Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-18

தன் நண்பனிடம் தன் காதலை பற்றி மனம் திறந்ததாலோ என்னவோ, வசீகரன் அன்று இரவு நன்றாக உறங்கினான்.

மறுநாள் உற்சாகமாக எழுந்து இவன் கிளம்பி, அலுவலகம் செல்ல தயாராகி வந்தும் கூட, அவனின் பாப்பு எழுதற்கான எந்த அறிகுறியுமே தெரியவில்லை.

“என்னவாயிற்று அவளுக்கு” என்று, அவளின் அறைக்கு சென்று பார்க்க, அவளோ இன்னும் உறங்கி கொண்டு தான் இருந்தாள்.

ஒரு வேளை நேற்று வெயிலில் சுற்றியது உடலுக்கு சேரவில்லையோ என்ற யோசனையுடன் அவளின் அருகில் சென்றான்.



Advertisement

அவளின் நெற்றியில் கை வைத்து, உடல் சூடு ஏதும் இல்லை, என்பதை உறுதி செய்து கொண்டவன், “அப்போ வெறும் அசதி தான், தூங்கட்டும்” என்று எண்ணம் கொண்டு, வந்த வழியே திரும்பினான் வசீகரன்.

காலை உணவை முடித்தவன், பொன்னம்மாவிடம், உமையாள் உறங்குவதாகவும், எழுந்தால் இன்று தான் வீட்டிலே ஓய்வு எடுக்க சொல்லியதாகவும், அவளிடம் சொல்லுமாறு சொல்லிவிட்டு, அலுவலகம் கிளம்பி விட்டான் வசீகரன்.

அலுவலகம் சென்றவன், நேற்று தாங்கள் மூவருமே வெளியே சென்றதால், நிறைய வேலைகள் தேங்கி இருக்க, அந்த வேலைகளில் தன்னை மூழ்கடித்து கொண்டான் வசீகரன்.

Advertisement

வெளிநாட்டு வாடிக்கையாளர்களை வழியனுப்பி வைக்க பாலா சென்றிருக்க, ஏதோ முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று, கிருஷ்ணா அவனின் தந்தையின் அலுவலகத்திற்கு சென்றிருந்தான்.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

வசீகரன் அலுவலகம் கிளம்பி சென்ற ஒரு மணி நேரத்தில் துயில் கலைந்த உமையாளோ நேரத்தை பார்த்து பதறி, தன்னை எழுப்பி விடாத வசீகரனை வசைப்பாடி கொண்டே ,அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாரானாள்.

பொன்னம்மா, வசீகரன் சொல்லி சென்றதை எடுத்து சொல்லியும், உமையாளோ பிடிவாதமாக அலுவலகம் சென்றே ஆவேன் என்று வீம்பாகவே அலுவலகம் கிளம்பினாள்.

தனது பிரிவிற்கு சென்றவள், நேரம் கழித்து வந்ததற்கு தன்னுடைய மேனேஜர் திட்டுவார் என்று எதிர்பார்க்க, அவரோ இவளை பார்த்து ஆச்சரிய பாவத்தை காட்டி,

“உமையாள் நீங்க இன்னைக்கு லீவ்னு எனக்கு மெயில் வந்ததே” என கேட்க, உமையாளோ,

“மெயில் எதும் நான் அனுப்பலையே சார், உங்களுக்கு யார்கிட்ட இருந்து மெயில் வந்துச்சு”

“வசீகரன் சார் கிட்ட இருந்து தான்” என்று சொல்ல, இவளோ மனதிற்குள் அவனை நினைத்து பல்லை கடிக்க, இது புரியாத அவளின் மேனேஜரோ,

“நீங்க இப்போ ஆபிஸ் வந்தது சாருக்கு தெரியுமா, இல்லைனா, நீங்களே போய் இன்பார்ம் பண்ணிட்டு வந்துடுங்க உமையாள்” என்று சொல்ல, மறுக்க முடியாமல் வசீகரனின் அறை இருக்கும், அலுவலக கட்டிடத்தை நோக்கி சென்றாள் உமையாள்.

பாலா அப்போது தான், அவனின் பொறுப்பில் விடப்பட்டு இருந்த, வெளிநாட்டு வடிகையாளர்களை பொறுப்பாக விமானம் ஏற்றி அனுப்பிவைத்து விட்டு அலுவலகம் வந்தான்.

