தென்றலாய் என் காதல் – 36
தென்றல் – 36
“அக்கா அவரை ரொம்ப சந்தோசப்பட வேண்டான்னு சொல்லுங்க. நான் ஒன்னும் அவர் சொன்னதுக்காக இங்க தங்கல சுசிலா அம்மாக்கு இப்போ என் அன்பு தேவை அதனால தான் நான் இங்க இருக்கேன். தேவையில்லமா யாரும் கற்பனை பண்ணிக்க வேண்டாம்” என்று விக்ரமை கடந்து சென்றாள்.
அவள் வார்த்தைகள் சற்று இலக்குவாகவே இருந்தது. முகத்திலும் ஒரு சிறு குறும்pu புன்னகை இருந்தது.
Advertisement
அவன் அதை கவனிக்கவே செய்தான்.
சிந்து சுசிலாவை தன் சொந்த தாயைப் பேலே கவனித்துக்கொண்டாள்.
“ஆண்ட்டி…நான் நாளைக்கு வீடு காலிப் பண்றேன்” என்றாள் ரஞ்சி.
Advertisement
“ஏன் மா ரஞ்சிதா. என்ன ஆச்சு? நாங்க எதுவும் உன் கிட்ட தப்பா நடந்துகிட்டமோ இல்லை இங்க வீடு எதுவும் வசதியா இல்லையா? எதுவா இருந்தாலும் சொல்லு ரஞ்சி. நாங்க சரி செய்ய முடியும் என்றால் சரி செய்து தருகிறோம்.”
Advertisement
“உன்ன எங்களுக்கு இழக்க மனசில்லைமா. உன்ன எங்க பொண்ணா தானே பார்த்தோம். இப்படி திடீர்னு வந்து காலி பண்றேன்னு சொன்னா எங்களை பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாரு ரஞ்சிதா” என்றனர் ஆதவ்வின் தாய், தந்தை.
அச்சமயம் உள்ளே நுழைந்தான் ஆதவ்.
“நீ யோசிச்சு சொல்லு ரஞ்சி. அவசரபடாத” என்று கூற, நான் “வறேன் ஆண்ட்டி திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணனும்” என்று தலை நிமிர்ந்தும் பார்க்காமல் சென்றாள் ரஞ்சிதா.
Advertisement
“என்ன அம்மா! ரஞ்சிதாவுக்கு என்ன ஆச்சு” என்றான். “என்னனு தெரியலைடா கண்ணா, திடீருனு வந்து நாளைக்கு வீடு காலிப்பண்றேனு சொல்றா”, என்றார்.
“என்ன வீடு காலிப் பண்றாங்களா? ஏன்?.”
“ஏன்னு எனக்கு தெரியல தம்பி. நாங்களும் என்ன பிரச்சனைன்னு கேட்டோம் ஆனா அவ எந்தபதிலும் சொல்ல மாட்டேங்குறா. பாவம் வயசு பொண்ணு தனியா எங்க போவா. காலம் ரொம்ப கெட்டுக்கடக்கு. புரிஞ்சுக்காம பண்ணுது. ஏதோ நம்ம வீட்டுல இத்தனை வருஷமா இருந்துச்சு பாதுகாப்பா இருந்தோம். ஆனா நம்மளால கட்டாயப்படுத்த முடியாதுலப்பா. பாப்போம் என்ன முடிவு எடுக்குன்னு” என்றார் ஆதவின் அம்மா.
அவன் மனம் படாதப்பாடுபட்டது.அவளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணின்.
“அம்மா நான் வேணும்னா ரஞ்சி கிட்ட பேசி பார்க்கட்டுமா” என்றான் ஆதவ்.
வியப்போடு “அட ஆதவ் என்ன இது நீயா பேசுறது.
என்னால நம்பவே முடியல. இத்தனை வருசமா அந்த பொண்ணு இந்த வீட்டுல தான் இருக்கா. யாரு குடி இருக்காங்கனே தெரியாம இருந்த நீயா இப்போ அந்த பொண்ணுகிட்ட போய் பேசறேன் சொல்ற, அதிசயம் தான்” என்றார் அவர்.
“சும்மா இருமா நீ வேற ஏதாவது ஒன்னு சொல்லிகிட்டே இருப்ப. என் நிலைமை புரியாம” என்று எழுந்து சென்றான்.
“என்ன ஆச்சு இவனுக்கு. எப்போதும் போலே தானே நாம பேசுனோம். இவ்ளோ கோபப்படறான் என்னவா இருக்கும்” என்று ஆலோசித்தார்.
