Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே

பூவே5



Advertisement

        அந்த ஒன்பதாம் வகுப்பறைக்குள், ஆங்கில புத்தகத்துடன் உள்ளே நுழைந்தார் பாரிவேந்தன்..

Advertisement

மாணவ, மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கோரஸாய் “குட் மார்னீங் சார்” என்றதும்..

Advertisement

“குட் மார்னீங் ஸ்டென்ட்” என்றார் சிரிப்புடன். “சிட்  டவுன்” என்று வகுப்பறையை ஒருமுறை சுற்றி பார்த்தவர் பார்வை கரும்பலகையில் நின்றது..

Advertisement

அடுத்த தன் டேபிளிலிருந்த அட்டனென்ஸை ஓப்பன் பண்ணி மாணவர்கள் பெயர்களை ஒவ்வொரு பெயராக சொல்ல, மாணவர்களும் அடுத்தடுத்து தங்கள் பெயரை சொல்லி இருக்கையில் அமர்ந்தனர்..

அடுத்து பெண்கள் பக்கம் வரவும்.. அதே மாறி ஒவ்வொருவராக தங்கள் பெயரை சொல்லிக்கொண்டிருந்த  நேரத்தில் மூச்சு வாங்க ஓடிவந்து  நின்றனர் இரு பிரகஸ்பதிகள்..

“சார்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்க,  “உங்களுக்கு மட்டும் பள்ளிக்கொடம் ஒன்பது பத்துக்கு  ஆரம்பிக்குறதா கவர்மென்ட் ரூல்ஸ் போட்டிருக்கா” என்றார் பல்லைகடித்துக்கொண்டு,

“அது வரும் போது! நாய் எங்களை பாத்து தொறத்த  ஆரம்பிச்சிடிச்சு  சார்.. அதுங்கிட்டயிருந்து தப்பிச்சு ஓடி வரதுக்குள்ள லேட்டாகிடிச்சு சார்” என்றாள் முனிஸ் என்கிற முனிஸ்வரி..

அவள் வாய் கூசாமல் சொன்ன பொய்யை  கேட்டு , அருகிலிருந்த  வேல்விழி தான். வாயை பிளந்தாள்..

“ஓ! அப்படியா முனிஸ்வரி நாளைக்கு வரும்போது! அந்த நாயை கையோடு புடிச்சு கூட்டிட்டு வந்தாதான்.. உன்னை கிளாஸ் ரூமுக்குள்ளே விடுவேன்” என்றார்..

“ஆத்தி ” என்றவள்  ,”சார்  எனக்கு. நாயை கண்டா ஆகுது, உங்க பேச்சை கேட்டு நான் நாயை புடிச்சா அது! என்னை கடிச்சி வச்சிடும்  சார்” என்றாள் பாவமாக,

“பொய் வாயை திறந்தாலே பொய் தான் வருது. உள்ள வாங்க , இனிமேட்டு லேட்டா வந்து பாருங்க. உங்களை அப்படியே! வீட்டுக்கு அனுப்பி விடுறேன்னு” சொன்னதும்..

பாவமாக தலையாட்டி உள்ளே வந்தவர்கள்.

“ஏண்டி, இந்த வார்த்தையை தான்.  நம்மளும்  லேட்டா வர எல்லா நாளும் சொல்லுறாரே  தவிர, அனுப்ப மாட்டுறாரேடி” என்று வேலு காதில் முணுமுணுத்தாள் முனிஸ்

“எருமை , இப்பதான் உள்ள வந்தோம்.. நீ ! வாய் பேசி வெளியே அனுப்பிடாதடி” என்றாள் பதட்டமாக வேலு,

‘இதுக்கு தான், இந்த படிக்குற, புள்ளைங்ககூடவே கூட்டு சேர கூடாதுன்றது.. பண்ணுற சேட்டையெல்லாம் நம்மளோட சேர்ந்து பண்ணுவாளுங்க.. இந்த வாத்தியாரை கண்டுட்டா மட்டும் நல்ல புள்ளைங்க வேசம்  போடுறது ‘ முணங்கிக்கொண்டே’! இருக்கையில் அமர்ந்தாள்…

“ஓகே! இன்னைக்கான பாடத்துக்கு போவோமா”! என்று புத்தகத்தை கையிலெடுத்தார்..

” சார் இன்னைக்கு டெஸ்ட் வைக்குறதா , சொன்னீங்க” என்று ஒரு மாணவன் எழுந்து சொன்னதும்..

