Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 29

கருப்பன் ஆட்டம் 29

காலை உணவினை முடித்த பிறகு வயலில் இருந்த சிறு வேலைகளை முடித்துவிட்டு பிறகு கருப்பனும் தர்மனும் சேர்ந்து மதுரைக்கு சென்று சிறிய அளவிலான ஒரு பீரோவும், அடுப்பும்,சிலிண்டரும்,சமையலுக்கு வேண்டிய பாத்திரங்களும் பின் வீட்டிற்கு வேண்டிய மளிகை சாமான்கள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு வருவதற்கு இரவு 7 மணி மேலாகியது.

வரும் பொழுதே தங்களுக்கு வேண்டிய இரவு உணவினை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தனர் நண்பர்கள் இருவரும்.



Advertisement

குளித்து முடித்து நேர்த்தியாக புடவை அணிந்து கணவனுக்காக மிக ஆர்வமாக காத்துக் கொண்டு இருந்தால் மலர். அவர்கள் வரவும்

அவர்கள் வாங்கி வந்த பொருளை வீட்டிற்குள் இறக்கி வைத்து விட்டு பின் வாங்கி வந்த உணவினை மூவருமாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.

Advertisement

Advertisement

அதன் பிறகு தர்மன் தன் வீட்டிற்கு செல்வதாக கூறி கிளம்பி விட்டான். இப்பொழுது அந்த ஏகந்த இரவு பொழுதில் இயற்கை எழில் சூழ மையத்தில் இருக்கும் அந்த குட்டி வீட்டிற்குள் தன் காதல் கணவனுடன் அமர்ந்து இருந்தால் மலர்.

 வீட்டிற்குள் இருந்த கயிற்றுக்கட்டில் இருவரும் ஒன்றாக அருகருக்கே அமர்ந்திருக்க, கருப்பன் வீட்டை சுற்றி பார்வையை சுழல விட்டவன் மலர்விழியிடம் “மலரு இருந்தாலும்..!” என்ற அவன் ஆரம்பிக்க,

Advertisement

அவனின் அந்த குரலே கூறியது அவன் அடுத்து என்ன கேட்பான் என்று அதற்குள் அவனை நிமிர்ந்து பார்த்த முறைத்தாள் மலர்.

“சரி சரி மொறைக்காத நான் எதுவும் சொல்லல…! உனக்கு இந்த வீடு புடிச்சதாகவும் இது உனக்கு வசதியா இருக்குன்னும் நான் நெனைச்சுக்குறேன் சரியா…!”

 “நெனச்சுக்குறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல மாமா, நெசமாக எனக்கு இந்த வீடு புடிச்சிருக்கு…!” என்றால் மலர்.

அடுத்ததாக கருப்பன் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் “சரி மலரு…. நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்”

“ம்ம்ம் கேளுங்க மாமா…!”

“உனக்கு ஊர்ல நடக்க இருந்த கல்யாணத்த பண்ணிக்க விருப்பம் இல்லன்னு கிளம்பி வந்துட்ட சரி…..! நீ இங்க இருக்குறதும், இப்ப நம்ம ரெண்டு பேத்துக்கு கல்யாணம்

ஆனது உங்க வீட்ல உள்ளவங்களுக்கு தெரியுமா….? நீ அவங்க கிட்ட இதப்பத்தி சொன்னியா…?” என்று கேட்டான் கருப்பன்.

‘ஐயோ இந்த மனுஷன் வேற நேரம் கெட்ட நேரத்துல கண்டதையும் நியாபடுத்தி விடுறாரே….!’ என்று நினைத்துக் கொண்டவள்

“அது… வந்து மாமா இப்போ எதுக்கு அத பத்தி பேசிக்கிட்டு….!”

“என்ன மலரு இப்பிடி சொல்ற…! காலைல எங்க அம்மா மேல இருந்த ஏதோ ஒரு சின்ன மனவருத்தத்துல அப்படி பேசிட்டு வந்துட்டேன்….! ஆனா அதுவே என்னால தாங்க முடியல…!

 அப்படி இருக்க நீ உங்க வீட்ல சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்து இருக்க…., அதுவும் இங்க வந்து இத்தன நாள் ஆகிப்போச்சு…..! அவங்க ஏன் மலரு உன்ன பத்தி விசாரிக்கல….?”

