Skip to content
Post Views: 6,161
“அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு
மு.வ விளக்க உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.”
தனதறைக்கு வந்த தேவ ரஞ்சனாவிற்கு உலகம் தட்டாமலை சுற்றியது.
அதிரனின் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளுக்குள் சொட்டு சொட்டாய் இறங்கும் உணர்வு தேவாவிற்கு.
Advertisement
அவள் வயது பெண்களெல்லாம் குழந்தைக்கு தாயாகவே மாறியிருக்க அவளுக்கு மட்டும் அந்த வயதிற்கான ஆசைகளெல்லாம் இல்லாமலா போய்விடும்.
சாதாரண ஏக்கங்கள் ஒரு மனித உயிருக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை அன்பைத் தேடாத மனம் தான் இங்கு ஏது?
ஆனால் அவளுக்கென வரும் குடும்பத்தில் அவினாஷின் நிலை என்ன என்பது தான் அவளின் ஒரே கேள்வியாய் இருக்கும்.
Advertisement
தம்பி நன்றாகப் படித்து அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் அதுவே தனக்கும் போதுமானது என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழும் நடுத்தர குடும்பத்து பெண்ணான தேவாவிற்கு அதிரன் போன்ற ஒருவன் தன்னைப் பிடித்திருப்பதாய் கூறுவது எப்படி பித்து கொள்ளச் செய்யாமல் போகும்.
Advertisement
பணக்கார வர்க்கத்தின் ஆணழகன் அவன். முதலாளியாய் பார்த்த போது கருத்தில் பதியாததெல்லாம் இந்த அரை மணி நேரத்தில் மூளைக்குள் வெட்டிச் செல்கிறது.
காத்யாயினியைப் பார்த்த அன்று இவரா தன்னிடம் திருமணப் பேச்சை எடுத்தது என்று உள்ளுக்குள் சிறு அதிர்ச்சி எழுந்திருந்தது தேவாவிற்கு.
தன் குடும்ப உறுப்பினர்களே தன்னை நல்ல விதமாய் நடத்துவதில்லை ஆனால் அவர் பையனுக்கு பெண் கேட்கும் அளவிற்கு பரந்த மனப்பான்மையோடு இருக்கிறாரே என்று யோசித்தாள்.
Advertisement
ஆனால் இப்போது அவள் சிந்தை மொத்தத்தையும் ஒருவன் மொத்தமாய் சுருட்டி அவன் கைக்குள் வைத்திருக்கிறான்.
ஒரு ஆண் எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்று கூறுவது எப்படியான உணர்வுகளைத் தரும் என தனது இருபத்தி ஏழாவது வயதில் உணர்கிறாள் தேவ ரஞ்சனா.
காலை வரை தவறாகத் தெரிந்த அவனின் அணைப்பு இப்போது வேறு ஏதோ உணர்வுகளைக் கொடுத்தது.
என்ன நடக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் புரியாதவளாய் அப்படியே அமர்ந்திருந்தாள்.
சற்று நேரத்தில் ஒரு வேலை விஷயமாய் வசந்த் வந்து அவள் சிந்தனை கலைத்த போது தான் அலுவலகம் என்பதை உணர்ந்து அவசர அவசரமாய் அன்றைய வேலைகளில் கடினப்பட்டு தன் கவனத்தை திசை திருப்பியிருந்தாள்.
அதிரன் அதன் பின் தேவாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அவள் யோசித்து தெளிந்து வரட்டும் என பொறுமையாகவே இருந்தான்.
இரு தினங்கள் கடந்திருக்க வேலை விஷயத்தை தவிர தேவா அதிரனிடம் எந்த பேச்சையும் எடுக்கவில்லை.
ஆனால் தன்னருகில் அவளின் பதட்டம் இன்னும் அதிகரித்திருப்பதே அவளை இன்னுமாய் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அதிரனுக்கு கொடுத்தது.
அறையின் அமைதியையும் அவனின் மோன நிலையையும் கலைப்பதற்கே வந்து சேர்ந்திருந்தான் வினித்.
“ஹாய் மச்சி..”, என்றவன் உள்ளிருந்த தேவாவைப் பார்த்து புருவம் உயர்த்திய வண்ணம் அதிரனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
“ஹாய் ங்க..”, என்றதில் தேவா தன்னிடமா பேசுகிறான் என்ற தோரணையில் பார்த்து பெயருக்கு புன்னகைத்து வைத்தாள்.
“ஓகே தேவா மீதியை அப்பறம் பார்க்கலாம்.”
“ஓ தேவா? நல்ல பேர். முழு பேர் என்னங்க?”, என்றதில் அதிரன் வெளிப்படையாகவே நண்பனை முறைத்தான்.
