Skip to content
Post Views: 4,249
கொண்டு போய் விடுங்களேன் நானா வேண்டாங்கிறேன். ஏன் எங்கப்பன் வீட்டுல சோத்துக்கு வழியில்லைன்னு கழுத்தை பிடிச்சு வெளியில் தள்ளிடுவாங்களா?
பேச மட்டும் எப்படி தான் தெம்பு வருதோ? முணங்கிக் கொண்டான்.
அதெல்லாம் தன்னால வரும்.
ஒரு சந்தோஷமான விஷயம் நம்ம வாழ்க்கையில் நடந்திருக்கு…. அதை ரசிக்க, என்ஜாய் பண்ண தெரியாம என்னென்ன அழிச்சாட்டியம் பண்றீங்க? இப்போ தான் அக்கறையா பேச வந்துட்டீங்க!
அந்த ஆளு எவ்வளவு கஞ்சன் தெரியுமா? எவளும் அந்த ஆளு கூட குப்பை கொட்ட முடியாதுன்னு சொன்னியே…. இப்போ இந்த பொல்லாதவன் பிள்ளையை சுமக்கறியே உனக்கு எப்படி பீல் ஆகுதுனு தெரியாம நான் கொண்டாடிட்டு இருக்க முடியாதே…
Advertisement
சாட்டை அடி வாங்கிய சுரீர் வலி அவள் இதயத்தில்.
ஸாரி ஸாரி ஸாரி…. ஏதோ கோபத்தில் பேசிட்டேன் போதுமா?
உன் ஸாரி எல்லாம் எனக்கு வேண்டாம் சாப்பிட்டு கால் பண்ணு!
Advertisement
நான் சாப்பிடாம எப்படியோ போறேன்….. உங்களுக்கு என்ன வந்துச்சு? மூன்று நாட்களாய் அவளை அலைகழித்த கடுப்பு அவளுக்கு.
Advertisement
நீ சாப்பிடு, சாப்பிடாம போ! என் பிள்ளையை பட்டினி போடாதே….
இவர் பிள்ளையாமே…. இவர் பிள்ளை… நான் இல்லாம வந்துடுச்சாக்கும்!
“நான் இல்லாம மட்டும் “என்று சொல்லிவிட்டவன் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டான். அவளுக்கு இங்கே என்னவோ செய்து மெய் சிலிர்த்து முகம் சிவந்தது.
Advertisement
போய் சாப்பிடு! அவளை இலகுவாக்கும் பொருட்டு பேச்சை மாற்றினான்.
சாப்பிட முடியாது!
உதைபடுவ….
அடிக்காத ஆளா நீங்க?
சுரீர் என்று வலித்தது அவனுக்கு ஸாரிம்மா என்றான்.
உங்க ஸாரி எனக்கு வேண்டாம் நீங்க போய் சாப்பிட்டு வேலையை பாருங்க.
ஏன்டி படுத்தி எடுக்குற?
யாரு நானு? உங்களை?
பின்ன?
மூனு நாளா மெசேஜ் பண்றேன் கால் பண்றேன் ஒரு பதிலைக் காணோம். இப்போ கூட உங்கம்மா இருந்திருந்தா என்கிட்ட பேசியிருக்க மாட்டிங்க.
அவங்க என்னை எப்படியாவது சாப்பிட வச்சிருப்பாங்க! அவங்க இல்லாம போகவே பருப்பா பொறுப்பா கால் பண்றீங்க. அதுகூட எனக்காக இல்லை.
உண்டோ இல்லையோன்னு இருக்குற உங்க குழந்தைக்காக….
எதுக்கு இவ்வளவு எமோஷன் ஆகுற?
நான் ஆகல! நீங்க ஆக்குறீங்க.
சரி போய் சாப்பிடு!
மாட்டேன்.
சொன்னா கேளும்மா….. ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்க…. இப்படி பிடிவாதம் பிடிக்குற.
அது எப்படி நீங்க என்னை அவாய்ட் பண்ணலாம்?
நீ என்னை அசிங்கப்படுத்தலாம் ஆனா நான் உன்னை அவாய்ட் பண்ணக்கூடாது அப்படி தானே….?
கேட்டானே சம்மட்டி அடியாய்!
அவள் புறம் மௌனமே….
எனக்கு கோபமே வரக்கூடாது. நான் சூடு, சொரணை இல்லாத நாய்க்குட்டியா உன் காலை சுத்திட்டு கிடக்கணும்! அப்படித்தானே….?
