Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 15

அத்தியாயம் – 15

புதுதில்லி, தலைமை அமைச்சர் இல்லம்



Advertisement

அன்றைய தினம் ஞாயிறு என்ற ஞாபகம் எல்லாம் வசுந்தராவுக்கு இல்லை போலும். காலையிலேயே அலுவலகத்திற்கு தயாரானவர், சித்தார்த்திடமும் சீக்கிரமே வரும் படி கூற, அவருக்கோ அன்று அலுவலகம் செல்லும் திட்டம் இல்லை.

“மேம், நீங்க நாளைக்கு ரிட்டர்ன் ஆகுறது தானே பிளான். எதுவும் பிரச்சனையா?” என்றார் யோசனையுடன். 

Advertisement

Advertisement

“இல்ல சித்தார்த். நீங்க ஃபோன் பண்ணப்பறம் அங்க இருக்கறது சரியா படலை எனக்கு. அதுனால கெளம்பிட்டேன். லலிதாவும் சீக்கிரம் வந்துடுவாங்களா?” என்க, 

“ஐ’ல் செக் மேம், நீங்க இங்க இல்லாததால நான் பார்த்துக்குறேன்னு டீமை இந்த வீக் எண்ட் வர வேண்டாம்னு சொல்லிருந்தேன். நீங்க பார்க்க வேண்டிய ஃபைல்ஸ் உங்க டேபிள்ல தான் லேபிள் பண்ணி வைச்சிருக்கேன். அது முதல்ல ஸ்டார்ட் பண்றீங்களா. நான் ஒரு மணி நேரத்துக்குள்ள அங்க இருப்பேன் மேம்” என்றார் சித்தார்த்.

Advertisement

“ஓகே சித்தார்த்” என்று நிறுத்தியவர்,

“சாரி, நான் ப்ரதாப் சொல்லிருப்பாருன்னு நினைச்சேன். நீங்க வேற எதுவும் பிளான் வைச்சிருந்தீங்களா?” என்றார் சற்று தயக்கமாக.

“நோ இஷ்யூஸ் மேம். நான் வீட்டில இருந்து வேலை தான் பண்ணிட்டு இருக்கேன், செக்யூரிங் ஆல் டிப்ளொமசி மூவ்ஸ் ஃபார் த கரண்ட் சிச்சுவேஷன். ஏன் உங்க பிளான் சேஞ் நியூஸ் எனக்கு வரலைன்னு நான் ப்ரதாப்கிட்ட கேட்டுக்குறேன்” என்று அழைப்பை துண்டித்த சித்தார்த், அடுத்த அரை மணி நேரத்திலேயே வசுந்தரா முன் நின்றிருந்தார்.

அவரது அலுவலகத்தில் மேசையின் மீது சாய்ந்து நின்றிருந்த வசுந்தராவின் முகம் தெளிவாக இருந்தது. ஒரு காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை மடக்கி மேசையின் பக்கத்தில் பதித்து நின்றவாறு தீவிரமாக ஐ-பேடில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். 

எப்போதும் உடுத்தும் புடவையிலிருந்து மாறுபட்டு, ஃபார்மல் உடையில் இருந்த வசுந்தரா, சித்தார்த்திற்கு அவரது கல்லூரிக் காலத்தை நினைவு படுத்தியது. சித்தார்த்தைப் பார்த்ததும், கண்ணாடியை நெற்றிக்கு ஏற்றி விட்டவர்,

“மார்னிங் சித்தார்த். வேர் இஸ் லலிதா?” என எடுத்தவுடன் கேள்வியெழுப்பினார். 

“குட் மார்னிங் மேம், லலிதா இஸ் ஆன் ஹெர் வே. டு யூ நீட் எனிதிங் ஸ்பெசிஃபிக்?”

“நத்திங். நீங்க மார்க் பண்ண ஃபைல்ஸ் பாத்துட்டேன். லெட்ஸ் பிரையாரட்டைஸ் வார் க்ரைசிஸ். வாட் இஸ் அவர் பிளான் ஆஃப் ஆக்‌ஷன்?”

