Skip to content
Post Views: 2,177

நாட்கள் யாருக்கும் காத்திராமல் ஒரு வருடம் ஓடியது…. இன்று வானதிக்கு பிறந்தநாள்…. அனைவரும் வாழ்த்தி இருக்க அவளின் உயிரானவன் மட்டும் வாழ்த்தவில்லை…. ஏன் பத்மினி கூட வானதி சிறு வயதில் விரும்பி சாப்பிடும் இன்னிப்பை செய்து தேவாவிடம் குடுத்து அனுப்பினார்…. ஆனால் வானதி இன்னும் இவரிடம் பேசவில்லை…. அவளாக பேசும் வரை அவளை தொந்தரவு செய்யாமல் பத்மினி இருந்து கொண்டார்…..
Advertisement
காலையில் அவள் எழுந்ததே தேவாவின் வாழ்த்தில் தான்… வருடா வருடம் தேவா தான் எப்போதும் முதலில் அவளை வாழ்த்துவான்…. இன்றும் அதே போல் அவன் தான் வாழ்த்தினான்….
Advertisement
Advertisement
அதன் பின் பாட்டி பாரதி யுகேன் வேலு ரஞ்சி வேலுவின் பெற்றோர் பாரதியின் பாட்டி அனைவரும் வாழ்த்தினர்… பின் கேக் வெட்டி கொண்டாடினர்…. பின் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்று இருக்க இவள் கோவிலுக்கு சென்றுவிட்டு அவள் வேலை செய்யும் பள்ளிக்கு சென்றாள்…
அங்கிருக்கும் மாணவர்கள் எல்லாம் அவளுக்கு வாழ்த்தினர்…. பின் அவர்களுக்கு எல்லாம் சாக்லேட் குடுத்தாள்… பின் மதியம் ஆனதும் வழக்கம் போல் பள்ளி விட்டு சென்று பாரதியை அழைத்து கொண்டு வீடு நோக்கி சென்றாள்…. அன்று சனிக்கிழமை பள்ளி அவளுக்கு அரை நாள் தான்… பாரதிக்கும் அன்று அரை நாள் தான் பள்ளி..
Advertisement
அவளின் முகத்தில் சோகம் தெரிந்தது…. அது ஏன் என தெரிந்தும் யாரும் எதுவும் கேட்கவில்ல.. மாலை நான்கு மணி இருக்கும்.. அப்போது ஒரு பார்சல் வந்தது… அதை பார்த்து சந்தோஷம் ஆகி விட்டாள்… அவளின் மாமன் தான் அனுப்பி இருந்தான்….
பார்சல் வாங்கி கொண்டு உள்ளே வந்தவள் உள்ளே இருந்தவனை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டாள்… அங்கு இருந்தது அவளின் மாமன் அருள் மொழி… அவனை ஓடி சென்று கட்டிக்கொண்டாள்….
அவன் எதிர்பார்க்கவே இல்லை அவள் வந்து அணைப்பாள் என… அவனும் அவளை அணைத்து கொண்டான்…. சிறிதுநேரம் கழித்து தான் தன் சட்டை ஈரம் ஆவதை உணர்ந்தான்….
“குட்டிமா என்ன ஆச்சு ஏன் அழுகுற… டேய் என்ன பாரு” என்று கூறி தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்தினான்…. அனைவரும் அவள் அவனை அணைத்தவுடன் பாரதி வீட்டுக்கு சென்றுவிட்டனர்….
அவள் எதுவும் கூறவில்லை… மீண்டும் அவனை அணைத்து கொண்டாள்… அவனும் அவளை அணைத்தவாறே “நான் உனக்கு விஷ் பண்ணல…அதுனால நான் உன் பர்த்டே மறந்து இருப்பேன்னு நினைச்சியா…” என்று அவளின் தலையை கோதியவாரு கேட்டான்… அவள் எதுவும் கூறவில்லை.. அமைதியாகவே இருந்தாள்…. அவள் அமைதியே உணர்த்தியது அது தான் காரணம் என….
“உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லட்டுமா குட்டிமா” என்று கேட்டான்… அதற்கு அவள் சரி என தலையாட்டினாள்…
“நான் இனிமே துபாய் போற வேலை இல்லை… இனிமே இந்தியா தான்…. ஆனா ஒரு வருஷம் சென்னை கம்பெனில ஒர்க் பண்ணனும்…. இனிமே என் குட்டிமா கூட தான்” என்று உச்சியில் முத்தமிட்டு கூறினான்…..
அவள் அவனிடம் இருந்தும் பிரிந்து உண்மையா என்று கண்ணசைவில் கேட்டாள்…. அவனும் “ஆமா இனிமே எப்போதுமே என் குட்டிமா கூட தான்… இந்த ஒரு வருஷம் சென்னைல வேலை செஞ்சா இனிமே இங்க மட்டும் தான்” என்று கூறினான்….