அய்யோ ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க….? பதறிவிட்டாள்.
எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பணும்! நான் வர மூனு நாள் ஆகும். சாப்பிடாம காய்ஞ்சு கிடந்து வீட்டில் உள்ளவங்களுக்கு நீயே காட்டிக் கொடுத்துடாதே! நம்ம பிரச்னை நம்மோட அதுதான் என் பாலிசி.
உன்னை விட உன் மேல எனக்கு அக்கறை அதிகம் இருக்கு. உன் மேலேயே அக்கறை அதிகம் இருக்குன்னா என்பிள்ளை மேல எவ்வளவு இருக்கும்?
சாப்பிட்டு ரெஸ்ட் எடு! அதிகார தொனியுடன் பேசிமுடித்தவன் இணைப்பை துண்டித்து விட்டான்.
“—————————–“
கோயிலில் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றும்போதே பாப்பாத்திக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. சுடலை மாட சாமி என் கடைசி பிள்ளைக்கு படியளந்துட்ட தெய்வமே நன்றி! அதே மாதிரி என் எழிலுக்கும் பிச்சை போடு! அவங்களுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டரை வருஷம் ஆகுதே…. மனமுருகி வேண்டிக் கொண்டார்.
என் மக்க ஒத்துமையா சந்தோஷமா ஒன்னுக்கு ஒன்னு நிழலா கடைசி வரை சேர்ந்திருக்கணும்! அந்த தாயின் வேண்டுதல் மருமகள்களுக்கு கேலியாய் இருந்தது. ஒருவரை ஒருவர் தோளில் இடித்து சிரித்துக்கொண்டனர்.
அத்தை வேண்டுதல் பலமோ? நீங்க வேண்டி முடிக்கிறதுக்குள்ள பொங்கலே வெந்துடுச்சு! கேலியாய் சிரித்தாள் அஞ்சலி.
காலம் போன காலத்துல நான் என்ன வேண்டிக்க போறேன்? நான் பெத்த பிள்ளைங்க என் பேரப்பிள்ளைங்க எல்லாம் குடும்பமா நூறு வருஷம் வாழணும்! அவ்வளவு தான் என் வேண்டுதல்.
அப்போ மருமகளுங்க நல்லா இருக்க வேண்டாமா? சங்கீதா இடக்காக கேட்டாள்.
மருமகளுங்க தனி இல்லை என் மகனுங்க குடும்பம் தீர்க்காயுசா வாழனும்னா என் மருமகளுங்களும் அதில் அடக்கம் தான் என்றார்.
அத்தை வர வர பயங்கரமா பேசறீங்க! வெல்லத்தை போட்டு கிளறிக் கொண்டே சிரித்தாள் சங்கீதா.
பேச்சு தானே…. அது பேசினாலும் பிரச்னை, பேசலைனாலும் பிரச்னை என்று சன்னமாய் சிரித்தார்.
அபிஷேகம் செய்து பொங்கல் படையலிட்டு திருப்தியாய் மனநிறைவுடன் சுடலை மாடனை வழிபட்டனர்.
சுப்ரஜாக்கு நல்ல விதமா குழந்தை பிறக்கணும்! தீபாக்கும் ஒரு குழந்தை குட்டி உருவாகணும். குடும்பமா வந்து கிடாவெட்டி படையல் போடுறேன் என்று வேண்டுதல் வைத்தார் பாப்பாத்தி.
“————————–“
அறை அந்நியமாய்பட்டது. கணவன் அருகில் வேண்டும் என்று மனம் ஏங்கியது. ஏன் என்று தெரியாமல் அழுகை வந்தது. கோபம் வந்தது. சொல்லத்தெரியாத ஒரு உணர்வு அவளை உருட்டி புரட்டியது. கர்ப்ப கால ஹார்மோன் ஏற்படுத்தும் மூட் ஸ்விங்காக இருக்கலாம்.
அவளுக்கு பாசக்கார கணவனான மன்னரை தான் தெரியும்! கோபக்கார காவலனாய், கண்டிப்பான நண்பனாய், பூமாலை குடும்பத்தை விரல் நுனியில் கட்டி ஆளும் ஆளுமையாய் அவள் அறிந்ததில்லை.
கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்று முடங்கியவளுக்கு மூச்சு முட்டியது.