“ரஞ்சிதா…எங்க போற” என்றான் ஆதவ்.
“போறேன் ஆதவ். யாருக்கும் எந்த பிரச்னையும் கொடுக்க கூடாதுல. என் காதல் உங்களை கஷ்டப்படுத்திருச்சுனா அதான் நான் உங்களை விட்டு தூரமா போகலாம்னு டிசைட் பண்ணிட்டேன்.
அன்பு இல்லாம கூட கஷ்டப்படலாம் ஆதவ். ஆனா ஒருத்தர் காட்டுற அன்பால ஒரு போதும் ஒருத்தர் கஷ்டப்படக் கூடாது.நீங்க நிம்மதியா இருங்க ஆதவ்” என்று பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
“ரஞ்சி ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. என் நிலைமை என்னனு உங்களுக்கு நல்லாவே தெரியும். இருந்தும் நீங்க ஏன் ரஞ்சி இப்படி புரிஞ்சுக்காம நடந்துக்கறீங்க. ஒரு காதலின் வழியே இன்னும் மாறல அதுக்குள்ள இன்னொரு காதல் எப்படி ரஞ்சி” என்றான் ஆதவ்.
அவன் வார்த்தையில் அத்தனை வேதனை நிறைந்திருந்தது.
“சாரி ஆதவ். உங்களை நான் மேலும் மேலும் துன்பப்படுத்துக்கிறேன், நாளை ஒரு நாள் மட்டும் என்னை பொறுத்துக்கொள்ளுங்கள் அதுக்கு அப்பறம் என் தொல்லையே உங்களுக்கு இருக்காது” என்றாள்.
அவன் அதற்கு மேலும் ஒன்றும் பேச விரும்பவில்லை. அமைதியாய் வீட்டை விட்டு வெளியே சென்றான்.
சிந்து செல்லும் இடம் எல்லாம் அவளை பின் தொடர்ந்தான் விக்ரம்.
“சார் உங்களுக்கு என்ன ப்ரோப்லேம். ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனை மாதிரி என் பின்னால் சுத்துறீங்க? கீதா அக்கா, வீட்டுல வேலை செய்ற எல்லாரும் என்ன என்னனு நினைப்பாங்க” என்றாள்.
“என்ன நினைப்பாங்க, பாரு இந்த பையன் சிந்துவை எந்த அளவு லவ் பண்றானு,ஆனா இந்த பொண்ணு தான் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்குதுனு சொல்வாங்க” என்றான்.
“இப்ச்…இங்க பாருங்க.”
“ஏய் இப்போ பாக்குறது எல்லாம் தப்பு, அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்” என்றான் குறும்பாக.
அவளுக்கு கோபம் தான் வந்தது.”சார் உங்களுக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா. என் வாழ்க்கையில் என்ன நடந்துச்சுனு தெரியாம நீங்க உங்க மனசுல பெருசா ஆசையை வளர்த்துக்காதீங்க. உங்க ஆசை கண்டிப்பா நிறைவேறாது. ஏன்னா என்னை பற்றிய உண்மை தெரியவரும் போது நிச்சயம் உங்க கனவு கலையத்தான் போகிறது.
உங்கள் காதலை போலே” என்றாள் சிந்து.
“இங்க பாரு சிந்து உன்னுடைய பாஸ்ட் என்னவா வேணாலும் இருந்துட்டு போகட்டும், ஆனா என் ஃபியூச்சர் நீ தான் சிந்து. சும்மா ஏதாவது காரணத்தை சொல்றதை நிறுத்து.
என் மனசை புரிஞ்சுக்கோ. என் காதலை ஏற்றுக்கொள். என் அன்பை ஒரு முறை பரிசித்துப்பார்” என்றான்.
அவன் பேசும் வசனங்கள் யாவும் அவள் மனதை கரைக்கவே செய்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
அமைதியாய் சென்றவள் சற்று தூரம் சென்று விக்ரமைத் திரும்பி பார்த்தாள். அந்த பார்வையில் என்றும் இல்லாத ஒரு கனிவு தெரிந்தது.
விக்ரம் மனதில் அத்துணை மகிழ்ச்சி.
ரஞ்சி தன் பெட்டி படுக்கையோடு வந்தாள். “நான் இவ்ளோ சொல்லியும் கேட்காமல் போலாமுன்னு முடிவு பண்ணிட்டியா” என்றார் ஆதவின் அம்மா.