“விசாரிக்காம இருந்திருக்க மாட்டாங்க மாமா…! நான் எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாம விட்டுருப்பாங்க….!”

“அது எப்படி மலரு….! அவங்க வீட்டு பொண்ணு நீ, காணாம போயிருக்க, அதுவும் உங்க ஊர்ல இருந்து வந்து கிட்டத்தட்ட மூணு நாலு வாரத்துக்கு மேல ஆச்சு, அப்படி இருக்கும்போது உன் மேல பாசம் வச்சுருக்குறவங்க உன்ன பத்தி தேடி கண்டுபுடுச்சு வந்துருக்கணும்ல….!” என்று கேட்டான் கருப்பன்.

அதனை கேட்ட மலரோ வாயை வைத்து கொண்டு இல்லாமல் “மாமா நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்க மாட்டீங்களே…?” என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.

“என்ன மலரு தயக்கம் எல்லாம் பலமா இருக்கு…? என்னனாலும் கேளுடி…!”

“இல்ல மாமா… எனக்கு உங்கள பத்தின விஷயத்தை மயிலு சொன்னா…, உங்களுடைய தங்கச்சி மீனாவும் யாரோ ஒரு பையன லவ் பண்ணி அவங்க கூட போயிட்டதா தெரிஞ்சுகிட்டேன்.

அவங்களும் இப்படித்தான் போயிட்டாங்களாம். அவங்கள நீங்க தேடி கண்டுபுடுச்சிங்களா மாமா….! எவ்வளவு தூரம் போயி தேடுனீங்க மாமா..!”என்று கருப்பனின் கை பற்றி தயங்கி கொண்டே கேட்டால் மலர்.

அதனைக் கேட்ட கருப்பனுக்கு கடந்த கால கசங்க நினைவுகள் அனைத்தும் மனதில் வந்து தொற்றிக் கொண்டது.

“என்ன பேசுற மலரு….!அவளுக்கு கல்யாணம் பேசி ரெண்டு நாள் கல்யாணம் இருக்கும்போது ஓடிப்போயிட்டா….! அந்த நேரம் நானும் எங்க அப்பாவும் அம்மாவும் எவ்வளவு அவமானப்பட்டோம் தெரியுமா…? இன்னும் சொல்லப்போனா அந்த விஷயத்தால எங்க அப்பா செத்தே போயிட்டாரு….!

அப்படியா பட்ட நெலமையில தான் நாங்க அவள முழுசா வெறுத்து தலை முழிகிட்டோம். செத்துப்போன ஒருத்திய பத்தி தேடவோ இல்ல இனிமே பேசுவோ நான் நினைக்கல மலரு….!” என்றான் கருப்பன்.

அவன் கூறும்பொழுதே அவன் மனதின் ஆதங்கம் வெளிபட்டது. அதை பார்த்த மலருக்கோ ‘நம்ம வேற தேவையில்லாமல் வாய குடுத்துட்டோமோ…! நல்ல மூட்ல இருந்த மனுஷன் அப்படியே அமைதியாயிட்டாரே….!’ என்று நினைத்துக் கொண்டவளாக….

“மாமா” என்று கூறி கருப்பனின் அருகில் நெருங்கி அமர்ந்தாள். ஆனால் இத்தனை நேரம் இருந்த அந்த ஏகாந்த உணர்வு இப்பொழுது கருப்பனின் மனதில் அறவே இல்லை.

 அவனுக்கு அவனின் கடந்த கால நினைவுகளே அவனை சுற்றி வந்து மனம் முழுவதும் நிறைந்து இருந்தது.

 அந்த நினைவில் இருந்தவனுக்கு மலர் தன்னை நெருங்கி அமர்ந்திருப்பதும் மனதில் உரைக்கவில்லை.

“சரி மலர் நீ கட்டில்ல படுத்து தூங்கு, நானும் தூங்குறேன்” என்றவன் மலர்விழியை கட்டிலில் படுக்க சொல்லியவன் அவள் எத்தனை கூறியும் கட்டிலில் படுக்காமல் தரையில் ஒரு துண்டை

விரித்து படுத்துக் கொண்டான்.