“நமக்கு டைரக்ட் இன்வால்வ்மென்ட் இருக்க சான்ஸ் கம்மி தான் மேம். ஆர்ம்ட் ஃபோர்சஸ் வார் ரெடினெஸ் எக்சர்சைஸ் யூசுவல் ப்ரொசிஜர் ஃபாலோ பண்றது தான் லேட்டஸ்ட் அப்டேட். உங்களுக்கு ஸ்பெசிஃபிக் வியூஸ் இருக்கு, செக் பண்ணனும்னா ஐ கேன் அரேஞ்ச் அ மீட்டிங் வித் சி.டி.எஸ்*“

“ம்ம்ம், இப்ப வேண்டாம். லெட்ஸ் ஃபோக்கஸ் ஆன் தி எனர்ஜி க்ரைசிஸ். ரஷ்யா பேக் அடிச்சிட்டாங்க. நம்ம ஃபால் பேக் ஆப்ஷன் என்ன?”

“நம்மகிட்ட அறுபதுலேர்ந்து, எழுபது நாள் வரை நேஷனல் டிமாண்ட் மீட் பண்ற அளவு க்ரூட் ஆயில் ரிசர்வ் இருக்கு மேம். பெரிய பிரச்சனை எல்.பி.ஜி தான். அந்த ரிசர்வ் மேக்சிமம் 25 நாள் தான் இருக்கும். எல்லாம் டேக்கில் பண்றதுக்கு தான் கேபினட் கமிட்டி நாளைக்கு மீட் பண்றோம். தட்டுப்பாட்டை மேனேஜ் பண்றதுக்கு மோர் ரேஷனிங் ரூல்ஸ் ஆர் இன் த ப்ரோப்போசல்”

“ரைட், இதுல பங்களாதேஷ் அன்ட் ஶ்ரீலங்கா எமர்ஜென்சி ரிக்வெஸ்ட் எப்டி மேனேஜ் பண்றது சித்தார்த்? நமக்கே பிரச்சனைன்னா வி ஹேவ் டு டர்ன் டவுன்” என்றார் வசுந்தரா ஸ்திரமாக.

“இல்ல மேம்” என்று அவசரமாக மறுத்தார் சித்தார்த். 

“வொய் நாட்?” என்றார் வசுந்தரா கேள்வியாக. 

“இது பார்ட் ஆஃப் அவர் ஜியோபொலிட்டிக்கல் ஸ்ட்ரேடஜி மேம். சைனாவோட எனர்ஜி பவர் ஆஃப்செட் பண்ணனும்னா, இந்த மாதிரி தான் சவுத் ஏசியால நம்மள ஸ்டெபிளைஸ் பண்ணனும்”

“பட், மக்கள் மத்தியில இது கான்ட்ரோவெர்சி கிரியேட் பண்ணுமே சித்தார்த். நம்ம மக்களுக்கு ரேஷனிங் பண்ணிட்டு, பக்கத்து நாட்டுக்கு தூக்கிக் கொடுத்தா எப்படி ஏத்துப்பாங்க? அசெம்பிளி எலெக்‌ஷன் வேற வரப்போகுதே” 

“ரெண்டு விஷயம் மேம். கரண்ட் இன்டெல் படி, இது உக்ரேன் மாதிரி லாங் டேர்ம் போகாதுன்னு தான் எக்ஸ்பெக்டேஷன் மேம். அண்ட் ரஷ்யா ஸ்டில் நம்ம பர்சூயூ பண்ணிட்டு தான் இருக்கோம். அதுக்கு அமெரிக்கா முப்பது நாள் வெய்வர் குடுத்துருக்கது பாசிட்டிவ் நியூஸ் தான்”

“சோ டிமாண்ட் மீட் பண்ணிடலாம்னு சொல்றீங்களா?”

