Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 41

தென்றல் – 41

“இங்க யாருங்க விக்ரம்?” என்று வினவினார் செவிலியர்.

“நான் தான் சொல்லுங்க சிஸ்டர்” என்றான் விக்ரம்.



Advertisement

“சிந்து ரொம்ப சீரியஸ்சா இருக்காங்க. உங்களை பார்க்கணும் சொல்றாங்க” என்றார்.

அவன் பாய்ந்து ஓடினான்.

அவன் பின்னே சுசிலா அம்மாவும் சென்றார்.

Advertisement

சிந்துவை அந்த கோலத்தில் கண்டவுடன் அவன் உள்ளம் பதப்பதைத்தது.

Advertisement

அவள் அருகில் அடி மேல் அடிவைத்து நெருங்கினான் விக்கரம்.

அவளுக்கு ஆக்சிஜன் ஏக்யூப்மெண்ட் பொருத்தப்பட்டு அவள் இதய துடிப்பை மானிட்டர் கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தது.

அந்த அறையின் மருத்துவ உபகரணங்களின் ஒலி அவன் காதைத் துளைத்தது.

Advertisement

அவன் கை கால்கள் வெடவெடத்தன.

முகம் நன்கு வியர்த்தது.அவள் முகத்தை உற்றுப்பார்த்தான்.

சிந்துவின் கண்கள் திறந்து இருந்தது. கண்களின் விழும்பில் இருந்து கண்ணீர் கோடாக கசிந்துக்கொண்டு இருக்க அவளைப் பார்க்கும் யாராகினும் கண்ணீர் வடிப்பார்.

அவள் அருகில் நெருங்கி “சிந்து” என்று மெல்லிய குரலில் அழைத்தான் விக்ரம். அவள் விழிகள் அவனை நோக்கி சுலன்றது.

அவள் கையை இறுகப்பற்றிக்கொண்டான். “சாரி…. சிந்து” என்று தன் முகத்தை அவள் கையில் புதைத்து அழுதான்.

“விக்ரம்….” என்ற அவளின் நடுங்கும் குரலைக்கேட்டு அவன் உடல் சிலிர்த்து.

“என்….னக் கார..ணம்…”என்றாள்.

“என்ன சிந்து” என்றான் புரியாமல்.

“என்ன காரணம், என்ன அன்னைக்கு காப்பாத்தாம போனதுக்கு” என்று கேட்டாள்.

“அழுதுக் கொண்டே…. சிந்து எனக்கு தெரியாது டி. நீ அவ்ளோ பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கேன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சு இருந்தா உன்னை அப்படி தவிக்க விட்டுவிட்டு போய்யிருக்க மாட்டேன்”.

“ஒரு பொண்ண இந்த நிலைமையில் காப்பாத்தாம விட்டுட்டு வர அளவுக்கு நான் அவ்ளோ மோசம் கிடையாது.

அன்னைக்கு என்ன நடந்துச்சுனா?

டிரைவர் வண்டி எடு” என்று கூறியதும், அவர் காரை இயக்கி சென்றார்.

சிறிது தூரம் சென்றதும், விக்ரமின் மனம் என்னோ குழம்பியது.

ஏன் என் மனசு இப்படி பரிதவிக்குது. “ஒரு வேலை அந்த பொண்ணு சொன்னது எல்லாம் உண்மையா இருக்குமோ?

டிரைவர் வண்டியை திருப்புங்க” என்றான் விக்ரம்.

“சரிங்க சார்” என்று காரை திருப்பிக்கொண்டு அதே இடத்திற்கு சென்றனர்.

ஆனால் அங்கு அவள் இல்லை.

“அதுக்குள்ள இந்த பொண்ணு எங்க போச்சு. டிரைவர் சுத்திலும் தேடு” என்றான் விக்ரம்.

அவளின் சுடிதார் துப்பட்டா மட்டும் கீழே கிடக்க, சார் இங்க பாருங்க என்று அதை கையில் எடுத்துக்காண்பித்தார்.

அவன் மனம் பாரமானது.

