Skip to content
Post Views: 5,695
“பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
மு.வ விளக்க உரை: ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.”
வந்திருந்தவர்களின் வாயை அடக்குவது பெரும் வேலையாய் இருந்தது காத்யாயினிக்கு. மாலை அனைவரும் கிளம்பிய பின்னர் தான் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது அவருக்கு.
மகள்களின் குடும்பம் மட்டும் இரவு அங்கு தங்கியிருக்க அவினாஷையும் சாருகேஷையும் அவனது அறைக்குள் அனுப்பியிருந்தார்.
Advertisement
தேவா தயாராகி முடித்து மாமியாரைத் தேடி அவர் அறைக்குச் சென்றாள்.
“என்ன தேவா! நான் தான் கயல்கிட்ட எல்லாம் சொல்லிட்டு வந்தேனே? இங்கே ஏன் வந்த நீ?”
“இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆசீர்வாதம் பண்ணுங்க மா..”, என்றவளின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தவராய் ஒன்றும் பேசாமல் போய் வருமாறு தலையசைத்து அனுப்பி வைத்தார்.
Advertisement
கயலும் காயத்ரியும் தேவாவை கேலி பேசியே வராத பதட்டத்தை எல்லாம் வர வைத்திருந்தனர்.
Advertisement
அதிரனைத் தெரியும், ஸ்பரிசங்கள் புதிதில்லை தான். அதிலும் நேற்றைய அவனின் முத்தத்தின் வேகமே அவனைப் பற்றி தெளிவாய் உணர்த்தியிருந்தது தான்.
ஆனாலும் எந்தப் பெண்ணுக்கும் இருக்கும் இந்த நிமிடங்களுக்கான பயம் தேவாவுக்குமே இருந்தது. அதிரனின் அறைக்கு உள்ளே தேவா வந்த நேரம் அதிரன் கட்டிலில் தான் அமர்ந்திருந்தான்.
பட்டு வேட்டியில்லாது காட்டன் வேட்டியும் மெலிதான காட்டன் குர்தாவுமாய் கால்களில் முழங்கையை வைத்து கரங்களைக் கோர்த்த படி முன் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
Advertisement
தேவா அவனருகில் வந்த பின்னும் அவன் அப்படியே அமர்ந்த வண்ணம் விழி மட்டும் நிமிர்த்தி மனைவியைப் பார்த்து வைத்தான்.
தானாகவே பால் சொம்பை அருகிலிருந்த மேஜையில் வைத்தவள் அவன் பாதம் பணிந்திருக்க இதை எதிர்பாராதவனாய் சட்டென எழுந்து அவளையும் கரம் பற்றித் தூக்கியிருந்தான்.
“என்ன பண்ற நீ?”
“சம்பிரதாயத்துக்காக பண்ணல. மனசார தோணிச்சு.”
“நீ உட்காரு முதல்ல..”, என்றவன் அவளோடு சிறிதும் இடைவெளியின்றி கட்டிலில் அமர்ந்து அவளது கரத்தை எடுத்து தன்னோடு கோர்த்துக் கொண்டான்.
“அழகாயிருக்க டி ரஞ்சு.”, என்றதில் புன்னகைத்தவள் அதிரனின் முகத்தை வழித்து இரு கரங்களால் திருஷ்டி கழித்தாள்.
“வேஷ்டி சட்டை ரொம்ப அம்சமா இருக்கு உங்களுக்கு.”
“பொண்டாட்டி சைட் எல்லாம் அடிச்சாளே அதான் அந்த கெட்டப்லேயே இருந்துட்டேன்.”
“…”
“என்கிட்ட ஏன் இவ்வளவு டென்ஷன்?”
“நீங்க தான் டென்ஷன் பில்டப் பண்ணி வைச்சுருக்கீங்க..”, என்றவளுக்கு வார்த்தைகள் தந்தி அடிக்காத குறை.