பாலா, தங்களின் தளத்திற்கு செல்ல மின்தூக்கியில் ஏறி, தளம் வந்ததும் வெளியே வர, அதே நேரம் மின்தூக்கியில் ஏற அங்கு வந்தாள் அழகி.

அழகியை பார்த்ததும் பாலா, தானாகவே மலர்ந்த புன்னகையுடன், “ஹாய் அழகி” என, அவளோ சிறு தடுமாற்றத்துடன்,

“ஹாய் பாலா சார்”

“ஆமா முந்தின நாள் ஏன் வரல நீ, அன்னைக்கு கிளைன்ட் விசிட் தெரியும் தானே, அதைவிட உனக்கு என்ன அப்படி முக்கியமான வேலை” என பாலா இயல்பாக கேட்க, அவளோ,

“அது…… அது வந்து…… வந்து……” என ஏகத்துக்கும் தடுமாற, இப்போது தான் அவளின் தடுமாற்றத்தை கண்ணுற்ற பாலா,

“ஹே அழகி, ரிலாக்ஸ், எதுக்கு இப்படி ஒரு மாதிரி இருக்க, என்ன ஆச்சு”என்று பாலா கேட்க, அழகியோ இப்போது, இன்னும் அதிகமான பதட்டத்துடன்,

“அது….….அங்க………சார்……..”என அழகியை ஏற, இறங்க பார்த்த பாலா, அவளிடம்,

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் கிளம்பு, போய் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு, ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணிட்டு, அப்புறமா வேலையை பாரு போ” என்று சொல்ல, அவளோ அடுத்த நிமிடம் இடத்தை காலி செய்து இருந்தாள்.

பாலாவோ, “என்னவா இருக்கும்,கையில வேறு பைல் இருந்தது, எப்படியும் கரன் அஹ பார்க்க தான் வந்து இருக்கும், அவனை உள்ளே போய் பார்த்துச்சா இல்லையா, என்னத்தையோ பார்த்து பயந்த மாதிரி இருக்கு, அப்படி கரன் ரூம்ல எதை பார்த்து இருக்கும், சரி நேரா போய் கரன் கிட்டவே கேட்டுடலாம்”என்று தனக்கு தானே யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவிட்டான்.

முடிவு செய்தபடி, என்ன நடந்துதென்று அறியும் பொருட்டு, நண்பர்களின் வழக்கம் போல கதவை தட்டாமல் திறக்க உள்ளே நடந்த உரையாடல் காதில் விழ, அதோடு அங்கே கண்ட காட்சியில், அப்படியே கதவை பிடித்து கொண்டு நின்றுவிட்டான் பாலா.

அப்படி யார் தான் உள்ளே இருந்தார்கள்?????

அட நம் வசீகரனும், உமையாளும் தான்.

வசீகரன் வெட்கத்தில் முகம் சிவந்து போய் நிற்க, எது வசீகரனா????

அட ஆமாப்பா ஆமா, வசீகரன் தான் வெட்கத்தில் முகம் சிவந்து போய் நிற்க, உமையாள் குறும்பு புன்னகையுடன் அவனின் எதிரில் நின்று அவனிடம்,

“இன்னும் ஒரே ஒரு தடவை சொல்லு கரன் பிளீஸ்” என்று கெஞ்சல் போலவே கேட்க, வசீகரனோ,

“போ பாப்பு”என அழகான மந்தசகாச புன்னகையை சிந்தியவன், தன்னை சமன்படுத்தி கொள்ளும் பொருட்டு, இடது கை கொண்டு, ஏற்கனவே சமர்த்தாக இருந்த முடிகளை மீண்டும் கோதிவிட்டு கொள்ள, உமையாளோ அப்படியும் அவனை விடாமல் ,

“சரி,சரி இது தான் லாஸ்ட், நான் பஸ்ட் உள்ளே வந்ததும் சொன்ன இல்ல, அதே மாதிரியே ஒரு தடவை சொல்லு பார்ப்போம்” என்று அடம்பிடிக்க, இப்போது ஓர் அளவு இயல்பு திரும்பி இருந்த வசீகரன் கண்ணனின் மாய புன்னகையுடன்,

“ஐ….லவ்.…” என்று சொல்ல வந்தவன், அப்போது தான் கதவை பிடித்து கொண்டு நின்றிருந்த பாலாவை கவனிக்க, அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்.

