Skip to content
Post Views: 6,085
“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
மு.வ விளக்க உரை: இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.”
நேர்முகத் தேர்வு நடத்தியதில் சீனியர் ஒருவர் அதிரனின் முன் வந்து அமர்ந்திருந்தார்.
“சார் எல்லாருமே நல்ல தேர்வா தான் இருக்காங்க. ஆனால் விக்ரம்ங்கிறவர் இதுக்கு மோஸ்ட் எளிஜிபில்னு தோணுது.”
Advertisement
“வாட் அபௌட் தட் கேர்ள்?”, என்றதில் வசந்த் தன்னை மறந்து முதலாளியைத் திரும்பி பார்த்தான்.
“படிப்பு வேலைத் தகுதி எல்லாம் பார்த்தா எந்தக் குறையும் சொல்ல முடியாது தான் சார். ஆனால் பண விஷயத்தை அவங்களை நம்பி ஒப்படைக்குறது…”
“சோ அவங்க சொன்ன மாதிரியே பொண்ணுங்கிற ஒரு காரணத்துக்காக நாம அவங்களை ரிஜெக்ட் பண்றோம். அப்படி தான?”
Advertisement
“சார்.. அது.. அப்படியெல்லாம் இல்ல.”
Advertisement
“அவங்க இப்போ வேலை பார்த்துட்டு இருக்குற இடத்துக்கு கால் பண்ணி ஜெனரலா ஒரு ஃபீட் பேக் வாங்குங்க.”, என்றதில் அவள் குறிப்பிட்டிருந்த கல்லூரி பெயரைப் பார்த்து தெரிந்தவர்களை வைத்து விசாரிக்க திருப்தியாகவே இருந்தது.
“அப்பறம் என்ன அப்பாயிண்ட் ஹெர்.”
“ஓ.. ஓகே சார்.”
Advertisement
“அண்ட் ஆஸ்க் ஹெர் டு மீட் மீ.”, என்றதில் வசந்த் நெஞ்சில் கை வைத்து விட்டிருந்தான்.
தேவ ரஞ்சனாவிற்குமே தான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியம் தான்.
தேவையான பார்மாலிட்டிகளை முடித்து விட்டு அதிரனை சந்திப்பதற்காக அவனது அறை வாசலில் காத்திருந்தாள்.
ஐந்து நிமிடங்களில் வசந்த் வந்து அவளை உள்ளே வருமாறு அழைக்க எப்போதும் போல் தலை நிமிர்த்தி நடந்தவளிடம் சிறு பதட்டம் கூட தென்படவில்லை.
“குட்மார்னிங் சார்.”, என்றதற்கு தலையசைத்தவனாய் தன் முன்னிருந்த தாள்களில் கையெழுத்து இட்டு முடித்து அவளைப் பார்த்து நிமிர்ந்தான் அதிரன்.
“வெல்கம் ஆன் போர்ட்.”
“தேங்க் யூ சார்.”
“இன்டர்வுயூல பேசினதெல்லாம் ஓகே தான். பட் அதே கான்பிடென்ஸ் வேலையில் எப்பவும் இருக்கணும்.”
“கண்டிப்பா சார்.”
“சோ இப்போ கொடுத்துருக்குற சேலரி உங்களை சோஷியல் சர்வீஸ் பண்ண வைக்குறதா யோசிக்க வைக்கலை தான?”
“அஃப்கோர்ஸ் இல்ல. அண்ட் இதில் ஒவ்வொரு ரூபாய்க்குமான என் உழைப்பு அதை எனக்கு கொடுக்குறது சரி தான்னு புரிய வைக்கும்.”
“க்ரேட் தென். இவர் வசந்த் என்னோட பிஏ நீங்க எந்த நேரமும் எந்த விஷயமானாலும் இவரை கான்டாக்ட் பண்ணலாம்.