“ஐயோ…அந்த பொண்ணு? என்னால தானே ச்ச…நான் எல்லாம் ஒரு மனிதனா. இந்த பாவம் என்னை சும்மா விடுமா. ஏற்கனவே என்ன பாவம் செய்தேனோ இப்படி என் அன்னையின் நிலை இப்படி இருக்கிறது. இதில் இந்த பாவத்தை மேலும் சுமக்கவேண்டுமா. அவள் கூறியது உண்மை என்றால் பெண் பாவம் பொல்லாதது ஆயிற்றே”என்றான் விக்ரம்.

“விக்ரம் சார் அந்த பொண்ணுக்கு ஏதாவது” என்று வார்த்தையை நீட்டிக்க

“சேச்ச…அப்படி எல்லாம் எதுவும் நடந்து இருக்காது வண்டியை எடுங்க” என்று கூற, யாரோ அனத்தும் சப்தம் கேட்டத்து.

காரை விட்டு விட்டு அங்கு எங்கு இருளில் தேடினான்.

ஒரு முற்புதரின் உள்ளே அந்த சப்தம் ஒழிக்க அருகில் சென்று பார்த்தான்.

இருட்டில் சரியாக தெரியவில்லை.அவன் கைபேசியில் விளக்கை ஒளிர்வித்தான்.

உடலின் ஆடைகள் யாவும் கிழிந்து இருந்தது.

“டிரைவர் நீங்க அங்கே நில்லுங்க” என்றவன் அவள் துப்பட்டாவை உடல் முழுக்க போர்த்திவிட்டு அவளை அள்ளித் தூக்கினான்.

அவள் உடல் முழுவதும் எண்ணற்ற காயங்கள் இருக்க, உதிரத்தால் அவள் முகம் முழுவதுமாக நனைந்து இருந்தது.

“டிரைவர் சீக்கிரம் வண்டியை எடுங்க”, என்று அவளை தூக்கி கொண்டு ஓடினான்.

சிந்துவை மருத்துவமனையில் சேர்த்து, அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தான்.

“சார், அவங்க உங்களுக்கு யாரு?”என்றார் டாக்டர்.

“அவங்க…. எனக்கு….”என்று திணறினான்.

“என்ன மிஸ்டர் தடுமாறீங்க?

அவங்களுக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல, ரேப். அதுவும் மூணு நாலு பேர் சேர்ந்து” என்றார்.

“ஓ மை காட்” என்று அதிர்ந்தான் விக்ரம்.

“என்ன மிஸ்டர், செய்றதை எல்லாம் செஞ்சிட்டு போலீஸ் கேஸ் ஆயிரும்னு தானே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து சேர்த்துட்டு இந்த ட்ராமா” என்றார் டாக்டர்.

“டாக்டர், அவங்க யாருன்னே எனக்கு தெரியாது. என்னால முடிஞ்ச உதவியைத் தான் நான் செய்தேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கண்டிப்பா போலீஸ்க்கு தகவல் கொடுங்க. நான் இங்கே இருக்கேன்.

ஆனா ஒன்னு அவங்க ஒரு பொண்ணு. நாளைக்கு மீடியா அது இதுனு போய் அவங்க வாழ்க்கையை கெடுத்துறாதீங்க.

பல பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் அநியாயமா போகுது.

நீங்க என்ன அக்சன் வேணும்னாலும் எடுத்துக்கோங்க” என்று அமர்ந்து கொண்டான் விக்ரம்.

“சார், இப்போ அவங்களை நீங்க பாக்குறதா இருந்தா போய் பார்க்கலாம்”என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அவன் சிகிச்சை அறையை திறக்க, அப்படியே நின்றான்.

“சாரி…. நீங்க யாருனு எனக்கு தெரியாது.ஆனா நான் இப்படி எல்லாம் நடக்கும் எதிர்பார்க்கிவில்லை.

ஐ அம் ரியலி சாரி அண்ட் நான் உங்களை பார்க்க விரும்பல ஏன்னா உங்கள் முகம் என் மனதில் பதிந்தால் அது என் ஆயுள் முழுக்க என்னை உறுத்தும். நீங்க நல்லா இருந்தாலே போதும்’ என்று கதவை மீண்டும் அடைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் விக்ரம்.

“இது தான் நடந்தது சிந்து. எனக்கே நீ தான் அந்த பொண்ணுன்னு எனக்கு தெரியாது. அன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏதேர்ச்சியாக ஒரு நாள் நம் வீட்டுக்கு டிரைவர் வர உன்னைக் கண்டு கொண்டு, சார் இவங்க இங்க என்ன பண்றாங்க” என்றார் டிரைவர்.

