Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 37

தென்றல் – 37

 

“ஐயோ…. நான் என்ன காரியம் பண்ணிட்டேன். அவ…அவ…என்ன என்ன நினச்சு இருப்பா. ஆறுதலா இருக்க வேண்டிய நானே அவளைக் காயப்படுத்தி விட்டேனே.



Advertisement

அவள் மனம் எவ்ளோ காயப்பட்டு இருக்கும். அவள் இதை எப்படி தாங்குவா?

என்ன மன்னிப்பாளா?

சிந்து நான் எப்படி உனக்கு புரிய வைப்பேன் எனக்கு தெரியலையே” என்று தவித்தாள் ரஞ்சி.

Advertisement

சிந்து ரஞ்சிதா கூறிய வார்த்தையையே எண்ணி எண்ணி மனம் வருந்தினாள்.

Advertisement

“ஏய்…சிந்து மை பொண்டாட்டி எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம். நீ ஓகேனு சொன்னா அடுத்த செகண்ட் உன் கழுத்துல நான் தாலிக் கட்ட தயாரா இருக்கேன்.

நான் ரெடி நீ ரெடியா” என்று அவளை வம்புக்கு இழுக்கும் நோக்கில் கிண்டலாக பேசினான்.

அவளும் வாயை மூடிக்கொண்டு அமைதிக்காத்தாள்.

Advertisement

“ப்ளீஸ்…விக்ரம் என்ன கொஞ்சம் தனியா விடுங்க. எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது” என்றாள் சிந்து.

“ஐயோ என் செல்லத்துக்கு தலை வலியா நான் வேணும்னா ஹெட் மசாஜ் பண்ணிவிடவா” என்று தலையில் கைவைக்க, “சீ….”என்று அவன் கையை தட்டிவிட்டாள்.

“ஏய்…உங்களுக்கு எல்லாம் அறிவே வராதா!

எத்தனை வாட்டி சொல்றேன் என்னை நெருங்காதீங்கனு, என்ன மனுஷன் நீங்க இப்படி தான் விருப்பம் இல்லைனு சொன்னாலும் டார்ச்சர் பண்ணுவீங்களா?

மனுஷ ஜென்மம் தானே நீங்க?

உங்களுக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா.

என்ன ஆம்பள புத்தியை காட்டுறிங்களா?” என்று ஆவேசத்துடன் கத்தினாள் சிந்து.

அவன் ஒன்றும் புரியாமல், “சிந்து இப்போ…இப்போ…நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்.

எப்போதும் போல தானே உன் கிட்ட விளையாடினேன் அதுக்கு ஏன் இப்படி கோபப்படற?”என்றான் உடைந்த குரலில்.

“ஹலோ…சார் உங்களுக்கு வேணும்னா இதெல்லாம் விளையாட்டா இருக்கலாம், ஆனா எனக்கு அப்படி இல்லை. தயவு செஞ்சி அடுத்தவங்க நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க.

என்ன சிந்து எப்போ பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு இருக்க.

அப்படி என்ன தான் உன் வாழ்க்கையில் நடந்தது.

சும்மா என்ன அவொய்ட் பண்றதுக்கு காரணம் தேடாதே.”

அவள் கையை பிடித்து அவளிடம் நெருங்கி “உன் காரணங்கள் அனைத்தையும் நீயே வச்சுக்கோ, அது எனக்கு தேவையில்ல.

ஐ லவ் யூ புரியுதாடி” என்றான் பற்களை கடித்துக்கொண்டு.

அவனையும் அறியாமல் அவள் கையை அவன் இறுக்கிக்கொண்டு இருந்தான்.

“ஆ…. என்ன விடுங்க விக்ரம்” என்று அவனை தன் பலம் கொண்டு பிடித்து தள்ளினாள்.

“ஏய்…உனக்கு என் காதல் சொன்னா புரியாதா” என்று அவள் இதழை சிறைப் பிடித்து அவள் மூச்சு காற்றை தனதாக்கிக் கொண்டான்.

மிகுந்த கோபத்துடன் அவனிடம் இருந்து தன்னை பிரித்துக்கொண்டவள் மூச்சு வாங்க ஆவேசமாக அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

“என்ன பொண்ணுனா உங்களுக்கு எல்லாம் அவ்ளோ இளக்காரமா போச்சுல.”

“எப்படி ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவ கிட்ட அத்துமீற முடியுது.”

“அது…சிந்து உன் மேல இருக்குற உரிமையில் தான்….”என்று வார்த்தையை இழுக்க,

“என்ன சார் உரிமை என்ன உரிமை, உங்க கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறேன்னே அந்த உரிமையா?”

“இல்லை என் தங்கச்சி படிப்பு செலவை ஏத்துக்கிட்டீங்களே அந்த உரிமையா?

எந்த உரிமையில் சார் இப்படி என்கிட்ட ச்ச….”என்று புழுவென அவனை பார்த்தாள்.

எல்லாம் என் விதி என்று கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் சிந்து.

