Skip to content
Post Views: 2,409

இவர்கள் பேசியதை கேட்ட அந்த சிறுமியும் பொன்னம்மாவிடம் “பாட்டி இனிமே அப்பா வர மாட்டாங்களா.. சாமி கிட்ட போயிட்டாங்களா… அப்பா வரலைனா என்னை போட்டு காருண்யா அம்மா அடிப்பாங்களா… அப்பா என்னை பாக்க இனிமே வரமாட்டாங்களா” என்று அவரை அணைத்து அழுது கொண்டே கேட்டாள்…
அங்கு வேலை செய்யும் பொன்னம்மா பாட்டியோ அவளை தன்னிடம் இருந்து பிரித்து கண்ணை துடைத்து விட்டு “அப்பா எங்கயும் போகல பாப்பா… கண்டிப்பா அப்பா வருவாரு அழுக கூடாது” என்று அவளை தைரியப் படுத்தினார்…
Advertisement
அந்த சிறுமியும் அழுது கொண்டே உறங்கிவிட்டாள்…. அவள் காருண்யாவின் கணவன் லிங்கத்தின் முதல் மனைவியின் மகள் ரித்திகா … அதனால் தான் அதனால் தான் காருண்யா அந்த சிறுமியின் மேல் வெறுப்பாக உள்ளாள்….
Advertisement
Advertisement
அவள் ஒன்னும் ஆசைப்பட்டு எல்லாம் லிங்கத்தை திருமணம் செய்து கொள்ளவில்லை…. அரசியல் ஆதாயத்துக்காக தான் இவர்களின் கல்யாணம்…. லிங்கத்தின் முதல் மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டாள்… அவள் மேல் உயிரையே வைத்து இருந்தான் லிங்கம்…. அவர்களின் மகளும் அவன் மனைவியிம் ஜாடையில் இருப்பதால் அவள் மேலும் உயிராக இருந்தான்…
Advertisement
ரித்திகாவிற்கு மூன்று வயது ஆகும் வரை அரசியலிலும் வேலை பார்த்து கொண்டு குழந்தையையும் பார்த்து கொண்டான்…. அவன் மேல் கட்சியில் தலைவருக்கு நல்ல எண்ணம் வந்து அவனுக்கு கட்சியில் ஒரு பதவியை போட்டு கொடுத்தார்….
அந்த முறை காருண்யாவின் அப்பா முதல் முறையாக எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டார்… அவரை இவனின் ஆலோசனை படி நடக்க சொல்லி அந்த கட்சியின் தலைவர் கூறினார்..
காருண்யாவின் அப்பாவும் வேண்டா வெறுப்பாக இவனின் பேச்சை கேட்டு வெற்றி பெற்று இருந்தார்… இருந்தும் தன்னை விட சின்னவன் தன்னை வெற்றிபெற வைத்துள்ளான்…. அதுவும் தலைவருக்கு நெருக்கமாக உள்ளான் என பொறாமை அவன் மேல் இருந்து கொண்டே இருந்தது….
இவர் எம்எல்ஏவாக இருந்தாலும் அவனை வைத்து தான் கட்சியின் தலைவர் இவரிடம் கூறுவார்…. இவனை தங்கள் கைக்குள் போட்டு கொண்டால் அனைத்தையும் தாங்கள் பார்த்து கொள்ளலாம் என நினைத்து அய்யாதுரையும் காருண்யாவும் அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் இவனிடம் பேசினர்… முதலில் ஒத்துக்கொள்ளதாவன் பின் தன் மகளை நன்றாக பார்த்து கொண்டால் மட்டுமே இந்த கல்யாணம் நடக்கும் என திட்ட வட்டமாக கூறிவிட்டான்….
வெளியில் அவனை பிடித்து போய் திருமணம் செய்து கொண்டாலும் இருவரும் விரும்பி எல்லாம் திருமணம் செய்யவில்லை….
அவன் இருக்கும் போது ரித்திகாவை நன்றாக பார்த்து கொள்வதை போல் நடித்தாலும் அவன் வெளியில் சென்றால் அவளை அடித்து கொடுமை செய்வாள்….