“சேர்ட்டெயின்லி மேம்! அதோட லாங்க் டேர்ம் நாம வளைகுடா நாடுகள மட்டுமே நம்பிட்டு இருக்க முடியாதுல்ல. சோ டைவர்சிஃபை பண்றதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 

நம்ம டிமான்ட் மீட் பண்றதுக்கு வெஸ்ட் ஆஃப்ரிக்கா அண்ட் சவுத் அமெரிக்கன் கன்ட்ரிசும் எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு இருக்கோம். நாளைக்கு கேபினட் கமிட்டில அந்தந்த மினிஸ்ட்ரிலேர்ந்து டீடெயில்ட் பிளான்ஸ் பிரசண்ட் பண்ணுவாங்க மேம்”

எல்லாவற்றையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்ட பின், ஐ-பேடை மேசையில் வைத்து விட்டு, முழுக்கை சட்டையை மடித்த படி,

“சாப்பிட்டீங்களா சிட்?” என்றார்.

ஒரு நிமிடம் தன்னிடமா கேட்டார் என்பது போல் விழித்த சித்தார்த், பின்னர் சுதாரித்து,

“நோ மேம், யூ கேரி ஆன்” என்று அவரது அறைக்குத் திரும்ப எத்தனிக்க,

“கேர் ஜாயினிங் மீ?” என வசுந்தரா கேட்கவும், சற்று தயங்கி நின்றார்.

“சும்மா வாங்க சிட். மை மாம்’ஸ் ஸ்பெஷல், அதுனால தான் கூப்பிடுறேன்” என்றபடி உணவு மேசைக்கு நடந்தார். 

“நைஸ்” என்றபடி, சித்தார்த்தும் இணைந்து கொண்டாலும், ‘இதை எப்படி எடுத்துக் கொள்வது’ என்று அவருக்கு சிறு குழப்பம். 

‘சிட்’ என்ற அழைப்பில், அவர்களுக்கான தனிப்பட்ட இடமென எடுத்துக் கொள்ள முனைந்தாலும், தானாக அதை முன்னெடுக்க சித்தார்த்திற்கு சிறு தயக்கமே. எதுவென்றாலும் வசுந்தராவிடமிருந்தே வரட்டும் என்பது போல அமைதி காத்தார்.

“உங்களுக்கு ஸ்பைசி ஃபுட் பிடிக்கும்ல. முதல்ல இட்லி, இந்த பூண்டு பொடி சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் இந்த மட்டன் குழம்பு வைச்சி இன்னொரு ரவுண்ட் டிரை பண்ணுங்க” என அவரே தட்டில் எடுத்து வைக்க, சித்தார்த்திடம் சிறிது நெகிழ்ச்சி.

அஞ்சலி மகளுக்கென இட்லி மாவு முதற்கொண்டு, அவருக்குப் பிடித்த சில உணவு வகைகளை இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடும் படி கொடுத்து விட்டிருந்தார். அதைத் தான் கடை பரப்பி ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார் வசுந்தரா.

அவர் பரிந்துரைத்த படியே உணவை சுவை பார்த்த சித்தார்த்,

“தேங்க் யூ மேம். இட் இஸ் டெலிசியஸ்” என்றார்.

“அம்மா கை சாப்பாடுன்னா ஸ்பெஷல் தான் இல்ல” என்றார் வசுந்தராவும் சிரித்தபடி.

“ஐ ஹோப் தே ஆர் ஓகே அண்ட் யூ ஹேட் அ குட் டைம்?” 

“ம்ம்ம், யெஸ். பட் இட் வாஸ் டூ ஷார்ட்! அன்ட் ஐ ரியலைஸ்ட் வொய் யூ செட் டு ப்ரிங் தெம் ஹியர்!” என்க, சித்தார்த்திடம் ஆமோதிப்பான சிறு புன்னகை மட்டுமே.

“என்ன சிட், அளந்து அளந்து பேசுறீங்க?” என்றார் சீண்டல் போல். 