அவள் சந்தோசமாக இன்னும் இறுக்கி அணைத்து கொண்டாள்… மெதுவாக அவள் காதோரத்தில் “ஹாப்பி பர்த்டே குட்டிமா” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறினான்… அவள் மேலும் அவனுடன் ஒன்றிகொண்டாள்….
சிறிது நேரம் கழித்து அனைவரும் உள்ளே வந்தனர்… அப்போதும் அப்படியே நின்று இருந்தனர் அருளும் வானதியும்….
அனைவரும் ஒரு சேர “நாங்க வரலாமா??…” என்று கத்தினர்…. அந்த சத்தத்தில் தான் இருவரும் பிரிந்தனர்.. வானதி வெட்கப்பட்டு கொண்டே அருளின் பின் மறைந்து கொண்டாள்…
அதன் பின் அந்த நாள் முழுவதும் சிரிப்பும் சந்தோசமாக தான் சென்றது… இரண்டு நாள் அருள் மேலூரில் இருந்தான்… அதன் பின் அவன் வேலை காரணமாக சென்னை கிளம்பிவிட்டான்…
அந்த வருடம் பாரதியும் யுகேனும் பொதுதேர்வு எழுதுவதற்காக தங்களை தயார் செய்து கொண்டு இருந்தார்கள்… தேவாவும் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து கொண்டே ஐபிஎஸ்(ips) எக்ஸாம்காக தன்னை தயார் செய்து கொண்டு இருந்தான்….. அவன் முதல் வருடம் படித்து கொண்டு இருக்கும் போதே இதற்காக தன்னை தயார் செய்து கொண்டு இருந்தான்…..
அந்த வருடம் அப்படியே சென்றது பாரதியும் யுகேனும் தன்னுடையை பள்ளி படிப்பை கடைசி தேர்வு எழுதி முடித்து இருந்தனர்….
அன்று அனைவரும் சந்தோசமாக இருந்தனர்… அருள் சென்னையில் இருந்து மேலூர் திரும்பும் நாள் அனைவரும் வேலுவின் வீட்டில் இருக்க ரஞ்சி மயக்கம் அடைந்து இருந்தாள்… என்னவோ எதோவென அனைவரும் பதறினர்….. பாரதியின் பாட்டி தான் ரஞ்சிக்கு நாடி பிடித்துப் பார்ந்து “ஏய் தாயம்மா எல்லாம் சந்தோஷமான விஷயம் தான்…. வேலுவுக்கு வாரிசு வந்திருச்சு… அடுத்த தலைமுறைக்கு முத(முதல்) வாரிசு வந்திருச்சு….” என்று சந்தோசமாக கூறினார்….
சிறியவர்கள் அனைவரும் வேலு மற்றும் ரஞ்சியை கட்டிக்கொண்டு வாழ்த்து கூறினர்….
அப்போது தான் வெளியில் காரின் சத்தம் கேட்டது…. அவன் வந்ததை கூட யாரும் கவனிக்காமல் ரஞ்சியிடம் பேசிக்கொண்டு இருந்தனர்…. தன்னை யாரும் கவனிக்கவில்லை என பொய் கோவம் கொண்டு அனைவரையும் முறைத்து நின்று இருந்தான்… முதலில் தேவா தான் அதை கவனித்தான்….
மெதுவாக வானதி காதின் அருகில் சென்று “வானு ம்மா அண்ணன் வந்தாச்சு… யாரும் கவனிக்கலனு முறைச்சிட்டு நின்னுட்டு இருக்கு” என்று கூறினான்…
அவனிடம் அவனை உள்ளே வர சொல்லி கூப்பிடு என்று சைகையில் கூறினாள்…. அப்போது தான் பார்ப்பதை போல் தேவா “அண்ணா வாங்க அண்ணா… எப்போ வந்திங்க…” என்று சத்தமாக கேட்டான்… அப்போது தான் அனைவரும் அவனை கவனித்து வரவேற்றனர்….
பின் தேவாவிடம் வானதி அவனை குளித்துவிட்டு வருமாறு கூற கூறினாள்… அவனோ “அண்ணா வானு ம்மா உங்களை பிரெஷ் அப் ஆகிட்டு வர சொன்னாங்க” என்று கூறினான்….
அருள் வானதியை பார்த்து கண் அடித்துவிட்டு குளிக்க சென்றான்… வானதி தேவாவை செல்லமாக தோளில் அடித்துவிட்டு அவனுக்கு பிடித்தவாரு டீ வைக்க சென்றாள்…..
அருளோ ஐந்து நிமிடத்தில் குளித்து வந்து இருக்க வானதி அவனிடம் டீயை நீட்டினாள்…
யாரவது பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு ஒரு பறக்கும் முத்தத்தை அவளுக்கு குடுத்துவிட்டு டீயை வாங்கினான்… “நான் வரப்ப எல்லாரும் சந்தோசமா இருந்திங்க என்ன விஷயம்…?” என்று கேட்டான்….