அவள் அடித்தது அவளுக்கு தெரியாத மாதிரி பார்த்து கொள்வாள்…. தற்போது அவளுக்கு பதினொன்று வயது நடந்து கொண்டு இருக்கிறது… ஏழு வருடமும் அவனுக்கு தெரியாமல் காருண்யா பார்த்து கொண்டாள்…
பொன்னம்மா பாட்டிக்கு அப்பா மகள் மீது தான் சந்தேகம்… லிங்கம் தற்கொலை செய்யும் அளவு எல்லாம் கோழை இல்லை… இவர்கள் தான் கொலை செய்து இருப்பார்கள் என நம்பினார்…
அவர் நினைத்தது சரியே…. அப்பா மகள் இருவரும் தனி தனியாக ஆட்களை தயார் செய்து இருந்தனர்… ஆனால் இருவருக்கும் இருவரும் ஏற்பாடு செய்ததை கூறவில்லை…
இருவரும் ஏற்பாடு செய்த ஆட்கள் ஒரே நேரத்தில் பண்ணை வீட்டுக்கு வந்து ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து விட்டனர்…. இரு கூட்டமும் தங்களுக்குள் பேசி லிங்கத்தை சத்தமில்லாமல் முடித்து இருந்தனர்…
அவன் போதையில் இருந்தது இரு கூட்டத்திற்கும் ஏதுவாக இருந்தது…. அவன் இறந்தவுடன் இரு கூட்டமும் அய்யாதுரைக்கும் காருண்யாவிற்கும் தனி தனியாக அழைத்து அவனை கொன்று விட்டதாக கூறி பணத்தை வாங்கி இருந்தனர்….
இருவரும் காலையிலேயே தங்கள் நாடகத்தை ஆரம்பித்து இருந்தனர்….. அப்போது கரெக்டாக அய்யாதுரைக்கு அழைப்பு வந்து உள்ளுக்குள் சந்தோசத்துடன் வெளியே சலிப்பாக அந்த பண்ணை வீட்டிற்கு சென்றனர்…
அங்கு தன்னுடன் இத்தனை வருடம் வாழ்ந்த கணவன் இறந்து கிடப்பதை பார்த்து கொஞ்சம் கூட கவலை இன்றி அய்யாதுரைக்கு அழைத்தவனை அழைத்து பண்ணை வீட்டிலேயே புதைக்க கூறிவிட்டனர்…. அவனும் யாருக்கும் சந்தேகம் வராதவாரு முடித்துவிட்டான்…
அவனிடம் யாருக்கும் தெரியக்கூடாது… தெரிந்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய் என மிரட்டி விட்டு வீட்டிற்கு உள்ளுக்குள் சந்தோசமாக சென்றனர்….
லிங்கம் அரசியலில் கொஞ்சம் அடிதடி தில்லுமுள்ளு என அனைத்தும் செய்வான்… ஆனால் அய்யாதுரையும் காருண்யாவும் அதற்கு மேல்….
இருவரும் அரசை ஏமாற்றி குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்…. இதை முதலில் கண்டுகொள்ளாத லிங்கம் அதன் பின் சிறிது சிறிதாக அதை எதிர்க்க ஆரம்பித்தான்…
அய்யாதுரை காருண்யா இருவரும் இல்லீகலாக மரத்தை வெட்டி விற்பது கோவில் சிலைகளை கொள்ளை அடித்து வெளிநாட்டில் விற்பது மண்ணுக்குள் இருக்கும் தங்கம் மற்றும் வைரத்தை விற்பது என அனைத்து வேலைகளையும் செய்தனர்…. அனைத்தும் அரசுக்கு தெரியாமல்….
இவர்களை போலவே இருந்த கேரளா அமைச்சரின் தொடர்பு கிடைத்தது…. அவரும் இவர்களை போல் தான் அரசை ஏமாற்றி பணத்தை சேர்த்து கொண்டு இருப்பது….
இருவரும் சேர்ந்து பல வேலைகளை செய்தனர்…. லிங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தான்…. அதனால் அவனுக்கு தெரியாமல் அனைத்தும் செய்தனர்… லிங்கமோ இவர்கள் திருந்தி விட்டார்கள் என தப்பு கணக்கு போட்டு விட்டுவிட்டான்… அது தான் தற்போது அவனின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து இருக்கிறது…..
அவர்கள் தற்போது செய்து கொண்டு இருப்பது இடுக்கியில் உள்ள அர்ஜுனன் கீழே விழுந்த மலை அடிவாரத்தில் உள்ள காட்டில் இருக்கும் மண்ணில் அதிக தங்க துகள்கள் இருப்பதை அறிந்து அதை கடத்தி விற்க ஏற்பாடு செய்து கொண்டு உள்ளனர்…..