முட்கரண்டியால் ஒரு விள்ளலை எடுத்து வாயில் வைத்தவர், வசுந்தரா கேட்டது காதில் சரியாக விழவில்லையோ என்பது போல்,

“பார்டன் மீ மேம்?” என்றார்.

“நத்திங். ஐ டோல்ட் யூ சோன்னு சொல்லிக்காட்ட ஆப்பர்சூனிட்டி கிடைச்சும் அமைதியா இருக்கீங்களேன்னு கேட்டேன்”

“ஓ ரைட்” என்று அழகாக சிரித்தவர்,

“இதுல என்ன இருக்கு மேம். உங்களுக்கு அட்வைஸ் பண்றது தான் என்னோட ஃபுல் டைம் ஜாபே. அதுக்கு தானே எனக்கு சம்பளம் கொடுக்குறாங்க. பட், நான் என்ன அட்வைஸ் பண்ணாலும் ஃபைனல் டிசிஷன் உங்களோடது தான். இதுல சொல்லிக்காட்டுறது எங்கிருந்து வரும்” என்றார். 

“ரொம்ப உஷார் தான். சண்டை போட எல்லாம் சான்சே கொடுக்க மாட்டீங்க அப்போ” என்க, சித்தார்த் இன்னுமே விழித்தார்.

வசுந்தராவிடம் அப்பட்டமாக ஏதோ மாற்றம் இருந்தது. அழுத்தம் குறைந்து சற்று இலகுவாக இருப்பது போல் தோன்றியது. அவரது இந்த கேலிப்பேச்சில் ஆசுவாசம் அடைந்த சித்தார்த்,

“ஒரு நாள் தானே அம்மா வீட்டுக்குப் போன வசு? இப்டி மாற்றம் வரும்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிளான் பண்ணிருக்கலாம் போலயே…” என்று தனியிடத்தை தானே எடுத்து, கேலியாகவே பதிலளித்தார். 

“அப்பா, ஃபைனலி சார்க்கு பல்ப் எறிஞ்சிடுச்சு! நான் கொஞ்சம் பெர்சனலா பேசணுமே சிட், ஐ வாண்ட் டு ப்ராப்பர்லி எண்ட் திஸ்” என்று வசுந்தரா பேசி முடிக்கும் முன், 

“சாரி மேம், லேட் ஆயிடுச்சு” என்றபடி லலிதா அந்த அறைக்குள் நுழைந்தார்.

“இட்ஸ் ஓகே லலிதா, வாங்க நீங்களும் சாப்பிடுங்க” என வசுந்தரா உடனே உபசரிக்க, 

“இல்ல மேம், கிளம்புறதுக்கு முன்ன தான் சாப்பிட்டேன்” என்ற லலிதா சித்தார்த்தை கேள்வியாகப் பார்த்தார். அவருக்கு பதிலளிக்காமல், தோள்களை குலுக்கியபடி கை கழுவ நகர்ந்து விட்டார் சித்தார்த்.

ஆனால் அவர் மனமோ, ‘இது தான் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார்னு சொல்றது போல. இருந்திருந்து இன்னிக்கு தான் அவளா வாயைத் தொறந்து ஏதோ பேசணும்னு சொன்னா. அதுக்குள்ள நந்தி வந்தாச்சு’ என புலம்பித் தள்ளியது. 

“சரி வாங்க, அப்போ ஆஃபிஸ்க்கே போயிடலாம்” என வசுந்தரா நடக்க,  அவரைப் குறுகுறுப்பாக பார்த்த லலிதா கண்களில் ‘என்ன நடக்கிறது’ என்பது போல் ஒரு சுவாரசியம்.