மனமோ,”அய்யோ இவனா, இவன் எப்போ வந்தானு தெரியலையே, என்னத்த கேட்டான்னு தெரியலையே, என்ன ஓட்டியே கொல்ல போறான்” என்று அலற ஆரம்பித்தது.

கதவின் அருகில் நின்றுந்த பாலாவோ மனதிற்குள், “வசீகரன் உமா கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானா, அப்போ நான் நினைச்ச மாதிரி ரெண்டு பேரும் லவ் தான் பண்றாங்க போலவே, இவங்க லவ்ஸ் அஹ பார்த்து தான் நம்ப அழகி பயந்துடுச்சி போலவே” என நினைக்க, சிரிக்க தான் தோன்றியது பாலாவுக்கு.

சரியாக அதே நேரம் வசீகரன் இவனை பார்க்க, அவன் தன்னை பார்த்ததும் உள்ளே வந்த பாலா, அவனை பார்த்து,

“கத்தரிக்காய் முத்திடுச்சி போல” என நக்கலாக கேட்க, இப்போது இடையில் புகுந்த உமையாள்,

 

[the_ad id=”6605″]

 

“என்ன கத்தரிக்காய் அண்ணா” என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க, பாலாவோ,

“அது வேற விஷயம் அதவிடு, நீ சொல்லு, அது என்ன அவன் வெட்கப்பட்டுகிட்டு இருக்கான், நீ குறு குறுனு அவனை பார்த்து கிட்டு இருக்க, நியாயமா பார்த்தா நீ தானே வெட்க படனும்” என கேட்க, உமையாளோ,

“இப்படி தான் நடக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியுமே, ரொம்ப நாளாவே நான் இதை எதிர்பார்த்துக் கிட்டே தானே இருந்தேன், நான் நினைச்சது தான் இப்போ நடந்து இருக்கு, எனக்கு வெட்கம் எல்லாம் வரலை, ஆனா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, அதை எப்படி சொல்லனு தான் தெரியலா” என அப்பட்டமாய் மகிழ்ச்சி முக்குளித்த, தேன் குரலில் கூற பாலாவும் உண்மையான மகிழ்ச்சியுடனே கேட்டு கொண்டான்.

அதன் பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க, பாலா தான்,

“போ,போய் வேலையை பார்” என்று உமையாளை அனுப்பி வைத்தவன், அவள் சென்றதும் வசீகரனை பார்த்து,

“ஏன்டா இப்படி ஆபிஸ்ல வச்சி ப்ரோப்ஸ் பண்ணி இருக்க, ரொமான்டிக் அஹ எங்கேயாவது கூட்டிகிட்டு போய் ப்ரோப்ஸ் பண்ணி இருக்கலாம்” என அக்மார்க் நண்பனாக அறிவுரை சொல்ல, வசீகரனோ,

“பச் அது எல்லாம் அப்போ தோணலைடா, அந்த நிமிஷம் சொல்லணும் தோணுச்சு எதுமே யோசிக்காம சொல்லிட்டேன்” என மீண்டும் தலையை கோத, ஒரு சிரிப்புடனே அவனை பார்த்திருந்தான் பாலா.

காதல் உலகில், சுகமான கனவுகளில் ஆழ்ந்துவிட்ட, வசீகரனை உலுக்கி, அவனுக்கான வேலையை பார்க்க சொல்லிவிட்டே, தனது அறைக்கு சென்றான் பாலா.

வசீகரனோ தன் காதலை அதற்கு உரியவளிடம் சேர்ப்பித்ததில் மனது எங்கும் மகிழ்ச்சி அலை அடிக்க, உற்சாகத்தோடு, உல்லாச மனநிலையிலே வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

உமையாள் வந்தவுடன், அவளின் மேனேஜர் வசீகரனை பார்த்துவிட்டு வர சொல்லி அனுப்பி இருக்க, அங்கு நடந்த வரலாற்று முக்கியமான நிகழ்வில், முகம் முழுக்க மலர்ந்து விகசித்த புன்னகையுடன் தனது வேலை பிரிவிற்கு வந்தாள் உமையாள்.

உமையாள் வந்து ஒரு பத்து நிமிடம் கூட வேலை பார்த்து இருக்க மாட்டாள், அதற்குள் அவளின் மேனேஜர் அழைப்பதாக தகவல் வர, “இப்போ என்ன” என்ற மனநிலையிலே தான் அவரை சந்திக்க சென்றாள்.