தாயம்மா தான் “டே பேராண்டி நீ தாய்மாமன் ஆகிட்ட டா…. ரஞ்சி மாசமா இருக்கா…” என்று கூறினார்….
டீ குடித்தமுடித்தவுடன் தான் அவர் கூறினார்…. எனவே வேக வேகமா டீ கப்பை மேசையில் வைத்துவிட்டு ரஞ்சியின் அருகில் சென்று அவளின் தலையை தடவி கொடுத்து “ரொம்ப சந்தோசம்….கவனமா இருக்கனும் ரஞ்சிமா… என்ன வேணும்னாலும் அண்ணன் கிட்ட கேட்கனும் டா” என்று கூறினான்…. அவளும் சரி என தலையசைத்து அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்…. அவனும் தோளோடு அணைத்து கொண்டாள்….
அப்போது வானதி தேவாவிடம் ரஞ்சியை மருத்துவமனை அழைத்து சென்று உறுதி செய்ய கூறுமாறு சைகையில் கூறினாள்….
அவனும் வேலுவின் அம்மாவிடம் “அத்த வானு ம்மா அக்காவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு கன்பார்ம் செஞ்சிட்டு வர சொன்னாங்க” என்று கூறினான்….
யாருக்கும் சந்தோசத்தில் அதை பற்றி நினைவே இல்லை… அதற்குள் அருள் வேலுவிடம் சென்று “என்னை இந்த சின்ன வயசுல தாய்மாமன் ஆக்கி இருக்க கூடாது டா நீ” என்று கிண்டலாக கூறி அணைத்து கொண்டான்….
வேலு சென்று கார் எடுக்க ரஞ்சி வேலுவின் அம்மா கமலா பத்மினி மட்டும் மருத்துவமனை சென்றனர்….
தேவாவும் யுகேனும் கிரிக்கெட் விளையாட சென்று இருக்க பாரதி தன் தோழி வீட்டுக்கு சென்று இருந்தாள்… மூவரிடமும் ஒரு மணிக்குள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கூறி தான் வானதி அனுப்பி இருந்தாள்….
வேலுவின் அப்பா வாஞ்சிநாதன் வெளியில் உட்காந்து பேப்பர் படித்து கொண்டு இருக்க வானதி பாட்டிகள் இருவரிடமும் வந்து அவர்கள் எடுத்து வைத்து இருந்த கீரை கட்டை எடுத்து கொண்டாள்… இருவரும் சும்மா இருந்தால் போதும் என செய்கையில் கூறினாள்…
தாயம்மாள் பாட்டி அவளிடம் “ரொம்ப சலுப்பா இருக்கு ராசாத்தி… அது தான் கீரை கட்டை எடுத்து உட்காந்தோம்…. தா தாயி அதையாச்சும் பண்ணிட்டு இருக்கோம்…” என்று குழந்தை போல் முகத்தில் வைத்து கூறினார்….
சரி என குடுத்துவிட்டு வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது என கூறி கீரை கட்டை அவரிடம் குடுத்து விட்டு சென்றாள்…. அவர்கள் இருவரும் திண்ணைக்கு சென்றனர்….
தற்போது வீட்டில் அருளும் வானதியும் மட்டும் இருக்க அருள் கன்னத்தை காட்டி ஒரு முத்தம் கேட்டான்… அவளோ அவனை செல்லமாக முறைத்துவிட்டு சமையலறை சென்றாள்…
பின்னாடியே சென்ற அருள் அவளை அணைத்து கொண்டு “குட்டிமா ரஞ்சி என்னை தாய்மாமன் ஆக்கிட்டா… நாமலும் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துகலாமா…” என்று அவளின் கழுத்தில் முத்தமிட்டு கேட்டான்….
அவளும் சரி என தலையசைத்து அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்… அவன் கை அவளின் இடுப்பில் மேய அவள் அவனிடம் இருந்து விலகி அவனை முறைத்துவிட்டு பின்பக்கம் முகத்தை திருப்பி கொண்டு சென்றாள்…..
ஏ சூரியகாந்திப் பூவப்போல
முகத்த திருப்புறியே
நீ சொழட்டிப் போட்ட
சோளியப்போல
செதரி ஓடுறியே
ஏ அழகா நீயும்
இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய
என்ன தொறத்துறியே
மயிலாப்பூரு மயிலே
ஒரு இறகு போடம்மா
என் சொந்த ஊரு மதுரை
அட தள்ளி நில்லையா
உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல
சரிதான் போடி புள்ள
மேயாத ஆடு இல்ல
மேயாட்டி புல்லும் இல்ல
சவடால் தேவையில்ல
ஏனோ ஏனோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா
ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா
கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
error: Content is protected !!