“அடுத்து என்ன சித்தார்த், நாளைக்கு கேபினட் கமிட்டி மீட்டிங்கு ப்ரெப் பண்ணப் போறோமா?” என்று கேட்க,

“அது அல்மோஸ்ட் டன் மேம். லலிதா உங்களுக்கு வாக் த்ரூ கொடுப்பாங்க. நான் நம்ம ஆயில் இம்ப்போர்ட்க்கு சேஃப் பேசேஜ் கொடுக்குறதுக்கான பேச்சு வார்த்தைக்கு டிராஃப்ட் ரெடி பண்ணப் போறேன். முடிச்சதும், ஐ’ல் ப்ரிங் இட் ஃபார் யுவர் ரிவ்யூ” என்றவர் மனதில் எழுந்த ஏமாற்றத்தை, முயன்று முகத்தில் காண்பிக்காமல் விருட்டென அவரது அறைக்குள் நுழைந்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.

வசுந்தராவின் அலுவலக அறையில், சித்தார்த் கூறிய திட்டங்களை விளக்குவதற்காக லலிதா தனது மடிக்கணினியைத் திறந்தபடி,

“என்னாச்சு மேம், இன்னும் ஒரு நாள் இருந்துட்டு வர்றது தானே பிளான்?” என்றார். 

“நான் நினைச்சத விட செக்யூரிட்டி இஷ்யூ ரொம்ப காம்ப்ளிக்கேட்டட்டா இருந்துச்சு லலிதா. அதோட இந்த வார் பிரச்சனையப்போ அங்க போய் இருக்குறது எல்லாம் செட்டாகலை. பட் குட் சேஞ்ச் ஆஃப் சீன், வீட்ல எல்லாரையும் பார்த்தது செம பூஸ்ட்” என்றவாறு, லலிதா தன் பக்கம் நகர்த்திய ஆவணத்தின் மேல் கண் பதித்தார்.

“நாளைக்கு கேபினட் கமிட்டி மீட்டிங்ல விக்ரம் தேசாய டாக்கில் பண்றது தான் மேம் கொஞ்சம் கஷ்டம். அவருக்கு நாங்க ப்ரீஃபிங் கொடுத்துருக்கோம். அவரோட இன்ஃப்லூயன்ஸ் இல்லாம பைனான்ஸ் மினிஸ்ட்ரி கரெக்ட்டா அஜென்டா ஃபாலோ பண்ணாங்கன்னா மேனேஜ் பண்ணிடலாம்” என்ற லலிதா,

“இந்த டாக்குமெண்ட்ல பேக் அப் இன்ஃபர்மேஷன், இஃப் ப்ரஸ்ட், லைன்ஸ் டு டேக் எல்லாமே இருக்கு. அதுவும் ஒரு வாட்டி பார்த்துடுங்க மேம், உங்களுக்கு எதுவும் கொஸ்டின்ஸ் இருந்தா இப்போ டிஸ்கஸ் பண்ணிடலாம்” என்றவாறு, இன்னொரு கோப்பையும் எடுத்துக் கொடுத்தார்.

சிறிது நேரம் அவற்றை எல்லாம் வாசித்து, மனதில் நிறுத்திக் கொண்டவர், தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த குறிப்புகளுடன் ஒப்பீடு செய்து பார்த்தார். 

“இதெல்லாம் ஓகே லலிதா. நான் சித்தார்த் கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு இருந்தேன். நம்ம நெய்பரிங் கன்ட்ரிஸ் எமர்ஜென்சி ஆயில் ரிக்வெஸ்ட் பண்ணிருக்காங்கல்ல. அது ஃபுல்லா கொடுக்க வேண்டாம் சொல்லுங்க. கேட்டதுல்ல பாதி இப்ப கொடுக்கலாம். நம்ம கையிருப்பு இன்னும் கொஞ்சம் ஏத்திட்டு இன்னொரு இன்ஸ்டால்மெண்ட் தர்றோம்ன்ற மாதிரி மெசேஞ் கொடுத்துடுங்க”

“ஓகே மேம், நோட்டட்” என்ற லலிதா, அடுத்த என்ன என்ற ஆணைக்குக் காத்திருப்பது போல் நின்றார்.