“சரி விடு டென்ஷனைக் குறைச்சுடலாம்.”, என்றதில் வேகமாய் திரும்பி அவன் முகம் பார்க்க கண் சிமிட்டியவனாய் எழுந்து சென்று டீவி ரிமோர்ட்டை எடுத்து வந்தான் அதிரன்.
அங்கிருந்த ஸ்பீக்கரை எல்லாம் கவனித்தவள் அப்போது தான் அவன் கூறியது நினைவு வரப் பெற்றவளாய் அகல விரித்த கண்களோடு,
“அதி நோ…”
“என்ன நோ. இனி தினமும் இது தான் நான் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை.”, என்றவன் பாடலை ஒலிக்க விட அறை நிறைத்த இசையில் பலவித உணர்வுகள் தேவாவினுள்.
அதிரன் தனது இரு கரங்களையும் நீட்ட அவனது விழிகளைப் பார்த்த வண்ணம் தனது கரங்களைக் கொடுத்த நொடி அதைப் பற்றி தன்னருகில் இழுத்து அவளைச் சுற்றியிருந்தான் அதிரன்.
“ஹ்ம்ம்…முன்னும் பின்னும் தொட
முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் செய்தி
புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கின்றதே
ஹை ராமா ஓர் வாரமா
கண் மூட வில்லை உன் ஞாபகமா”
உண்மையில் தேவா ஆடவில்லை அதிரன் அவளை ஆட்டு வித்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.
தேவாவின் விழிகள் கணவனின் விழிகளை விட்டு நகராது இருக்க அதிரன் அவளைத் தன் கைப்பாவையாய் இயக்கினான்.
முன்னும் பின்னுமாய் சுற்றுவதில் முத்தங்கள் கணக்கில்லாமல் தேவாவின் உடல்தனில்.
அதிலும் அவனின் பிடித்தமான அவளின் கழுத்தெலும்பும் மச்சமும் அதிக முத்தங்களைப் பெற்று பெண்ணவளை நிலை குலைத்துக் கொண்டிருந்தது.
பாடல் முடியும் நொடி வலது கையால் தேவாவை தனது இடது புறம் சரித்து இடையில் கை வைத்துப் பிடித்திருந்தவனின் புஜத்தைப் பற்றிய படி அவனையேப் பார்த்திருந்தாள் தேவா.
“டென்ஷன் போச்சா இல்ல அடுத்த சாங்?”
“ப்ளீஸ் நோ அதி..”, என்றவள் அவனை அணைத்துக் கொள்ள முகம் கொள்ளாப் புன்னகையோடு அதிரன் மனைவியை அணைத்துக் கொண்டான்.
“ஷல் வி?”
“…”
“சே யெஸ் ரஞ்சு..”, என்றவன் சிரிக்க அவனது பக்கவாட்டிலிருந்து தலையை நகர்த்தியவள் கண் சிமிட்டியதே தெரியாத படி தனது சம்மதத்தைத் தெரிவித்திருக்க எப்போது அதிரனின் பிடிக்குள் வந்தாள் என்பதே தெரியாமல் போயிருந்தது.
வழக்கம் போல் அவனின் கண்களை எதிர் கொள்வதில் இப்போது தேவாவிற்கு வெட்கம் தடுக்க அதிரனின் ஆளுமை மேலுமாய் பதட்டப்படுத்தியது.
ஆடைகளுக்கு விடுதலை கிடைப்பதற்குள்ளே அதிரனின் பொறுமையை சோதித்திருந்தவள் தன்னவனின் ஒவ்வொரு நகர்விலும் தவித்து தான் போனாள்.
“அதி..”
“ஏன் இவ்வளவு பயம்?”
“…”
“உனக்கு மட்டுமான அதிரன் தான..”
“..”
“ரஞ்சு இப்படி ஒரு பச்சை மண்ணுனு தெரியாம போச்சே?”, என்றதில் அவனை வலிக்கக் கிள்ளியிருந்தாள்.
“இங்கே இன்ட்ரோவெர்ட் யாருனு சத்தியமா தெரியலை டி..”
