா இருந்தது ஆரவ் மட்டும் தான்… எனக்கு சாமி அன்னிக்கு சொன்னது மட்டும் தான் ஞாபாகம் இருந்தது யார் போனாலும் இவன் உனக்காக இருப்பான்னு சொன்னது… இங்க வந்ததுல இருந்து பயந்துட்டே இருந்தேன் எங்க என்கிட்ட இருந்து தம்பியை பிரிச்சு கூட்டிட்டு போயிடுவிங்களா அப்டினு… நீங்க அப்படி இல்லனு எனக்கும் தெரியும்… ஆனா ஒரு பயம்… நான் ஊரை விட்டு வந்தவாட்டி அவங்க கண்டிப்பா என்னை பத்தி தப்பு தப்பா தான் சொல்லி இருப்பாங்க…. அதை யாரும் நம்ப மாட்டீங்க.. ஆனா உங்க மனசுல சின்ன சந்தேகம் வந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன்… என்னால மாமா இல்லாம அந்த ஊருல இருக்க முடியல… இங்க என்னை தேட மாட்டீங்கனு எனக்கு ஒரு நம்பிக்கை… அது தான் முகி ண்ணா கிட்ட இங்க போறேன்னு சொன்னேன்…. உங்களை எல்லாம் விட்டுட்டு நான் சந்தோசமா எல்லாம் இல்ல… என்ன(னை) விட நீங்க பாப்பாவை நல்லா பாத்துப்பிங்கனு தெரியும்…. அன்னிக்கு நான் ஆரவை கூட கூட்டிட்டு வரல… தம்பியே தான் என் பின்னாடி வந்தான்… நான் ரொம்ப கெஞ்சி கேட்டு சத்தியம் வாங்கி தான் அண்ணாவை சம்மதிக்க வெச்சேன்…. அண்ணாவை தப்பா நினைக்காத கண்மணி” என்று அழுது கொண்டே பேசினாள் சுபா….
கண்மணி அழுதாலும் “அவங்க பேசுனாங்க தான்… ஆனா நாங்க நம்பிட்டோமா.. அது எப்படி ஆரவை கூட்டிட்டு உன்னை விட்டுட்டு போயிடுவோம்னு பயம் உனக்கு… நீ யாருக்கு பயந்து வந்தியோ அங்க அவங்க ஒன்னுமே இல்லாம இருக்காங்க… நீ வந்தவாட்டி அங்க என்ன ஆச்சுனு தெரியுமா உனக்கு.. சொன்னாரா உன் அண்ணன்…” என்று கோவமாக கேட்டாள்…
“இல்ல.. அண்ணா சொல்ல வந்தாங்க.. நான் அவங்களை பத்தி கேட்க விருப்பம் இல்லாம வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று தயங்கியவாறு கூறினாள்….
“அவங்களுக்கு பெரிய தண்டனையா அவங்க பையனே தந்துட்டான்” என்று அன்று நடந்ததை கூற ஆரம்பித்தாள் சுபா….
error: Content is protected !!