Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 40

தென்றல் – 40

 

“சிந்து ப்ளீஸ் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதா நான் சொல்றதை கேளு நான் கெட்டவனாகவே இருந்துவிட்டு போகிறேன் ஆனால் அன்று என்ன நடந்தது என்று முழுசா கேளு சிந்து”என்று அவளை துரத்தி ஓடினான் விக்ரம்.



Advertisement

அவள் அழுத்துக்கொண்டே மனகோலத்தில் ஓட அங்கு இருந்த சிலர் முனுமுனுத்தனர்.

“ஏய் அங்க பாருங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்ன பிரச்சனை ஏன் சிந்து அழுத்தபடி ஓடுகிறாள்”.

“அதான் எனக்கும் தெரியல வா சென்று பாப்போம்” என்று அனைவரும் அவர்களை தொடர்ந்தனர்.

Advertisement

தன் அன்னை அம்சவேணியின் கையை பிடித்துக்கொண்டு “அம்மா வாங்க போலாம் இந்த கல்யாணம் நடக்காது” என்றாள் சிந்து.

Advertisement

“என்ன சிந்து என்ன ஆச்சு, இவ்ளோ நேரம் எங்கே சென்று இருந்தாய்.

போ போய் மணமேடையில் உக்காரு முகூர்த்தம் தவறிடப்போகுது”என்றார் அம்சவேணி.

“அம்மா நான் சொல்றது உனக்கு புரியலையா இந்த கல்யாணம் நடக்காது. உடனே இங்க இருந்து போகணும் என்று கையை பிடித்து இழுக்க உதறியவர், என்ன சிந்து என்ன விளையாட்டு இது, கல்யாணங்கறது ஆயிரம் காலத்து பயிர். உன் இஷ்டத்துக்கு எல்லாம் எங்களால ஆட முடியாது. சொந்தம் பந்தம் எல்லாம் ஒன்னுக் கூடி இருக்குற நேரத்துல இப்படி நடந்துக்கற. இந்த கல்யாணம் நின்னா என்ன விளைவுனு உனக்கு தெரியுமா. சும்மா சின்ன குழந்தை போலே நடந்துக்காம பொறுப்பா இரு.

Advertisement

உன்னை பார்த்து தான் துளசி வளருகிறாள்” என்றார்.

அதற்குள் அங்கு வந்தான் விக்ரம். “அத்த நான்…செஞ்சது தப்பு தான் நான் எந்த விதத்திலேயும் அதை நியாப்படுத்த விரும்பவில்லை. ஆனா அதை எல்லாம் உங்களுக்கு நான் பிறகு சொல்கிறேன். இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்” என்று கை எடுத்துக் கும்பிட்டான் விக்ரம்.

அம்சவேணிக்கு ஒன்றும் புரியவில்லை. இருவர்க்குள்ளும் என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை.

“அம்மா இது என் வாழ்க்கை. வாழ வேண்டியது நான். எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லை.நீங்க வந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி நான் இங்கே இருந்து செல்கிறேன்” என்று ஒரு அடி வைக்க கன்னத்தில் ஓங்கி அறைந்தார் அம்சவேணி.

“அத்தே…வேண்டாம்” என்று துடித்து போனான் விக்ரம்.

“போடி போய் மனமேடையில் உக்காரு” என்றார்.

“ஏய்…ரஞ்சி இங்க என்ன பண்ணிட்டு இருக்க அங்க கல்யாணம் நின்னுருச்சி நீ என்னடானா ஹாயா இங்க உற்காந்து இருக்க” என்றாள் சக தோழி.

“என்ன கல்யாணம் நின்னுருச்சா ஏன்?

யாருக்கு தெரியும் சிந்து தான் இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லைனு சொல்லி அடம் பிடிக்கிறா. ஆனா என்ன காரணம் தான் தெரியல”என்றாள்.

அவசரமாய் அவளை தள்ளி விட்டு மண்டபத்திற்குள் நுழைந்தாள் ரஞ்சிதா.