“கோவை கூட்டத்துக்கு உதயன் மணிவாசகம் வந்திருந்தார்” என்றார் வசுந்தரா சிறிது நேர அமைதிக்குப் பின். லலிதா கேள்வியாகப் பார்க்க,

“மிஷன் 4 பத்தி கேள்வி கேட்டா, மனுசன் ஒன்னும் உருப்படியா பதில் சொல்லல” என்றார் எரிச்சலாக. 

“நோ வொரீஸ் மேம், நான் அது டிராக் பண்ணிட்டு தான் இருக்கேன். வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்டது சித்தார்த் சார் பாக்குறார். மீதி நான் தான் எல்லா மினிஸ்டிரிஸ் கூட கோ ஆர்டினேட் பண்றேன்” என்று நிறுத்தியவர்,

“இஃப் யூ டோண்ட் மைண்ட், ஒரு வோர்ட் ஆஃப் காஷன்” என்றார் லலிதா.

மடிக்கணினி, கோப்புகள் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்த வசுந்தரா,

“ஆஃப் கோர்ஸ், சொல்லுங்க லலிதா” என்றவாறு தனது முழு கவனத்தையும் லலிதாவிடம் வைத்தார்.

“உங்க வே ஆஃப் ஆப்பரேஷன் இஸ் அ ஷாக் டு த சிஸ்டம் மேம்! டக்குன்னு எல்லாம் மாறிடாது. கொஞ்சம் இல்ல நிறையவே டைம் எடுக்கும். எறும்பு ஊரக் கல்லும் தேயும்னு சொல்லுவாங்கல்ல. அது மாதிரி ஸ்லோ ப்ராக்ரஸ் தான் மேம் கிடைக்கும். சொல்லப் போனா அதுவே பெரிய அச்சீவ்மென்ட் தான்”

“சோ?”

“நாம ரொம்ப பொறுமையா இருக்கணும் மேம். ஒன் ஸ்டெப் அட் அ டைம்”

“ம்ப்ச், எல்லாரும் அவங்க வேலைய செய்றதுக்கு தட்டு தாம்பாளம் வைச்சி தாங்கணுமா நான்?” என்றார் வசுந்தரா கோபமாக. அது வரை மெதுவாகத் தட்டிக் கொண்டிருந்த பேனா மேசையில் வந்து விழுந்தது.

“நான் அப்டி சொல்ல வரல மேம். நாம நேரடியா யாரையும் பகைச்சிக்கக் கூடாது, அது தான் இங்க எழுதப்படாத சட்டம். யாருக்கு சாவி எங்க இருக்குன்னு பார்த்து கரெக்ட் டைம்ல திருகி விட்றனும். அவ்ளோ தான். உங்க எனர்ஜியும் சேவ் ஆகும்”

“ரைட், அது என்னவோ கரெக்ட் தான். இவங்க பண்றதெல்லாம் இட் சக்ஸ் அவுட் மை எனர்ஜி! சில சமயம் ஏன்டா இந்த பாதைய தேர்ந்தெடுத்தோம்னு கூட இருக்கு” என்றார் வசுந்தரா தனது மனக்கிடையை லேசாக வெளிக்காட்டி.

அவரே பேசட்டும் என்பது போல் லலிதா அமைதி காக்க, வசுந்தராவோ வாயைத் திறக்கவில்லை.

“வொய் மேம்? யூ ஆர் டூயுங் அன் அமேசிங் ஜாப்! எவ்ளோ பேருக்கு நீங்க இன்ஸ்பிரேஷன் தெரியுமா” என்று லலிதா அவரைப் பேச ஊக்கினார்.

“உங்களுக்கு தெரியுமா லலிதா நான் எவ்ளோ பேஷனோட ஃபுல் டைம் பாலிட்டிக்ஸ் வந்தேன்னு?” என்ற வசுந்தரா, லலிதாவை ஆழ்ந்து பார்த்தார்.