அதை தெரிந்து கொண்ட லிங்கம் வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டினான்…. அதற்காக தான் இந்த கொலை ஏற்பாடு… ஏற்கனவே கருத்து வேறுபாட்டின் காரணமாக தான் லிங்கம் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அய்யாதுரைக்கு ஏதுவாக ஓட்டு கேட்க போகவில்லை…
அதனால் தான் நடந்து முடிந்த தேர்தலில் தோற்றது… அந்த கோவத்திலும் அவனின் எதிர்ப்பிலும் தான் அப்பாவும் மகளும் அவனை கொன்றது….
தற்போது என்ன சொல்லி கேரளா போகலாம் என்று யோசித்து கொண்டு உள்ளனர்…. அப்போது காருண்யாவிற்கு ஒரு யோசனை வந்தது… “அப்பா அந்த சனியனுக்கு உடம்பு சரி இல்ல… வைத்தியத்துக்காக கேரளா போகலாம்னு சொல்லிடுங்க….. லிங்கம் கேரளால இருக்குறதா சொல்லிக்கலாம்…. நமக்கு அங்க வேலை முடிஞ்சதும் இந்த சனியனை அங்கேயே விட்டுட்டு வந்துரலாம்…. கேட்டா டிரீட்மென்ட் அவளுக்கு ஒத்துக்காம செத்து போயிட்டானு சொல்லிடலாம்… இவ பேருல இருக்க சொத்தும் நமக்கு தான்…. அவனும் பொண்ணு இறந்த சோகத்துல இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டான்னு சொல்லிடலாம்” என்று அய்யாதுரையிடம் கூறினாள் காருண்யா…
அவரும் நல்ல ஐடியா தான் என்று அதற்கான ஏற்பாட்டை செய்தார்… அவர்களின் ஏற்பாட்டின் படி ரித்திகாவையும் அழைத்து கொண்டு கேரளா சென்றனர்… அவர்களுடன் பொன்னம்மா பாட்டியும் சென்றார்…
கேரளாவில் அந்த மலை அடிவாரத்தில் இருக்கும் காட்டிற்கு சென்றனர்…. அங்கிருக்கும் மக்களை கேரளா அமைச்சர் ஏற்கனவே மிரட்டி வைத்துள்ளார்…. யாரிடமும் கூற கூடாது இல்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டி வைத்து உள்ளார்…
ஊர் மக்களும் பயந்து அமைதியாகி விட்டனர்… அய்யாதுரையும் காருண்யாவும் கேரளவிற்கு வந்து இருந்தனர்….
எங்க உன் மருமகனை காணோம் அய்யாதுரை என்று அந்த அமைச்சர் கேட்டார்…
அவரோ “அவன் செத்துட்டான்… நேத்து தான் செத்து போனான்… அதை மறச்சு அப்டியே அவனை புதைச்சுட்டு வந்தாச்சு… இப்போ அங்க பொருத்தவரை அவன் கேரளாவுல இருக்கான்” என்று கூறினர்…
“ஹா ஹா செத்துட்டானா.. கொன்னுட்டீங்களா…. ” என்று சிரித்து கொண்டே கேட்டார் அந்த அமைச்சர்….
இருவரும் ஒரே போல் “செத்துட்டான்” என்று கூறிவிட்டனர்… அந்த அமைச்சரோ மனதிற்குள் “உங்கள பத்தி தெரியாதா” என்று நினைத்து விட்டு அமைதியாகி விட்டார்….
இரண்டு நாட்கள் காட்டுக்குள் தான் அவர்கள் இருந்தனர்…. கடைசி நாள் கிளம்பலாம் என்று முடிவு செய்து கிளம்பும் போது தான் மலையில் ஆற்றில் எதோ விழுந்தது போல் இருந்தது…
அனைவரும் அங்கு சென்று பார்த்த போது எதோ உடல் என நினைத்து வேகமாக ஆற்றில் இருந்து எடுத்தனர்… அது அர்ஜுனன் தான்… உயிர் இருப்பதை பார்த்து வேக வேகமாக முதல் உதவி செய்தனர் காட்டில் இருக்கும் மக்கள்… அய்யாதுரை காருண்யா அந்த அமைச்சர் மூவரும் அதிர்ந்து நின்று விட்டனர் ஒரு நிமிடம்….
அர்ஜுனன் கிட்டத்தட்ட லிங்கத்தின் முக ஜாடையில் இருப்பான்…. அதை பார்த்து தான் அதிர்ந்து நின்றுவிட்டனர்…. எங்கு லிங்கம் உயிரோடு வந்துவிட்டானா என்று…..
error: Content is protected !!