அங்கு சென்றால் அவளின் மேனேஜரோ,

“உமையாள் உங்களுக்கு தான் போன்” என்று அலுவலக அலைபேசியை சுட்டிக்காட்ட, தொழிற்சாலைக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் அலைபேசியில் யார் தன்னை அழைப்பது என்று யோசனையுடன் அழைப்பை ஏற்க,

“ஹலோ உமா” என்ற குரலிலும், விளிப்பிலுமே அழைத்தது பாலா என்று புரிய,

“சொல்லுங்க அ…” அண்ணா என்று சொல்ல வந்தவள், அவளின் எதிரில் அமர்ந்து இருந்த அவளின் மேனேஜரை பார்த்து, அண்ணாவை சொல்லாமல் விட, அதை எல்லாம் கவனிக்காமல் பாலா,

“உமா நீ உடனே இங்க வாயேன்” என மறுபடியும் அலுவலகத்திற்கு வர சொல்ல, கடுப்பான உமையாள்,

“இப்போ தானே அங்கிருந்து வந்தேன், திரும்பவும் வர சொல்றிங்க”, என தொழிற்சாலைக்கும், அலுவலகத்திற்கும் இடையிலான தூரத்தை நினைத்து மலைத்து, எதிரில் மேனேஜரை வைத்து கொண்டு எதிர்த்தும் பேச முடியாமல் தவிக்க,பாலாவோ

“ரொம்ப முக்கியமான விஷயம் உடனே வா உமா” என்று இவளின் பதிலுக்காக காத்திருக்காமல் அழைப்பை துண்டிக்க, பாலாவின் மீது கொள்ளை கோவம் வந்தாலும், மேனேஜரை பார்த்து சிரித்து விட்டு, அலைப்பேசியை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு பாலாவை பார்க்க கிளம்பினாள்.

உமையாள் நண்பர்களின் அறைகள் இருக்கும் தளத்திற்கு செல்ல, அங்கு பார்வையாளர்கள் காத்திருப்பதற்கான இடத்தில் ஒரு பெண் அமர்ந்து இருக்க, பாலா அப்போது தான் அவனின் அறையில் இருந்து அந்த பெண்ணை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

முறையாக அனுமதி பெற்றபின் மூவரையும் பார்க்க, அலுவலக ஊழியர்களோ, அல்லது வெளியாட்களோ வருவார்கள் என்பதால் பொதுவாக காத்திருப்பதற்கான இருக்கைகள் பெயருக்கென்றே இருக்கும்.

அதனால் அங்கு காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை கவனிக்க தவறிய உமையாள், பாலாவை மட்டும் தான் பார்த்தாள்.

இவ்வளவு தூரம் நடந்து வந்ததில் மூச்சு வாங்க, அதனுடன் கோவமும் சேர்ந்து கொள்ள, பாலாவின் அருகில் சென்ற உமையாள்,

“உங்களை அப்படியே கொல்ல போறேன் பாருங்க, இவ்ளோ நேரம் இங்க இருந்துட்டு அங்க போய் பத்து நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள திரும்ப வர வச்சி இருக்கீங்க, அப்படி முக்கியமான விஷயம்னா இங்க இருக்கும் போது சொல்ல வேண்டியது தானே” என அவனை கடிக்க, பாலாவோ,

“நம்ப கிருஷ்ணா வோட லவ்வாங்கி டா” என அவளின் அருகில் வந்து, அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்ல, உமையாள் அவனை புரியாத பார்வை ஒன்று பார்த்து வைத்தாள்.

அவளின் முக பாவனையிலே அவளுக்கு தான் சொன்னது புரியவில்லை, என்பதை புரிந்து கொண்டான் பாலா.

உமையாளின் கையை பிடித்து, இவ்வளவு நேரம் தங்களை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்த அந்த பெண்ணின் அருகில் அழைத்து வந்தவன்,

“உமா இது சரண்யா, நம்ப கிருஷ்ணாவோட மாமா பொண்ணு” என்று அறிமுகப்படுத்த, உமையாளுக்கு இப்போது தான், பாலா சொல்லியதின் அர்த்தம் புரிய, அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசினாள்.