“ஆஃப் கோர்ஸ் மேம். அதுனால தானே ஐ.ஏ.எஸ் டிரெயினிங் முடிச்சிட்டு போஸ்டிங் பாதிலயே ரிசைன் பண்ணீட்டீங்க” 

“ஹம்ம், அப்போ அரசியல்வாதிகள் என் கைய கட்டின ஒரு ஃபீல். சோ அதிகாரம் கையில இருக்க இடத்துக்கு வரணும்னு நினைச்சேன். பல வருசப் போராட்டத்துக்குப் பின்னாடி தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். எம்.பியா இருந்தப்போ அதுவும் எதிர்க்கட்சியா எதுவும் பண்ண முடியல” என பெருமூச்சு விட்டார்.

“ரெண்டுமே இல்யூசன் தான் மேம். சேட்லி இங்க ஒரு தனி மனுஷனால எதையும் மாத்த முடியாது. எல்லாமே சிஸ்டத்தில ஊறிப் போய் இருக்கு”

“எக்சாட்லி! நான் மலையடிவாரத்துல நிக்கிறப்போ மலையுச்சிக்குப் போறது மட்டும் தான் குறிக்கோளா இருந்துச்சு. ஆனா அங்க வந்தப்புறம் இட்ஸ் ஆல் எம்ப்ட்டி! இதுக்கா இந்த ஓட்டம்னு கொஞ்சம் சலிப்பா கூட இருக்கு” என்றவர் குரலில் லேசான விரக்தி எட்டிப் பார்க்க, லலிதாவிற்கு பயமாக இருந்தது. 

“ஐ ஆம் சாரி மேம், ஐ திங்க் ஐ ஹேவ் டச்ட் அ ராங் நெர்வ்” என்றார் சற்று தயக்கமாக.

“ஓ நோ! நீங்க சரியான விஷயம் தான் சொன்னீங்க. ஐ ஆம் ஜஸ்ட் லெட்டிங் அவுட் மை ஃபரஸ்ட்ரேஷன்!” என்று நிறுத்தியவர், சாளரத்தின் பக்கம் தன் பார்வையைப் பதித்து,

“அண்ட் யூ நோ வாட், இட்ஸ் சோ லோன்லி அட் திஸ் மவுண்டெய்ன் டாப்! அதுக்காக நான் ஒரு அழகான வாழ்க்கையை தொலைச்சிட்டேன்னு கூட தோனுது” என்றார் அமைதியாக.

“வெல், இட்ஸ் நெவர் டூ லேட் மேம். ஐ திங்க் யூ நீட் சம் ப்ரேக். ஐ’ல் கம் ஆஃப்டர் சம் டைம்” என்று விடை பெற, ஒரு தலையாட்டலுடன் அதை ஆமோதித்தார் வசுந்தரா. 

லலிதா வெளியேறியதும், சித்தார்த்தை அழைத்துப் பேசத் துடித்த மனதை அடக்கியவர், நேற்று வருணனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு எதுவும் பதில் வந்திருக்கிறதா என அலைபேசியை எடுத்துப் பார்த்தார். 

வசுந்தராவின் குறுஞ்செய்திக்கு கட்டை விரல் உயர்த்தி ‘ரியாக்ட்’ மட்டுமே செய்திருந்தார் வருணன். அதைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தவர், அலைபேசியை மீண்டும் அமைதி நிலைக்கு மாற்றி விட்டு, மேசையில் இருந்த வெப்பக் குடுவையில் இருந்து சூடான தேநீரை ஒரு கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டு சாளரத்தின் அருகே வந்து நின்றார். 

நேரம் நண்பகலை நெருங்கியிருக்க, நீலவானம் நிலவுக்கு இன்னும் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சோகத்தில் இருந்தது போலும். கண்கள் வானத்தை வெறித்தாலும் கருத்தில் எதுவும் பதியவில்லை. சுற்றுப்புற பிரக்ஞையின்றி நின்றவருக்கு தேநீர் மட்டும் அனிச்சை செயலாக தொண்டைக்குள் இறங்கியது!

*CDS – Chief of Defence Staff – ஒன்றிய அரசின் முதன்மை இராணுவ ஆலோசகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!