அண்ட் வேலை விஷயமா எதுவாயிருந்தாலும் வசந்த் ஆர் என்கிட்ட மட்டும் தான் நீங்க டிஸ்கஸ் பண்ணனும்.”
“புரியுது சார்.”
“ஓகே தென் நீங்க போகலாம். நோட்டீஸ் ப்ரியட் முடிச்சு எப்போ ஜாயின் பண்றீங்கனு அட்மின்ல பேசிக்கோங்க.”
“ஷுவர் தேங்க்ஸ் அகெயின்.”, என்றவள் வெளியே செல்ல நேருக்கு நேராய் தன்னைப் பார்த்து எவ்வித பதட்டமும் இல்லாமல் அவள் பேசியதை மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.
தன்னைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமல் தான் காலையில் தன் தாயிடம் அவள் பேசியிருக்கிறாள் என்பது அதிரனுக்கு புரிந்தது.
திருமணம் என்ற ரீதியில் அவளை அளவெடுத்தால் நல்ல உயரம் மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறம் ஒல்லியும் குண்டுமல்லாத உடல்வாகு. அதிலும் அவள் அணிந்திருந்த சாதாரண சுடிதாரிலேயே ஒரு வித நிமிர்வு இருந்ததாய் தோன்றியது.
ஆனால் பணத்தைப் பொறுத்த வரையில் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம் இருவருக்கும்.
அது மட்டுமே உறுத்தலாய் இருந்தது அதிரனுக்கு. இருந்தும் தாய் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அவளை மருமகளாக்க நினைப்பது ஆச்சரியம் தான்.
இருவருக்கும் ஐந்து வயது இடைவெளி.
தெளிவாக கூற வேண்டுமெனில் திருமண பேச்சை எடுத்து, வந்த முதல் பெண் இவள் தான்.
எனவே சிறிது நாட்கள் அவளைப் பற்றி தெரிந்து கொண்டு முடிவெடுக்கலாம் என்று நினைத்தான்.
தாயிடம் விஷயத்தைக் கூறாமல் சிறிது நாட்களுக்கு திருமணப் பேச்சை தள்ளி வைக்குமாறு கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
மாலை வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் அந்த நேரத்தில் அக்கா வீட்டில் இருப்பதே அரிது என்ற எண்ணத்தில் நேராய் அவளது அருகில் சென்று அமர்ந்தான் அவினாஷ்.
“அக்கா.. பேசினியா?”
“யார்கிட்ட?”
“ப்ச் காலையிலே நம்பர் வாங்கினியே?”, என்றதில் நினைவு வந்தவளாய்,
“ஓ ஆமா பேசிட்டேன்.”
“என்ன சொன்னாங்க?”
“நான் சொல்லிட்டேன் கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் இல்ல. சோ மன்னிச்சுருங்கனு.”
“ஏன் கா இப்படி பண்ண?”
“அவி இங்கே பாரு உன் எண்ணம் சரி தான் ஆனால் நான் அதுக்கு தயாரா இருக்கணும்ல?
அதை விட இந்த காலத்துல யாரும் வர்ற பொண்ணை கட்டுன புடவையோட ஏத்துக்குறவங்க இல்ல.
அந்த அளவு பணமெல்லாம் இப்போ நம்மகிட்ட இல்லை அவி. புரிஞ்சுக்கோ. இதெல்லாம் காலையில் பேச நேரமில்லாம தான் உன்கிட்ட சொல்லல.”
“..”
“அப்பறம் தெரியுமா? எனக்கு புது வேலை கிடைச்சுருச்சு. இனி சாயிந்திரமானா நேரத்துக்கு வீட்டுக்கு வந்துருவேன். நாம இரண்டு பேரும் எங்கேயாவது வெளியே கூட போயிட்டு வரலாம்.”
“க்கா உனக்கு வர்ற நல்ல வாழ்க்கைக்கு இப்போ நான் தான் தடையா இருக்கேன். இல்ல?”
“டேய்?!!”