அப்பெண்ணிடமும் பாலா, “சரண்யா, இது உமையாள், வசீகரனோடு அத்தை பொண்ணு”, என முறையாக அறிமுகப்படுத்தியவன், திரும்பவும், உமையாளை பார்த்து,

 

[the_ad id=”6605″]

 

“கிருஷ்ணா தான் அவங்க அப்பா கம்பனிக்கு போய் இருக்கான் இல்ல, அவன் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும், அவன் வர வரைக்கும் சரண்யா தனியா இருக்கணும், அதான் நீ பேசிக்கிட்டு இருப்பேனு உன்னை கூப்பிட்டேன்” என்று விளக்க பாலா சொல்ல வருவது நன்றாக புரிந்து கொண்டாள் உமையாள்.

தாங்கள் இருவரும் அன்று ஒரு நாள், இந்த பெண்ணை சந்தித்து, “இப்பெண் கிருஷ்ணாக்கு பொருத்தமாக இருப்பாளா” என்று பேசி பார்க்க வேண்டும் என்று பேசி கொண்டதை நினைவில் கொண்டே, இப்போது பாலா தன்னை அழைத்து இருக்கிறான் என்பது அவளுக்கு விளங்கியது.

பாலா அறிமுகப் படுத்தியதும், அப்பெண்ணை பார்த்து ஒரு புன்னகை சிந்திய உமையாள், இவனிடம் திரும்பி,

“சரி அண்ணா, நீங்க போங்க, நான் இருக்கேன் இவங்க கூட” என்று அவனை அனுப்பி வைத்தவள், தன்னை விட சிறிய பெண்ணாக தெரிந்த , சரண்யாவின் அருகில் சுவதினமாக அமர்ந்து அவளிடம் உரையாட ஆரம்பித்தாள்.

சரண்யா ஆரம்பத்தில் தயங்கினாலும், உமையாளின் சரளமான பேச்சில், கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக உரையாட ஆரம்பிக்க, இருவரும் எதோ நீண்ட நாள் தோழிகள் போல ஆரம்பித்தனர்.

உமையாள் சரண்யாவிடம் உரையாடி கொண்டு இருந்தாலும், கண்கள் அவளை தலை முதல் கால் வரை அளவிட, சிகப்பு நிற டாப்பும், வெள்ளை நிறத்தில் பட்டியாலா பேண்ட்டும், துப்பட்டாவும் அணிந்து, அளவான ஒப்பனையில் அழகியாக தான் இருந்தால் அப்பெண்.

பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்த உமையாள், “நீ கிருஷ்ணாவை” என்று ஆரம்பித்தவள், எப்படி கேட்பது என தயங்கி நிறுத்த, அப்பெண்ணோ,

“ஆமா எனக்கு அவங்கனா விருப்பம் தான், ஆனா அவங்க தான் பிடி கொடுத்தே பேச மாட்றாங்க அக்கா” என தன்னை விட உமையாள் பெரியவள் என்பதால் இயல்பாக அக்கா என்று அழைத்து, கொஞ்சம் கவலையுடனே சொல்ல, உமையாள்,

“கிருஷ்ணாவை ஏன் உனக்கு பிடிக்கும்” என அடுத்த கேள்வியை கேட்க, சரண்யாவோ,

“எங்க அப்பா சொல்லுவாங்க அவங்க ரொம்ப
பிரைனியாம், அப்புறம் ரொம்ப ரொம்ப டேலண்டட் ஆம், இந்த வயசிலேயே பிசினஸ் எல்லாம் பொறுப்பா பார்த்துகிறாங்களாம்” என்று அடுக்கி கொண்டே போக, உமையாள் கடுப்பாகி விட்டாள்.

“நீ என்ன வேலைக்கா ஆள் எடுக்குற, டேலண்ட் அஹ பார்த்து எடுக்க, கிருஷ்ணா கிட்ட இது எல்லாம் இல்லாமா வேற என்ன பிடிக்கும்” என்று கேட்க, அப்பெண்ணோ இதற்கு என்ன பதில் சொல்வதென்று, திரு திருவென முழிக்க ஆரம்பித்தாள்.

“கிருஷ்ணா அழகாக இருக்காங்க, அதனால் பிடிக்கும்” என்று சரண்யா சொல்லி இருந்தால் கூட உமையாள் ஏற்று கொண்டு இருப்பாள்.