“சிந்து ப்ளீஸ். டோன்ட் மிஸ்டேக் மீ.நான் உன்னை என் மனைவியாக அடைய விரும்புகிறேன். அந்த உரிமையில் தான் உன்னிடம் கொஞ்சம் நெருக்கமாக நடந்துக்கறேன். ஐ லவ் யூ சிந்து ஐ லவ் யூ லோட்ஸ்” என்றான்.

காதை இரு கைகளாலும் அடைத்துக்கொண்டு கண்களை இருக்கி மூடி “ஐயோ….. ஐ அம் நாட் வெர்ஜின் சார்…. நான் ஒரு கன்னி இல்லை.

நான் ஆல்ரெடி கெட்டு போனவ.

நாலு பேரால கதற கதற க*பழிக்கப்பட்டவ”என்று கத்தினாள்.

அவன் கண்கள் விரிய அதிர்ச்சியில் உறைந்தப்படி சிலையென நின்று இருந்தான்.

“என்ன சார் சாக்கிங்கா இருக்கா? இப்போ புரியுதா நான் ஏன் ஆண்களை வெறுக்கிறேன் என்று.

இப்போ சொல்லுவிங்களா லவ் யூ. இந்த உண்மை தெரிஞ்சும் என் கழுத்துல தாலிக் கட்ட உங்களுக்கு தைரியம் இருக்கா?

இல்லை உங்க மனசு தான் இதுக்கு சம்மதிக்குமா?

சொல்லுங்க சார் சொல்லுங்க.

இதை மறச்சு உங்களை கல்யாணம் பண்ணி உங்க கூட நான் ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ விரும்பல.

அதான் உங்களை தவிற்கிறேன் இந்த காரணம் போதுமா” என்றாள் சிந்து.”இது தெரியாம

சும்மா எப்போ பார்த்தாலும் காதல் கத்தரிக்கானு இரிட்டேட் பண்ணிக்கிட்டு” என்றாள்.

அவன் முகம் வாடிய மலர் போல் சோர்ந்தது.

தலையை தொங்கபோட்டு கொண்டு அறையை விட்டு வெளியேறினான் விக்ரம்.

“இனியா…. ஏன் அழற? யாராவது உன்னை அடிச்சாங்களா” என்றார் சுசிலா. “யாரும் அடிக்கல அம்மா,எனக்கு கண்ணுல தூசி விழுந்துருச்சு நீங்க வாங்க குளிக்க நேரம் அச்சுல” என்று அன்பாய் அழைத்து சென்றாள் சிந்து.

ஏனோ அவள் மனம் விக்ரமை நினைத்து பரிதவித்தது.

“ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டோமோ?

ஆனாலும் நாம இந்த அளவுக்கு பேசி இருக்க கூடாது” என்று அவள் சிந்தனை முழுவதும் விக்ரமை சுற்றியே இருந்தது.

“சிந்து விக்ரம் தம்பியை எங்கையாவது பார்த்தியா” என்றார் கீதா.

“இல்லை கீதா அக்கா.ஏன் என்றாள் சிந்து”.

“இல்லை மா சிந்து காலைல இருந்து தம்பி சாப்பிடல மணி ஒன்னு ஆச்சு இன்னும் வீட்டுக்கு வரல, அதான் கேட்டேன்” என்றார் சிந்து.

“என்ன காலைல இருந்து சாப்பிடவில்லையா?

சரி அக்கா நீங்க போங்க நான் ஃபோன் பண்ணி கேக்குறேன்” என்றாள் சிந்து.

“இல்லை மா ஃபோன் அவுட் ஆப் ஆர்டர்” என்றார் கீதா.

அதிர்ச்சியில் ஆலோசித்தபடி “எங்க போய் இருப்பாரு”என்றாள்.

நேரம் கடக்க, சிந்துவின் எண்ணிற்கு ஆதவ் அழைத்தான்.

ஹலோ சொல்லுங்க ஆதவ் என்றாள் சிந்து.

“சிந்து…. சார்…சார்” என்று பதறினான்.

“என்ன ஆச்சு ஆதவ், சாருக்கு என்ன ஆச்சு” என்று பதறினாள்.

“நீ சீக்கிரம் கடற்கரைக்குவா” என்று அழைப்பை துண்டித்தான் ஆதவ்.

“கீதா அக்கா அம்மாவைப் பார்த்துக்கோங்க நான் இப்போ வந்தறேன்” என்று சென்றாள்.

“என்ன ஆச்சு சிந்துவிற்கு” என்று போகும் அவளையே பார்த்து நின்றார் கீதா.

“ஆட்டோ இங்க தான் வண்டியை நிறுத்துங்க” என்று பணத்தை கொடுத்து விட்டு கடற்கரையை நோக்கி நடந்தாள்.

“என்ன இங்க ஒரே இருட்டு, அக்கம் பக்கம்கூட யாரும் இல்லை. ஆதவ் ஏன் இங்க என்ன வர சொன்னாரு.

விக்ரம் இங்க தான் இருக்காரா?

விக்ரம்….. விக்ரம்….” என்று கத்தினாள்.

அந்த ஒலி எதிரொலித்து அடங்கியது.