“நீ யாரை சொல்ற” என்றான் விக்ரம்.

“என்ன சார் நீங்க, அதோ அந்த பொண்ணு தான்” என்றார்.

“எனக்கு நீ என்ன சொல்றனு புரியல யார் அந்த பொண்ணு” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“என்ன சார் உங்களுக்கு நியாபம் இல்லயா. 4பேர் ரேப் கேஸ்” என்றார் சத்தமாக. டிரைவர் வாயை அடைத்தவன்,அப்படியே அந்த விஷயத்தை மூடி மறைத்தான்.”அப்போ…அந்த பொண்ணு சிந்துவா.இதனால் தான் சிந்து இந்த அளவிற்கு ஆண்களை வெறுக்கிறாளா? அவள் திமிர் தான் அவளின் அடையாளம் என்று நினைத்தேன், ஆனால் இப்படி ஒரு வலி நிறைந்த காரணம் இருக்கும் என்று எனக்கு தெரியவைல்லையே. இவளுக்கு நடந்த அநீதிக்கு நானும் ஒரு காரணம் தானே. இவள் வாழ்க்கை இப்படி ஆனது மறைமுகமாக என்னால் தான். நான் தான் இதை சரிசெய்ய வேண்டும்” என்று நினைத்தேன். “அதனால் தான் அன்று நம் திருமணத்தை பற்றிய அறிவிப்பை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன்”என்றான்.

“ஆனா நான்…நான் வேணும்னு பண்ணல மா என்ன நம்பு” என்றான் விக்ரம்.

அவளுக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.

“டாக்டர்…. சீக்கிரம் வாங்க” என்று கத்தினான் விக்ரம்.

அனைவரும் பதறினர்.

“சார், நீங்க கொஞ்சம் வெளிய இருங்க, நர்ஸ்” என்று அழைக்க அவருக்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் எடுத்து கொடுத்தார்.

அவள் உயிர் மெல்ல மெல்ல கரைந்துக்கொண்டு இருந்தது.

சிந்துவின் வேதனையை விக்கிரமால் பார்க்க முடியவில்லை.

அங்கிருந்து ஓடினான். “விக்ரம் எங்க போற, நில்லு” என்று சுசிலா அவன் பின்னே ஓடினார். கையில் இருந்த தன் அலைபேசியை தூக்கி வீசினான்.

நாட்கள் நகர்ந்தது. ஆதவ் தான் இப்போது அவன் கம்பெனியை பார்த்துக்கொள்கிறான்.

ரஞ்சிதாவின் காதல் ஆதவின் மனதை மாற்றவே செய்தது. சிந்துவை நேசித்ததை போலே அவளை நேசிக்க முடியவில்லை என்றாலும், அவளுக்கான அன்பை கொடுக்கிறான். ரஞ்சியின் காதல் வெற்றி அடைந்தது. திருமணமும் செய்து கொண்டான்.

துளசி டாக்டர் படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறாள்.

சுசிலா அம்மா, தன் மகன் வருகைக்காக காத்திருந்தார்.

தினம் தினம் கிருஷ்ணன் வருகைக்காக வீட்டின் முற்றத்தில் இருந்தே கால் தடம் போடப்பட்டு இருக்கும். ஆனால் ஒரு நாளும் கிருஷ்ணன் வருகை நிகழவில்லை.

“என்னப்பா ஆதவ் என் புள்ளைய பத்தி ஏதாவது தகவல் தெரிந்ததா. இப்படியே நாட்கள் ஓடிக்கிட்டே இருக்கே என் உயிர் போறதுக்குள்ள அவனை ஒரு முறை பார்த்துவிட்டால் போதும்.என் புள்ள உயிரோடையாவது இருக்கானா சொல்லு ஆதவ். அவன் இங்க இருந்து சென்று மூன்று வருஷம் ஆகுது. ஆனா அவனை பற்றிய ஒரு தகவலும் இல்லை. பெத்த புள்ளைங்கல பறிக்கொடுத்துட்டு இப்படி தவியா தவிச்சிட்டு இருக்கேன். அந்த கடவுளுக்கு என் மேல் என்ன கோபம். என் நிலை எந்த தாய்க்கும் வரக்கூடாது”என்று கதறி அழுதார்.