அதனை பார்த்த மலர்விழிக்கு கண்களில் கண்ணீர் கரித்தது.

‘எவ்வளவு ஆசையா நம்ம பக்கத்துல வந்த மனுஷனை இப்படி பண்ணி புட்டியேடி லூசு சிறுக்கி…!’ என்று தன்னை கடிந்து கொண்டவள்.

“மாமா கட்டில்ல படுத்துகோங்க மாமா நான் கீழ படுத்துக்குறேன்…!” என்றாள்.

“இல்ல மலரு…., நீ மேல படு நான் கீழயே படுத்துக்குறேன்…!” என்று கூறி அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்.

கண்களில் நிறைந்த கண்ணீரோடு கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் மலர்..

 நேற்றைய பொழுது இருந்த மனநிலை வேறு…, ஆனால் இன்றைய பொழுது நன்றாக தொடங்க இருந்த வாழ்க்கையை தானே வாயை கொடுத்து நாசமாக்கிக் கொண்டதை போல் ஆயிற்று அவளின் இந்த நிலை.

 மலரின் மனதிலும் வானத்தின் மேற்கிலும் தோன்றிய இருக்கும் அந்த அடர் இருளை போக்குவதற்கு வெய்யோன் தனது செங்கதிர்களை தன்னுடன் துணைக்கு அழைத்து வந்திருந்தார்.

 கிழக்கில் சூரியன் உதிர்த்து அனைத்து இடங்களிலும் ஒளியை படர செய்ய, அந்த குட்டி வீட்டின் கயித்துக்கட்டில் படுத்திருந்து மலர் விழி பொறுமையாக கண்விழித்தாள்.

 கருப்பனோ மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு தரையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

 அவன் முகம் பார்த்து இதழ் வளைத்து அழகாக புன்னகைத்துக் கொண்டு எழுந்து வீட்டிற்கு வெளியே இருந்த தென்னை ஓலையால் மறைத்து வைக்க பட்டிருந்த ஒரு இடத்தில் குளித்து முடித்து மெல்லிய ஜிஃபான் சேலை ஒன்றை கட்டி கொண்டாள்.

அந்த வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்று கொஞ்சம் சாணி எடுத்து வந்தவள் அதனை தனது கை கொண்டு கரைக்க முதலில் அறுவருப்பு பட்டாலும் கூட, பின் அது ஒரு கிருமி நாசினி என்று நினைத்து தானே கை கொண்டு கரைத்தவள் வாசல் தெளித்து கோலமிட்டாள்.

 கருப்பன் நேற்று வாங்கி வந்திருந்த புது அடுப்பில் புது பால் சட்டியை வைத்து அதில் பால்காரரிடம் வாங்கி வந்திருந்த பாலை ஊற்றி அதனை கிழக்கே பொங்க காய்ச்சியவள் அதனை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு,

அடுத்தடுத்து கருப்பனுக்கு என்ன பிடிக்கும் என்று நேற்று தர்மனிடம் கேட்டு வைத்திருந்த உணவுப் பதார்த்தங்களை தயார் செய்து கொண்டிருந்தாள்.

 தனது வீட்டில் காலை நேரத்தில் இத்தனை சுவைமிகு நறுமணங்கள் சுழன்று வருவதை உணர்ந்த கருப்பனின் நாசியும் மூளையும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த அவனை எழுப்பி இருந்தது..

 அந்த நறுமணங்களை உள்ளிழுத்து கொண்டே எழுந்தமர்ந்தான் கருப்பன்.

தனக்கு எதிரே அதிகாலையில் பூத்த ரோஜா மொட்டாய் அழகிய சேலையில் தளர பின்னலிட்ட கேசம் இடைக்கு கீழே அசைந்தாட முகத்தில் பூத்த வியர்வை துளிகளை தன் புறங்கையால் துடைத்து கொண்டே உரிமையாய் தனது வீட்டின் குட்டி அடுப்படியில் அங்கும் இங்கும் சென்று சமைத்துக் கொண்டிருந்த தன்னவலை பார்த்து அழகாக புன்னகை பூத்தவன் பொறுமையாக எழுந்து அவளின் அருகில் சென்றான்.

