Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தாரமாய் வந்த தேவதையே

தாரமாய் வந்த தேவதையே 3 💜✨

 

சமையலறை சென்ற சத்யா அங்கு ஏற்கனவே இருந்த மகிமாவிடம் “எப்படி இப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்…. கொஞ்ச நேரம் முன்னாடி தான் அழுதுட்டு இருந்த நீ…. அண்ணா கோவமா போனாரு…. ஆனா இப்போ அதுக்கு ஆப்போசிட்டா இப்படி இருக்கீங்க…. எப்படி இது…. சத்தியமா தெரியல” என்று சிரித்து கொண்டே கேட்டாள்…..



Advertisement

Advertisement

“ஐயோ அண்ணி கண்ணு வைக்காதிங்க…. நாங்க ரெண்டு பேருமே அப்படி தான்…. இப்பயும் என்கூட சண்டை தான் போடுவாரு… ஆனாலும் பசிக்குமுல….. அது தான் சாப்பிட்டு சண்டையை கன்டினுயு(continue) பண்ணலாம்…. இப்போ வாங்க வாங்க பரோட்டா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு…. வீட்டுக்கும் வாங்கிட்டு வர விட மாட்டிங்குது அந்த கிழவி…. சீக்கிரம் செய்ங்க… நான் என்ன செய்யட்டும்… வெங்காயம் வெட்டடுமா…. இல்ல மட்டன் கழுவட்டுமா…. என்ன பண்ணட்டும்….” என்று கேள்விகள் அடுக்கி கொண்டே போனாள்….

Advertisement

Advertisement

“அம்மா தாயே நீ போய் உன் மாமா கூட சண்டையை கன்டினுயு(continue) பண்ணு…. நானே எல்லாம் பாத்துக்குறேன்….” என்று தள்ளாத குறையாக சமையலறையில் வெளியில் வெளியில் அனுப்பி வைத்தாள்…

அவளுக்கு தான் தெரியுமே அவள் மட்டும் இருந்தாலே ஒரு மணி நேரத்தில் எல்லாம் செய்து விடுவாள்…. ஆனால் மகிமாவுடன் சேர்ந்து சமைத்தால் அவளுக்கே சமையல் எல்லாம் மறந்து விடும்….

ஏன் என்றால் மகிமாவிற்கு சமையலில் ஒரு புள்ளி கூட தெரியாது… சத்யா இந்த ஊருக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது… இந்த ஆறு மாதத்தில் மகிமாவை பற்றி முழுதாக அறிந்த சத்யா தற்போது மகிமாவை வெளியில் தள்ளி இருந்தாள்….

அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்தும் தயார் செய்து கூடத்தில் எடுத்து வைத்தாள் சத்யா….

அந்த ஒரு மணி நேரத்தில் வெளியே சண்டைகோழிகள் இரண்டும் சமாதானம் ஆகி இருந்தனர்…. அபியும் எழுந்து இருக்க இருவரும் அவனுடன் விளையாடி கொண்டு இருந்தனர்….

இரவு உணவு முடித்து விட்டு “தங்கச்சிம்மா நாங்க அருவி வீட்டுக்கு போறோம்…. ரெண்டு நாள் ஆகும் வர…. நீ எதுவா இருந்தாலும் தீனா கிட்ட கேளு ம்மா” என்று கூறினான்…

அவளோ தீனா என்ற பெயரை கேட்டதும் முகத்தை சுழித்தவள் “அண்ணா அதுக்கு நான் அமைதியாவே இருப்பேன்… என்னை பத்தி யோசிக்காம நீங்க என்ஜாய் பண்ணிட்டு வாங்க…. என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தாள்…

இருவரும் சென்றவுடன் அபி மீண்டும் அழுக ஆரம்பித்து இருந்தான்… “ம்மா அப்பா வேணும்… அப்பா வேணும்” என்று சத்யாவிடம் அடம்பிடித்தான்……

“அபி இப்போ நீ தூங்கல என்கிட்ட அடிவாங்குவ…. எப்போ பாரு அப்பா அப்பானு… உனக்கு அப்பா எல்லாம் இல்ல… அம்மா நான் மட்டும் தான்…. நாளைக்கு நான் சீக்கிரம் ஹாஸ்பிடல் போகனும் ஒழுங்கா தூங்கு…” என்று கூறி அவனை தன்னுடன் அணைத்து கொண்டவள் தட்டி கொடுத்து தூங்க வைத்துவிட்டாள்….

ஆனால் அவளுக்கு தான் உறக்கம் வரவில்லை… அவள் நினைப்பு முழுவதும் அவளின் காதல் கணவன் மீது தான்…. அவன் மீது எப்போதும் அவளுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும்…. ஆனால் அதை விட கோவம் பன்மடங்கு உள்ளது அவன் மீது..