“அம்மா நீ, அடி கொல்லு நான் வாங்கிக்கறேன், ஏத்துக்கறேன் ஆனா இந்த ஆளா மட்டும் கட்டிக்க சொல்லாதமா” என்று கதறினாள்.

சுசிலா அம்மா சிந்துவின் அருகில் வந்து தன் முந்தானை சேலையை கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.

“அழாத இனியா. உன்ன யாரு அடிச்சா விக்ரம் அடிச்சானா என்று அப்பாவியாய்” கேட்டார்.

“ஏய்…அங்க பாரு இது தான் நல்ல சான்ஸ்.குறியை கரெக்ட்டா ஏய்ம் பண்ணு” என்று ஏவினான்.

“ஹ்ம்ம்.. ஓகே” என்றவன் துப்பாக்கியை சுசிலா அம்மாவிக்கு நேராக திரும்பினான்.

“நான் சொல்லும் போது ட்ரீகேர் பண்ணு சரியா” என்று கூட்டத்தில் நின்று சுசிலா அம்மாவை தாக்க காத்துக்கொண்டு இருந்தனர்.

“சிந்து என்ன ஆச்சு. ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கற” என்று ரஞ்சி கேட்க,

அவளால் சங்கடத்தை அடக்க முடியவில்லை.

“ரஞ்சி நான்…நான்…ரொம்ப ஏமாந்துட்டேன்.எல்லாரும் என்ன ஏமாத்துறாங்க. எனக்குன்னு இந்த உலகத்துல யாரும்மில்லை ரஞ்சி” என்று அழுது கொண்டு ஓடி அவளை கட்டி அவள் தோளில் முகம் புதைத்து அழுதாள்.

“சிந்து உனக்கு என்ன ஆச்சு. நான்…நான் இருக்கேன் சிந்து. நீ அழாத. விக்ரம் சார் ரொம்ப நல்வர் சிந்து. அவரை நீ திருமணம் செய்துகொண்டாள் உன் வாழ்க்கை ரொம்ப வசந்தமாகும் உன் பிரண்ட் நான் சொல்றேன் விக்ரமை கல்யாணம் பண்ணிக்கோடி”என்றாள் ரஞ்சி.

“ஐயோ ரஞ்சி…. உனக்கு கூட என் வலி புரியல வேண்டாம் யாரும் எனக்கு வேண்டாம் நான் போறேன் நான் போறேன்”என்று செல்ல, ஏதேர்ச்சியாய் கூட்டத்தில் சுசிலா அம்மாவை குறிவைத்த அந்த நபர்களைக் கண்டு விட்டாள்.

“டேய்…இப்போ சுடு” என்றதும் அவன் துப்பாக்கியை அழுத்தினான்.

குண்டு பாய்ந்தது சுசிலாவை நோக்கி.

“அத்தே” என்று ஓடிவந்தவள் அவரை அவ்விடத்தை விட்டு அகற்றி துப்பாக்கி குண்டை தான் ஏற்றுக்கொண்டாள்.

குண்டு நேராக அவள் மார்பு கூட்டை துளைத்தது.

கும்பல் கலைந்தது.

ஆ.. வென்று கத்திக்கொண்டு மக்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

கையில் ஆயுத்தம் எந்தியப்படி பல ரௌடிகள் அவர்களை சுற்றி வலைத்தனர்.

அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் சில வினாடிகள் அனைவரும் பிரமித்து நின்றனர்.

சிந்து குண்டடி பட்டதும் அப்படியே கீழே பச்சை வாழை மரத்தைப் போல் தரையில் சரிந்தாள்.

சுசிலா அம்மாவின் முகத்தில் சிந்துவின் இரத்தம் தெறிக்க அதிர்ந்தார்.

“இனியா…. “என்று கதியப்படி அவளை தூக்கி மடியில் கிடத்தி அழுதார்.

“ஏய்…சிந்து” என்று அவளை நோக்கி விக்ரம் ஓடி வர, ஒருவன் விக்ரமின் வயிற்றில் ஓங்கி கட்டையால் அடித்தான்.