“அவன் அப்படி தான் நீங்க சொல்லுங்க?”
“தேவ ரஞ்சனா.”, என்றவள் நிற்காமல் அங்கிருந்து நகர எத்தனிக்க வினித்தோ,
“நைஸ் நேம். பை தேவா..”, என்றதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் வெளியேறியிருக்க அதிரன் மார்பின் குறுக்கில் கைகளைக் கட்டிய படி நண்பனைப் பார்த்திருந்தான்.
“என்ன மச்சி பாசமா பார்க்குற?”
“உன்னோட இந்த விளையாட்டெல்லாம் ஆபீஸுக்கு வெளியில் வைச்சுக்கோ. என் பக்கத்தில் இருக்கும் போது நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும்.”
“சரி சரி டென்ஷன் ஆகாத. நான் வந்ததே இந்த சண்டே நாம இரண்டு பேருமா லஞ்ச் போலாம்னு சொல்றதுக்கு தான். நோ எக்ஸ்க்யூஸ்.”, என்றதற்கு அமைதியாய் ஆமோதித்து தலையசைத்தான்.
அந்த ஞாயிற்றுக் கிழமை நண்பனோடு மதிய உணவிற்காக அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்தான் அதிரன்.
இருவரும் மட்டுமாய் சில பல கதைகளைப் பேசிய படி உணவை உண்டு கொண்டிருக்க சிருஷ்டியும் அவளது தோழிகள் இருவரோடு அங்கு வந்திருந்தாள்.
அதிரன் அவளைப் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் தன் போக்கில் உண்டு கொண்டிருக்க வினித் தான் அவளைப் பார்த்து விட்டு கையசைத்தான்.
“ஹே ஹாய் வினித்.”
“சிருஷ்டி எவ்வளவு நாள் ஆச்சு பார்த்து. எப்படியிருக்க?”
“ஐ அம் குட் நீ எப்போ இங்கே வந்த?”
“ஜஸ்ட் வெக்கேஷன்காக வந்தேன் சீக்கிரமே கிளம்பிடுவேன். அண்ட் இது என் ப்ரெண்ட்..”
“தெரியுமே மிஸ்டர் அதிரனை தெரியாதவங்க இருக்க முடியுமா?”
“ஓ இரண்டு பேருக்கும் ஏற்கனவே தெரியுமா? என்ன அதி?”
“ம்ம் கயல் காயூவோட ஃபேமிலி ப்ரெண்ட்..”
“அவ்ளோ தானா மிஸ்டர் அதிரன்?!”
“வேற என்ன?”
“என் இன்டென்ஷன் என்னனு உங்களுக்குத் தெரியாதுனு சொன்னால் குழந்தை கூட நம்பாது.”
“..”
“சோ எல்லாம் தெரிஞ்சும் என்னை இன்சல்ட் பண்ணிருக்கீங்க..”
“லிசன் நானா உங்ககிட்ட வந்து பேச முயற்சி பண்ணலை. அண்ட் என் சைட்ல இருந்து எந்த விதமான விருப்பங்களையும் யாரும் சொல்லல.
நீங்க மனசில் நினைக்குறதுக்கு எல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்?”
“ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு உங்களுக்குத் தெரியலை அதிரன்.”
“எனக்குத் தேவையில்ல. நான் இப்படி தான். எதையும் ஒளிவு மறைவில்லாம பேசுறதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனை இருந்தா நான் என்ன பண்றது?”
“ஹே கைஸ் என்ன நடக்குது இங்கே?”
“லீவ் இட் வினித். பட் உனக்கு இவர் ப்ரெண்ட்னு சொன்னா நம்பவே முடியலை.”, என்றவள் மேலும் இரண்டொரு வார்த்தை பேசி விட்டு கிளம்பியிருந்தாள்.
“என்ன டா பண்ணித் தொலைச்ச?”
“கடுப்பேத்தாத டா. அவளுக்கு ஒத்து வருவேனா மாட்டேனானு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினா. ஒத்து வரலைனு இப்போ புரிஞ்சுடுச்சு.”
“டேய் டேய் ஏன் டா இப்படி இருக்க நீ?”
“நான் கரெக்டா தான் இருக்கேன். நீங்க எல்லாரும் தான் எதோ ஒரு உலகத்தில் இருந்து வந்த மாதிரி இருக்கீங்க.”
“லவ் கல்யாணம் இதையெல்லாம் பத்தி யோசியேன். இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போற?”
“இப்படியே இருக்க போறேன்னு நான் சொன்னேனா?”
“உன்ட்ட மனுஷன் பேசுவானா போடா..”, இப்படியாய் வினித்தை மொத்தமாய் கடுப்பேற்றிய படி உணவை முடித்து இருவருமாய் கிளம்பியிருந்தனர்.