“பின்ன அவ்வளவு பெரிய குடும்பம் அவங்களுக்கே ஓகேனு சொல்லும் போது நாம வேண்டாம்னு சொல்லிருக்கோம். நம்ம பேக்ரவுண்ட் தெரியாமயா அவங்க ஜாதகம் பார்த்துருப்பாங்க.”
“!!”
“தரகர் கூட சொன்னாரு. ஒரு வேளை இந்த இடம் அமைஞ்சால் உங்க அக்காக்கு யோசம் தான்னு. அவசரப்பட்டு ஏன் க்கா இப்படி பண்ணின.”
“அவி என்னென்னவோ சொல்ற? பணக்காரங்களா? அப்பறம் எதுக்கு நம்மளைத் தேடி வரணும்?
எதுவும் காரணம் இருக்கும் டா. நல்ல வேளை நான் வேண்டாம்னு சொன்னது.”
“க்கா என்னை கடுப்பேத்தாத. எல்லாத்தையும் சந்தேகப் படாத க்கா.. வந்தது ANA க்ரூப் குடும்பம்.”
“என்னது?!!!”, என்றவள் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டிருந்தாள்.
“ம்ம் தரகர் சொன்னவுடனே எனக்கும் இப்படி தான் இருந்தது. என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டாவது பேசிருக்கலாம்ல?!”
“அவி மாப்பிள்ளை பேர் அதிரனா?”
“ம்ம் ஆமா க்கா போட்டோ கூட பார்த்தேன் செம ஹண்ட்சமா இருந்தாரு.”, என்றதில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டிருந்தாள் தேவா.
“என்னக்கா ஆச்சு?”
“டேய் எல்லாம் உன்னால. என்ன பண்ணி வைச்சுருக்க நீ.. நான் இன்னைக்கு அந்த கம்பெனிக்கு தான் இன்டர்வியூக்கு போயிட்டு வந்தேன். அவரையே மீட் பண்ணிட்டு வந்துருக்கேன் டா.”
“என்னது!!! நிஜமாவாக்கா? எப்படியிருக்காரு உனக்கு பிடிச்சுருக்கா?”
“நீ அடி தான் வாங்க போற. அப்போ நான் பேசினது அவங்க அம்மாவா இருக்கும். அவருக்கு விஷயம் தெரிஞ்சா என்னத்துக்கு ஆகுறது.
ஏன் அவி என்னை பாடா படுத்துற.”, என்றவளின் புலம்பலில் அவன் முகம் வாடி விட்டிருந்தது.
“சாரிக்கா..”, என்றவனின் குரலில் தன் கோபத்தை மறைத்தவளாய் தம்பியை சமாதானம் செய்து அனுப்பியிருந்தாள்.
அந்தப் பார்வையின் அளவிடும் நோக்கத்திற்கு காரணம் இப்போது புரிந்தது தேவாவிற்கு.
இதை இப்படியே விடுவது நல்லதில்லை என்று உணர்ந்தவளாய் ஏற்கனவே வாங்கி வந்திருந்த வசந்தின் எண்ணிற்கு அழைத்து மறுநாள் அதிரனை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வேண்டினாள்.
காரணம் கேட்டதில் பர்சனல் என்றதில் வசந்த் குழப்பத்தோடு காலை பத்து மணிக்கு வருமாறு கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான்.
இரவு வீட்டிற்கு வந்த மகனிடம் காத்யாயினி தரகர் முதலில் கொடுத்த பெண்ணின் புகைப்படத்தை நீட்ட கேள்வியாய் தாயைப் பார்த்தான் அதிரன்.
“தரகர் முதல்ல இந்த பொண்ணைத் தான் காட்டினார் அதிரா. எனக்கு தான் அந்த பொண்ணை பிடிச்சது. அவ தான் தெளிவா சொல்லிட்டாளே அதனால இந்த பொண்ணு உனக்கு ஓகே வா பாரு.
நான் அவங்க வீட்டில் பேசுறேன்.”