விரக்தி புன்னகையை புரிந்து, “என்னமா பண்றது காலம் முழுக்க நான் இங்கேயே இருந்துவிட முடியுமா?
ஒருநாள் இல்லை ஒருநாள் நான் இந்த வீட்டை விட்டு போக வேண்டியவள் தானே ஆண்ட்டி. யாருக்கும் யாரும் நிரந்தரம் இல்லை. எல்லாரும் வாழ்க்கையில் சில காலங்கள் வந்து, வாழ்ந்து சில மறக்க முடியாத நினைவுகளைத் தந்து போயிருவாங்க. அந்த நினைவுகளோடு வாழ்வது தான் வாழ்க்கை ஆண்ட்டி. இனி நீங்களும் எனக்கு நினைவுகளின் புத்தகத்தில் ஒரு பக்கம் தான். என்ன மறந்துற மாட்டிங்கல்ல” என்றாள் கண்ணில் நீர் தத்தும்ப.
“இல்லை…. மா…இல்லை உன்ன எப்படி நாங்க மறக்க முடியும்” என்றார் ஆதவின் அன்னை.
“அன்கிள்…. இனி காலைல தினமும் பிபிசி நியூஸ் சொல்ல ஆள் இருக்காது” என்றாள்.
“என்ன ரஞ்சி நீ!
கொஞ்சம் யோசிச்சு பாருமா?”என்றார் ஆதவின் தந்தை.
என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி, அன்கிள் என்று காலில் விழ, நல்லா இருமா என்று இருவரும் வாழ்த்தினர்.
“டேய்…. நீயாவது சொல்லுடா” என்றார் அம்மா.
“மா…. போற யாரையும் நம்மளால தடுக்க முடியாது. போகட்டும் விடுங்க” என்று தன் அறைக்குள்ளே சென்று கதவை தாளிட்டுக்கொண்டான் ஆதவ்.
“அம்மாடி நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காதா அவனுக்கு பேச தெரியாதுமா” என்றார் அம்மா.
“பரவாயில்லை ஆண்ட்டி அது கூட நல்லது தான்” என்று விரக்தியாய் புன்னகைத்து தன் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
இருவரும் போகும் அவளை கண்கள் கலங்கி பார்த்து நின்றனர்.
சில நாட்கள் இப்படியே கடந்தது.
சுசிலா அம்மாவும் உடல் நிலை தேறி வந்தார்.ரஞ்சிதா இப்போது ஒரு மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறாள்.
விக்ரமின் அன்பும், அக்கறையும் சிந்துவின் மனதில் அவனுக்கென்ற ஒரு இடத்தை பிடித்தது.
சிந்து விக்ரமை நேசிக்க துவங்கினாள். ஆனால் அதை அவள் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை.
காலை விடிந்ததும் குட் மார்னிங் என்பதை போல் ஐ லவ் யூ என்பான்.ஓய்…. கல்யாணம் பண்ணிக்கலாமா என்று சீண்டுவான். அவன் குறும்பு தனத்தை எல்லாம் அவன் அறியாமல் ரசித்து சிரிப்பாள்.
ரஞ்சியை அடிக்கடி வெளியே சென்று சந்தித்து வருவாள்.
அன்றும் அதே போல் இருவரும் சந்தித்தனர்.“என்ன சிந்து நீ என்ன முடிவு பண்ணியிருக்க? என்றாள் ரஞ்சி.
நீ எதைப்பற்றி பேசுற ரஞ்சி. எனக்கு புரியல” என்றாள்.
“சும்மா நடிக்காத சிந்து. நான் விக்ரம் சார்ரோட காதலைப்பற்றி தான் கேக்குறேனு உனக்கும் தெரியும்.”
“இப்ச்…. அதுவா” என்று அலட்சியப்படுத்தினாள் சிந்து.
“என்ன சிந்து நீ, அவர் உன்னை உயிருக்கு உயிராய் விரும்புகிறார் என்று தெரிந்தும் ஏன் இந்த அலட்சியம் உனக்கு.
இப்போ நான் சொல்றது உனக்கு புரியாது. ஆனா கண்டிப்பா நீ ஒருநாள் இத நினச்சு வருத்தப்படுவ” என்றாள்.
“இப்ச்…. என்ன ரஞ்சி, விக்ரம் உனக்கு கால் பண்ணி இருந்தாரா? அவர் என் கிட்ட பேச சொல்லி இருப்பாரு அதனால தான் நீ இவ்ளோ சப்போர்ட் பண்ற” என்றாள் சிந்து.