‘அட நாசமா போறவனே! உன்னை இப்ப இதை யாராவது சொல்ல சொன்னாங்களாடா’ என்ற ரீதியில் வகுப்பில் பாதி பேர் அவனை முறைத்து பார்த்தனர்…

“பரவாயில்லையே! ஞாபகம் இருக்கு.. அப்ப முதல்ல டெஸ்ட் முடிச்சிடலாம்னு” சொல்லி ஆசிரியரும் கேள்வியை ‘போர்டில் எழுத ஆரம்பித்தார்..

அவளை சுற்றி இருந்தவர்களோ! ‘போர்டில் ஆசிரியர் எழுதிய கேள்வியை தங்கள், லாங்  சைஸ்  நோட்டில் நடுப்பக்கத்திலிருந்து. இரண்டு பேப்பரை கிழித்து கேள்வியை எழுதிக்கொண்டிருந்தனர்…

படித்தவர்களுக்கு  ‘கேள்வி ஈஸியாவும், படிக்காதவர்களுக்கு அது அணு ஆயுதம் போல காட்சி தந்தது’

தன்னை சுற்றி பாக்க ‘என்ன இவளுங்க  , கேள்வி எழுதுறதை பாத்தா! நல்லா படிச்சிவங்களாட்டும் இருக்கு ‘ தனக்குதானே  யோசனை செய்தவள் ..

“அடியே அரிசி, உண்மையிலே படிச்சிட்டு  வந்தியா டி நீ?” எனக் அருகிலிருந்தவள் காதை கடித்தாள் முனிஸ்

” நா, எங்குட்டுடி படிச்சேன்.. இதோ! பாருன்னு டெஸ்ட் எழுத எடுத்த நோட்டில். கேள்விக்கான பதிலை குட்டி குட்டி எழுத்தில்  எழுதி வைத்திருந்தாள்” அரிசி என்கிற கலையரசி

“என்னடி கிறுக்கி வச்சியிருக்கு, இதை பார்த்து எப்படிடி  எழுதுவ நீ” என்றாள்.

“அதை நான்  பார்த்துப்பேன்.. ரொம்ப நல்லவ மாறி என்னை மாட்டிவிடாதடி” என்று அவள் கேள்வி எழுதும் வேலையை தொடர்ந்தாள்..

“அடியே ! வேலு”

“என்னடி” என்றாள் பார்வையை திருப்பாமல்..

“நா, டெஸ்ட்க்கு படிக்கவே இல்லடி” என்றாள் பாவமாக,

“ஏய்! என்ன சொல்லுற எருமை, அத்தனை தடவை சொன்னாரேடி சாரு! புடிச்சிட்டு வரச்சொல்லி ” என்றாள், அதிர்ச்சி விலகாமல்..

“போடி, நேத்து வீட்டுக்கு போனதும்.. அப்பா போண்டா  போட்டு வச்சியிருந்தாரு, அதை எடுத்துட்டு போய் பக்கத்து ஊர்ல வித்துட்டு.. வீடு வரவே இராத்திரி ஏழாகிடிச்சு.. அப்பறம் சாப்பிட்டு தூங்கிட்டேன்டி” என்றாள் முனிஸ்

அதற்குள்ளே “என்ன சத்தம்” என்று திரும்பி பார்த்தார் சார்..

பிள்ளைகள் அமைதியாக எழுதிக்கொண்டிருந்ததை பார்த்து.. “கேள்வி எழுதிட்டிங்கனா , ஆலமரத்துக்கிட்ட போய்  உட்காருங்க.‌ நீங்க படிச்சதை எழுதனும்.. பார்த்து எழுதுனீங்க பனீஸ்மென்ட் என்னென்னு தெரியுமில்லை” என்றார் பிள்ளைகளை பார்த்து..

ஒவ்வொருவராக , பின்பற்றி வரிசையாக, இடைவெளி விட்டு அமர்ந்தனர்..

வேலு முன்னே அமரவும். அவளை பின் பற்றி  பக்கத்து வரிசையில் அமர்ந்தாள் முனிஸ்..

ஒவ்வொரு வரிசையாக ஆங்கில ஆசிரியர் நடைபயில, இங்கு மாணவர்கள் ஒருவரை பார்த்து ஒருவர் தப்பும்  தவறுமாக எழுதி முடித்தனர்..