ஆனால் அப்பெண்ணோ, அவளின் தந்தை சொல்லியதை வைத்து, அவனின் திறமையின் மேல் வெறும் வியப்பு மட்டுமே கொண்டு இருக்கிறாள்.

நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என அவர்களின் துறையில் சிறந்து விளங்குபவர்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படுமே ஒரு பிரம்மிப்பு கலந்த பிடித்தம், அந்த வகையை சேர்ந்தது தான் சரண்யாவின் கிருஷ்ணா மீதான விருப்பமும்.

கிருஷ்ணாவை பற்றி பேசும் போது சரண்யாவின் கண்களில் காதல் என்ற உணர்வு மருந்துக்கும் தென்படவில்லை என்பதும் உமையாளின் கண்களில் இருந்து தப்பவில்லை.

சரண்யாக்கு, கிருஷ்ணாவிடம் தனிப்பட்ட ஈர்ப்போ, அவன் மேல் மேவிய காதலோ இல்லை என்பதை புரிந்ததுகொள்ள அதிக நேரம் எடுக்க வில்லை உமையாளுக்கு.

வசியை உருகி உருகி காதலிக்கும் இவளுக்கு, அப்பெண் கூறிய விருப்பமும், அதன் அர்த்தமும் புரிய, அவளின் தவறான புரிதலை எடுத்து சொல்லும் விதமாக, ஒரு குழந்தைக்கு சொல்வது போல,

“பிசினஸ்ல சக்ஸஸ் அஹ இருக்குற பீப்பிள் எல்லாரும் டேலண்டட் அஹ தான் இருப்பாங்க, ஒருத்தவங்க பிரைனி அஹ இருந்தா, அவங்களை எல்லாருக்கும் தான் பிடிக்கும், ஆனா அது மட்டும் கல்யாணத்துக்கு போதாது சரண்யா, இதை எல்லாம் தாண்டி கிருஷ்ணா கிட்ட, உன்னை ஈர்க்கிற விஷயம், ஒன்னு கூட நீ பீல் பண்ணது இல்லையா” என்று கேட்க, இப்போதோ அப்பெண் யோசிக்க ஆரம்பிக்க, உமையாள் தொடர்ந்து,

“சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லு, இப்போ கிருஷ்ணா உன்னை லவ் பண்ணலனு உன் கிட்ட சொன்னா, என்ன பண்ணுவ, பீல் பண்ணுவியா, அழுவியா, கல்யாணம் பண்ணா கிருஷ்ணாவை தான் பண்ணுவேணு அடம் பிடிப்பியா” என்று கேட்க அப்பெண்ணோ,

“கொஞ்சம் கஷ்டமா இருக்கும், பட் ” என்று இழுக்க, அவளின் மனது அவளுக்கே புரிய ஆரம்பித்து விட்டது என்பது புரிய, உமையாள்,

 

[the_ad id=”6605″]

 

“எது பண்ணாலும் யோசிச்சி பண்ணனும் சரியா” என்று முடிக்க, கிருஷ்ணாவை பார்க்க வந்த சரண்யா, உமையாள் பேசியவற்றை அசைபோட்டு கொண்டே, தன் மனதை பற்றி சிந்தனையில், அவனை கூட பார்க்காமல், உமையாளிடம் மட்டும் விடைபெற்று கிளம்பி விட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து வந்த பாலாவோ, உமையாள் மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து,

“என்ன உமா நீ மட்டும் இருக்க, சரண்யா எங்க”

“அவ கிளம்பிட்டா”என அவளின் பதிலில் ஆச்சர்யமான பாலா,

“சரண்யா வந்தா கிருஷ்ணாவை பார்க்காம போக மாட்டாளே, எவ்ளோ நேரம் ஆனாலும் வெய்ட் பண்ணி பார்த்துட்டு தானே போவா” என்று கேட்க, உமையாள்,

“நெஸ்ட் டைம் வந்தா நீங்களே கேட்டுக்கோங்க” என, அவள் சொல்லியதை கேட்டு அதிர்ச்சியான பாலா,

“எது வந்தாவா, அப்போ வர மாட்டானு சொல்றியா, ஏன்” என்று கேட்க, உமையாளோ வெகு சாதாரணமாக,