“நீங்க இன்ட்ரோவெர்ட்டா.. இதெல்லாம்..”
வாய் ஓயாத உளறல்களும் உடல் கூசச் செய்யும் பார்வைத் தீண்டல்களுமாய் ஒவ்வொரு நொடியும் உயிர் போய் வந்ததான நிலை தான் தேவாவிற்கு.
பெண்மையின் மென்மைகள் எல்லாம் களவாடப்பட்டிருக்க கணவனின் முகம் காட்டும் பாவனைகளில் இரத்த ஓட்டம் எக்குத் தப்பாய் எகிறியிருந்தது பெண்ணவளுக்கு.
ஈருடல் ஓருயிரென மாறிய பொழுது தேவாவின் கண்ணீர் கணவனின் திண்ணிய மார்பின் வேர்வைத் துளிகளோடு கரைந்து தான் போனது.
சில நொடிகள் அமைதியில் கரைய அதிரன் தேவாவின் புறம் திரும்பியதில் சட்டென அவன் மார்பிற்குள் தலை சாய்த்துக் கொண்டாள்.
“பேசுற பேச்சுக்கெல்லாம் குறைச்சலேயில்ல. ஆனால்..”
“அதி.. ப்ளீஸ்..”
“நீ இன்னும் என்னோட முழுசா கம்போர்டபிள் ஆகலையா ரஞ்சு..”
“அப்படியெல்லாம் இல்ல. இது.. இது யாருக்கும் இருக்குறது தான..”
“கரெக்ட் தான் நீ ஓகே தான.?”
“ம்ம்..”
“ஐ அம் அப்ஸெஸ்ட் (obsessed) ஆன் யூ ரஞ்சு.”, என்றவன் நெற்றியில் இதழ் பதித்திருந்தான்.
“நானும் தான் பேரழகா..”, என்றதில் அதிரனின் முகத்தில் சிறிதான வெட்கப் புன்னகை.
“அப்பறம் ஏன் டி பயமுறுத்தின? ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருந்தேன் தான?”
“இரண்டு மாசம் சுமந்த நல்லவன் பட்டத்துக்கு பதில் இப்படியிருக்கும்னு நான் நினைக்கலை. நிஜமாவே..”
“உங்க வீட்டில் வைச்சு கொடுத்தியே ஒரு முத்தம். அப்போ விழுந்தவன் தான்..”
“அந்தப் பாட்டை வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன்.”
“சரி பாட்டு எப்படியிருந்ததுனு சொல்லவே இல்லையே?”
“ரம்மியம்..”, என்றவள் மீண்டுமாய் அவனுள் புதைந்து கொண்டாள்.
“ஆ. என்ன டி பண்ணி வைச்ச எரியுது..”, என்றவன் லேசாய் கத்த பதட்டமாய் தலையை நிமிர்த்தியவள் என்னவென ஆராய மனைவியைப் பார்த்து கண் சிமிட்டியவனாய்,
“சும்மா.. டென்ஷன் ஆகாத.. இதெல்லாம் வீரத் தழும்பு டி வலிக்காது..”
“மோசம்.. ரொம்ப மோசம் நீங்க..”
“இருந்துட்டு போறேன். இருக்குற ஒரு பொண்டாட்டிட்ட மோசமா இல்லாம..”
“போதும் போதும். நான் என்னலெல்லாமோ பேசனும்னு வந்தேன்.”, என்றதில் கேலியாய் சிரித்தான் அதிரன்.
“இந்த மருதாணியில் உங்க பேரைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்.”
“என்ன டி இந்த நேரத்தில் இப்படி ஒரு டாஸ்க்.”
“இதில் தான் ஆரம்பிச்சுருக்கணும். ஆனால் இங்கே எல்லாம் தலைகீழா இருக்கு.”
“சரி இரு லைட் போடுறேன் ஒண்ணுமே தெரியலை..”