அவள் சிறிது நேரம் கழித்து அசந்து தூங்க அப்போது ஒரு கரம் அவளை பின் இருந்து அணைத்தது….. அவனின் பரிசம் உணர்ந்ததும் பட்டென்று கண் முழித்த சத்யா அந்த கரத்தை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு அவன் பக்கம் திரும்பி “ஒழுங்கா வீட்டை விட்டு வெளிய போயிடுங்க…. என்கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க…. இப்பயே ஊருல கொஞ்ச பேரு என்னை தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க…. ப்ளீஸ் ஒன்னு என்னை உங்க பொண்டாட்டினு எல்லார்கிட்டயும் சொல்லுங்க…. இல்ல என்னை பாக்க வராதீங்க…. என்னால முடியல தம்பி இப்போ எல்லாம் அதிகம் உங்களை தேட ஆரம்பிக்குறான்…. இல்லனா என்னையும் என் பையனையும் விட்ருங்க… நாங்க எங்கயோ போறோம்…. தினம் தினம் நீங்க திருட்டுத்தனமா வரது நான் எதோ தப்பானவ மாதிரி இருக்கு…” என்று அழுகை குரலில் கூறினாள்…

அவன் எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்க “ஏன்டா இப்படி இருக்க…. எனக்கு செத்து போயிடலாம்னு இருக்கு…. எதாவது பேசேன்…. வாயை திறக்கவே மாட்டியா…. எனக்கு அவமானமா இருக்குடா… நான் கேரளாவுலயே இருந்து இருப்பேன்…. இங்க கூட்டிட்டு வந்து நான் நடத்த கெட்டவனு பேரு வாங்குனது தான் மிச்சம்” என்று அவள் கூறும் போதே அவளின் இதழை விழுங்கி இருந்தான்….

அருவி வீடு….

அருவியூர் பெயருக்கு ஏற்ப அங்கு மூன்று அருவிகள் உள்ளது… ஆனால் இது சுற்றுலா தளம் அல்ல… சுற்றுலா பயணிகளை விட்டால் எங்கே இயற்கையை கெடுத்து விடுவார்களோ என்று அஞ்சியே இதை வெளியாட்களுக்கு அருவிகளுக்கு அனுமதி இல்லை…

அந்த அருவிக்கு அருகில் இருக்கும் வீட்டிற்கு தான் விஷ்ணு மகிமாவை அழைத்து வந்து இருந்தான்….

மகிமா எப்போதும் வாய் துடுக்கானவள் தான்… ஆனால் குழந்தையை பற்றி பேசினால் மட்டும் தனக்குள் ஒடுங்கிக்கொள்வாள்…. விஷ்ணு மகிமா இருவருக்கும் வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் தான்… ஒரே ஊர் என்பதால் ஒருவருக்கு ஒருவரை நன்றாக தெரியும்…. திருமணம் முடிவு செய்தபின் தான் இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்து இருந்தனர்….

திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகி இருந்தது…. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் காதல் குறையவே இல்லை… எப்போதும் எலியும் பூனையுமாய் தான் இருப்பர்… இருவருக்கும் அழகிய சண்டைகள் மட்டுமே இருக்கும்…

ஆனால் விஷ்ணுவின் அப்பத்தா குழந்தையை பற்றி பேசும் நேரத்தில் மட்டும் மகிமா அழுதால் அன்று அவனிடம் அவள் காலி…. அவள் கண்களில் கண்ணீரை கண்டுவிட்டால் போதும் அவனுக்கு சரியான கோவம் வந்துவிடும்… ஒன்று பேசியே கொல்வான்… இல்லை என்றால் பேசாமல் கொல்வான்…. இன்று என்ன நடக்க போகிறதோ என்ற பயத்தில் அவன் பின் மெதுவாக சென்றாள் மகிமா….

அவன் அவளிடம் எதுவும் கூறாமல் உறங்க சென்று இருக்க “என்ன எதுவும் சொல்லாம போறாரு” என்று யோசித்து கொண்டு இருந்தாள்…

அறைக்கு சென்றவன் தன் பின்னே வராத மகிமாவை கவனித்து மீண்டும் ஹாலிற்கு வந்து அவளை தூக்கி தோளில் போட்டு கொண்டு வந்தவன் கட்டிலில் பொத்தென்று போட்டான்…. அவன் போட்ட வேகத்தில் ஒரு அடி மேலே சென்று விட்டு கட்டிலில் விழுந்தாள்…..

அவள் அவனையே பார்த்து கொண்டு இருக்க அவன் எதுவும் பேசாமல் அவளை அணைத்து கொண்டு உறங்கிவிட்டான்…. அவளும் அவனின் நெஞ்சில் முத்தமிட்டவள் வாகாக அவன் நெஞ்சிக்குள்ள சாய்ந்து உறங்கிவிட்டாள்….

சத்யா வீடு…

நீண்ட நேரம் கழித்து இதழை விட்டவன் அணைத்து கொண்டு உறங்கிவிட்டான்… அவளோ அவனின் அருகாமையை இழக்கவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் அவதி பட்டுக்கொண்டு இருந்தாள்….

அவளுக்கு அவன் மட்டுமே உலகம்… ஆனால் அவனாலே அவள் ஊரில் ஒழுக்கமற்றவள் என்ற பெயரை எடுத்துள்ளாள்…. அவளுக்கு அவனின் பணம் சொத்து என எதுவும் தேவை இல்லை அவளுக்கு தேவையானது மரியாதையான ஒரு வாழ்வு… அவனின் மனைவி என்ற கௌவுரமான பெயர்…. அது மட்டும் தான் அவளுக்கு தேவை…

ஆனால் அவனோ அதை மட்டும் செய்ய மறுக்கிறான்… அதுவே அவளை உயிரோடு கொல்கிறது…. நீண்ட நேரம் உறங்காமல் இருந்தவள் சோர்விலேயே உறங்கி இருந்தாள்… காலை அவள் ஆறு மணிக்கு எழுந்து பார்க்கும் போது அவள் அருகில் அவன் இல்லை… வெறுமையான ஒரு சிரிப்பை சிரித்தவள் மருத்துவமனை செல்ல தயாராக ஆரம்பித்தாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!