“நீ என்ன வேணும்னாலும் நினச்சிக்கோடி. ஆனா அவர் ரொம்ப நல்ல மனுஷன். அவரை நீ மிஸ் பண்ணிராத. வரம் அடிக்கடி நம் வாழ்வில் கிடைப்பதில்லை.
அப்படி கிடைத்த வரத்தை நீ தவற விடாதே” என்றாள்.
அதற்கு அவள் காதை குடைந்தவாறு அவள் பேச்சுக்களை எல்லாம் அலட்சியம் செய்தாள்.
ரஞ்சிதாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது.
“ஏய்…. சிந்து” என்று அவளை பிடித்து உளுகினாள். “போதும் உன் விளையாட்டு. விக்ரம் உன்னை நேசிக்கறாரு. அவரை தவிர உன்னை வேற யாரு உன்னை கல்யாணம் பண்ணிக்க முன் வருவா?”
“நீ ஒன்னும் வெர்ஜின் கிடையாது புரியுதா”என்றாள் ஆவேசமாக.
சிந்துவின் கண்கள் கலங்கின. காதுகள் அடைத்தன. ஒரு நிமிடம் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டாள்.
“சிந்து…. உ…ஐ அம் சாரி. நான் வேணும்னு சொல்லல உனக்கு புரியவைக்கணும் நினச்சு தான் ஏதோ பேச போய் அது எப்படி எப்படியோ…. “என்று வார்த்தையை இழுக்க, “போதும் ரஞ்சி,நீ பேசுன வரைக்கும் போதும்.
சிந்து ப்ளீஸ்…. நான் வேணும்னு பேசல என்ன மன்னிச்சிரு” என்றாள்.
“ஐயோ…. ரஞ்சிதா நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரி தான். நான் தான் கெட்டுப்போனவள் ஆச்சே. அதுவும் ஒருத்தர் இல்லை, 4 பேர் கிட்ட அப்பறம் நான் எப்படி வெர்ஜினா இருப்பேன்.
நீ சொன்னதுல ஒரு தப்பும் இல்லை. என்ன எல்லாம் யாரு ஏத்துப்பா, ஏதோ விக்கரம் உண்மை தெரியாம என்ன காதலிக்கிறார் தெரிந்தால் என்னை நேசிப்பரா?
நான் அசிங்கம், நான் அவமானம், நான் புனிதமற்றவள்”என்று கதறி அழுதாள் சிந்து.
“ஏய்…சிந்து நான் அந்த அர்த்தத்தில் சொல்லலடி. ஏன்டி இப்படி எல்லாம் பேசற? நீ கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குற உன் வாழ்க்கை இப்படியே போய்டுமோங்கற ஆதங்கத்துல தான் நான்….நான்…ஏதோ பேச போய் அது தப்பா போயிருச்சு சிந்து. நான் உன்னை வேண்டும் என்றே நோகடிப்பேனாடி நீ என் பிரண்ட்டி” என்றாள் ரஞ்சி.
கை எடுத்துக்கும்பிட்டு “ப்ளீஸ்…ரஞ்சி, ப்ளீஸ். என்னை இப்படியே விட்டுருங்க. நீங்க யாரும் எனக்கு வேண்டாம். என் வாழ்க்கை ஏற்கனவே நாசமா போயிருச்சு, என்னால யாரு வாழ்க்கையும் கெடுக்க முடியாது. விக்ரமாச்சும் ஒரு நல்ல வெர்ஜின் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழட்டும்” என்றாள் சிந்து.
“ஐயோ…. சிந்து திரும்ப திரும்ப அதே வார்த்தையை சொல்லாதடி”என்று அவள் காலில் விழுந்தாள் ரஞ்சி.
“ப்ளீஸ் ரஞ்சி நான் இந்த வாழ்க்கையை வேண்டா வெறுப்பாக தான் வாழ்ந்து வருகிறேன். ஏதோ என்னால் என் குடும்பம் வாழ்ந்துவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தான். தற்கொலை செய்துக்கொண்டால் எப்படியோ வேஸ்ட்டா போற உயிர் தானே ரஞ்சி”என்றதும் மேலும் கதறி அழுதாள் ரஞ்சிதா.
“மேலும் மேலும் என்னை கஷ்டப்படுத்தாத ரஞ்சி எனக்கு கொஞ்சம் தனிமை வேணும் என்ன விடு நான் போகணும்” என்று அவளை மீறிச் சென்றாள் சிந்து.
தென்றல் மீண்டும் வீசும்…..