உள்ளுக்குள் ஏதேதோ சிந்தனைகள். திருமணமான நாள் தொட்டு இன்று வரையிலான மன்னரின் பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் வரிசை படுத்த தொடங்கியது மனது.
அவனாலோ அவன் வீட்டு மனிதர்களாலோ அவளுக்கு சிறு இடர்பாடு கூட நேர்ந்ததில்லை.
எந்த இடத்திலும் அவன் மீது சிறு தவறும் இருப்பதாய் படவில்லை.
அவன் அளவில் அவன் சரியான கணவனாக,அன்பான மகனாக, பொறுப்புள்ள சகோதரனாகவே நடந்து கொள்கிறான்.
அவனை திருத்த வேண்டும் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை அவள்தான் திருந்த வேண்டும்.
ஊர் உலகத்து ஆண்கள் போல் ஆடம்பரமாய் வெட்டி பந்தாவாய் ஒரு பைசா அவன் செலவழிப்பதில்லை. ஒரு ரூபாய் செலவு செய்ய நாலு முறை யோசிக்கிறான் எனில் அவன் சம்பாதிக்கும் கஷ்டம் அவன் மட்டும் தானே அறிவான்?
என்னவோ இன்று அதிசயமாய் கணவனை பற்றி அனைத்தும் நல்லவிதமாகவே தோன்றியது சுபிக்கு.
“————————”
கோயிலுக்கு சென்றவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். வந்த அலுப்பிலும் உடனடியாக மருமகளுக்கு ஜூஸ் போட்டு கொண்டுவந்தார் பாப்பாத்தி.
என்ன சுபி நீ மத்தியானம் சாப்பிடவே இல்லை போல….
இல்லத்தை கொஞ்சம் சாப்பிட்டேன். சாப்பிடவே பிடிக்கல… வாந்தி வர மாதிரி இருந்துச்சு!
அது அப்படி தான் இருக்கும். அதுக்காக கொரிச்சுட்டு உட்கார்ந்திருக்க கூடாது. நல்ல சத்தான ஆகாரமா சாப்பிடணும்! சும்மா படுத்தே கிடக்க கூடாது அப்படி இப்படி கொஞ்சம் நடக்கணும்.
சரிங்கத்த என்றாள் பொறுமையாய்.
கிழவி கவனிப்பை பாரு அஞ்சலி. வந்தததும் வராததுமா ஜூஸ் போட்டு தூக்கிட்டு ஓடுது.
சின்ன மருமகள் ஸ்பெஷல். நக்கலாய் சிரித்தாள் அஞ்சலி.
உண்மையில் அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது இங்கே இல்லை. மாமியாரோடு இருந்திருந்தால் தானே அவர் கவனிப்பாரா, இல்லையா என்று சொல்ல முடியும்?
வாய் இருக்கிறது என்று வம்பு பேசிக்கொண்டிருந்தனர் ஓரகத்திகள் இருவரும்.
“———————-“
என்னம்மா கோயிலுக்கு போய் வந்தாச்சா?
ம்ம்ம்ம் சந்தோஷமா மனசுக்கு நிறைவா சாமி கும்பிட்டு வந்தோம்.
சுப்பு என்ன பண்றா? சாப்பிட்டாளா?
இன்னுமா உன் பொண்டாட்டி போனுக்கு சிக்னல் கிடைக்கல? பாவம்பா மருமக ஒரு நல்ல போனா வாங்கி கொடு! என்றார் சிரிப்புடன்.
மம்மோவ்….. சிரித்துவிட்டான்.
தாயை அவன் அறிவான். அவனை தாய் அறிவார்.
என்ன ஏது என்று அவர் கேட்டு கொள்ளவும் இல்லை அவன் சொல்லவும் இல்லை.
மன்னருக்கா புத்தி சொல்ல வேண்டும்? என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்கு உண்டு! எதுவானாலும் அவன் பார்த்துக்கொள்வான் என்ற நினைப்பு.
ம்மா வாந்தி எடுக்குறாளா? இந்த மாதிரி நேரத்துல என்ன சாப்பிட கொடுக்கணுமோ அதை அவளுக்கு பிடிச்ச மாதிரி செய்து கொடுங்க!
சரிங்க போலீஸகார் என்றார் சிரிப்புடன்.
ம்ம்ம்மா இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது. வெட்கம் வந்துவிட்டது அவனுக்கு.