அவன் வாயில் இருந்து இரத்தம் கக்கினான்.ஏய் என்று கையை ஓங்க மீண்டும் அடித்தனர். அவனை தரையில் மடியிட செய்தனர்.

அங்கே மிகுந்த வேகத்தோடு வந்த காரிலிருந்து இறங்கினான் ராபர்ட்.

உள்ளே நுழைந்தவன் என்ன விக்ரம் “நான் யாருனு தெரியுதா” என்றான்.

அவன் கண்கள் ஒளி இழந்து மங்கி காட்சிகள் யாவும் தெளிவற்று இருந்தன.

ஆனாலும் தன்னிலைக்கு வந்து தலையை அசைத்து மீண்டும் உன்னித்து கவனிக்க மாமா என்றான் விக்ரம்.

“யாரு யாருக்கு டா மாமா. ஒரு ஓடு காலியோட பையன் நீ நான் உனக்கு மாமாவா ஹா….ஹா…”என்று சிரித்துக்கொண்டே அவன் நெஞ்சில் ஓங்கி மிதிதான்.

அங்கு இருக்கும் அனைவரையும் துப்பாக்கி காட்டி விரட்டினான்.

சிந்து உனக்கு என்ன ஆச்சு எழுந்துருடி என்று ரஞ்சி அழுது கரைந்தாள். அம்சவேணி, துளசியும் ஓடி சென்று சிந்துவை காப்பாற்ற முயன்றனர்.

“இனியா…. இனியா….” என்று சுசிலா அம்மா அழ, அவள் இரத்தம் அவர் கைகளில் படிந்தது. அதை கண்டவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது.

இனியா என்றவரே அப்டியே மயங்கி விழுந்தார் சுசிலா.

விக்ரமின் கண்கள் சிந்துவை பார்த்து மீண்டது.

அவள் அசைவற்றுக்கிடந்தாள். இதயக்கூடு ஏறி இறங்கவில்லை. கண்களிலில் சிறு துடிப்புக்கூட இல்லை. அவ்வளவு தான். தன் கண் முன்னே தன் உயிருக்கு உயிரான காதலை இழந்துவிட்டான்.அதன் விரக்தியில் ஆ…. வென்று வான் நோக்கி கத்தி எழுந்தவன் அருகில் இருந்தவனை தூக்கி தரையில் தலை கீழாக உடைத்தான்.

ஒரு பக்கம் தன் அன்னை, மறுபுறம் தன் காதல் எப்படி இதை சகித்துக்கொல்வான். “ஏய்…என்ன டா பெரிய ஆக்ஷன் ஹீரோவா நீ, திரும்பி எல்லாம் அடிக்குற. இன்னையோட உன் குடும்பமே க்ளோஸ்” என்றவன் டேய் அவனை அடிச்சு தொங்க விடுங்கடா என்று கூற பத்து பதினைந்து ஆட்கள் கூடி அவனை தாக்க வர ஆதவ் நடுவே சேர்ந்து கொண்டு அவர்களை தாக்கினான்.

இத்தனை நேரம் அவன் இங்கு இல்லை.

இருவரும் ஒன்றிணைந்து அனைவரையும் தாக்கினர்.

“விக்ரம் சார் நான் இவனுங்களை பார்த்துக்கொள்கிறேன் நீங்க சிந்துவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க” என்றான்.

ஹ்ம்ம்..சரி ஆதவ் என்றவன் சிந்துவை நோக்கி நகர அவனை பின்னால் இருந்து தாக்கினான் ரபார்ட்.

“டேய்…உங்க அம்மா செஞ்ச துரோகத்திற்கு உங்களுக்கான தண்டனையை நீங்க அனுபவிச்சு தான் ஆகணும்” என்று மேலும் அவனை அடிக்க அவன் கையை பிடித்து முறுக்கி அவனை சாகும் படி அடித்தான்.

அவன் அடியில் சுருண்டு விழ, “பொழச்சு போ…நீ எல்லாம் ஒரு மனுஷன் துஉஉஉஉஉஉஉஉ” என்று சிந்துவை அள்ளி தூக்கினான்.

அதற்குள் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. அனைவரும் மருத்துவமனை விரைந்தனர்.