“எல்லாரும் எழுதி முடிச்சிட்டிங்களா” என்றார்.

“முடிச்சிட்டோம் சார்” என்று கோரஸாக சொல்லவும்.

கிளாஸ் இன்சார்ஜ் அழைத்து அனைத்து பேப்பரையும் வாங்கி வரச்சொன்னார்..

வேலு , முனிஸ் இருவரும் கடைசியாக பேப்பரை கொடுத்தனர்..

அடுத்தடுத்து வகுப்புகளுக்கான ஆசிரியரும் வந்த வண்ணம் இருந்தனர்..

***

      ‌   “அடியே! அங்க பாருங்கடி  கூத்த” களையெடுத்துக்கொண்டிருந்த பெண்மணி சொல்லவும்..

ஒரு சிலரும் தலையை நிமிர்த்தி பார்த்தனர்..

“என்னக்கா, பெரியாத்தா இந்தபக்கம் வருது. இது குலதெய்வ கொவிலுக்கு போற வழியாச்சே!” என்றார் அருகிலிருந்த  இன்னொரு பெண்மணி..

“ஆமாடி, எனக்கு தெரிஞ்சு இந்த வேலு கழுதை பொறந்ததிலிருந்தே! பெரியாத்தா கோயிலுக்கு போனதில்லை, இன்னைக்கு என்ன சங்கதின்னு தெரியலையே!” என்றார் முதலில் பேசிய பெண்மணி

மெல்ல அடியெடுத்து நடந்து வந்த மயிலம்மா பார்வை இன்னும் இரண்டு வயல் வரப்பை  கடந்தால் போதும்னு.. நடந்தவர் கால்கள் வரப்பில் வழுக்கி விட “அம்மா” என்ற குரலுடன் வரப்பிலே அமர்ந்து விட்டார்..

சத்தம் கேட்டு பதறிய ராமையாவும் ‘அன்னையை தாங்கியபடி ,  காலை தடவி பார்த்துக்கொண்டிருந்தார்’..

மயிலம்மாவின் சத்தம் கேட்டு வயலில் வேலைசெய்துகொண்டிருந்த  பெண்மணிகளும் ஓடிவந்தனர்..

“ஏம்  பெரியாத்தா , பாத்து வர மாட்டியா” இவர்களை முதலில் பார்த்த பெண்மணி கேட்க,

“அடியே தேசூர் மருமகளே! எமக்கு  என்ன வேண்டுதலாடி. வரப்புல விழுந்து வரானும்னு” என்று சொல்லியவர் முகம் வலியில்  சுருங்கியது..

அவர் காலை பிடித்து பாத்தவர்.. “மாமா சதை பெரண்டிருக்கு, என் அக்காளை எண்ணெய் வச்சு உருவ சொல்லுங்க.. வேற எதுவும் பயந்துக்க வேணாம்” என்றார்.

தலையாட்டியவர், ‘ தன் அன்னையை கைத்தாங்கலாக பிடிக்க,  தனியாளாய் அவரை பிடிக்கமுடியவில்லை’,

அதை பார்த்த பெண்மணியோ! “இருங்க மாமோய்! நீங்க ஒரு கை புடிங்க , நா! இந்தபக்கம் புடிச்சிக்கிறேன்னு” சொன்னவர் ஆட்களிடம்  திரும்பி ,” நீங்க வேலையை பாருங்கடி நா! இப்ப வந்துடுறேன்னு” சொல்லி மயிலம்மா கை பிடித்தபடி நகர்ந்தார்..

***

அம்மாவும் , மகளும்  வீடு வந்து சேர்ந்தவர்கள் கண்டது என்னவோ! கால்கள் வீங்கி அமர்ந்திருந்த மயிலம்மாவை  தான்..

“அத்தை, காலுக்கு என்னாச்சு காலையில நல்லாதானே! இருந்தீங்க” என்ற மருமகளை , முறைத்தவர் .

“எனக்கு வேண்டுதல்டி, காலை வீங்க  வைக்கணும்னு” என்றவர் வலியில் பல்லை கடித்தவர்.

” உன் வாய்க்கு கால் வீங்கி  இருக்கக்கூடாது. வாய் தான் வீங்கி  இருக்கணும்..” என்றார் சரசு

“ஆமாடி,  எனக்கு வாய் வீங்குனா,  உனக்கு கொண்டாட்டமோ! ஒருத்தி கால் வீங்கி உட்கார்ந்து இருக்காளே! காலையில இருந்து சாப்பிட்டாளா, கொண்டாளா  கேக்க நாதியில்லை.. காலையிலே சீவி சிங்கிரிச்சிட்டடு போன ஆத்தாளும் , மகளும் வந்துட்டாளுங்க  பேசுறதுக்கு” என்றார் வெடுக்கென்று..