கருப்பன் எழுந்து விட்டதை உணர்ந்த மலர் காய்ச்சி வைத்திருந்த பாலில் டீயை போட்டு எடுத்து வந்து அவனின் கையில் கொடுத்தாள்.

 அதனை சிறு புன்னகையோடு வாங்கிக் கொண்ட கருப்பன் அதனை ஒரு மிடறு குடித்து கொண்டே தன்னவளின் வியர்வை பூத்த முகத்தை ஆராய்ந்தவன்,

“எப்படி எந்திரிச்ச…?” என்று கேட்டான்.

“இப்பதாங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி…. நீங்க ஏன் இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிட்டிங்க…? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்ல….!”என்றாள் மலர்.

“இல்ல பரவால்ல…, என்றவன் அவளை பிடித்து தனக்கு அருகே நிற்க வைத்து கொண்டவன்,

இந்த வீடு குட்டியா இருந்தாலும் நான் ஆச ஆசையா கட்டுனேன். ஆனா இதனால் வரைக்கும் இந்த வீட்ல இந்த மாதிரி சாணி வாசமும், டீ வாசமும், மணமான குழம்பு வாசமோ இந்த வீடு உணர்ந்ததே இல்ல.

 ஏன்னா அதற்கான வேலையும் இதுவரைக்கும் இருந்ததில்லை. இப்போ நீ வந்ததுக்கப்புறம் தான் இந்த வீடு முழுமை அடைஞ்ச மாதிரி இருக்குடி….!” என்று கூறினான் கருப்பன்.

“இது வரைக்கும் அப்பிடி இருந்துருந்தா என்னங்க, அதான் இனிமே நான் தான் வந்துட்டேன்லங்க, இனிமே உங்களுக்கு உங்க வாழ்க்கையில எல்லாமே முழுமையாகிடும்…!”என்று கூறினாள் மலர்விழி.

 அந்த நேரம் அங்கு தர்மனும் வந்துவிட்டான்.அவனுக்கும் டீயை எடுத்து வந்து கொடுத்தவள் பின் தன்னுடைய சமையல் வேலை பார்க்க சென்றுவிட்டாள்.

 தர்மன் கருப்பனிடம் “மேலூர் காரய்ங்களுக்கு முந்தானேத்து ஏத்துன லோடு பத்தலையாம்… இன்னும் ரெண்டு லோடு வேணுங்குறாய்ங்கலாம்…. நேத்து போயிருந்தா ஏத்திவுட்டு வந்து இருப்பேன்.

நேத்து தான் போக முடியாம போச்சே அதான் இன்னைக்கு போய் அந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு வரணும். இன்னைக்கு வர எத்தனை மணி ஆகுதோ தெரியல…., நீ இந்த புள்ளைய தனியா விட்டுட்டு எங்கேயும் போயிராதடா….,

புது இடம் வேற தனியா இருந்து அந்த புள்ள பயந்துற போகுது அப்பைக்கப்ப நம்ம தோட்டத்துக்குள்ள பூச்சி வட்டை வேற வரும்.., இந்த புள்ள பயந்த சுபாவம் வேற …., இந்த புள்ளைக்கும் அதுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அதனால கொஞ்சம் பாத்துக்க மச்சான்… இதெல்லாம் சொல்லிட்டு போணும்னுதேன் வந்தேன்….!” என்று கூறியவன் அந்த டீ கிளாஸ் எடுத்துச் சென்று மலர்விழி இடம் கொடுத்தவன்

“கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கத்தா…!” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 காலை உணவு வகைகளை செய்து முடித்துவிட்ட மலர் கருப்பனுக்காக காத்திருந்தாள்.

 கருப்பன் வயல் வேலைகளை முடித்துவிட்டு அங்கிருந்த பம்பு செட்டில் ஒரு குளியலையும் போட்டுவிட்டு ஈர துண்டுடன் வீட்டிற்குள் நுழைந்து இருந்தான்.

அவனின் படர்ந்து விரிந்த வெற்று முதுகை பார்த்து எச்சில் விழிங்கி கொண்டவள் “மாமா… வந்துட்டீங்களா வாங்க உங்களுக்காக தான் காத்துட்டு இருந்தேன்… சாப்பாடு ஆயிடுச்சு சாப்பிடலாம்….!” என்று அழைத்தாள்.