நான் என் மருமகளையும் வயித்துல இருக்குற பேரப்பிள்ளையையும் நல்லா பார்த்துப்பேன்! நீ உன்னை நல்லா கவனிச்சுட்டு வந்து சேரு!
ம்ம்ம்மா நீங்க வேணா நாளைக்கு கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வறீங்களா?
ஒன்னும் அவசரம் இல்லை. இருபது நாள் தள்ளி போயிருக்கு அவ்வளவு தானே….நீ வந்த பிறகே போகலாம். நீ ரொம்ப யோசித்து டென்ஷன் ஆகாத.
ம்ம்ம்மா கவனமா பார்த்துக்கோங்க!
அட… போனை வைடா எனக்கு வேலை இருக்கு. செல்லமாய் அதட்டினார்.
“———————-“
சங்கிக்கா தீபாக்கு அத்தை சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிற?
கண்டிப்பா இருக்காது என்றாள் சங்கீதா.
ஆமா சொல்லலை. சுப்ரஜா வீட்டுக்கே சொல்லலை. ஹாஸ்பிடல் போய் உறுதிப்படுத்தின பின்னாடி சொல்லிக்கலாம் என்றார் பாப்பாத்தி.
ஆனால் இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்த அடுத்த நிமிடமே தீபாவிற்கு அழைத்து சொல்லிவிட்டாள் சங்கீதா.
அப்படியா சந்தோஷம் என்றாள் தீபா.
வேறென்ன சொல்ல முடியும்? எனக்கு பொறாமையா இருக்கு என்றா சொல்ல முடியும்?
தீபா கல்யாணம் ஆகி நாலு மாசத்திலே அவ உண்டாகிட்டா…. நீங்களும் நல்ல டாக்டரா பாருங்க!
சரிங்கக்கா என்றாள் உள்ளார்ந்த வலியுடன்.
மனதை பிசைந்த உணர்வு. பொறாமை என்றில்லை. தனக்கு கிடைக்காத ஒன்று அவர்களுக்கு கிடைத்திருக்கிறதே என்ற ஏக்கம்.
இருவருக்கும் எந்த குறையும் இல்லை கொஞ்ச காலம் பொறுத்து பாருங்க என்று மருத்துவர்கள் சொல்லும் போது என்ன செய்ய?
“——————————“
என்ன சுபி உன் புருஷன் வந்து தான் டெஸ்ட் பண்ணுவியா? நாங்க நாளைக்கு கிளம்புறோம் என்றாள் சங்கீதா.
அப்படிலாம் இல்லைக்கா என்றாள் தயக்கமாய்.
“கிணத்து தண்ணிய வெள்ளமா கொண்டுபோயிடும்?”என்றார் பாப்பாத்தி.
ஏன் அத்த நீங்க வேற…. ரெண்டு நிமிஷத்தில் ரிசல்ட் தெரிஞ்சுக்கிற இந்த காலத்துல என்னென்னவோ பேசிகிட்டு…. கடுப்பாகிவிட்டாள் அஞ்சலி.
சுபி தயக்கமாய் மாமியாரை நோக்க…. இந்த பொண்ணு உளறி கொட்டிட போறா என்று பயந்து போனவர் சரவணா இவங்க ஏதோ டெஸ்ட் பார்க்கிறது சொல்றாங்க பாரு போய் மெடிக்கலில் வாங்கிட்டு வா! அப்படியே எனக்கு டைகர் தைலம் வாங்கிட்டு வா என்றார்.
அமைதியாய் இருக்கும்படி சின்னவளுக்கு கண் ஜாடை காண்பித்தார். ஏற்கனவே பார்த்துவிட்டோம் என்று எப்படி சொல்ல?
பார்க்காவிட்டால் தலை வெடித்துவிடும் ஓரகத்திகளுக்கு….
சுபிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. எல்லார் முன்னிலையிலும் அவள் கையில் டெஸ்ட் கிட்டை கொடுத்து பார்த்துவிட்டு வா என்று வாசலில் நிற்கிறார்களே…
சட்டென்று பேசிவிடவும் முடியாதே…. அக்கறையில் ஆர்வத்தில் கேட்கிறார்கள் என்றே நினைக்க வேண்டிவருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டாள் தான் ஆயினும் இப்போது பரிசோதிக்கும் போதும் ஒருவித படபடப்பு பதட்டம் எல்லாம் இருந்தது.