“அத்தை, நீங்க இன்னும் சாப்பிடலையா!  இதோ போய் எடுத்துட்டு வரேன்” உள்ளே போக போன, மருமகளை தடுத்து நிறுத்தினார்..

” அதெல்லாம் , எம்புள்ளை நேரத்துக்கு சாப்பிட கொடுத்துட்டு தான் வெளியே போனான்.. நீங்க போன சேதி என்னென்னு சொல்லுங்க” என்றார்.

‘இந்த கெழவிக்கு கால்ல அடிபட்டும் கூட , வாய் அடங்கமாட்டுதே! பாவம் எங்கம்மா பேரன், பேத்தி பாத்தும்  கூட  இந்த மாமியாரை சமாளிக்குறாங்க.. நல்லவேளை நம்ம மாமியார் கலியாணத்துக்கு  முன்னாடியே! சாமிகிட்ட போயிடிச்சு’ என்று நினைத்தபடி இருந்த சரசுவுக்கு தெரியாது,

கோவமிருக்கும் இடத்தில் தான்  குணம் இருக்கும்’ என்று

“என்னாத்துக்குடி, முகத்தை தூக்கி வச்சகயிருக்கவ.. போன காரியம் பழம் ஆகாலையா” என்று இழுத்தார்..

“ஆமாத்தை , தம்பிக்கு இப்போதைக்கு கலியாண யோகம் இல்லைன்னு , ஜோசியர் சொல்லிட்டாரு” என்றதும்..

“நீ, பேத்திக்கு தானடி! ஜாதகம் பாக்க போன, இப்ப என்ன பேரனுக்கு கலியாண யோகம் இல்லைன்னு சொல்லுற” என்று நெற்றி சுருக்கினார்..

‘எங்கம்மாவுக்கு அறிவேயில்லை , இப்படியா உளறி வைக்கும்’னு வாய்க்குள்  முணுமுணுத்தார்..

“அது பேத்திக்கும் ,

தம்பிக்கும்  ஜாதகம் பொறுந்தி வந்தா, கலியாணம்  பேசலாம்னு ஒரு ஆசை அத்தை. அதான் பொருத்தம் பாத்துட்டு வூட்டுல கலந்து பேசலாம்னு நெனைச்சேன்” என்றார்..

மருமகள் சொன்னதை  அமைதியாக  கேட்டவருக்கு. தன் மனதின் கலக்கம் புரிந்து போனது. ‘ இருந்தும் பதினாலு வருஷம் கழிச்சு இன்னைக்கு என்னால குலதெய்வத்தை கான முடியாததுக்கு. என்ன  காரணம்னு இவர் யோசனை செய்யவும்..

“அத்தை” என்று அவரின் யோசனையை கலைத்தார் மருமகள்..

“என்னடி”

“அது , காவ்யாவுக்கு கலியாண யோகம் வந்திடிச்சுன்னு ஜோசியர் சொல்லறாரு அத்தை” என்றார்.

” மாப்பிள்ளை, சொந்தத்துல அமையுமா, அசல்லையா”! என்றார்..

“சொந்தத்துல தான் அமையும்னு சொன்னாரு  அத்தை” என்ற மருமகளை பாத்தவர் பேத்தியை திரும்பி பாத்தவர்.

“உன் நாத்தானாளுங்ககிட்ட , பேச சொல்லுடி உம்புருஷனை நேரம் , காலம் கூடி வரும்போதே!  கலயாணத்தை  முடிச்சிடலாம்.. கொள்ளுபேத்திக்கும்  வயசு பதினேழு முடியபோகுது தானே!” என்றதும்

“சரி அப்பத்தா” என்றார் சரசு..

“மருமகளே! எனக்கு ஒன்னுக்கு போகணும் ரொம்ப நேரமா எழுந்துக்க முடியாம உட்கார்ந்திருக்கேன்னு” சொல்ல,

பதறியவர் “என்னத்தை நீங்க வந்தப்பவே! சொல்லுறதுக்கு என்னென்னு” சொல்லி அவர் கைகளை தாங்கி பிடித்தார்..