“சரண்யாக்கு கிருஷ்ணா மேல காதல் எல்லாம் இல்லை, அதை நாங்க பேசினதுல அவ புரிஞ்சிக்கிட்டானு நினைக்கிறேன், அதனால் இனிமே இங்க வர வாய்ப்பு கம்மி தான்” என்று உரைக்க, நெஞ்சில் கைவைத்து கொண்ட பாலாவோ,

“உனக்கே இது நல்லா இருக்கா உமா, அந்த அங்கீரி பர்ட் அஹ சுத்தி வந்த ஒரே பர்ட் இது தான், ரெண்டையும் கோர்த்துவிட்டு நீ லவ் பர்ட் ஆக்குவனு பார்த்தா, இப்படி அறுத்துவிட்டியே” என உமையாளோ விளையாட்டு தனத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு,

“இங்க பாருங்க அண்ணா, நான் உங்களை சும்மா அண்ணானு கூப்பிடல, மனசால உங்களை அண்ணனா நினைக்கிறதால தான் அப்படி கூப்பிடுறேன், உங்க மேல கிருஷ்ணா மேல எல்லாம் எனக்கு அக்கறை இருக்கு, நீங்க, கரன் எல்லாம் நீங்க லவ் பண்ற பொண்ணை, இல்ல உங்களை லவ் பண்ற பொண்ணை கல்யாணம் பண்ணுவீங்க, கிருஷ்ணா மட்டும் எதுக்கு லவ்வே இல்லாத கல்யாணம் பண்ணனும்” என்று பாலாவை கேள்வி கணைகளை வீசினாள்.

உமையாள் சொல்லியதை முழுதாக காதில் வாங்காத பாலா, “காதல் இல்லா கல்யாணம்” என்பது சரியாகப்பட, அதே நேரம் அவள் தீவிரத்துடன் பேசும் அவளை சகஜமாக்கும் பொருட்டு,

 

[the_ad id=”6605″]

 

“அன்னைக்கு மால்ல நான் சையிட் அடிச்ச பொண்ண, பொய் சொல்லி துரத்திவிட்ட, அது பரவாயில்லை, ஏன்னா நான் ரெமோ, ஈசி அஹ வேற பொண்ண கரெக்ட் பண்ணிடுவேன், ஆனா கிருஷ்ணா தான் புவர் பாய், என்ன பண்ண போறானோ” என்று அவளை சீண்டினான்.

கிருஷ்ணாவை பற்றி சொல்லியதை அப்படியே விட்ட உமையாள், பாலாவை கேவலமாக ஒரு பார்வை பார்த்து,

“யாரு நீங்க ரெமோ, வேண்டாம் ஏதாவது சொல்லிட போறேன், மூனு வருஷமா ஒரு பொண்ணு உங்களை பார்திருக்கா, அது தெரியாம சுத்தி வந்துட்டு, இவர் ரெமோவாம்” என நொடித்து கொள்ள, உமையாள் சொல்லிய செய்தியில் கவரப்பட்ட பாலா, இயல்பான ஆர்வத்துடன்,

“என்ன சொல்ற நீ, மூனு வருஷமாவா, முதல்ல உனக்கு எப்படி தெரியும், யாரு அது, சொல்லு உமா, சொல்லு” என அவளை நச்சரிக்க, உமையாளோ,

“அவ்ளோ ஈசி அஹ எல்லாம் சொல்ல முடியாது, நீங்க இந்த வாரம் முழுக்க யோசிங்க அது யாரா இருக்கும்னு, அப்படியும் உங்களால கண்டுபிடிக்க முடியலனா, என் கிட்ட வந்து “நான் ரெமோ இல்ல அம்பி”தானு ஒத்துக்கோங்க அப்புறமா சொல்லறேன்” என்று அவனை யோசிக்க வைத்தவள், அங்கிருந்து கிளம்பினாள்.

உமையாளோ மனதிற்குள்,”ஏதோ பிரியா என்னால முடிஞ்சது, உன்னோட டியூப் லைட் அஹ தட்டி விட்டு இருக்கேன், பார்ப்போம் எரியுதான்னு” என்று நினைத்து சிரித்து கொண்டே மீண்டும் தன் பிரிவிற்கு சென்றாள்.

இதற்கு பிறகாவது வேலைக்கு செய்ய வேண்டும் என்று எண்ணத்துடன் சென்ற அவளுக்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் உணவு இடைவேளை என்பது நினைவே இல்லை போலும்.

காதல் கொள்வோம்…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!