இரட்டை சிவப்பு கோட்டை முதல் முறை பார்த்ததை விட இன்று அவளுக்குள் அப்படி ஒரு சிலிர்ப்பு. அடிவயிற்றில் இருந்து ஏதோ ஒரு உணர்வு மேலெழும்பியது. அதற்கு பெயர் தான் தாய்மையோ என்னவோ?
டெஸ்ட் பண்ணிய கிட்டை கொண்டுவந்து காட்ட கூச்சமாக இருந்தது.
நாணத்துடன் கொண்டுவந்து மாமியார் முன் நீட்டினாள்.
வாழ்த்துக்கள் சுபி என்று ஒரே நேரத்தில் வாழ்த்து கூறினர் ஓரகத்திகள். ஒரு புதிருக்கு விடை கிடைத்துவிட்ட திருப்தி அவர்களுக்கு. இல்லை என்றால் ஊருக்கு போனாலும் அவர்கள் மண்டைக்குள் சுண்டெலி உருட்டி கொண்டிருக்குமே…
காலம் எவ்வளவு வளர்ந்திருக்கு பாரேன்! இந்த மன்னரு பய வயித்துல இருந்ததே தெரியாம நாலு மாசம் சுமந்துகிட்டு இருந்தேன் நான்,இப்போ பாரு வீட்டுல இருந்தபடியே ஒரு சின்ன அட்டையில நாலு சொட்டு சிறுநீர் போட்டா ரிசல்ட் தெரிஞ்சுடுது…. சிலாகித்து போனார் பாப்பாத்தி.
அப்படி இரு, இப்படி இரு,அதை சாப்பிடு, இதை சாப்பிடு என்று அறிவுரைகளை அள்ளி தெளித்தனர் ஓரகத்திகள்.
“————————-“
கியாஸ் ஸ்டவ்வை தரையில் இறக்கி வைத்து முறுக்குசுடும் பணியில் மும்மரமாய் இருந்தார் பாப்பாத்தி. காலையில் ஊருக்கு கிளம்ப மூட்டைகட்டும் பணியில் மும்மரமாகி விட்டனர் மருமகள்கள்.
ஆளுக்கு முப்பது அதிரசம் வச்சிருக்கேன் என்றார்.
அத்தை உங்க பிள்ளை ஒரே நாளில் தின்னு தீர்த்துடுவார் என்றாள் சங்கீதா.
அனைவரும் பிசியாக இருந்தனர். டிவி பார்க்க பிள்ளைகள் விடவில்லை. கார்ட்டூனுக்கு கடும் போட்டி பிள்ளைகளுக்குள்.
அறைக்குள் நுழைந்தவள் பத்திரப்படுத்தி வைத்திருந்த டெஸ்ட் கிட்டை எடுத்து பார்த்தாள்.
சிலிர்த்து ரசித்தவள் மொபைலில் படம் எடுத்து கணவனுக்கு அனுப்பினாள்.
இரவு உணவை முடித்துவிட்டு ஓய்வாக இருந்த மன்னர் கையிலே போனை வைத்திருந்தான். மனைவி அனுப்பிய அடுத்த நொடி பார்த்திருந்தான்.
பார்த்த நொடி பரவசம் அவனுக்குள்…. என் உயிர் என்ற பூரிப்பு கண்ணீர் துளிர்க்க செய்தது.
உடனே அழைத்துவிட்டான் மனைவிக்கு.
ஆச்சரியமா இருக்கு? சிலுப்பிக் கொண்டாள்.
இன்னைக்கு டெஸ்ட் பண்ணியா?
ஏன்?
கேட்டேன்.
இல்லையே… முந்தாநாள் டெஸ்ட் பண்ணினது தான்.
நான் போலீஸ்காரன்டி கடுகடுத்தான்.
அவள் மௌனமாய் இருந்தாள். மாட்டிக் கொண்ட உணர்வு.
நான் வாங்கினது “அப்பலோ கிட்” இது “ஐ செக் “பிராண்ட்.
போலீஸ்கிட்ட மாட்டிகிட்டோமே….. நகம் கடித்துக் கொண்டிருந்தாள்.
இன்னைக்கு ஏன் செக் பண்ண?
இல்ல அக்காங்க தான்….
ஏன் பார்க்கலைனா அவங்களுக்கு தலை வெடிச்சிடுமா?
——– தொடரும்———-
error: Content is protected !!