பாதி வழியில் ஒரு ஹோட்டல் முன்பு தேவ ரஞ்சனாவும் அவினாஷும் நின்றிருக்க யாரோ ஒருவன் எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.
தேவா கோபமாய் ஏதோ பேசிக் கொண்டிருக்க அவினாஷ் கடுப்பாய் நின்றிருந்தான்.
தலையிட வேண்டாம் என்று அதிரன் நினைக்க அதற்குள் வினித் தேவாவைப் பார்த்து விட்டு அதிரனுக்கு குரல் கொடுத்தான்.
“டேய் உன் எம்ப்ளாயி தேவ ரஞ்சனா தான அது..”
“…”
“ஏதோ பிரச்சனை போல வா எதுவும் ஹெல்ப் வேணுமானு கேட்போம்..”
“இதான் எனக்கு வேலையா? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?”
“டேய் பொது இடத்துல ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஒரு வார்த்தை கேட்டா குறைஞ்சு போயிடுவியா நீ..”
“..”
“வண்டியை நிறுத்து அதி..”, என்றதில் அவர்கள் அருகில் காரை அதிரன் நிறுத்தியிருக்க வினித் கார் கண்ணாடியை கீழேயிறக்கிய படி தேவாவிடம்,
“ஹாய் மிஸ் தேவா என்னாச்சு எதுவும் பிரச்சனையா?”, என்றதில் மூவருமாய் காரின் புறம் பார்வையைத் திருப்பியிருந்தனர்.
“சார் அதெல்லாம் எங்க குடும்ப விஷயம். நீங்க யாரு?”
“குடும்ப விஷயமா இருந்தாலும் இது பொது இடம் யார் வேணாலும் கேட்க தான் செய்வாங்க.
தேவா என்னாச்சு?”, என்ற போது அவளின் பார்வை அதிரனிடம் செல்ல அவனோ வினித் அவளிடம் சாதாரணமாய் பேசுவதைப் பார்த்து பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“ஒண்ணுமில்ல சார். நீங்க கிளம்புங்க..”
“!!!”
“சார்..”, என்றவளுக்கு அவளறியாமலேயே அதிரனிடம் விஷயத்தைக் கூறாமல் வினித்திடம் விளக்கம் கூறுவதில் தயக்கம் எழுந்திருந்தது.
அவளின் தவிப்பான பார்வையில் என்ன உணர்ந்தானோ அதிரன் சட்டென காரில் இருந்து இறங்கி வெளியே வர வினித் என்னவென்று புரியாமல் அவனுமாய் இறங்கினான்.
அதிரனை ஒரு நொடி பார்த்தவள் வினித்திடம் கூறுவது போல் விஷயத்தைக் கூறியிருந்தாள்.
“பிடிக்கலைனு சொன்னப்பறம் எப்போ பார்த்தாலும் வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்.”
“என்ன அவங்க தான் தெளிவா சொல்றாங்கல. போலீஸை கூப்பிடணுமா?”
“என்ன டி என்னைப் பிடிக்கலை கல்யாணம் பிடிக்கலைனு சொல்லிட்டு இத்தனை பேரை துணைக்கு வைச்சுருக்க?
பெரிய ஆளு தான்.”, என்றதில் தேவாவின் முகம் பார்த்திருந்த அதிரன் யோசிக்காமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
வினித்தும் அவினாஷும் அரண்டு போய் நிற்க தேவாவோ மொத்தமாய் உறைந்து போனாள்.
“இன்னொரு தடவை உன்னைப் பார்த்தேன், அப்பறம் நடக்குறதே வேற..”, என்றவன் எப்போதும் போல் இரண்டு கரங்களையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டு நிமிர்ந்து நிற்க அவனோ விட்டால் போதுமென நகர்ந்திருந்தான்.
“இவ்வளவு தான் அவனுக்கான பதில். அதை விட்டுட்டு பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணக் கூடாது. பார்த்து போங்க வீட்டுக்கு.”, என்றவன் அவினாஷைப் பார்த்து கூறிவிட்டு காருக்குள் சென்று விட வினித் தேவாவை சமாதானப் படுத்தி விட்டு நண்பனோடு கிளம்பியிருந்தான்.
“அக்கா என்னக்கா பொசுக்குனு கையை நீட்டிட்டாரு!!!”
“…”
“யப்பா ஒரு செகெண்ட் எனக்கு காது செவிடான மாதிரி இருக்கு.”, என்றவனோடு அமைதியாய் கிளம்பியிருந்தாள் தேவ ரஞ்சனா.
error: Content is protected !!