“ஐயோ அதி..”, என்றவள் இருக்கும் நிலையுணர்ந்து கத்தி விட சத்தமாகவே சிரித்திருந்தான் அதிரன்.
“ஷ்.. பக்கத்து ரூமில் தான் அண்ணி இருக்காங்க. நாளைக்கு என் மானமே போயிடும்ங்க.”
“இதெல்லாம் இப்போ என்ஜாய் பண்ணாம எப்போ பண்றது?”
“…”
“தூங்கு திமிரழகி.. கண்ணு சொக்கிப் போய் இருக்க..”, என்றவன் தன்னோடு சேர்த்தணைத்துக் கொள்ள அதிரனின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தவளின் கண்கள் வேறு பாஷை பேசியது.
“நானே இப்போ தான் நல்லவனா யோக்கியனா பேசினேன். உனக்குப் பொறுக்கலையா?”
“உங்க கண்ணில் கொஞ்சம் கூட தூக்கக் கலக்கம் இல்ல.எனக்கும் தூக்கம் எல்லாம் வரல..”
“நீயா வந்து மாட்டிக்காத டி ரஞ்சு..”
“இந்த அதிரன் அநியாயத்துக்கு மயக்கினால் நானும் தான் என்ன பண்ண?”, என்றவளின் மீதான அடுத்த கட்டத் தேடலை அவன் தொடங்கியிருக்க முதல்முறையின் தவறுகளெல்லாம் திருத்தப்பட்டு பரீட்சைகள் முதல் வகுப்பில் தேர்ச்சி முடிவுகளைப் பெற்றிருந்தன.
காலை தேவா கண் விழிக்கும் எண்ணமே இல்லை என்பதான தூக்கத்தில் இருக்க அவள் சிறிது அசைந்து படுத்ததில் தான் அதிரன் கண் விழித்திருந்தான்.
கலைந்திருந்த கூந்தல் பாதி முகத்தை மறைத்த படி உறங்கிக் கொண்டிருந்தவளின் முடிகளை ஒதுக்கி விட்டவனாய் காதில் விரல் கொண்டு வருட முகத்தை கழுத்தோடு வளைத்த வண்ணம் நேராகப் படுத்தாள் தேவா.
“குட்மார்னிங் பாட்டு வேண்டாமா பொண்டாட்டி?”
“ராத்திரி போட்ட ஒரு பாட்டுக்கே நான் இந்த நிலைமையில் இருக்கேன் அதி..”, என்றவளுக்கு எத்தனை முயன்றும் விழிகளைத் திறக்க முடியவில்லை.
அதிரனுக்கு முதுகு காட்டி அவள் படுக்க முதுகோடு அணைத்துக் கொண்டவனாய் கன்னத்தில் இதழ் பதித்து புன்னகைத்தான்.
“உன் அண்ணிங்க வந்து கதவைத் தட்டினால் தான் எழுந்துக்க போறியா ரஞ்சு?”, என்றவனின் கேலியில் பட்டென கண் விழித்திருந்தாள் தேவா.
“ஐயோ நேரமாச்சா?”, என்றவள் தனது கைப்பேசியைத் தேட அவளது கன்னத்தை அழுத்திப் பிடித்து தன்னைப் பார்க்க வைத்தவன்,
“ஓவர் அழகா இருக்கியே திமிரழகி..”
“புருஷன் அளவுக்கதிகமா ரொமேன்ஸ் பண்றது தான் காரணம்.”, என்றவள் தலைக்கு போட்டிருந்த கிளிப்பைத் தேட கண்ணுக்கும் கைக்கும் எட்டும் தூரத்தில் எதையும் காணாமல் கணவனை முறைத்து வைத்தாள்.
“மனுசன் நிலைமை தெரியாம இத்தனையை போட்டுட்டு வந்தது உன் தப்பு..”
“ஐயோ வாயை மூடுங்க..”, என்றவள் அவன் தோளில் ஒட்டியிருந்த தனது பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு அவனிடமிருந்து தப்பித்து ஓடத் தயாரானாள்.
error: Content is protected !!