அந்த சமயம் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. ஆதவ் மிகுந்த வருத்தத்துடன் ஹலோ என்றான்.

“ஆதவ்…” என்ற ஒற்றை வார்த்தையில் கண்கள் விரிந்தது. “விக்ரம் சார்…. நீங்க…நீங்க எங்க இருக்கிங்க” என்று பதறினான்.

“என்ன என் புள்ள விக்ரம்மா…”என்று ஓடி வந்தார் சுசிலா.

அந்த வீடு முழுக்க ஒரே சலசலப்பு. “விக்ரம் தம்பி…விக்ரம் சார்…. இத்தனை நாள் எங்க இருந்தாரு”என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர்.

ஆதவ் கையில் இருந்து அலைபேசியை பிடுங்கினார் சுசிலா.

“டேய் விக்ரம் ஏன் டா இப்படி பண்ண? நீ எங்கடா இருக்க எங்க யாரைப் பற்றியும் உனக்கு எந்த கவலையும் இல்லை.

நீ பாட்டுக்கு எனக்கு என்னனு போய்ட்டியே நாங்க என்னடா தப்பு செஞ்சோம் எங்களுக்கு எதற்காக இந்த தண்டனை என்றாள்.

சொல்லு விக்ரம், சொல்லு டா”என்று அழ, “அம்மா நான் இனி அங்க வரமாட்டேன். யாருக்காக வரணும். எதுக்காக இந்த வாழ்க்கை நான் இந்தியா விட்டே போறேன். இனி எப்போதும் என்னை உங்களால் பார்க்கவே முடியாது. நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க,

டேய்…. கண்ணா நான் சொல்றதை கேள், உனக்காக சிந்து…”என்று சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“இப்போ என்ன பண்றது ஆதவ் அவன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறான்.

இங்க ஒருத்தி அவனுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறாள். ஆனால் அவன் என்னடானா இப்படி பண்றான். எப்படியாவது அவனை இங்கு அழைத்துவர வேண்டும். என் மருமகள் படுற பாட்டை என்னால பார்க்கமுடியல” என்றார் சுசிலா.

ஆம் சிந்து, இன்னும் உயிரோடு தான் இருக்கிறாள். விக்ரம் அங்கிருந்து சென்றதற்கு பின்பு அவள் உடல் நிலையில் மாற்றம் நிகழ்ந்தது.தேவாதீனாமாய் சிந்து பிழைத்துக்கொண்டாள். அவள் கண் விழித்த அடுத்த நிமிடம் கேட்டது விக்ரமைத் தான்.ஆனால் அவன் அங்கு இல்லை. அவன் பேசிய வார்த்தைகள் மட்டும் அவள் மூச்சில் கலந்து நினைவுகளில் நிலைக்கொண்டது.

“என் விக்ரம்…. என்…விக்ரம் இல்லாத இந்த உலகம் எனக்கு வேண்டாம். எல்லாரும் இங்க இருந்து போங்க. நான் யாரையும் பார்க்க விரும்பல. யாரும் எனக்கு வேண்டாம்” என்று கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தாள்.

“அம்மாடி சிந்து நான் சொல்வதை கேள் விக்ரம் வந்துவிடுவான். நீ சற்று சாந்தமாக இரு”என்று அவளை காட்டுப்படுத்த முயன்றனர். அவள் யார் சொல்லியும் கேட்கவில்லை. விக்ரம் என்று கதறி அழுத்தபடி கதவை அடைத்துக்கொண்டாள்.

அன்று மூடப்பட்ட கதவு தான், மூன்று வருடங்கள் கண்டந்தும் திறக்கப்படவில்லை. தினம் தினம் அவள் கேட்கும் ஒன்றே ஒன்று என் விக்ரம் வந்துட்டாரா என்று தான்.

ஆனால் அது இன்றுவரை நிகழவில்லை.

காதல் மென்மையானது தான் ஆனால் அது தான் உலகிலேயே கனமானதும் கூட.