“ம்மா , நா வூட்டுக்கு போறேன்.. காவ்யா தனியா இருப்பா” என்று அன்னையின் பதிலை கூட எதிர்பாக்காமல் நகர்ந்த பேத்தியை கண்டு , ஏளன சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது மயிலம்மா உதட்டில்..

“விவஸ்தை கெட்டவ” என்று மகளை வாய்க்குள்ளே திட்டினார்..

சரசு வாசலை தாண்ட  போக, அம்மாவை தள்ளி விட்டு மூச்சு வாங்க ஓடி வந்தாள் காவ்யா.

“பாட்டி , காலுக்கு என்னாச்சு” என்று பதட்டமாக கேட்டுக்கொண்டே அவர் கால்களில் பார்வையை மேயவிட்டாள்..

“எனக்கு ஒன்னுமில்லைடியாத்தா,‌ வரப்புல நடக்கும் போது! கால் சதை பெரண்டுடிச்சு” எனக் பேத்தியிடம் கரிசனமாக சொல்லவும்..

“நீ , எதுக்குடி இப்படி தலைவிரி கோலமா ஓடிவந்திருக்க” என்றார் சரசு..

“ம்மா, இப்பதான் குளிச்சிட்டு வந்து தலைவார போனேன்.. அதுக்குள்ள பூங்காவனம்  பெரியம்மா தான்.. பாட்டி வரப்புல விழுந்து கால் வீங்கி போச்சின்னு சொன்னாங்க பதட்டத்துல ஓடி வந்துட்டேன்” என்றாள்

“அடியே! வூட்டை பூட்டிட்டு வந்தியா, இல்லையாடி நீ”!

” அது இல்லம்மா அப்படியே! ஓடி வரும்போது.. அப்பா வந்தாரு  அவருகிட்ட  சொல்லிட்டு தான் வந்தேன்”  என்றாள் உள்ளே போன குரலில்…

“மண்டு  மண்டுனு” அவள் தலையிலே கொட்ட  கையை தூக்கிக்கொண்டு போக போனவளை , மயிலம்மாவின் குரல் தடுத்து நிறுத்தியது..

“ஏட்டி, வயசுபுள்ளை  மேல கைய வைக்க போற! என்ன திமிறாடி உனக்கு.. ஒரு வயசானவ ஒன்னுக்கு போகனும்னு சொல்லிட்டிருக்கேன்.. எனக்கென்னன்னு  நின்னுட்டு வளந்ந புள்ளை மேல கை வைக்க”  பேத்தியை பாத்து காட்டமாக  கேட்க ,

“நீங்க வாங்க பாட்டி , நா உங்களை கூட்டிட்டு போறேன்னு” இவள் ஒரு பக்கம் கை புடிக்க , மற்றோரு பக்கம் காளியம்மா பிடித்துக்கொண்டு ஒதுக்குபுறமாக நடந்தனர்..

போகும் போது ” இவளை என்னென்னுடி பெத்துபோட்ட,  கொஞ்சம் கூட அசறாளா பாரு!” என்று சரசுவை பற்றி குற்றம் சொல்லவும் மறக்கவில்லை..

இங்கு பனியனும், கைலியும் மடடும் அணிந்திருந்த வெற்றி உடம்பெல்லாம்  சேற்றோடு வந்து நின்றவன்..

“நீ! எப்பக்கா  வந்த, அப்பத்தா எங்க கால்ல  அடிபட்டிருக்குன்னு சொன்னாங்க” என்று வீட்டை பார்வையாலே அலசியபடி கேட்க,

“அதுக்கு என்ன குத்துகல்லாட்டம் தான் இருக்கு.. இப்ப வந்திடும் அம்மா வெளிக்கு கூட்டி போயிருக்கு” முகத்தை தூக்கி வைத்தபடி சொன்னாள்..

“நீ வளர்ந்தாலும். திருந்த மாட்டியா , வயசானவங்களுக்கு அடிபட்டிருக்குன்னு சின்ன கரிசனம் கூட இருக்காதா உனக்கு” என்று பல்லைகடித்தான்..

“எல்லாரும் என்னையே! திட்டுங்கடா, இப்ப என்ன இழுத்துக்கிட்டா கிடக்கு கெழவி.. விழுந்து வாரீனாலும் வாய் மட்டும் அடங்கமாட்டுது.. போடா” என்று திண்ணையில் அமர்ந்துக்கொண்டாள்..