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மா. இப்போதைக்கு வேற எந்த பொண்ணும் பார்க்க வேண்டாம்.”, என்றதில் மகனை யோசனையாய் பார்த்தார்.
“வேற சில வேலைகள் இருக்கு. ஒரு இரண்டு மாசம் டைம் கொடுங்க. நான் சொல்றேன்.”, என்றதற்கு சரி என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
மறுநாள் காலை அதிரன் அலுவலகத்திற்கு வந்ததும் வசந்த் அவனின் அன்றைய தின வேலைகளைக் கூற ஆரம்பித்தவன் முதல் விஷயமாக தேவா அவனை சந்திக்க வந்திருப்பதாய் கூற புருவம் சுருக்கினான் அதிரன்.
“அவங்க கண்டிப்பா பார்க்கணும்னு சொன்னாங்க சார். பெர்மிஷன் தான் போட்டுருக்காங்களாம். அதான் முதல் அப்பாயிண்ட்மெண்டே…”
“என்ன விஷயமாம்?”
“அது.. பர்சனல்னு சொன்னாங்க சார்..”, என்றதில் அதிரனின் யூகம் தம்பி விவரம் அனைத்தையும் கூறியிருப்பான்.
அதனால் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு திருமணத்திற்கு சம்மதம் கூற வந்திருக்கிறாள் என்பதாய் இருந்தது.
“சரி வர சொல்லு..”, என்றவன் இருக்கையில் நன்கு சாய்ந்து வாசலையே பார்த்த படி இருந்தான்.
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தவளின் பின் வசந்த் வர அதிரன் அவனை வெளியில் இருக்குமாறு கூறிவிட என்ன டா நடக்குது இங்கே என்ற மோடிலில் வெளியேறினான் வசந்த்.
“குட்மார்னிங் சார்..”
“மார்னிங். என்ன விஷயம் பர்சனல்னு சொன்னீங்களாம்?”
“அது..”, என்றவளுக்கு பேச்சை ஆரம்பிப்பதில் சிறு தயக்கம் இருக்க அதை உணர்ந்தவனாய்,
“உங்க தம்பி விவரம் எல்லாம் சொல்லிட்டானா?”, என்றதில் கண்கள் லேசாய் விரிய நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவளாய்,
“ரியலி சாரி. எனக்கு அது நீங்க தான்னு தெரியாது.”
“இட்ஸ் ஓ கே. சோ?”
“நேத்து உங்க அம்மாகிட்ட பேசினது உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். என் முடிவு அது தான்.
பட் நீங்கனு தெரிஞ்ச அப்பறம் நான் பேசினதை சரியா புரிஞ்சுகிட்டீங்களானு தெரியாம உங்களை தினமும் ஃபேஸ் பண்றது எனக்கு கஷ்டம்.”
“!!”
“என் பேச்சே கொஞ்சம் கத்தரிக்குற மாதிரி தான். மத்த படி உங்களையோ உங்க குடும்பத்தையோ அவ மதிக்கணும்னு எல்லாம் என் எண்ணம் இல்ல.
யாருனே தெரியாதவங்கனால் என் பேச்சுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல.
பட் இங்க நான் வேலைக்கு வந்த பிறகு உங்களை சந்திக்கும் போது எந்த டிஸ்டபெர்ன்ஸும் இருக்க கூடாதுனு நினைக்குறேன். ஹோப் நீங்க புரிஞ்சுக்குவீங்க..”, என்றவளின் பேச்சு எப்போதும் போல் சபாஷ் போட வைப்பதாய் இருந்தது.
ஸ்டேடஸ் கௌரவம் என்பதன் நிழலில் அவனும் பொறுப்புகளின் நிழலில் அவளுமான வாழ்க்கை அவர்களைத் திருமணத்தின் நிழலில் இணைக்கும் நேரம் எப்படியானதாய் இருக்குமோ?
error: Content is protected !!