ஆதவ் ஜிபிஆர்எஸ் உதவியுடன் விக்ரம் இருப்பிடத்தை கண்டுக்கொண்டான்.அது ஒரு மலை கிராமம். எந்த ஒரு இரைச்சலும் இன்றி பறவைகளின் சப்தம் மட்டுமே சங்கீதமாய் கேட்டுக்கொண்டு இருந்தது.

ரஞ்சிதா, ஆதவ், துளசி மூவரும் அவனை தேடிச் சென்றனர்.

எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்ற காடுகள், மலை முகடுகள் மேகங்கள் அதை உரசி செல்லும் காட்சி யாவும் இவர்களை மேலும் ஆர்வமூட்டியது.

“ஆதவ்…எதற்காக விக்ரம் இப்படி எல்லாரையும் விட்டுவிட்டு இங்க வந்து இருக்காரு.தெரியல ரஞ்சி. அவர் ஏன் இப்படி செய்தார்” என்று பாப்போம் என்று காரை இயக்கினான்.

ஒரு பாட்டி ஆடுகளை மெய்த்துக்கொண்டு இருக்க, அவரிடம் விக்ரமை பற்றி கேட்டனர்.

விக்ரம் தம்பியா அதோ பாரு என்று கையை காட்ட, மேகம் கூட்டம் நிறைந்த அந்த உயர பல்லத்தாக்கின் மேல் நின்று இருந்தான்.

விக்ரம் சார் என்ற அழைப்பில் திரும்பினான்.

“சார், என்ன இது கோலம். உங்கள என்னால இப்படி பார்க்க முடியல என்றான் ஆதவ். என்ன விட்டுடுங்க நான் உங்க யாரையும் பார்க்க விரும்பல நான் உங்களை, உங்கள் நினைவுகளை எல்லாம் விட்டு விட்டு தூரம் செல்ல வேண்டும்” என்றான்.

எங்க போறீங்க?”

“தெரியல ஆதவ் போறேன்” அவ்ளோ தான் வலி நிறைந்த புன்னகையோடு இதுக்கு மேல என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது ஆதவ். எல்லாம் முடிந்தது.நான் யாருக்காக வாழனும் என் உயிரே என்னை விட்டு போயிருச்சு, வெறும் உடம்பு எப்படி இருந்தால் என்ன” என்றான் விரக்தியோடு.

“சார் என்ன சொல்றிங்க. சிந்து…உயிரோடு தான் இருக்காங்க அது தெரியாமல் இத்தனை வருஷம்” என்றான்.

“அவன் சட்டை காலரை பிடித்துக்கொண்டு ஏய் என்ன சொல்ற, அப்போ…அன்னைக்கு நான்.. பார்த்தது.

என்ன விடுங்க சார், பாவம் சிந்து மரணத்துகிட்ட இருந்து போராடி உங்களுக்காக உயிர் பிழைத்து உங்க வருகைக்காக காத்துக்கிட்டு இருக்கிறார்.

ஆனா நீங்க என்னடானா இத்தனை வருஷம் அவங்க எப்படி இருக்காங்கனு கூட சாரி சாரி உயிரோடு இருக்காங்களா என்னனு கூட தெரியாம வாழறீங்க? சூப்பர் சார் சூப்பர்” என்றான் வஞ்சப்புகழ்ச்சி அணியில்.

“என் சிந்து இப்போ எங்க இருக்கா” என்றான் விக்ரம்.

“ஹ்ம்ம் வேற எங்க இருக்கா, நீங்க போனதுக்கு அப்பறம் உங்க ரூம்லயே அடைப்பட்டுக்கிடக்குறா” என்றால் சிந்து.

உங்களுக்காக ஒன்னும் நாங்க வரல, எங்களுக்கு எங்க சிந்து முக்கியம் சிந்துவிற்கு நீங்க முக்கியம் அதனால தான் தேடி வந்தோம்” என்றாள் துளசி.

“என் சிந்து உயிரோடு இருக்குறாளா நான் அவளை உடனே பார்க்கணும்” என்று அவர்களுக்கு முன்பாக ஓடினான்.

ரஞ்சியும் ஆதவும் ஒருவரை ஒருவர் பார்த்து நிம்மதியுடன் சிரித்தனர்.