ஒவ்வொரு நொடியும் பல யுகங்களாய் தோன்றியது விக்ரம் உடைந்து போனான்.

ஆதவ், துளசி, அம்சவேணி, கீதா, என அனைவரும் மிகுந்த கவலையோடு சிகிச்சை அறைக்கு முன்பாக நின்று இருந்தனர்.

ரஞ்சி அழுது கொண்டு இருக்க, ஆதவ் அவளை தேற்றினான்.

“கவலை படாத ரஞ்சி நிச்சயம் சிந்து திரும்பி வருவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான்.

அவள் அவன் மார்போடு சாய்ந்து “எனக்கு பயமா இருக்கு ஆதவ்” என்று அழ, அவளை ஆதரவாய் வருடினான் ஆதவ்.

விக்ரம் தலையில் இருந்து இரத்தம் வழிந்துக்கொண்டு இருந்தது.

அவனுக்கு செவிலியர் வந்து கட்டுக்கள் கட்டினார்.

சிந்துவிடிற்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டு இருந்தது.

சுசிலா அம்மா கண் விழித்தார்.

“சார், உங்க அம்மா கண் விழிச்சுட்டாங்க. நீங்க போய் பார்க்கலாம்” என்று செவிலியர் கூறி சென்றார்.

அவன் மெல்ல அறைக்குள் சென்றான்.

“அம்மா…. என்று அழைக்க, விக்ரம்…”என்றார் சுசிலா.

“நம்ம…நம்ம…இனியாவை அந்த படுபாவி கொன்னுட்டான்.

என் கண்ணு முன்னாலையே கார் ஏற்றி கொன்னுட்டான் விக்ரம்” என்று கதறி அழுதார்.

“அம்மா…. அம்மா…உங்களுக்கு பழைய நினைவு திரும்பிருச்சா” என்று அதிசயிதான்.

“என்ன சொல்ற விக்ரம் எனக்கு என்ன ஆச்சு” என்றார் சுசிலா.

டாக்டர் என்று கத்த, அங்கு வந்தார் மருத்துவர்.

“டாக்டர்…அம்மா…அம்மா…”என்றான் .“ஆமாம் விக்ரம் சுசிலா அம்மாவிற்கு நினைவு திரும்பி விட்டது. தன் மகள் இறப்பு தன் கண் முன்னே நிகழ அவர் மன நலம் பாதிப்புக்கு உள்ளானது தற்போது அதே சூழ்நிலை மீண்டும் தன் கண் முன்னே வர பழைய நினைவுகள் திரும்ப வந்துவிட்டது” என்றார்.

தன் அன்னையின் நிலையை நினைத்து சந்தோசம் கொள்வதா இல்லை, சிந்துவை நினைத்து கவலைக்கொள்வதா?

சிந்து…. என்று தன்னை அறியாமல் புலம்பிக்கொண்டு இருந்தான் விக்ரம்.

அவனுக்கு மனசு முழுக்க சிந்துவின் நிலையை பற்றியே இருக்க, சுசிலா அம்மா விக்ரம் கையை இறுகப்பற்றினார்.

விக்ரம் யாருப்பா அந்த பொண்ணு என்றார் சுசிலா.

அவரை கண்கள் விரிய பார்த்தான். என்ன அப்படி பாக்குற எனக்கு ஒன்னுமே நினைவு இல்லை தான் ஆனா நீ வந்த சில நிமிடங்களில் பல முறை சிந்து என்ற பெயரை உச்சரித்து விட்டாய் என்றார்.

அம்மா…. அவ…அவ…என் தேவதை என்றான் .

ஆரம்பத்தில் இருந்து நிகழ்ந்த அனைத்தையும் விக்ரம் தன் அன்னையிடம் கூறினான்.

“விக்ரம் சார், கொஞ்சம் சீக்கிரம் வாங்க. சிந்துவிற்கு ரொம்ப சீரியஸ் அவங்க உங்களை பார்க்கணும் சொல்றாங்க.”

தென்றல் மீண்டும் வீசும்….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!