 அதனை பார்த்த கருப்பன் முகத்தில் தோன்றிய புன்னகையோடு உடையை அணிந்து கொண்டு அவளின் அருகில் அமர்ந்தான்.

பலபலப்பான புது தட்டில் உணவு பரிமாறப்பட்டது. இன்று தான் இந்த வீட்டின் முதல் நாள் சமையல் என்பதால் சாம்பார், ரசம், மூன்று வகையான கூட்டு, பொரியல், தயிர், மோர் என அனைத்தும் செய்து வைத்திருந்தால் மலர்.

 அதனை மலர் வைக்க வைக்க மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்ட கருப்பன் “சாப்பாடு சூப்பரா இருக்கு மலரு…, உனக்கு சாப்பாடு செய்ய தெரியாதுன்னு நெனச்சேன்…! ஆனா உன் கை பக்குவம் அருமையா இருக்கு….!” என்று கூறி பாராட்டினான்.

“சரிங்க சாப்பிடுங்க…!” என்று இருவரும் சாப்பிட்டு முடித்து உணவு பாத்திரங்களை அடுப்படியில் எடுத்து வைத்தவள், தான் சாப்பிட்ட தட்டுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் இருந்த ஓர் இடத்தில் வைத்து கழுவிக் கொண்டிருந்தாள்.

 அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்தார் நம் கதையின் மற்றொரு கதாபாத்திரம் ஆதிசேசனின் கழுத்தில் இடம் பிடித்திருக்கும் நாகநாதன்.

 கழுவியை தட்டுகளை ஒரு கையில் எடுத்து கொண்டு மற்றொரு கையில் உள்ள நீரை உதறிக் கொண்டே திரும்பிய மலர்விழி அங்கே தலையை தூக்கி அவளின் முன்பு படையெடுத்து நின்றிருந்த பாம்பை பார்த்தவள்,

 பயத்தில் முகம் வெளிறி வியர்த்து உடம்பெல்லாம் சில்லென்று ஆனது. மாமா பாம்பு…. பாம்பு….!”அவளின் வெளிவராத கத்தலில் மேலும் ஒரு அடி நெருங்கிய பாம்பை கண்டவள்,

 அதன் பிறகு மேலும் பலத்த குரலில் “பாம்பு… பாம்பு….!” என்று கத்திக் கொண்டே கையில் உள்ள தட்டை கீழே போட்டுவிட்டு வீட்டிற்கு ஓடினால் மலர்.

வீட்டிற்குள் வந்த மலர் கட்டிலில் அமர்ந்து காலையில் வேலைக்கு வந்திருக்கும் வேலையாட்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கணக்கு பார்த்துக் கொண்டிருந்த கருப்பனிடம் வந்தவள்,

“மாமா…பாம்.. மாமா…பாபு… மாமா…. என்று கூறி பிதற்றினாள்.

“என்னடி சொல்ற…! கொஞ்சம் பொறுமையா புரியிற மாதிரி சொல்லு….!”

“மாமா பாம்பு… வெளியே பாம்பு நிக்குது மாமா….!” என்று கூறினாள்.

“என்னது பாம்பா….!”

“ஆமா மாமா வெளிய பாம்பு நிக்குது…!” என்று கூறியவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வராமல் பயத்தில் உடல் நடுங்க அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“மலரு பாம்பு வீட்டுக்குள்ள எல்லாம் வராது, நான்தான் இருக்கேன்ல பாத்துக்குறேன்…! நீ இவ்ளோ பயப்படாத மலரு…!” என்று கூறி அவளை தன்னிடம் இருந்து விலக்கப் பார்த்தான்.

ஆனால் பயத்தின் உச்சத்தில் இருந்த மலர்விழியோ அவனிடமிருந்து விலக மாட்டேன் என்று மேலும் அவனை அணைத்து அவனை மேலும் இறுக்கி கட்டிக் கொண்டாள்.

 இத்தனை நேரம் அவளின் பயத்தை பார்த்து இருந்த கருப்பனுக்கு பெண்ணவளின் தீண்டல் ஆணவனின் உடல் முழுவதும் பாய்ந்து அவனின் உடல் சூட்டை அதிகரித்தது.

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!