ஆனால் அங்கு ஒரு மனித சுவடும் இல்லை.

அவள் நெஞ்சில் பயம் தொற்றிக்கொண்டது.

அவள் மனதில் அந்த நாள் நினைவுக்கு வர உடல் தானாக நடுக்கம் எடுத்தது.

இதயதுடிப்பு அதிகரித்தது.

அந்த இரவின் இருட்டில் பிறை நிலா வானில் ஜொலிக்க கடல் அது நீரை வெள்ளி குழம்பென ஜொலித்து காட்டியது.

தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு பதை பதைத்தாள்.

சுற்றும் முற்றும் பயத்தோடு பார்த்து, “ஆஞ்சிநேயா…. ஜெய் ஆஞ்சிநேயா” என்று ஜெபித்தாள்.

நாய் தூரத்தில் ஊலை இட்டது.

கடல் அலையின் ஓசை மிகுந்த ஒலியுடன் கேட்டது.

அந்த தனிமை, இருட்டு யாரு அங்கு இருந்தாலும் பயத்தை தான் கொடுத்து இருக்கும்.

காலடி ஓசைக் கேட்க திரும்பினாள் அங்கு யாரும் இல்லை.

கரை ஒதுங்கிய படகு மட்டுமே நிழலை போல் அவ்விருட்டில் தெரிந்தது.ஆனாலும் காலடி ஓசை நிற்கவில்லை.

பயத்தில் அங்கிருந்து வேகமாக நடந்தாள்.பின் நடை ஓட்டம்மானது.

பின்னே திரும்பி திரும்பி சென்றவள் ஒரு வழிய மார்பு முட்டி நின்றாள்.

ஆ…. என்றவள் பயந்து நடுங்க வண்ண விலகுகள் ஒளிர்விக்கப்பட்டது.

வானில் பல வண்ண வான வேடிக்கை பட்டாசுகள் வெட்டிக்கப்பட்டு அவ்விடமே வெளிச்சத்தாள் ஜொலித்தது.

வியப்போடு எதிரே நிற்பவனின் முகத்தை பார்க்க, அவன் விக்கரம் தான்.

அனைவரும்…”ஹே…’ என்று கையை தட்டி ஆராவாரம் செய்தனர்.

அங்கு ரஞ்சி, ஆதவ், கீதா, சுசிலா அம்மா, துளசி, அம்சவேணி, மனோ என அனைவரும் இருந்தனர். சிந்து ஒன்றும் புரியாதவலாய் அவனை ஏறிட, “என்ன அப்படி பாக்குற?

எல்லாம் உனக்காக தான்.

என்னால முடிஞ்ச ஒரு சின்ன சர்ப்ரைஸ்”என்று கண்ணடித்தான்.

அவன் கண்களை பார்த்து லயித்து நின்றவளை அருகில் அணைத்து “ஐ லவ் யூ.

இப்போ உனக்கு என்ன மேரேஜ் பண்ணிக்க சம்மதம் தானே”என்றான்.

“அது வந்து…. விக்ரம் என் பாஸ்ட்” என்றாள்.

அவளை பேச விடாமல் இதழின் மேல் ஒரு விரலை வைத்து அவள் பேசுவதை தடுத்தான்.

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். சொல்றதா இருந்தா ஐ லவ் யூனு சொல்லு போதும். நீ வேற எதையும் சொல்ல கூடாது.

அண்ட்…இனி உன் ஃலைப்ல நடந்த எல்லா கசப்பான விஷயத்தையும் நீ மறக்கணும்.உன் நினைவுகளில் மொத்தமாக நான் மட்டும் தான் நிறைந்து இருக்கனும்.வாழ்க்கை முழுக்க சந்தோசம், நிம்மதி மட்டும் தான் உன் வாழ்க்கையில் இருக்கனும்”. சிந்துவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“ஏய்…. நீ அழவேக் கூடாது. நான் உயிரோட இருக்குற வரைக்கும்” என்று அவள் கண்களை துடைத்து விட்டான்.

“இனியும் என்ன உனக்கு யோசனை, என் மேல இன்னும் உனக்கு நம்பிக்கை வரவில்லையா”என்றான் விக்ரம்.

அவள் மௌனம் காத்தாள்.

“அப்போ என் காதலை, உயிரை கொடுத்து தான் நிரூபிக்கணும்”என்று கடலை நோக்கி செல்ல அவன் கையை பிடித்து இழுத்து அவன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.

அனைவருக்கும் முகம் முழுக்க சந்தோசம்.

ஆனால் ஆதவ் மட்டும் யாரும் காணும் வண்ணம் கண்கள் கலங்க அதை மறைத்தான்.

அவனை ரஞ்சி பார்க்க தவறவில்லை.

அப்போ…. உனக்கு கல்யாணத்துக்கு சம்மதமா என்றான் ஆவளோடு.

ஹ்ம்ம்…. என்று தலையசைக்க அவளை மீண்டும் இறுக்கி அணைத்தான் விக்ரம்.

தென்றல் மீண்டும் வீசும்…..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!