இங்கு இருவரும் கை தாங்கலாக  பிடித்தபடி வந்த அப்பத்தாவை பார்த்தவன் ” காலையிலே! எங்க போய் விழுந்து வாரீன கெழவி” என்று திண்ணையில் அமர்ந்தவர் காலை பார்த்தவன்..

“ம்மா ,ரொம்ப வீக்கமா  இருக்கே ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரலாமா” என்றான்  வருத்தமாக.

“அதெல்லாம் ஒன்னுமல்லைய்யா, எண்ணெய் வச்சு உருவி புளி பத்து போட்டா! சரியாகப்போகுது” என்று பேரனுக்கு சமாதனமாக சொல்ல,

“எது, புளி பத்து போட்டா சரியாப்போகுமா, அப்பத்தா காலை பாரு. யானைகால் மாறி வீங்கி இருக்கு.. நீ என்னென்னா , கை வைத்தியம் சொல்லிட்டிருக்க.. ம்மோவ் என்ன பாத்துட்டிருக்க சொல்லு உம்மாமியாருக்கு.” என்றான்..

“அவங்க தான். சொல்லுறாங்களேப்பா இன்னைக்கு பொழுது பத்து போட்டு பாக்கலாம்.. நாளைக்கு வீக்கம்  குறையலன்னா ஆஸ்பத்திரி கூட்டி போவோம்” என்றார் காளியம்மா..

“எய்யா  என்னைய்யா!   சேறும் , சகதியுமா  ஓடி வந்திருக்க” என்று பேரனை கண்டு கேட்க,

“நாத்தாங்காலுக்கு  சேடை ஓட்டிட்டு இருந்தேன் அப்பத்தா, பக்கத்து காட்டுக்காரு நீ! விழுந்துட்டேன்னு சொன்னதும்.. மாறன் கிட்ட விட்டுட்டு ஓடி வந்துட்டேன்.. சரி நீ காலை பாத்துக்க  நான் காட்டுக்கு போறேன்னு” சொல்லிக்கொண்டு எழுந்தான்…

“எய்யா, நேரமாச்சு சாப்புட்ட  போப்பா”

“இல்லைம்மா, இன்னும் கொஞ்சம் தான் இருக்கு.. அதை முடிச்சிட்டு வந்தே சாப்புடுறேன்.. வெதை நெல்லு எடுக்கணும்.. அப்பத்தா ,உம்பேத்தி  வந்தா வீட்டுல இருக்க சொல்லு விளையாட போயிடபோறா, நான் வரேன்னு” எல்லாருக்கும் பொதுவாக சொல்லிக்கொண்டு வண்டியை எடுத்தான்..

” ஏன்! அந்த வெதை நெல்ல எம்பொண்ணுங்க  எடுத்து கொடுத்தா, ஆகாதுன்னு சொல்லுதா” கடுப்பாக சரசு கேட்டதும்…

“இவளை” என்று பல்லைகடித்தவர்..‌”உனக்கு புத்தின்னு , ஒன்னு இருக்கா இல்லை அந்த பிரம்மா களிமண்ணை வச்சு படைச்சிட்டாறாடி, வயசு புள்ளைங்களை  எந்தகாலத்துல  தானிய குதிர்ல  இறைக்கி விட்டிருக்கோம் நம்ம.. உம்பொண்ணுங்க வயசுக்கு வரவரைக்கும்  அவளுங்க  தானே! எடுத்து கொடுத்தாளுங்க” என்றார் மயிலம்மா..

“அத்தை விடுங்க ,இவளுக்குள் எவ்ளோ சொன்னாளும் புத்தி வராது.. நீங்க கொஞ்சநேரம் படுங்க” என்று மாமியார் படுக்க வசதி பண்ணி கொடுத்தவர்.. மகளிடம் திரும்பி “எழுந்து உள்ள போடி, உறியில சாப்பாடு இருக்கும் எடுத்து சாப்புட்டு  போடி” என்றார்..

“எனக்கு ஒன்னும்  வேணாம்.. நா ! என் வூட்டுல போயே சாப்புட்டுக்கிறேன்.. எழுந்து வாடி போகலாம்” என்று மகளை  அழைக்க..

“ம்மா, நா! கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்.. நீ போ” என்றாள்..

“யாரும் என் பேச்சை கேட்கிறது இல்லை” என்று வாய்க்குள்ளே முணங்கிக்கொண்டு நடந்தாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!