 

காரை விட்டு இறங்கியவன் அறையை நோக்கி ஓடினான். அனைவரும் மிகுந்த அமைதியுடன் நடப்பதை கவனித்தனர்.

“சிந்து…. சிந்து…”என்று அழைக்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தாள்.

“விக்ரம்…விக்ரம் சப்தம் கேட்டது. இது உண்மையாக இருக்க முடியாது நிச்சயம் இது நம் கற்பனை தான் தினம் தினம் கனவில் இப்படி தானே நான் பாடாய்ப்படுகிறேன்.இதுவும் பிரம்மை தான்” என்று அமைதிக்காத்தாள்.

மீண்டும் கண்ணீர் மழ்க, கதவை தட்டி சத்தமாக சிந்து என்றான் விக்ரம் அவ்வளவு தான் எழுந்து ஓடி வந்து கதவை திறந்தாள்.கண் முன்னே விக்ரம் நின்று இருக்க அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஓங்கி கன்னத்தில் ஒரு அரைவிட்டாள்.

“சிந்து ஐ அம் சாரி” என்றான்.

மீண்டும் அரைந்தாள்.

“ஐ அம் சாரி” என்றான். மிகுந்த ஆத்திரத்துடன் கையை ஓங்க, அவள் கையை பிடித்து தடுத்து “ஐ லவ் யூ டி” என்று கட்டிக்கொண்டான்.

அவன் மார்போடு தஞ்சம் கொண்டு “ஐ லவ் யூ டூ” என்று அவனை இறுக்க கட்டிக்கொண்டாள்.

அனைவரும் அவர்களை கண்டு சந்தோசம் கொண்டனர்.

“ஏன் என்னை விட்டு போனீங்க விக்ரம் நீங்க இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா”என்றாள் சிந்து.

“என்னால நீ கஷ்டப்படுறதையே பார்க்க முடியல அப்படி இருக்கும் போது நீ இந்த உலகத்தில் இல்லைங்கறதை என்னால எப்படி தாங்கிக்கொள்ள முடியும் “என்றவனை காதலோடு பார்த்தாள் சிந்து.

“உண்மையாகவே என்னை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா”என்றாள்.

ஹ்ம்ம்…. என்றான். “பொய் சொல்லாதீங்க விக்ரம் எனக்கு கேட்டுச்சு, நீங்க என் வாழ்க்கை உங்களால தான் இப்படி ஆச்சிக்கற குற்ற உணர்ச்சி காரணமாகத் தான் என்னை கல்யாணம் பண்ணி வாழ்க்கைக் கொடுக்க நினைத்தீர்கள் உண்மைதானே”என்றாள்.

“அடி போடி மக்கு, நீ யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே உன்னை நேசித்தேன்.

முதல் முறை உன்னை ரயிலில் பார்த்தேன் அப்போதே என் மனதை கொள்ளைக்கொண்டாய், ஆனால் என்ன ஒன்னு உனக்கு வாய் அதிகம் “என்று சிரித்தான்.

“செல்ல கோபத்துடன் போடா” என்றாள்.

“என்ன….து…போ.. டாவா” என்றவன் அவள் இதழை சிறைச்செய்தான்.

“ஏய்…என்ன இங்க படமா காட்டுறாங்க எல்லாரும் போங்க”என்று விரட்டினார் கீதா.

ரஞ்சியும் ஆதவும் மட்டும் நகரவே இல்லை.

“இப்படியே வேடிக்கை பார்க்காமல் சீக்கிரம் நீங்களும் உங்க வாழ்க்கை பயணத்தை தொடருங்கள்” என்றார்.

இதோ இப்போவே தொடங்கிறோம் என்று இருவரும் ஓடினர்.

சிந்து, விக்ரம் திருமணம் கோளாகலமாக நடைபெற்றது.

மணகோலத்தில் இருவரும் வந்திருக்கும் உற்றார் உறவுகளை கண்டு கை எடுத்து கும்பிட்டு ஆசிர்வாதம் பெற அனைவரும் அர்ச்சதை தூவி வாழ்த்தினர்.

அனைவரும் புன்னகைத்தனர்.

காதல் தென்றலைப் போலே நம்மை எப்போதும் தொட்டுக் கொண்டே இருக்கும்.

காதல் இல்லாமல் உலகேது.

“ சுபம்”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!